*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, September 26, 2010

தியாகிகளில் ஒருவனாய்...

விழித்தே இருக்கிறேன்
கொடூரமான
கறுப்பு எழுத்துக்கள்
சிலுவைகளாய் கழுத்தை நெரிக்க
அடிமை வாழ்வென கையெழுத்திட
தீராத் தர்க்கம்
கைகள் வலுவற்றதாய் !

ஓ...
இத்தனை கனமாய் இருந்திருக்குமா
இயேசுவின் சிலுவைகூட !

தீர்வாக்கப்பட்ட
ஈழமண்ணில் விழுந்த
தியாகங்களை எண்ண
விரல்கள் போதாமலிருக்கிறது !

கசாப்புக்கடைக்காகவே
பிறப்பெடுக்கும் தமிழன் கையில்
திணிக்கப்பட்ட ஆயுதங்கள்
பயங்கரவாதிகளென பகிரங்கப்படுத்த
இல்லையென்றான் திலீபன்.
மாற்றுவழி அகிம்சைக்கும்
சரியெனச் சரிந்தான் !

ஆனது என்ன ?
பார்வைகளைப் பரீட்சிக்காத உலகம்
எல்லாமே ஒன்றுதானென
உயிரை
தலை மயிராய் ஊதியதே !

இன்று....
தின்ற உயிர்களை
அசைபோட்டு
ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறது
சிங்களம்!!!

ஹேமா(சுவிஸ்)

52 comments:

நட்புடன் ஜமால் said...

கசாப்புக்கடைக்காகவே
பிறப்பெடுக்கும் தமிழன் ...

:(

அன்பரசன் said...

உருக்கமான கவிதை..

ஜோதிஜி said...

ரொம்ப தெளிவாயிருக்கு

ரொம்ப பிடிச்சுருக்கு.

எளிமையாகவும் கூட.

dheva said...

விடிவு ஒன்று வரும் தோழி...தியாகங்களின் பூமியாய் அன்று தமிழீழம் மலரும்....!

ஈரோடு கதிர் said...

திலீபன் ஆத்மாவிற்கு வணக்கம்

kalai said...

\\இன்று....
தின்ற உயிர்களை
அசைபோட்டு
ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறது
சிங்களம்!!
யதார்த்தம் வீர வணக்கம்.

விந்தைமனிதன் said...

நெருப்புக்கங்குகளைக் கக்கும் பெருமூச்சு மட்டுமே!

ஜெரி ஈசானந்தன். said...

வீர வணக்கம்.

வினோ said...

ஈழம் கனவல்ல நிஜமாகும் ஹேமா...

Thekkikattan|தெகா said...

நிகழ்வுகளை வெளிச்சம் போட்டு காமிக்கும் வரிகள்...

கவிதைக்கு நன்றி!

சீமான்கனி said...

//கசாப்புக்கடைக்காகவே
பிறப்பெடுக்கும் தமிழன் கையில்
திணிக்கப்பட்ட ஆயுங்கள்
பயங்கரவாதிகளென பகிரங்கப்படுத்த
இல்லையென்றான் திலீபன்.
மாற்றுவழி அகிம்சைக்கும்
சரியெனச் சரிந்தான் !//

திலீபனுக்கு கண்ணீர் வணக்கம்...

கொல்லான் said...

கவியரசி,
தங்கள் விசாரிப்புக்கு எனது நன்றிகள். நலமே.
தமிழன் என்பவனை தலை நிமிர்த்துக் காட்டிய ஒரு மாமனிதனின் காலத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம் என்பதைத் தவிர இன்று வேறேதும் செய்ய முடியா கையறு நிலை.
புண்ணிய ஆத்மாக்களின் கனவு தேசம் விரைவில் மலரும்.
அது வரை நம் நம்பிக்கையே நமக்குத் துணை.
தங்களின் கவிதை உணர்வுபூர்வமாய் இருக்கிறது.
மீண்டும் நன்றி கவியரசி.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

உருக்கமான கவிதை... :((

T.V.ராதாகிருஷ்ணன் said...

திலீபனுக்கு கண்ணீர் வணக்கம்

கே.ஆர்.பி.செந்தில் said...

திலீபனுக்கு என் வீரவணக்கம்..

ராஜ நடராஜன் said...

//தீர்வாக்கப்பட்ட
ஈழமண்ணில் விழுந்த
தியாகங்களை எண்ண
விரல்கள் போதாமலிருக்கிறது !//

சிந்தனை வரிகள் ஹேமா!

Raja said...

என்னங்க...வெளித்த வானத்தையே இன்னும்முழுசா படிச்சு முடிக்கலே,,,உப்புமட சந்தி இன்னைக்கு தான்பார்க்கிறேன்...அப்போ வீட்டுப்பாடம் நிறைய இருக்கும்போல எனக்கு ...

தமிழ்ப்பறவை said...

தியாகங்கள் தீர்ந்த பின்னும் தீர்வு கிடைக்காதது இன்னும் கொடுமைதான்... :-(

தேனம்மை லெக்ஷ்மணன் said...

பார்வைகளைப் பரீட்சிக்காத உலகம்
எல்லாமே ஒன்றுதானென
உயிரை
தலை மயிராய் ஊதியதே //

ஐயோ என்ன கொடுமை இது..

ஸ்ரீராம். said...

//"திணிக்கப்பட்ட ஆயுங்கள்..."//

ஆயுதங்கள்..?

உருக்கமான கவிதை.

யாதவன் said...

நல்லூர் கோவில் முன்றலிலே
தீலீபன் அண்ணா எங்கு சென்றாய் என்று ஒலிக்கும்
அழுகுரல் கவிதைகள் இன்னும் என் மனதில்
வீட்டுக்கு பக்கத்தில் என்றபடியால் ஓவருனாலும் சென்று பார்த்த ஜாபகங்கள்
நினைவு நாள் வந்ததும் வீட்டுக்கு முன்னுக்கு சின்ன கொட்டில் கட்டி
தீலீபன் அண்ணா வின் படம் வைத்து பாட்டு போட்ட ஜாபகங்கள்
வளர்ந்த பின்பு கம்பசில பொய் அவர் உடல் பார்த்த ஜாபகங்கள்

யாதவன் said...

காற்றும் ஒருகணம் வேச மறுத்தது
கடலும் ஒரு நொடி அமைதியாய் கிடந்தது
பேசுவார் அற்று தேசம் ......

தீயினில் எரியாத தீபங்களே
எம் தேசத்தின் நிலையான சொத்துக்களே
மண்ணினில் விதையான முத்துக்களே
நாம் மாதவம் செய்து பெற்ற சொத்துக்களே

ராஜவம்சம் said...

கசாப்புக்கடைக்காகவே
பிறப்பெடுக்கும் தமிழன்.

மாற்றம் எப்போது என்று எதிர்ப்பார்த்தே
எங்கள் காலம் அஸ்தமனமாகிவிடும் போல..

எங்கள் அடுத்த தலைமுறைக்காவது கிட்டுமா சுதந்திரகாற்று?

வலசு - வேலணை said...

காந்தி மரித்த கரிநாள்

D.R.Ashok said...

சரியான எதிர்வினை
சரியாக பதிந்துள்ளீர்கள்

அமைதிச்சாரல் said...

நெகிழவைக்கும் கவிதை ஹேமா..

சே.குமார் said...

ரொம்ப பிடிச்சுருக்கு.

Balaji saravana said...

திலீபனுக்கு வீரவணக்கம்..

ஜோதிஜி said...

இன்னும் சில மணி நேரங்களில் மாறப்போகும் நட்சத்திரமும் உங்கள் தமிழ் மண மணி மகுடமும்.

ஆகா மிக்க மகிழ்ச்சி.

அம்பிகா said...

திலீபனுக்கு வீரவணக்கம்..

யாதவன் said...

நல்லுரின் வீதியில் நடந்தது யாகம்
நாலு நாள் ஆனதும் சுருண்டது தேகம்
தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை

தஞ்சாவூரான் said...

தியாகிகள் கண்ட ஈழக்கனவு நனவாகும். காத்திருப்போம்...

தமிழ் உதயம் said...

திலீபன். காந்தி தேசம் கொன்ற ஒரு காந்தீயவாதி. மாவீரன் தீலிபனுக்கு கண்ணீர் காணிக்கை.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

மனதை உறுகச் செய்கிறது.....ஹேமா..........

Anonymous said...

மனதை பிழிகிறது வரிகள் ஒவ்வொன்றும்.....

ஜெஸ்வந்தி said...

திலீபனுக்கு கண்ணீர் வணக்கம். உருக்கமான கவிதை..!

அஹமது இர்ஷாத் said...

வரிகள் வலிகள்...

சந்தனமுல்லை said...

திலீபனை..திலீபனோடு உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களை நினைவு கூர்கிறேன்...வீரவணக்கங்கள்..

அரைகிறுக்கன் said...

தீர்வாக்கப்பட்ட
ஈழமண்ணில் விழுந்த
தியாகங்களை எண்ண
விரல்கள் போதாமலிருக்கிறது !////

விரல்கள் அல்லஅறிந்த/படித்த கணக்கே போதாமலிருக்கிறது.

மிகவும் வேதனையான தருணம்.

க.பாலாசி said...

கொடுமைங்க... வணக்கங்கள் கண்ணீராகவும்..

V.Radhakrishnan said...

கொடூரம்

ஆ.ஞானசேகரன் said...

உருக்கமாக இருக்கு ஹேமா...

வீர வணக்கம்ங்கள்

Muniappan Pakkangal said...

Nice tribute to Thileepan Hema. He is a nice personality.

சே.குமார் said...

உருக்கமாக இருக்கு ஹேமா...

திலீபன் ஆத்மாவிற்கு வணக்கம்.

சிவாஜி சங்கர் said...

நல்லா இருக்குங்க ஹேமா..
வணக்கங்கள் உங்கள் கவிக்கும்..

அப்பாதுரை said...

இதைப் படித்ததும் இனம் புரிதல் போலவும் புரியாதது போலவும் நெஞ்ச அரிப்பு. சிப்பாய்த் தியாகங்களுக்கும் தலைவர் தியாகங்களுக்கும் விலைகளும் மதிப்புகளும் வெவ்வேறோ?

Raja said...

இன்றுதான் வீட்டுப் பாடம் முடித்தேன்... மாதக் கணக்கு உங்களுக்கு குறைவுதான்...வருடக் கணக்கிற்கு 365 விருதுகள் தான் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்... வாழ்த்துக்கள் ஹேமா...

ஹேமா said...

தமிழின் உணர்வோடு கை கோர்த்துக்கொண்ட அத்தனை என் உறவுகளுக்கும் எம் இனத்துக்காய் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த அத்தனை உயிர்களில் சார்பின் என் நன்றிகள்.

//அப்பாதுரை....
இதைப் படித்ததும் இனம் புரிதல் போலவும் புரியாதது போலவும் நெஞ்ச அரிப்பு. சிப்பாய்த் தியாகங்களுக்கும் தலைவர் தியாகங்களுக்கும் விலைகளும் மதிப்புகளும் வெவ்வேறோ?//

அப்பா....அதுவும் இன்றைய எங்கள் அரசியலில் இருக்கிறது என்பது என் கருத்து.வேறுபட்டிருந்தால் சொல்லுங்கள்.புரிந்துகொள்கிறேன்.
கூலிக்கு மாரடிப்பதற்கும் பாசத்தோடு மாரடிப்பதற்கும் உண்டான வித்தியாசமே அது !

அப்பாதுரை said...

//கூலிக்கு மாரடிப்பதற்கும் பாசத்தோடு மாரடிப்பதற்கும் உண்டான வித்தியாசமே அது !

beautiful!

(சரியாகத் தான் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.)

dineshkumar said...

நிலைகுளைகிறேன்
நிஜத்தில்
யம்மினத்தை
கூறுபோட்ட கரங்களை
சுடலைமாடனாக
சூரையாட
தவிக்கிறது
த்மிழ் ஈழத்தில்
பிறந்திருந்தால்
பல தலை
வீழ்த்திருக்கும்
தமிழகத்தில்
பிறந்துவிட்டோம்
பாவிகளாக...........

Anonymous said...

//ஓ...
இத்தனை கனமாய் இருந்திருக்குமா
இயேசுவின் சிலுவைகூட !//
மெய் தாம்...

விடிவதற்காகத் தான் இந்த கங்குல்
விடிவொன்று பிறக்கும்!
அதுவரை பொறுத்திருங்கள்
தமிழ்த் தாய் வெகு விரைவில்
ஈழத்தை ஈன்றெடுப்பாள்!

- 8 கோடி தமிழர்களுள் ஒருவன்.

TNROA said...

intha inaiyathalam yellorukkum yepoodu chenradaiyum? ..mmm

Post a Comment