*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, January 24, 2011

தேவைப்படும் அவகாசங்கள்...

வெடிகள் தீர்க்கப்பட்ட பின்னும்
இரத்த வடிகால்களில்
பேய்கள் குடியிருந்த பின்னும்
பதிவுகள் அழித்து
மறைக்கப்பட்ட பின்னும்
வெளியில் தெரியா
வலியில்லா வதைகள்.

உரிமை மீறல் என்றால்
என்ன என்றபடி
நல்லவராய்ச் சொல்ல
சாட்சியங்கள் தேடும்
முகம் சிதம்பிய
சொத்தைச் சிங்களம்.

மௌனங்கள் தொடரும்...
உடையாமல் ஓடும்...
நீர்க்குமிழியின் மேல்
இன்னொரு மழைத்துளி விழும் வரை
இல்லை...
இறந்த ஈசலின்
சிறகொன்று கொடுக்கும்வரை.

எமக்கேயான பொழுதொன்று
ஒளிந்திருக்கிறது
இருளுக்குள் மறைந்திருக்கும்
வெளிச்சம் போல
அவகாசங்களின் காத்திருப்போடு!!!

ஹேமா(சுவிஸ்)


இந்தப் பதிவைக் கவனியுங்கள் கொஞ்சம்...

53 comments:

கோநா said...

எமக்கேயான பொழுதொன்று
ஒளிந்திருக்கிறது
இருளுக்குள் மறைந்திருக்கும்
வெளிச்சம் போல
அவகாசங்களின் காத்திருப்போடு!!!

-வலிகளை, இழப்புகளை மீறிய நம்பிக்கைதானே வாழ்க்கை ஹேமா... இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

ஆனந்தி.. said...

படிக்கும்போதே வலிக்குது ஹேமா...கொஞ்சம் கண்ணீர் கூட வந்திருச்சு..உயிர்பூ ஒவ்வொரு வரியிலும் எனக்கு தெரிஞ்சது...

ஆனந்தி.. said...

பார்த்தேன் ஹேமா ஜோதிஜி அவர்களின் சுட்டியும்..புகைப்படங்களை கண் கண்டு பார்க்க முடியலை..மனசெல்லாம் வலி...எனக்கு எதுவுமே சொல்ல தெரியல...

Ramani said...

சரியாகச் சொன்னால் நாங்கள் வெளிச்சமாகத்
தெரிகிறோம். உள்ளே இருள் அப்பிக் கிடக்கிறது
நீங்கள் தேவலாம்.உள்ளே வெளிச்சம் வைத்துள்ளீர்கள்.
நல்ல உண்ர்வை விதைத்த கவிதை.வாழ்த்துக்கள்

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஒளிந்திருக்கும் பொழுது எப்போது வெளிவருமோ ஹேமா..

கே.ஆர்.பி.செந்தில் said...

தவம்போல் காத்திருப்போம் புலி போல் மீதும் பாய ....

தமிழ் உதயம் said...

அருமையான, நம்பிக்கையை சுமந்தப்படி கவிதையின் இறுதிப்பகுதி. கனவுகளை, நம்பிக்கைகளை சேர்த்து வைப்போம். எதை பறித்தாலும் அதை பறிக்க முடியாது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

என்னவோ ஹேமா..எதுவுமே சொல்லத் தோணலை

சுந்தர்ஜி said...

என் வார்த்தைகளை ரமணி சொன்னதன் பின் நானென்ன வேறு சொல்ல?

வலியுடன் அசைகிறது கவிதை ஹேமா.

logu.. said...

எமக்கேயான பொழுதொன்று
ஒளிந்திருக்கிறது
இருளுக்குள் மறைந்திருக்கும்
வெளிச்சம் போல
அவகாசங்களின் காத்திருப்போடு!!


rasithu padithen..
evalavu azhgu.

தம்பி கூர்மதியன் said...

ம்ம்..........

சி. கருணாகரசு said...

எமக்கேயான பொழுதொன்று
ஒளிந்திருக்கிறது
இருளுக்குள் மறைந்திருக்கும்
வெளிச்சம் போல//

இந்த நம்பிக்கை போதும் ஹேமா.

ஜீ... said...

ம்ம்ம்ம் :-(

ஜோதிஜி said...

நீங்க எழுதிய பல கவிதைகளில் எனக்கு பிடித்த வரிசையில் இதுவும் ஒன்று.

Raja said...

உயிரோசையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் ஹேமா...

யாதவன் said...

எம் தேசத்தின் வேதனை கவிதையாய்
கண் கலங்குகின்றது நம் தமிழராய் ஏன் பிறந்தோம்

ராஜவம்சம் said...

நம்பிக்கையோடு இருப்பதே வெற்றியின் முதல் படி.

Chitra said...

மௌனங்கள் தொடரும்...
உடையாமல் ஓடும்...
நீர்க்குமிழியின் மேல்
இன்னொரு மழைத்துளி விழும் வரை
இல்லை...
இறந்த ஈசலின்
சிறகொன்று கொடுக்கும்வரை.


.....அருமையாக எழுதுறீங்க, ஹேமா.... வார்த்தைகள் - உவமைகள் - எல்லாம் கலக்குறீங்க.

Muniappan Pakkangal said...

Kaathiruppu palan kodukkum Hema.It will take some time ,thats all.

Madumitha said...

தேசத்தைத் தொலைத்த வலி
நேசத்தைத் தொலைத்த
வலியைவிட வலிமையானது.

தினேஷ்குமார் said...

வலிக்கிறது தோழி நெஞ்சம்...

Thekkikattan|தெகா said...

ஜோதிஜி said...
நீங்க எழுதிய பல கவிதைகளில் எனக்கு பிடித்த வரிசையில் இதுவும் ஒன்று.//

I second it, Hema!

Riyas said...

வலிகள் நிறைந்த கவிதை அக்கா..

நட்புடன் ஜமால் said...

எமக்கேயான பொழுதொன்று
ஒளிந்திருக்கிறது
இருளுக்குள் மறைந்திருக்கும்
வெளிச்சம் போல
அவகாசங்களின் காத்திருப்போடு!!!]]

நம்பிக்கை ...

Balaji saravana said...

நம்பிக்கைகளின் காத்திருப்புகள்!

Anonymous said...

வலிகளை சொல்லும் போதே தேவையான நம்பிக்கையையும் சொல்லியிருப்பது கவிதையின் பலம்...

சி.பி.செந்தில்குமார் said...

>>>>இருளுக்குள் மறைந்திருக்கும்
வெளிச்சம் போல
அவகாசங்களின் காத்திருப்போடு!!!

கலக்கல் லைன்ஸ்

சி.பி.செந்தில்குமார் said...

ஹேமாவின் கவிதைகளில் எப்போதும் ஒரு மெல்லிய சோகம் உள்ளீடாய் இருப்பது ஏனோ?

சத்ரியன் said...

நம்பிக்கையும், செயலும் விரும்புவதைக் கொண்டு வரும். உங்கள் கவிதைத் தலைப்பு சொல்லும் “அவகாசமும் அவசியம் தான்”.

சே.குமார் said...

//மௌனங்கள் தொடரும்...
உடையாமல் ஓடும்...
நீர்க்குமிழியின் மேல்
இன்னொரு மழைத்துளி விழும் வரை
இல்லை...
இறந்த ஈசலின்
சிறகொன்று கொடுக்கும்வரை.//

கண்டிப்பாக சிறகொன்று வரும் சகோதரி வருத்தங்கள் தீர்க்க...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

உணர்வு பொங்கும் உங்கள் எழுத்துக்களுக்கு வந்தனம் ஹேமா!

கவிதை காதலன் said...

நல்ல கவிதை.. இரண்டு முறை படித்தால் மட்டுமே அதன் சாராம்சத்தை உள்வாங்கிக்கொள்ள முடிகிறது

முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

விஜய் said...

காத்திருந்து சுவைப்போம் வெற்றியை

நீண்ட நாட்களுக்கு பிறகு நம்பிக்கை கவிதை ஹேமா

வாழ்த்துக்கள்

விஜய்

Kousalya said...

மனதை ரணமாக்கி வைத்திருக்கும் வேதனைகளை கவிதைகள் வடித்து சிறிது ஆசுவாசபடுத்தி கொள்ளமுடிகிறது.

வலியின் ஊடாய் மெலிதாய் தெரியும் நம்பிக்கை ! பலரை இந்த நம்பிக்கை வாழ வைத்து கொண்டிருக்கிறது.

விடிய போகும் பொழுதுக்காக விழித்திருப்போம் !!

"உழவன்" "Uzhavan" said...

மிக அருமை.. வலிகள் வார்த்தைகளாயுள்ளன.

இளம் தூயவன் said...

//வெடிகள் தீர்க்கப்பட்ட பின்னும்
இரத்த வடிகால்களில்
பேய்கள் குடியிருந்த பின்னும்
பதிவுகள் அழித்து
மறைக்கப்பட்ட பின்னும்
வெளியில் தெரியா
வலியில்லா வதைகள்.//

படிக்கும்போதே வலிக்குது.

ஸ்ரீராம். said...

மற்றுமொரு அழகிய கவிதை. வலிகளும் வேதனைகளும் இருந்தாலும் அந்த சிறிய நம்பிக்கை ஒளிதான் வாழ்வை வழி நடத்திச் செல்வது...

ரிஷபன் said...

காத்திருத்தல் ஒரு தவம் எனில் அதற்கான பலன் கிட்டியே தீரும். வெளிச்சம் விரைவில் தோன்ற எனது கண்ணீர் பிரார்த்தனைகள்

vinu said...

engeppaa namma vootu pakkamea varrathu illea

அரசன் said...

மனதை கனக்க வைக்கும் வரிகள் ....
இந்நிலை மாறும் ....

Rathi said...

எமக்கான பொழுதுகள்......! ம்ம்ம்....... பார்க்கலாம் அது எப்போவென்று.

போளூர் தயாநிதி said...

//மௌனங்கள் தொடரும்...
உடையாமல் ஓடும்...
நீர்க்குமிழியின் மேல்
இன்னொரு மழைத்துளி விழும் வரை
இல்லை...
இறந்த ஈசலின்
சிறகொன்று கொடுக்கும்வரை.//
yazhpana காரர்கள்
உடல் பலம்
மட்டுமில்லாமல்
மூளைபலம் மிக்கவர்கள்
என்பது என் எண்ணம்
அதை...
உண்மையாக்கி விட்டீர்
வாழி...

போளூர் தயாநிதி said...

//மௌனங்கள் தொடரும்...
உடையாமல் ஓடும்...
நீர்க்குமிழியின் மேல்
இன்னொரு மழைத்துளி விழும் வரை
இல்லை...
இறந்த ஈசலின்
சிறகொன்று கொடுக்கும்வரை.//
yazhpana காரர்கள்
உடல் பலம்
மட்டுமில்லாமல்
மூளைபலம் மிக்கவர்கள்
என்பது என் எண்ணம்
அதை...
உண்மையாக்கி விட்டீர்
வாழி...

அன்புடன் மலிக்கா said...

ஒளிந்திருக்கும் பொழுது
விரைவில் விடியலாகும் தோழி..

பாரத்... பாரதி... said...

வெளிப்பூச்சுக்களை சாக்லேட் போட்டு நிரப்பினாலும், பட்ட வடுகளின் வலி குறைந்திடுமா?

பாரத்... பாரதி... said...

//வெடிகள் தீர்க்கப்பட்ட பின்னும்
இரத்த வடிகால்களில்
பேய்கள் குடியிருந்த பின்னும்
பதிவுகள் அழித்து
மறைக்கப்பட்ட பின்னும்
வெளியில் தெரியா
வலியில்லா வதைகள்.//

பாரத்... பாரதி... said...

மிக வலியை உணர வைத்த வார்த்தைகள்..

பாரத்... பாரதி... said...

சில வதைகளுக்கு காலம் கூட மருந்திட முடியாது..

vinu said...

indraiya thinagaran papper vaangip padikkavum;

namathu kavithai kaathalanukku thiraippadap paadal eluthum vaayppu kidaththullathu;


vaalthukkal mani @http://kavithaikadhalan.blogspot.com/
mobile :+919043194811

D.R.Ashok said...

உயிரோசைக்கு வாழ்த்துகள் :)
உயிரின் ஆசைக்கு :(

சாய் said...

மனசெல்லாம் படிக்கும்போதே வலிக்குது

தாராபுரத்தான் said...

/மௌனங்கள் தொடரும்...

ஆமினா said...

உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html

வாழ்த்துக்கள்

Post a Comment