*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, October 04, 2010

நிறங்கள்...

எல்லோராலும் முடிவதில்லை
^
எதிர்த்துப்பேச
^
பல் இளிக்க
^
பசப்ப
^
பயப்பட
^
ஒத்துப்போக
^
பொய்யாய் புகழ்பாட
^
புறம்கூற`
^
பச்சோந்தியாய் வாழ....

உண்மையாய் இருக்கிறேன்
அம்மணமாய் இருக்கிறேனாம்.

நீலத்தைப் பச்சையென்றும்
வெள்ளையை நீலமென்றும்
தலையாட்ட முடியவில்லை.

மாற்ற நினைத்தாலும்
நிரந்தரமாக்கப்பட்ட
மாறாத நிறங்கள்
சில மனங்களைப்போல.

நீலம் நீலம்தான்
அது எப்போதுமே.

நானும் அப்படியே!!!

ஹேமா(சுவிஸ்)

68 comments:

Balaji saravana said...

நாம் உண்மையாய் இருக்க நினைத்தாலும் சில நேரம் சுற்றியிருப்பவர்கள் விடுவதில்லை..
எதிர்ப்பின் நிறங்கள் அருமை..
கருத்தை பிரதிபலிக்கும் படமும் அருமை ஹேமா!

ஆ.ஞானசேகரன் said...

//உண்மையாய் இருக்கிறேன்
அம்மணமாய் இருக்கிறேனாம்.//

உணர்த்தும் வரிகளாய் இருக்குங்க ஹேமா.....

உண்மையாய் இருக்க பல நேரங்களிம் வாய்ப்பே இல்லை....

LK said...

//நீலத்தைப் பச்சையென்றும்
வெள்ளையை நீலமென்றும்
தலையாட்ட முடியவில்லை//

unmaithan ennalum mudivathillai

அஹமது இர்ஷாத் said...

சூழ்நிலை நம்மை மாத்திவிடுகிறது ஹேமா..

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice Hema

கே.ஆர்.பி.செந்தில் said...

//நீலம் நீலம்தான்
அது எப்போதுமே.

நானும் அப்படியே!!!//

நானும்தான் ஹேமா....

வினோ said...

/ உண்மையாய் இருக்கிறேன்
அம்மணமாய் இருக்கிறேனாம். /

உண்மைதான் ஹேமா..
ஆனால் இதில் ஒன்றும் தவறில்லை உண்மையாய் இருக்கும் வரை

RVS said...

ஸ்... என்று வாய் உரைக்கும் உண்மையாய் இந்தக் கவிதை ஹேமா.

Kousalya said...

//மாற்ற நினைத்தாலும்
நிரந்தரமாக்கப்பட்ட
மாறாத நிறங்கள்
சில மனங்களைப்போல.//

மனங்களை மாற்ற முயன்றும் முடியாமல் போய்விடும்.... அப்படியே யதார்த்தம் மிளிர்கிறது ஒவ்வொரு வரியிலும் ஹேமா...

சத்ரியன் said...

ஹேமா வின் டைரி..!

யாதவன் said...

நாம் நாமாக வாழ தான் ஆசைபடுகிறோம்
அதற்காகவே போராடுகின்றோம்

ஜோதிஜி said...

ஆத்தாடி.... சவுக்கு சொடுக்கிற சத்தம் பலமா இருக்கே. ஆனா எனக்கு புரியுற மாதிரி இருக்கு. நல்லாயிருக்கு தாயி.....

Vel Kannan said...

ஆம் ஹேமா வானம் என்றுமே வானம் , பூமி என்றுமே பூமிதான்
நாம் மாறக்கூடாது. இப்படியாக சொல்லிக்கொண்டே இருப்போம்.
நல்லா இருக்கு கவிதையும் படமும்

sakthi said...

அருமை ஹேமா

இப்படி அடிக்கடி சவுக்கால் வீசினாற் போல் உங்கள் எழுத்து அபாரம் தோழி

VELU.G said...

உண்மையாய் இருப்பதில் வலிகளும் இருக்கின்றன ஹேமா

கவிதை அருமை

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

மிக அழகான கவிதை ஹேமா. ஆழ்மனத்திலிருந்து வந்த சத்தியமான வார்தைகளின் பிரதிபலிப்பு.........அருமை.

நேசமித்ரன் said...

எல்லோராரும் முடிவதில்லை
//

சரியாகத் தான் இருக்கிறதா வாக்கியம் ??

கருத்து ரீதியாக நன்றாக இருக்கிறது ஆத்ம விசாரம்

meenakshi said...

அருமையான கவிதை. 'ஆடாத மேடையில்லை, போடாத வேஷம் இல்லை........' இதுதான் வாழ்கை ஹேமா. உள்ளது உள்ளபடி உண்மையாக ஏற்றுக் கொண்டு உறவாட, உயர்ந்த உள்ளம் உறவாக வேண்டும். இப்படிப்பட்ட உறவுகள் கிடைப்பது அரிது. இதைதான் 'புரிதலில் பூக்கிறது வாழ்கை' என்று ஒரே வரியில் அற்புதமாக நீங்கள் எழுதினீர்கள்.
பச்சோந்தி போல் வாழ்வது எளிது. உண்மையான நிறத்தில்தான் தன்மானத்துடன் தலை நிமிர்ந்து வாழமுடியும். இந்த வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும் அர்த்தமுள்ளதாக இருக்கும், நிம்மதியும் கிடைக்கும். ஆனால் எவ்வளவு பேருக்கு இது எளிதாகும்?

Thanglish Payan said...

http://thanglishpayan.blogspot.com

Thanglish Payan said...

Nan ungal kavithaikku kulanthai..
viral pidithu kootti sella
nalu kalil nadai payila
than kaiyal soru unna
innum solli kondu pogalam.........

நசரேயன் said...

//நீலத்தைப் பச்சையென்றும்
வெள்ளையை நீலமென்றும்
தலையாட்ட முடியவில்லை.//

ஏன் தலையில கட்டு போட்டு இருந்தீங்களோ ?

நசரேயன் said...

ஆமா இந்த கவுஜைய யாருக்கு சொல்லுறீங்க ?

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை அருமை ஹேமா.ஸ்டில் கூட அற்புதம்.

ராஜவம்சம் said...

தெளிவாக எழுதியிறுக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்.

//நீலம் நீலம்தான்
அது எப்போதுமே//

பொய்முகமும் சில நேரம் அவசியம்
என்றே தோன்றுகிறது அது தன்னுடைய சுயநலத்திற்க்காக இல்லாமல் தன்மானத்திற்க்கு என்று வரும் போது.

பசியோடு இருக்கையில் பக்கத்து வீட்டார் சாப்பிட்டச்சா என்று கேட்கையில் நம் வருமையை முதுகுக்கு பின்னே அனுப்பி ஆயிடுச்சி சார் என்போமே அது போல.

dheva said...

கவிதை அருமையா ரசிச்சுட்டே டைட்டில் பார்த்தேன்.....

அதே டைட்டில நானும் எப்படி நினைச்சேன் என்னோட போஸ்டுக்கு....??? ஹா.. ஹா...ஹா....!

சி.பி.செந்தில்குமார் said...

ஹேமா,பத்திரிக்கைக்கு கவிதை அனுப்பும்போது கவிதையின் கீழே பிளாக்கில் வந்தது என அட்ரஸ் எழுதிடுங்க.உங்க பிளாக் பேரும் வந்தா ஒரு விளம்பரம்தானே?ஒரே கல்லுல 2 மாங்கா>

இந்தக்கவிதையை தேவதை எனும் பெண் இதழுக்கு அனுப்புங்க.மெயிலில் அட்ரஸ்

devadhaidesk@gmail.com


கவிதையில் அம்மணமாய் என்ற வார்த்தையை மட்டும் நீக்கி நிர்வானமாய் அல்லது துகில்உறிந்த நிலையில் என மாற்றி அனுப்பவும்

சீமான்கனி said...

வெள்ளந்தியாய் இருப்பதும் வெளிப்படையாய் இருப்பதும் விபரமானவர்களுக்கு பிடிக்காதாமே...நிறமற்று போனவர்கள்....
'செம்'...மையாய்...கவிதை...
வாழ்த்துகள்..ஹேமா...

தமிழ் உதயம் said...

இப்படி வாழ்வது கஷ்டம் தான் ஹேமா. ஆனால் கஷ்டப்பட்டு வாழ்வதில் தான் ஆத்மதிருப்தி உள்ளது. அருமையான கவிதை.

அன்பரசன் said...

பிரமாதம் ஹேமா.
நாம் நாமாகவே இருந்தால் போதும்.

விஜய் said...

முகத்தில் அறைகிறது கவிதை

வாழ்த்துக்கள் ஹேமா

போன கவிதைக்கு என்னை மட்டும் மறந்துவிட்டீர்கள் ?

விஜய்

D.R.Ashok said...

ஜி நல்லாதான் எழுதியிருக்கீங்க...

நம்ம சீரியஸா ஒரு எதிர் கவுஜ போட்டுயிருக்கோம்.. ஏதோ என்னால முடிஞ்சது... :)

http://ashokpakkangal.blogspot.com/2010/10/blog-post_04.html

Muniappan Pakkangal said...

Really very good post Hema.

அமைதிச்சாரல் said...

உண்மையாய் இருக்க நினைப்பவர்களுக்கு, உலகம் புரியாதவர் என்ற பட்டம்தான் கிடைக்கிறது..

ஸ்ரீராம். said...

கோவணம் கட்டற ஊர்ல வேட்டி கட்டறவன் பைத்தியக்காரன் என்பார்கள்! அது போல பொய்யும் புனைச் சுருட்டும் மலிந்த உலகில் உண்மையாக இருப்பாவர்கள் பைத்தியக் காரர்கள்தான்! வீரிய வரிகள் ஹேமா.

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை ஹேமா.

//மாற்ற நினைத்தாலும்
நிரந்தரமாக்கப்பட்ட
மாறாத நிறங்கள்
சில மனங்களைப்போல.//

அருமையான வரிகள்.

தமிழரசி said...

இப்படி உண்மையாய் இருப்பதாலோ என்னவோ நம்மிடம் எந்த உறவும் நெடு நாள் தொடருவதில்லை...எதோ சொல்லனும் எப்படின்னு தெரியாமல் எனக்குள் ஒரு தவிப்பு இது தான் அது என்பதை போல் இருந்தது கவிதை...என்ன பொருத்தவரை "class" hema......ரொம்ப பிடிச்சிருக்கு..பலமுறை படிச்சிட்டேன்..

தியாவின் பேனா said...

அருமை ஹேமா
என்ன ஒரு அருமையான கவிதை
இதற்காக இந்தப் பரிசு
இதோ பாருங்கள்
இன்னும் ஒரு தளத்தில்
http://www.theevagan.com/
இணைக்கப்பட்டுள்ளீர்கள்
வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

நீலம் நீலம் தான்
நாமும் நாமே தான்

நிறம் மாற விரும்பாதவன் மட்டுமல்ல
நிறம் மாற தெரியாதவனும் கூட ...

மோகன்ஜி said...

என்ன அதிர்வு இந்த வரிகளில்...
//உண்மையாய் இருக்கிறேன்
அம்மணமாய் இருக்கிறேனாம்//
சீலை ஒன்று எடுத்தோடி வர பதறும் மனசு.நல்ல படைப்பு!
(ஹேமாவா! கொக்கா?யாரோட தங்கை?!)

க.பாலாசி said...

நல்ல கவிதைங்க ஹேமா..

ஆனா சம்திங் உள்குத்து இருக்கிறமாதிரியே இருக்கு..

தமிழ் அமுதன் said...

//நீலத்தைப் பச்சையென்றும்
வெள்ளையை நீலமென்றும்
தலையாட்ட முடியவில்லை.//

இருக்கலாம் அப்படி இருப்பதில்தான் மிகுந்த சிரமம் உள்ளது.
வளைந்து கொடுத்தலும் இளகி போவதும் கூட வாழ்க்கையின் ஒரு அம்சமோ என எண்ணம் வருகிறது.

சுத்த தங்கத்தில் ஆபரணம் செய்ய இயலாது ...! கொஞ்சம் செம்பு கலப்பு தேவை.

logu.. said...

Hayyoo..

pppppppachakkunu irukkunga


suoer,

மங்குனி அமைசர் said...

உங்கள் கருத்து , அதற்கேற்ற படம் ரெண்டும் அருமை

Raja said...

பிரமாதம்..பிரமாதம் ஹேமா...

சின்னபாரதி said...

ஹேமா!
உண்மைகள் பொய்யால் புரையோடிப்போய் விட்டன .

சமாதானத்தை சண்டைக்காரர்களே ! அடகு பிடித்து இருக்கிறார்கள் .

வேடதாரிகள் முன்
நம்முடைய சுயம் தோற்றுவிடுகிறது .

மீண்டு மிளிர்வதே! நம்முடைய சுயகவுரத்திற்கு நாம் விட்டுக்கொள்ளும் சவால் . முடியும் என்பதே! முடிவு .

நல்ல பதிவு ......

தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் said...

ரொம்ப அருமையா உணர்வு பூர்வமா எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அப்படியே இருங்கள் ஹேமா .. அது்தான் அழகு..

கலா said...

அம்மணி ! ஹேமாக் குட்டி!!
நீங்கள் மாறவில்லை,சரி
மாறியவர் யார்?
அதை
மாற்றியவர் யார்?

காளையின் உள்ளம் கண்டு
நான் வரவோஓஓஓஓஓஓ....

சேற்றைக் கண்டால் மிதிப்பதும்,
தண்ணீரைக் கண்டால்..
கழுவுவதும் மனித குணம் பெண்ணே!

இதைப் படிக்கும் {மாறிய நெஞ்சங்கள் அனைத்துக்கும்}
நல்லதொரு சாட்டையடி நன்றி

கொல்லான் said...

கவியரசி,
//மாறாத நிறங்கள்
சில மனங்களைப்போல.//

மாறாத நிறங்கள்
சில நேரம்
மனதை மயக்கும்.
ஆனாலும்...
மனதில் உண்டு அதற்கென்று
ஒரு தனிப் பெயர்.

kutipaiya said...

///நீலத்தைப் பச்சையென்றும்
வெள்ளையை நீலமென்றும்
தலையாட்ட முடியவில்லை//
sema touch!!!

ஜிஜி said...

உண்மைதான் ஹேமா.. கவிதை நல்லா இருக்குங்க

Ananthi said...

நல்ல இருக்குங்க.. கவிதை..
நீங்க நீங்களாவே இருங்க, யாருக்காகவும்
நம் இயல்பை மாற்றுவது கூடாது :-))

நிலா மகள் said...

ரொம்ப பிடிச்சிருக்கு ஹேமா... யார் என்ன சொன்னால் என்ன... நாம் நாமாகவே இருப்போமே...

tamil said...

endi unakku

pasanga padam pidikkadhu

vamsam padam pidikkadhu

boss pidikkadhu

endhiranum pidikkadhu

unakku pidicha thaan padam oodum-nu ninappa?

endi un kavithai mokkaiyai ellam pakka vendiyadhu irukke kaala kodumai

சிவாஜி சங்கர் said...

நல்லா
^
இருக்குங்க
^
ஹேமா.. :)

ஜெயா said...

மாற்ற நினைத்தாலும்
நிரந்தரமாக்கப்பட்ட
மாறாத நிறங்கள்
சில மனங்களைப் போல.

நீலம் நீலம் தான்
அது எப்போதுமே.

நானும் அப்படியே!!!

அழகான கவிதை.....

கமலேஷ் said...

அப்படியே இருங்கள் அக்கா...

Gopi Ramamoorthy said...

நல்லா இருக்கு

dineshkumar said...

வணக்கம் தோழி

நிறம் மாறும்
மலர்கள்
நிகழ்வின்
நிஜம்
மாறுவதில்லை
வலி
மறைந்தும்
வடு
மறைவதில்லை
காலச் சுவடில்
பொய்மை ஆள்கிறது
நம்மை.........

அப்பாவி தங்கமணி said...

good one

சௌந்தர் said...

நீலம் நீலம்தான்
அது எப்போதுமே.////

எப்போதும் அப்படியே இருக்கட்டும்

திகழ் said...

நிறைவான கவிதை

அத்தனையும் அருமை

சொல்ல வார்த்தை இல்லை

சுந்தர்ஜி. said...

அழகான கவிதை.மேகத்தின் நிறம் மனதாய்ப் பெற்ற உங்களைத் தோழியென அழைத்துப் பெருமையுறுகிறேன் ஹேமா.

அப்பாதுரை said...

இது போன்ற கவிதைகளை ஒளித்து வைக்காதீர்கள்.. :)

vazhipokanknr said...

kavithai nallarukkunga hema...

அரவியன் said...

எளிமை யான தமிழ் நடை
எனக்கு உண்மைகள் ரொம்ப பிடித்த வரிகள் ...........

alwayswithu said...

//மனம் திறந்து பேசு,
ஆனால்
மனதில் பட்டதெல்லாம்
பேசாதே.
சிலர் புரிந்து கொள்வார்கள்...
பலர் பிரிந்து செல்வார்கள//

எங்கோ படித்தது. உண்மையான வரிகள் . கவிதை அருமை

விச்சு said...

இதைவிட அருமையாக ஒருவரின் குணாதிசயத்தைப்பற்றி கூற இயலாது. “ நானும் அப்படியே’...

Post a Comment