வந்து கரையும்
ஒற்றை அலைகூட
உண்மையில்லை
சந்திப்புக்கான சங்கதிகளை
வெவ்வேறாகச்
சொல்லிப் போயின
பொய்யின் பின்குரலாய்.
அறிவியல் எல்லையில்
மானுட உலகம்
உயிரற்றதும் உயிருள்ளதுமான
கடலுலகில்
பொய்கள் உலவாதென
யாரோ சொன்னதாய் ஞாபகம்.
ஆழக் கடலில்
காற்று காறித் துப்புகிறதாம்
வாசனைத் தைலக் குப்பிக்குள்
புழுக்கள்தான் நெளிகிறதாம்
கொழுவியிருக்கும்
அளகாபுரி மாளிகை ஓவியத்துள்
பேய்கள் குடியிருக்கிறதாம்.
நானும் நம்புவதாய்
பசப்பிப் புன்னகைத்து
தாண்டிக் கடக்க
ஊமையென நடிக்கும்
ஓடு முதிர்ந்த ஆமையொன்று
கீறிக் காட்டிக்கொண்டிருக்கிறது
சீக்கும் சாக்காடும்
பங்கிட்டுக் கொல்கிறதென
சுவைத்து மென்று
விழுங்கும் நாவில்
மானுட மாமிசம்!!!
ஹேமா(சுவிஸ்)
ஒற்றை அலைகூட
உண்மையில்லை
சந்திப்புக்கான சங்கதிகளை
வெவ்வேறாகச்
சொல்லிப் போயின
பொய்யின் பின்குரலாய்.
அறிவியல் எல்லையில்
மானுட உலகம்
உயிரற்றதும் உயிருள்ளதுமான
கடலுலகில்
பொய்கள் உலவாதென
யாரோ சொன்னதாய் ஞாபகம்.
ஆழக் கடலில்
காற்று காறித் துப்புகிறதாம்
வாசனைத் தைலக் குப்பிக்குள்
புழுக்கள்தான் நெளிகிறதாம்
கொழுவியிருக்கும்
அளகாபுரி மாளிகை ஓவியத்துள்
பேய்கள் குடியிருக்கிறதாம்.
நானும் நம்புவதாய்
பசப்பிப் புன்னகைத்து
தாண்டிக் கடக்க
ஊமையென நடிக்கும்
ஓடு முதிர்ந்த ஆமையொன்று
கீறிக் காட்டிக்கொண்டிருக்கிறது
சீக்கும் சாக்காடும்
பங்கிட்டுக் கொல்கிறதென
சுவைத்து மென்று
விழுங்கும் நாவில்
மானுட மாமிசம்!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
34 comments:
kavithai
ஒரு முறை படிக்கும் போது புரியாதது போல் இருக்கிறது மறுமுறை படிக்கும் போது கொஞ்சம் புரிகிறமாதிரி இருக்கிறது மீண்டும் மீண்டும் படிக்கும் போது உங்கள் கவிதை திறனை எண்ணி பொறாமைபட தோன்றுகிறது :)
சுவைத்து மென்று விழுங்கும் நாவில் மானிட மாமிசம். -அழுத்தமான மனதில் அறைந்த வரிகள் ஹேமா. பிரமிக்க வைக்கிறது உம் கவித்திறம்.
உயிரற்றதும் உயிருள்ளதுமான
கடலுலகில்
பொய்கள் உலவாதென
யாரோ சொன்னதாய் ஞாபகம்.// வணக்கம் ஹேமா கவிதையின் நிஜம் இது பொய்கள் உலவாதென அருமை வரிகள்!
சந்திப்புக்கான சங்கதிகளை
வெவ்வேறாகச் // ஆஹா உணர்வுகள் கவிதையாக!!
மனித மாமிசம் சாப்பிடும் ஆமை ம்ம்ம் கற்பனைகள் கடலுக்கும் இல்லை உங்கள் மனதுக்கும் இல்லை!
வணக்கம் ஹேமா! நலமா?
வழக்கம் போல பொருள் ஆழம் மிக்க கவிதை வடித்திருக்கிறீர்கள்!
எனக்குத் தோன்றும் விளக்கக் குறிப்புக்களுடன் பின்னர் வருகிறேன்!
நன்றாக இருக்கிறது ஹேமா:))
ஹேமா!கவிதைகளின் உட்பொருள் எதனை நோக்கி பயணிக்கின்றன எனபது கவிதைக்கும் கவிதாயினிக்கு மட்டுமேயான வரிகளாகவே தொடர்ந்து எனக்கு புலப்படுகின்றன.சில சமயம் புரிந்தும் சில சம்யம் புரியாத நிலையிலேயே நான்.
கூட பயணிப்பவர்கள் அவரவர்களுக்கு ஒப்ப விளக்கவுரை செய்வதால் இன்னும் பிகாசோவே.
தாம் விகுதிகள் சிறப்பாக இருக்கின்றன என கூடுதல் மார்க் போட்டு விட்டு செல்கிறேன்.
வழக்கம் போலவே சொற்களின் ராஜாங்கம் நிகழ்த்தி இருக்கிறீர்கள்!அசை போடுகிறேன்,புரியா விட்டால் நீங்கள் இருக்கிறீர்களே,விளக்க?????ஹ!ஹ!ஹா!!!!!!
அளகாபுரி----------"அழகாபுரி" என்று வருமோ???
அளகாபுரி----------"அழகாபுரி" என்று வருமோ???///
இதைத்தான் நானும் யோசித்தேன்...வழக்கமான புரிதல்களுடன்...நான்
வரிகளில் முன்னரை விட இப்போது புரிதல்கள் கிடைக்கின்றன,,எனக்கு
ராஜ நடராஜன் சார் சொல்லியிருப்பதுதான் எனக்கும் தோன்றியது. வார்த்தைகளின் வீரியம் அசத்துகிறது. மனிதம் மறந்த மானுடம் பற்றிய கவிதையோ....அவரவர்க்கு அவரவர் அர்த்தங்கள்... சரிதானே ஹேமா...
சபையோருக்குப் பணிவான வணக்கம்!
இங்கே அளகாபுரி என்பது அழகாபுரியென்பதன் மருவலோ எனும் ரீதியில் அன்பர்கள் சிலர் ஐயம் எழுப்பியுள்ளனர்!
அது தவறாகும்! அளகாபுரி என்பது - செல்வத்தின் அதிபதியாம் குபேரன் வாழும் ஊரின் பெயர் என இலக்கியங்கள் சாற்றுகின்றன!
பூலோகத்தில் செல்வத்தாலும் செழிப்பாலும் மிகுந்து நிற்கும் ஒரு நகரைப் பார்த்து, “ அடடே அளகாபுரி போல உள்ளதே” என ஆச்சரியப்படலாம்!
மகிழ்ச்சி நிறைந்த வீட்டை “ சொர்க்கலோகம்” என நினைப்பது போலவே அளகாபுரியும்!
ஆகவே அழகாபுரி என்பது தவறானது! அளகாபுரி என்பதே சரியானது!
மேலதிக விளக்கங்களுக்கு சேக்கிழார் பெருமான் அருளிய பெரிய புராணத்தில் இருந்து ஒரு செய்யுளைக் காண்க!
வெயிலுமிழும் பன்மணிப்பூண் வணிக மாக்கள்
விரவுநிதி வளம்பெருக்கும் வெறுக்கை மிக்க
வயினிலவு மணிக்கடைமா நகர்க ளெல்லாம்
வனப்புடைய பொருட்குலங்கண் மலித லாலே
கயிலைமலை யார்கச்சி யால யங்கள்
கம்பமுமே வியதன்மை கண்டு போற்றப்
பயிலுமுருப் பலகொண்டு நிதிக்கோன் றங்கப்
பயிலளகா புரிவகுத்த பரிசு காட்டும்.
- இதில் கடைசி வரிகளில் “ அளகாபுரி” வந்திருப்பதைக் காண்க!
அருமையான வரிகள்..
//சொல்லிப் போயின
பொய்யின் பின்குரலாய்.//
மீண்டும்
மீண்டும்
படிக்கையில் சற்று புரிகிறது..
அருமை அக்கா..
//ஆழக் கடலில்
காற்று காறித் துப்புகிறதாம்
வாசனைத் தைலக் குப்பிக்குள்
புழுக்கள்தான் நெளிகிறதாம்
கொழுவியிருக்கும்
அளகாபுரி மாளிகை ஓவியத்துள்
பேய்கள் குடியிருக்கிறதாம்//
உவமைகள் அருமை! சகோதரி!
கவிதையின் பொருளை(கரு)க் காண்பது அவ்வளவு எளிதாக
இல்லை என்பதை சிலரின் மறுமொழி
மூலம் அறிகிறேன்!
அது ஓர் அளவு உண்மையும்
கூட! கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன், தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மனித வாழ்க்கையில் பொய்யில்லாமல் இருக்கமுடியாது. ஆனால் எல்லா மனிதருக்கும் நோயும் இறப்பும் நிச்சயம்தான். வழக்கம்போல உங்கள் கவிதையின் வார்த்தை ஜாலம் மூலம் என்னைத் தூங்கவிடாமல் பண்ணிவிட்டீர்கள்.
ஊமையென நடிக்கும்
ஓடு முதிர்ந்த ஆமையொன்று
கீறிக் காட்டிக்கொண்டிருக்கிறது
சீக்கும் சாக்காடும்
பங்கிட்டுக் கொல்கிறதென
பொருள் பொதிந்த வரிகள் !
வார்த்தை ஜாலங்களை புரிந்து கொள்வது கஷ்டமாக இருந்தாலும் கவிதை அருமை ...
...ம் (:
தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால்
புனையப்பட்ட அற்புதமான கவிதை சகோதரி....
அக்கா ஆஅ இப்போ தான் கவனித்தணன் கவிதையை ....
வழக்கம் போல அருமை ...வழக்கம் போல எனக்கு விளங்கள ....
மணி அண்ணா வின் விளக்கமும் முழுசா கவிதையை விளக்காமல் இருப்பது கொஞ்சம் எனக்கு ஏமாற்றம் ...
மணி அண்ணா தங்களின் விளக்கவுரை இன்னும் விளக்கமாய் இருத்தல் எனக்கு நல்லா இருக்குமே ....
valikal!ulakin nadappum!
valiyaana kavithai arumai!
தன்னுணர்வு ஆக்கம் சிறந்த பதிவு உண்மையில் உள்ளத்தில் உள்ளதே கவியாய் காற்றென புயலேனே... புதிய புதையலாய் ... சிறந்த படைப்பு ....
வலைச்சரம் வாங்க
http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_27.html
hello sir/madam
i read your post interesting and informative. i am doing research on bloggers who use effectively blog for disseminate information.i glad if u wish to participate in my research. if you are interested please contact me through mail. thank u
பகல் வணக்கம்,ஹேமா!
3ஆம் தரும்....அருமை
எம் உள்ளத்தில் உள்ளதை எழுத்தாக்கும் போது அது அழகுறும் அக்கா அது போன்றதே தங்கள் கவி
சூப்பர்ர்ர்ர்
//வாசனைத் தைலக் குப்பிக்குள்
புழுக்கள்தான் நெளிகிறதாம்
கொழுவியிருக்கும்
அளகாபுரி மாளிகை ஓவியத்துள்
பேய்கள் குடியிருக்கிறதாம்.//
கடவுளே என்ன கொடுமை சாமீஈஈஈஈஈ... இனி எப்பூடி நான் வாசம் பூசுவேன்:))))
எப்பூடி ஹேமா? எப்பூடி இப்பூடியெல்லாம் எழுதுறீங்க.. தமிழ்.. தமிழ்.. தமிழ்... துள்ளி விளையாடுது:))...
ஆனாலும் உங்கள் கவிதையைக் காட்டிலும் ஒவ்வொரு முறையும் மணியம் கஃபே ஓனரின் விளக்கம் தான் முன்னுரிமை பெறுது:))).. சரி சரி கோபிக்கப்பூடா:))
என் இனிய தோழி ஹேமா...
உங்கள் கவிதையில் நான் என்னன்னமோ புரிந்து கொள்கிறேன். ஆனால் சரியானது தானா என்று தான் விளங்கவில்லை.
Post a Comment