*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, March 14, 2008

போகிறேன்...


நீ...
நிராகரிக்கப் பட்டிருக்கிறாயா
எப்போதாவது...
எதற்காகவாவது...
அதன் வலியை
அனுபவித்திருக்கிறாயா!
நான்
நிராகரிக்கப் படுகிறேன்
உன்னால்...
ஏனோ...
உனக்குப்
பிடிக்கவில்லை
என்னை.
எதற்காகவோ.
தவம் செய்கிறாய்.
கலைந்து போக
வேண்டாம் என்னால்
உன்
தவ வாழ்வு.
நானும்...
வேண்டிக் கொள்கிறேன்
உன்
வரத்திற்காக
என்றும்.

என் இமைக்குள்
சுமையாய்
உன் நினைவுகள்...
முடியாமலிருக்கிறது
உன்னை மறக்க!!!!!
மறந்தாலும்
நினைத்துக் கொள்
எப்போதாவது...
ஈழத்து மகள்
ஒருத்தி
உனக்காக...
என்றோ ஒரு நாள்
தவம் கிடந்தாள்
என்று!!!!

ஹேமா(சுவிஸ்)25.12.2006

1 comment:

விச்சு said...

இன்னும் நினைத்துக்கொண்டுதான் இருப்பான். அன்பான ஒருவளை இழந்துவிட்டோம் என்று.

Post a Comment