குளிர்ந்து விறைத்த
இரவுக்குள்
உறைகளுக்குள்
புதைந்து கிடக்கின்றன
கைகளும் கால்களும்...
மனம் மட்டும்...
என் மண்ணில்
நேசித்த மனிதர்கள்...
ரசித்த பொழுதுகள்...
மண் குடிசைகள்...
கோவில்கள்...
வாழ்வின் மீதான
நிரம்பிய காதல்...
அத்தனையும்
கலைக்கப்பட்டு,
கனத்த மனத்தோடு,
மட்டும்...
நாடு கடத்தப்பட்டேனா
இல்லை
துரத்தப்பட்டேனா...
மூச்சு முட்டிய கேள்விகள்
ஆஸ்த்துமா வியாதிக்காரனாய்...
இவர்கள்
அரசியல் சூதாட்டத்திற்கு
அகப்பட்டவர்கள்
அப்பாவிகள்
நாங்கள்தானா...
இன்று
ஏதோ ஒரு
தேசத்தின்
ஒரு
மூலையில் நான்...
கண் மூடும் நேரமாவது
என் மண்ணில்
கால் புதைக்க...
தலை சாய்க்க...
என் மண்ணின்
தாகத்தோடு
விழித்தபடி
அகதியாய் !!!!
ஹேமா(சுவிஸ்)10.01.07
Tweet | ||||
4 comments:
kavithai nalla iruku keep going
கவிதை படிப்பதற்கு
பருவக் கோளாறு
ஒன்றும் தேவை இல்லை
இரசனை இருந்தால் போதும்..
என் கண்களில் கண்ணீர் தந்து
மனதில் சோகத்தை சுமையாக
சுமக்க வைத்தது கவிகள்....
நலமாக வாழ வாழ்த்துகிறேன்..
அருமையாக எம்மவர்கள் துயரை வெளிப்படுத்தியுள்ளீர்கள். படிக்க கனமாக உள்ளது. தொடருங்கள்
கண் மூடும் நேரமாவது
என் மண்ணில்
கால் புதைக்க...
தலை சாய்க்க...
என் மண்ணின்
தாகத்தோடு
விழித்தபடி
அகதியாய் !!!!// உங்கள் ஏக்கம் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
Post a Comment