*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, June 18, 2011

நிலாக் கவிதைகள்...

"கார்ட்டூன் பார்த்தது போதும்"
பதுங்கிக்கொண்டாள் சத்தம் கேட்டு
போர்வைக்குள் நிலா.

சுவரில் மாட்டியிருக்கும்
மூன்று குழந்தைகளும்
அவளும் இப்போ தனித்தில்லை
நிரப்புகிறாள் இருட்டறையை
காப்பகத்துச் சினேகிதர்களின்
பெயர்களாலேயே.

அம்மாவாய் அக்காவாய்
தங்கையாய் மாறியவள்
கதை சொல்லி
அழத் தொடங்குகிறாள்
விம்மி விம்மி.

ஓ...
கார்ட்டூனில் இறந்த குஞ்சுப் பறவை
வேறென்ன செய்ய முடியும் அவளால்
ஒரு அம்மாவாய்
ஒரு பெண்ணாய்!!!
நீலச் சிங்கம்
சிவப்பு பூனை
பச்சை நாய்
வெள்ளைப் பாம்பு
குளிக்க வச்சு
உடுப்புப் போட்டு
சாப்பாடு கொடுத்து
களைத்துவிட்டாள் நிலா.

டோரா பொம்மைக்கு
பயம் காட்டிச்
சோறு கொடுப்பதே
பெரும் கலை அவளுக்கு.

அவளுக்குப் பயம் காட்டிச்
சோறு கொடுக்க
காக்காவைக் காணவில்லை
பூச்சாண்டிக்குப் பயமுமில்லை
நிலவில் பாட்டியுமில்லை!!!


ஹேமா(சுவிஸ்)

32 comments:

சத்ரியன் said...

// பயம் காட்டிச்
சோறு கொடுக்க
காக்காவைக் காணவில்லை
பூச்சாண்டிக்குப் பயமுமில்லை//

நாம் வாழ சக மற்றும் பிற உயிரினங்களையும் அழித்துக் கொண்டே வந்தோமானால்... காக்கை குருவி எங்கிருந்து வரும்?

//நிலவில் பாட்டியுமில்லை!//

அதான் ஹேமா இருக்காங்களே!

Anonymous said...

ஆதரவு அற்ற தனிமையில் வாழும் குழந்தைகளின் நிலையை எடுத்து காட்டுகிறது கவி...

கிருபா said...

டோரா சரி புஜ்ஜிய மறந்துட்டீகளே

நாலு பேரு நல்லா இருந்தா மொக்க பதிவு தப்பே இல்ல

# கவிதை வீதி # சௌந்தர் said...

////
ஓ...
கார்ட்டூனில் இறந்த குஞ்சுப் பறவை
வேறென்ன செய்ய முடியும் அவளால்
ஒரு அம்மாவாய்
ஒரு பெண்ணாய்!!!//////


இது தான் குழந்தை மனசு..

# கவிதை வீதி # சௌந்தர் said...

நிலாக் கவிதை அருமை...

சோருட்ட படும்பாட்டை அழகாக சொல்லி முடிகிறது கவிதை...

ரசித்தேன்..

தமிழ் உதயம் said...

குழந்தைகளின் உலகம் அழகானது. அதையும் விட அழகு, குழந்தைகள் குறித்த கவிதை.

கவி அழகன் said...

மனசுக்கு வேதனை தரும் கவி வரிகள்
புதுமையான கவி வடிவம்
வாழ்த்துக்கள்

கலா said...

நிலவில் பாட்டியுமில்லை!//

அதான் ஹேமா இருக்காங்களே\\\\\\
பதினாறும் நிறையாத
பருவமங்கை....யைப் பார்த்து
இப்படி சொல்லிப்போட்டாரே!
ஹேமா இப்போதே வா! சிங்கைக்கு
வழக்குத் தொடுக்கலாம்.....
நீ கண்ணை மெச்சுகிறவருக்கு!!
இனிமேலாவது கண்,கண்னென்று
கணக்குப் போடாத....

எப்படியாவது உன் வயசறியலாமெனப்
போட்ட தூண்டில்தான் மாட்டாதே!

தவறு said...

ஹேமா காணாம போயிட்டாங்க....

சந்ரு said...

//நாம் வாழ சக மற்றும் பிற உயிரினங்களையும் அழித்துக் கொண்டே வந்தோமானால்... காக்கை குருவி எங்கிருந்து வரும்?//

நியாயமான கேள்விதான்..

நல்ல கவிதை

Anonymous said...

நிலாக் கவிதைகள் இனிக்கும்-வேர்
பெலாக் கவிதைகள்

வரட்டும் மேலும் தரட்டும் நாளும்

புலவர் சா இராமாநுசம்

கலா said...

ஹேமா, சுட்டி நிலாக்குட்டி அழகு
நீங்கள்
சூடிய வார்த்தைகள்
அதட்டல்,பயம் சோகமென்று...
பாவம் நிலவை மறைக்காதே!
பெண்களே இப்படித்தானென....கோடிட்டு
முழுநிலா பிறையிடம் முறையிடலாமா?

{இது என் கருத்து}

மைந்தன் சிவா said...

ஹிஹி டோரா...
ம்ம் கவிதை வடிப்பும்,வர்ணனையும்,வடிவமைப்பும் அருமை!

ஜீ... said...

//அவளுக்குப் பயம் காட்டிச்
சோறு கொடுக்க
காக்காவைக் காணவில்லை
பூச்சாண்டிக்குப் பயமுமில்லை
நிலவில் பாட்டியுமில்லை!!!//
அசத்தல்!

சிவகுமாரன் said...

\\காக்காவைக் காணவில்லை
பூச்சாண்டிக்குப் பயமுமில்லை
நிலவில் பாட்டியுமில்லை!!! //

அதெல்லாம் நம்ம காலத்தோடு முடிஞ்சு போச்சு சகோதரி.
அருமையான கவிதை

சிவகுமாரன் said...

ஹேமாக்காவை பாட்டி என்று சொன்ன சத்ரியனை வன்மையாக கண்டிக்கிறேன்.

இளம் தூயவன் said...

பிஞ்சு மனசு என்று இதை தான் சொல்வார்களோ.

சி.பி.செந்தில்குமார் said...

என்ன ஹேமா,திடீர்னு மழலைக்கவிதை..? ம் ம் நல்லாருக்கு

ராமலக்ஷ்மி said...

நிலாக் கவிதைகள் நெகிழ்வு. அழகு. அருமை ஹேமா.

ரிஷபன் said...

எழுத்து நிலா!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நிலா அழகு

அரசன் said...

மழலை பேசும் கவிதை க்கு வாழ்த்துக்கள் மேடம் ...

ராஜ நடராஜன் said...

ஹேமா!பாட்டிகள் கதை சொன்ன காலங்கள் போய் இப்பவெல்லாம் குழந்தைகளே நிறைய கதை சொல்கிறார்கள்.அந்த உலகத்துக்குள்ளே நுழைந்து கொள்வதும் சுக அனுபவமே.

ராஜ நடராஜன் said...

நிலா சுகங்கள் கிட்டாத குழந்தைகளுக்கு!

ஸ்ரீராம். said...

ஹேமாவைப் பாட்டி என்று சொல்வதில் தப்பில்லை. கவிதைப் பா(ர்)ட்டி...! குழந்தைகளுக்கு சோறூட்ட இப்போ பழைய டெக்னிக் எல்லாம் ஆவறதில்லை!

நட்புடன் ஜமால் said...

ஹாய் (குட்டி)நிலா, எப்படி இருக்கீங்க

அம்மாவ தொந்தரவு செய்யாம சாப்பிடுங்க, நிறைய கதையும் தெரியும் கேளுங்க ...

Anonymous said...

ஏக்கங்களின் ஊடே குழந்தை அதன் உணர்வை புரிந்த தாய்..கவிதை பேசிகிறது இருவரின் மனதையும்..

நிரூபன் said...

நிலாக் கவிதைகள்: புலம் பெயர் நாட்டில் பெற்றோரின் வேலைப் பளு, போதிய கவனிப்பின்மை,
குழந்தைகள் மீது அன்பு செலுத்த முடியாது அவர்களைக் காப்பகங்களில் விட்டு விட்டு வேலைக்குச் செல்லும் பெற்றோரால் பிள்ளைகளின் மன நிலையில் ஏற்படும் பாதிப்புக்களை உங்களின் இக் கவிதை வெளிப்படுத்தி நிற்கிறது சகோ.

meenakshi said...

கவிதையும், நிலாவும் அழகு! இரண்டுமே உங்கள் குழந்தை அல்லவா, அதனால்தான்!

ஜெகநாதன் said...

பூச்சாண்டிக்குப் பயமுமில்லை - என்ற காலத்திற்கு எவ்வளவு இலகுவாக குழந்​தைக​ளைப் ​பெற்றுத் தள்ளியிருக்கி​றோம்! வாவ்!!

vidivelli said...

very very nice.....
supper imagination"
congratulation...

அம்பாளடியாள் said...

அவளுக்குப் பயம் காட்டிச்
சோறு கொடுக்க
காக்காவைக் காணவில்லை
பூச்சாண்டிக்குப் பயமுமில்லை
நிலவில் பாட்டியுமில்லை!!!

மரத்துப்போன இவள் நெஞ்சத்தில்
வலியும் இல்லை பயமும் இல்லை
ஏமார இடமும் இல்லை. துணிவு
மட்டுமே உள்ளதுபோன்று உணர்த்தும்
கவிதை வரிகள் அருமை!..வாழ்த்துக்கள்
பணி தொடரட்டும்...........

Post a Comment