*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, March 29, 2012

நுகத்தடி நெருடல்கள்...

நடைபாதைப் பயணங்களில்
வெறிக்கிறேன் இன்றுவரை
அவசர சமயத்தில்
கையில் திணித்து மறைந்த
ஒற்றை ரூபா முகத்தை.

தொப்புள்கொடி
சுற்றிய குழந்தையாய்
திணறி முழிக்கிறது
விட்டெறிந்த வார்த்தைகள்.

சாமியின் தலையில்
வார்க்கும் நம்பிக்கைப் பால்
எதிர்பாரா உதவிகள்
அருவருக்கும் எச்சிலாய்
என் முகத்திலேயே
பட்டுத் தெறிக்க
சுற்றும் பூமியின் சேதாரம்
கணக்கிட நினைக்கிறேன்
சேதம் உனக்கேதானென
சொல்லி இறைக்கிறார்கள்
இன்னும் அசிங்கங்களை
கமுக்கட்டுக்குள்
நன்றியைச் சேமித்தவர்கள்.

நன்றிகளாய்...அவமானமாய்
நெருடல்களைச் சுமக்கின்றன
என் நுகத்தடி!!!


நுகத்தடி-காளையின் கழுத்தில் பூட்டப்படும் மரம்.

ஹேமா(சுவிஸ்)

40 comments:

விச்சு said...

//அவசர சமயத்தில்
கையில் திணித்து மறைந்த
ஒற்றை ரூபா முகத்தை//எப்படித்தான் யோசிக்கிறீங்களோ!! அவமானங்களும், அலட்சியமும், நன்றியும் எப்போதும் கழுத்தில் பூட்டப்பட்டே இருக்கின்றன.

தமிழ் உதயம் said...

தங்களிடம் இருந்து மற்றொரு சிறப்பான கவிதை.

பால கணேஷ் said...

நெருடல்களைச் சுமக்கின்ற நுகத்தடி. அருமை ஹேமா...

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்க்கையில் சில அவமானங்களையும் வளைந்துதான் கொடுக்க வேண்டும் என்று மறைந்த மலேசியா வாசுதேவன் சொல்ல படித்திருக்கிறேன், அவைகளை நானும் அனுபவித்தும் இருக்கேன்.....!

தேவன் மாயம் said...

சுமக்கும் நுகத்தடி அருமை ஹேமா!

arasan said...

தலைப்பின் தன்மையே உணர்த்துகின்றன .. நிறைந்திருக்கும் வலிகளை..
மிக சிறந்த படைப்புங்க அக்கா ..

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் அக்கா, கவிதையின் தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது.

நிரூபன் said...

ஒரு நுகத்தடியின் உணர்வலைகள் இங்கே கவிதையாக..உயிர்ப்பூட்டும் வார்த்தைகள் ஊடாகப் பரிணமித்துள்ளது.

ஆத்மா said...

நல்ல கவிதை....

//நுகத்தடி-காளையின் கழுத்தில் பூட்டப்படும் மரம்.//

இன்றுதான் அறிந்து கொண்டேன்.மிக்க நன்றி

ஸ்ரீராம். said...

//கமுக்கட்டுக்குள்
நன்றியைச் சேமித்தவர்கள்//

:))

வழக்கம் போல நல்ல கவிதை ஹேமா.

Seeni said...

சிலாகித்து விட்டேன்!


உண்மை!
அருமை!
கவிதை!

சசிகலா said...

நன்றிகளாய்...அவமானமாய்
நெருடல்களைச் சுமக்கின்றன
என் நுகத்தடி!!!// வித்தியாசமான அறிமுகம் அருமை .

Thooral said...

//தொப்புள்கொடி
சுற்றிய குழந்தையாய்
திணறி முழிக்கிறது
விட்டெறிந்த வார்த்தைகள்//

Mothanmum arumai..
athil muthaai enakku pidithathu....

arumai akka..

கூடல் பாலா said...

வலிக்கிறது!

Yoga.S. said...

மதிய வணக்கம் ஹேமா!நுகத்தடி-----------அருமை!சாட்டை!!!!!!

Ashok D said...

வார்த்தைகளும் எங்கெங்கோ போய்வருகிறது...
நுகத்தடி = பாரம், ஆனால் சொற்களின் மூலம் பாரத்தை குறைத்துக்கொள்கிறீர்கள் நன்று..

Life is contradictions :)

Anonymous said...

kavithai சுப்பரா இருக்கு அக்கா ..

வலையுகம் said...

கிளாசிக் கவிதை

///தொப்புள்கொடி
சுற்றிய குழந்தையாய்
திணறி முழிக்கிறது
விட்டெறிந்த வார்த்தைகள்.///

மிக அருமையான தோற்ற உதாரணம்

ராமலக்ஷ்மி said...

/சேதம் உனக்கேதானென
சொல்லி இறைக்கிறார்கள்/

இதுதான் உலகம். மிக நல்ல கவிதை ஹேமா.

துரைடேனியல் said...

நுகத்தடி சுமந்து இளைத்துப் போன உங்கள் கழுத்தை அன்பெனும் தலையணைகளில் ஓய்வெடுக்க விடுங்கள். சொந்தமெனும் மருந்தால் சுகம் உண்டாகும். அருமையான கவிதை சகோ. வாழ்த்துக்கள்!

துரைடேனியல் said...

தம 10.

மகேந்திரன் said...

தலைப்பே ஆயிரம் கதைகள் சொல்கிறது சகோதரி.
நுகத்தடி என்ற வார்த்தைப் பிரயோகத்தை
மிக அரிதாக பயன்படுத்துகிறார்கள்..
அந்த சொல்லை அழகாய் பயன்படுத்தி
உணர்வுக் குவியலான ஒரு கவிதை
படைத்தமை அழகு.....

Unknown said...

நுகத்தடி-யில் இன்னும் பல கட்டுக்கடங்கா சோகங்கள் செறிந்திருக்குமோ தொடர்ச்சியான சிந்தனையை ஏற்ப்படுத்துகிறது..

Anonymous said...

நுகத்தடி...//

புதிதாய் தெரிந்து கொண்டேன்...உடனே மறந்தேன்...வயது அப்படி ஹேமா..

மற்றொரு சிறப்பான கவிதை...

அவமானங்களும்..நெருடல்களும் தொலைத்து... உங்கள் அடுத்த காதல் கவிதையில் சந்திக்கிறேன்...Cheerup..

அம்பலத்தார் said...

மனதின் வலிகளை உணர்த்த இதைவிட சிறந்த வார்த்தைகளை தேடமுடியாது. அருமையான கவிவரிகள்

தனிமரம் said...

நுகத்தடியை மீறி காளைகள் போக முடியாது! அதுபோல் அவமானங்கள் மறந்து போக முடியாது! என்பதைச் சொல்லிச் செல்லும் கவிதை!

கீதமஞ்சரி said...

நேற்று நிறைய வலைகளில் நான் போட்டப் பின்னூட்டங்களை இன்று காணவில்லை. காணாமல் போனதில் நுகத்தடி நெருடல்களுக்கானதும் ஒன்று. :(


நுகத்தடி காளைகளாய் வாழ்வதாலேயே பாரத்தை சுமக்கமுடிகிறது நம்மாலும். தேர்ந்த உவமைகளையும் உவமானங்களையும் கைக்கொண்டு, நினைப்பதைத் துல்லியமாய்ச் சொல்லிச் செல்லும் வலிமை மிக்க வரிகளுக்காய்ப் பாராட்டுகிறேன் ஹேமா.

இராஜராஜேஸ்வரி said...

நன்றிகளாய்...அவமானமாய்
நெருடல்களைச் சுமக்கின்றன
என் நுகத்தடி!!!

சுமப்பதால் கனக்கும் நுகத்தடி !

vimalanperali said...

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.மனம் நெருடும் நெருக்கடிகள் எப்பொழுதும்,என்றும் வாழ்கையில் நிலைத்து நிற்பதாக/

manichudar blogspot.com said...

நுகத்தடியின் பாரம் தாங்காமல் வலித்தது எனக்கும் . நல்ல கவிதை ஹேமா .

சிவகுமாரன் said...

அருமையான வித்தியாசமான கவிதை .
நுகத்தடி - மிக அருமையான சொல். வழக்கொழிந்த போன சொற்களை பயன்படுத்துவதே ஒரு தமிழ்ச் சேவை. நன்றி ஹேமா

கவி அழகன் said...

Unka kavithaya vasicha piraku payama kidakku. Nama padikka sinthikka innum niraya irukku

செய்தாலி said...

ம்ம்ம் அருமையான கவிதை தோழி

ananthu said...

எப்படி ஹேமா உங்களால் மட்டும் இப்படி யோசிக்க முடிகிறது ! கவிதை அருமை

மாலதி said...

சில பொதி சுமக்கும் ம்மடுகள் நுகத்தடியை சுமந்தே காலங் கழிக்கும் சிலது உடைத்து புத்துலகை படைக்கும் ஆக்கம் சிறப்பு

Unknown said...

வாழ்த்துக்கள். வலியும், வேதனையும், அவமானமும், இழப்புக்களில் அல்ல ஏற்பில் வருத்துவன. எண்ண, சுமையாய் கழுத்தை இறுக்குவன . வாழ்க்கை நுகத்தடி. வடிவாக காட்டப்பட்டிருக்கிறது. அதற்காக வலிக்காதா என்ன?

Unknown said...

miga arumai !! valigal sumakkum nugaththadi!!

Unknown said...

miga arumai !! valigal sumakkum nugaththadi!!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

valikalin varigal arumai !!

Post a Comment