கலைத்த கேசம்.
வியர்வைக்குள் நனையும்
தங்கப் பாளம்.
வடித்தெடுத்த வண்ணங்களுக்குள்
வானவில் வளையும்.
குவிந்த இதழ் வடிக்கும் கள்.
உருகும் பனிக்கூழ் தடவிய
பள்ளம் பறிக்கும் வார்த்தை.
போரின் முடிவில்
பிணங்களின் மேல் படியும்
பரிதாபப் பார்வை.
பாலைவனத்தில்
பரவிக் கிடக்கும் மணல்.
தடாகத்து கானல் நீர்.
பூஜ்ஜியங்கள் கை கோர்த்து
பட படவென முட்டிக்கொள்ளும்
மன்மத மந்திரம்.
கனல் கக்கி
பாசாங்காய் நடிக்கும்
நெருப்பின் சாயல்.
வீரியம் பேசும்
வெத்து வேட்டு.
அழகையே மயக்கும்
அழகான இராட்சசி.
வார்த்தைகள் போலவே
பொய்யான பேய் !!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
55 comments:
//அழகையே மயக்கும்
அழகான இராட்சசி.
வார்த்தைகள் போலவே
பொய்யான பேய் !!!//
அழகான வரிகள்....
:)
//கனல் கக்கி
பாசாங்காய் நடிக்கும்
நெருப்பின் சாயல்.
வீரியம் பேசும்
வெத்து வேட்டு.//
ஹேமா நம்மளப் பத்தி நாமளே இப்படி புட்டு புட்டு வைக்கப்படாதுப்பா ஹிஹிஹி
ஹேமா “அந்தப்” பொண்ணு மேல....
ஏன் இவ்வளவு கோபம்??
யாராவது ஆண்களுக்கு நல்ல காதலியோ,
மனைவியோ கிடைத்திருந்தால்...
உங்களைத் திட்டப் போகிறார்கள்
இப்படி எழுதலாமா? என்று.
கிடைக்காதவர்கள்{அதிஷ்ரம் இல்லாதவர்கள்}
இதைப் படித்து !நாம் திட்டமுடியாததை ஹேமா
செய்திருக்கிறார் பரவாயில்லை என்றுசந்தோஷப்
படுவார்கள்.
யாரோ உங்கள் சொந்தக்காரப் பையனை
ஏமாற்றிய...பெண் போலும் ..பாவம் !!
ஹேமாவுக்கு இவ்வளவு கோபம்!!!
சத்தியமா,.... நான் இப்படி இல்லையப்பா!!
////அழகையே மயக்கும்
அழகான இராட்சசி.
வார்த்தைகள் போலவே
பொய்யான பேய்////
அருமை அருமை ஹேமா.
அடடா...கவிதை அழகு...
//வார்த்தைகள் போலவே
பொய்யான பேய் !!!//
பொய்யான பேயா??
ஹேமா! கடைசியாக ஒரு பத்தி விட்டு போச்சோ - தட்டச்ச மறந்துட்டீங்களா
-------------------
இப்படியெல்லாம் சொல்லத்தான்
நினைக்கிறேன்
ஆனால்
உன் அழகு கண்களில் கசியும்
காதலும் உண்மையும்
என்னை பொய் சொல்ல விடுவதில்லை
----------------
இது கடைசி பத்தியாக நான் நினைச்சிக்கிறேன்.
உடல் அரசியலும் மன அரசியலும்
பேசும் கவிதை தேர்ந்தெடுத்த சொற்களில்...
ஹேமா .... ஹேமா... நான் வந்துட்டேன். ஆனா..இந்த தடவ ஆட்டைக்கு வரலே.
என்ன எழுவுடா சாமி..
யார்?என்ன?ஏன்?எங்கே?எப்போது?எதுக்கு?
மகனே அசோக்,ஸ்மைலி போட்டு தப்பிப்பது எப்படி?
கண்டிப்பா இது கவிதை இல்லை ஹேமா.உன் கவிதை..
இந்த பெண்ணும் பொய்யானவளே! நல்லதொரு கவிதை.
அச்சோ!
வரிகள் சும்மா "நச்சுனு " இருக்கு, நீங்க ,பேசாம சென்னை கிளம்பி வந்துங்க, இங்க கோலிவுட்டுல தாமரைக்கு போட்டியா எழுதலாம்..
ஏன் இவ்வளவு கோபம்.
கூல்ல்ல்.
( பட் உங்கள் கவிதையும் படமும் ரொம்ப அருமை)
”கவிதைக்குப் பொய்யழகு” இது எப்பவும் உண்மையில்லைப் போல.பொய்யெனச் சொல்லி உண்மையைக் காட்டிகிறீர்கள்.
என்னாச்சு ஹேமா? யாரந்தப் 'பேய் '.? ஹ ஹ ஹா
அழகையே மயக்கும்
அழகான இராட்சசி.
வார்த்தைகள் போலவே
பொய்யான பேய்
அழகிய வார்த்தைகள், நன்றாக இருக்கிறது
கவிதை எழுதறதுல.. எங்கேயோ...போயிட்டிங்க..ஹேமா..
ஆத்திர வரிகளில் அழகுக் கவிதையா?
ரவிவர்மா ஓவியம் டாப். கவிதைதான் கனல் கக்குகிறது...
ஹேமா..ஒன்று செய்யுங்களேன்...இதே படத்துக்கு ஆறு வரிகளில் குளிர்ச்சியாய் ஒரு கவிதை கீழேயே எழுதி விடுங்களேன்...
வடித்தெடுத்த வண்ணங்களுக்குள்
வானவில் வளையும்.\\\\\\
அழகான வார்த்தைகள் மீது பொறாமை கொள்கிறேன்
:)
அழகையே மயக்கும்
அழகான இராட்சசி.
வார்த்தைகள் போலவே
பொய்யான பேய் !!!//
நல்லாத்தான் ஆரம்பிச்சீங்க
ஆனா போக போக பேய்
வந்து மிரட்டுறது பயமாத்தான் இருக்கு..
விடுமுறைல உங்க இடுகை நிறைய
தவற விட்டுட்டேன்..
மீண்டும் வாழ்த்துக்களுடன்
சங்கர்..
முதல் நான்கைந்து வரிகள் படித்துவிட்டு என்னடா இது எங்களோட ஏரியால ஹேமா காலை வைக்கிறாங்கன்னு பார்த்தேன்...
யார் மேல கோபம் ஹேமா...?
ஓவியமும், முதல் நான்கைந்து வரிகளும் எனக்குப் பிடித்திருந்தது.
ஹேமா யார் மேல இவ்ளோ கோவம்? " அழகையே மயக்கும் அழகான இராட்சசி.வார்த்தைகள் போலவே பொய்யான பேய் !!! இது தான் வஞ்சப்புகழ்ச்சியா? வெண்பனிப் புயல் அடித்துக் கலைத்த கேசம்.வியர்வைக்குள் நனையும் தங்கப் பாளம்.கவி வரிகள் போலவே அழகான புகைப்படம், வாழ்த்துக்கள் ஹேமா***
ஏன் இந்தக் கோபம் தோழி?
Nice kavithai Hema.
நல்ல வார்த்தை ப்ரோயோகம்....?!
good....
பெண்
புதிர்களின் தொடக்கம்
வினாக்களின் சங்கமம்
விடைகளின் நிர்ச்சலனம்
எதிர்ப்பில் நிர்த்தாட்ச்சண்யம்
ஓய்விலா ஓவியம்
வாழ்த்துக்கள்
விஜய்
கடைசி 4 வரி ரொம்பவே நல்லா வந்திருக்கு..
Toto
roughnot.blogspot.com
//அழகையே மயக்கும்
அழகான இராட்சசி.
வார்த்தைகள் போலவே
பொய்யான பேய் !!!//
அழமான அழுத்தமான வரிகள். அருமை
சுட்டெரிக்கும் வரிகள்!
இவ்வளவு எழிலான ஒரு பெண் ஓவியத்தை போட்டு விட்டு, இப்படி ஒரு
கவிதை எழுதலாமா, ஹேமா?
ஆனால் இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
ஹேமா ஏன் இப்படி?
எல்லா பொண்ணுகளும் அப்பிடியில்லியே?
இந்த மங்கையர் கூட்டத்தில்
ஒரு சிலர் பார்க்கவும் அழகாக இருப்பார்கள் பழகவும் அழகாக இருப்பார்கள் தானே...
வாங்க சங்கவி.கவிதை மட்டும்தானே அழகு.நன்றி.
:::::::::::::::::::::::::::::
ம்ம்ம்....அஷோக் என்னாச்சு.ஒண்ணும் சொல்லத் தோணலயோ.நிறைய மனசுக்குள்ள இருக்கு.திட்டிக்கலாம்.இப்பிடிச் சந்தர்ப்பம் இனியும் கிடைக்குமோ !
:::::::::::::::::::::::::::::::::::
தேனு...சில விஷயங்களை ஒத்துக்கணும்ம்பா !அவங்க எப்பவும் எங்களைச் சொல்லிக்கிட்டுத்தான் இருக்காங்க மனசுக்குள்ள.
::::::::::::::::::::::::::::::::::
கலாம்மா....யார்மேலயும் கோவம் இல்ல.எங்க பலஹீனங்களை மன இயல்புகளை ஏன் நாங்களே ஒத்துக்கொள்ளக்கூடாது !நானும் நீங்களும் இதில சொன்ன மாதிரி இல்லாமல் இருக்கலாம்.எத்தனை பெண்கள் சிரிக்க வச்சு கழுத்தறுக்கிறார்கள்.அழகில்,பேச்சில் மயங்கிப் போகும் ஆண்கள் பின்பு எவ்ளோ அவஸ்தைப்படுகிறார்கள்.
பார்க்கிறோம்தானே.
இதைவிட யாராச்சும் ஒரு ஆண் தங்களைப் பற்றி தங்கள் தப்புக்களை பலஹீனங்களைச் சொல்லட்டுமே !இப்பிடிப் போட்டாத்தான் அப்பிடி வரும்.
::::::::::::::::::::::::::::::::::
வாங்க நவாஸ்...தைரியமா ஏதாச்சும் சொல்லுங்க.பயமேயில்ல.
:::::::::::::::::::::::::::::::::::
பாலாஜி...பொய்யான வார்த்தைகள்போல பொய்யான உருவத்தில் பேய்கள் காணலயா நீங்க !
பாலாஜி விருதுப் பதிவில் உங்க வாழ்த்துக் கிடைக்கல எனக்கு.என் நண்பர்கள் எல்லோரினதும் வாழ்த்து அதற்குள் தேவை எனக்கு.
பதிவிடுங்கள்.
::::::::::::::::::::::::::::::::::
//நட்புடன் ஜமால்
ஹேமா! கடைசியாக ஒரு பத்தி விட்டு போச்சோ - தட்டச்ச மறந்துட்டீங்களா
-------------------
இப்படியெல்லாம் சொல்லத்தான்
நினைக்கிறேன்
ஆனால்
உன் அழகு கண்களில் கசியும்
காதலும் உண்மையும்
என்னை பொய் சொல்ல விடுவதில்லை//
ம்ம்ம்...அழகில் மயங்குவதால் பொய் அல்ல உண்மை சொல்ல முடியாமல் போகிறது ஜமால்.
நன்றி நேசன்.ஓ...பெண்ணை அரசியல்வாதிக்கே ஒப்பிட்டாச்சா !சரிதான் !
::::::::::::::::::::::::::::::::::
கண்ணன்...பயம் உங்களுக்குப் பயம்.சந்தர்ப்பம் கிடைக்கிறப்போ ஆடிக்கணும்.உண்மை சொல்லுங்க உள்மனசில திட்டணும்ன்னு ஆசை இருக்குத்தானே !
:::::::::::::::::::::::::::::::::
அண்ணா...அண்ணா...பா.ரா.அண்ணா இப்பிடித் தப்பிக்க உங்க மகனா சொல்லித் தாரார்.இருக்கட்டும் அவர்.என்னைவிட சித்தப்ஸ் உங்களுக்கு அவர் மேலதானே பாசம்.
:::::::::::::::::::::::::::::::::
ராதாகிருண்னன் வாங்க.முதல் வருகையிலயே என்னையும் பொய்ய்ன்னு சொல்லிட்டீங்க.
கானல்தான் பெண்கள்.கிட்டப்போய்ப் பாருங்க நீங்க நினைக்கிறது எல்லாம் கிடைக்காது.இருக்காது.
:::::::::::::::::::::::::::::::::
அருணா...என்ன அச்சோ.நானே வாயைக் குடுக்கிறேனா !என்னதான் சொல்றாங்கன்னு பாப்போமே !
::::::::::::::::::::::::::::::::
ஜெரி...எங்க விருதுப் பதிவில உங்க வாழ்த்துக் காணோம்.எனக்கு வேணும்.ஏன் என்னை வம்பில மாட்டப் பாக்கிறீங்க.நானும் என்பாடும்ன்னு ஏதோ எழுதிட்டு இருக்கேன்.
::::::::::::::::::::::::::::::::::
அக்பர்..கோவமில்ல.நேத்து ஒருத்தர் என்னைத் திட்டல.திட்டுற மாதிரி கேட்டிச்சு.இப்பிடியெல்லாம்தான் திட்டியிருப்பாரோன்னு ...!
::::::::::::::::::::::::::::::::::
அச்சோ...பெருமாள் சத்தியமா அத்தனையும் பொய்யில்ல.உண்மைதான்!
:::::::::::::::::::::::::::::::::::
ஜெஸி நான்கூடச் சிலநேரங்களில் பேய்தான்.என்னை எப்படி ஆக்குகிறார்களோ அப்படி ஆவாள் பெண்.இல்லையா சொல்லுங்க.
:::::::::::::::::::::::::::::::::
கும்மாச்சி...ரொம்பக் காலமாச்சு நீங்க இந்தப் பக்கம்.ஆரம்பகாலத் தோழர் நீங்க.எப்பிடி என்னை மறக்கலாம் !
:::::::::::::::::::::::::::::::::::
இருங்க இருங்க கோபி...எங்க விருதுப் பதிவில உங்க வரவு.
வரவு போடுங்க.
கவிதைல எங்க போறது கோபி ?பாருங்க கலகலன்னு கவிதை போகுது.
பெண்--ஒரு அழகான கவிதை
கவிதையும் அழகு. ரவிவர்மா படமும் அழகு.
அட்டகாசம் தோழி கலக்கி இருங்கீங்க...பாராட்ட வார்த்தைகளே இல்லை...தொடருங்கள்...
ஹேமா, உங்க விருது பதிவுல பின்னூட்டம் போட்டாச்சு. ஓட்டுகள் எல்லா திரட்டியிலும் சொல்லாமலே என் சார்பில் விழுந்திடும். நன்றி.
ஒரு பெண்ணை பற்றிய நிஜங்களை ஒரு பெண் சொல்லி நான் கேள்விபடுவது இதுவே முதல் முறை
||ஜெஸி நான்கூடச் சிலநேரங்களில் பேய்தான்.என்னை எப்படி ஆக்குகிறார்களோ அப்படி ஆவாள் பெண்.இல்லையா சொல்லுங்க.||
உங்கள் கள்ளம் கபடம் இல்லா மனதிர்க்கும் நேர்மைக்கும் எங்கயோ போய்டிங்க போங்க உங்கள் தைரியம் பாராட்ட பட வேண்டியதே __________ஆயிரத்தில் ஒருத்தி(தீ) பல இருளடைந்த மனங்களுக்கு ஒளியூட்ட
நல்லா இருக்கு ..இன்றைக்கும் கும்மி இல்லை..
வாங்க ஸ்ரீராம் எனக்குக் கோவமே வராதே !தெரியும்தானே உங்களுக்கு.அப்புறம் என்ன !
சரி இதே படத்துக்கு அழகா ஒரு கவிதை எழுதிட்டாப் போச்சு !
:::::::::::::::::::::::::::::::::::
தமிழ்...கவிதை அழகாவா இருக்கு.
இண்ணைக்கு ஒருத்தர் சொன்னார் டெரரா இருக்காம் !ச்...ச உங்களுக்கும் பொறாமையா? இந்தக் கவிதைல பொறாமை சேர்க்காம விட்டிட்டேனே !
::::::::::::::::::::::::::::::::::
மணிப்பக்கம் என்ன? வாயடைச்சுப் போனீங்க.ஏதாச்சும் சொல்லணும்.
மனசுக்குள்ள வச்சிருக்கக்கூடாது.
:::::::::::::::::::::::::::::::::::
சங்கர் வாங்க.பொங்கல் விடுமுறை ஓடிப்போச்சா !இனி அடுத்த விடுமுறை வரைக்கும் ஏதாச்சும் கிறுக்கிட்டே இருக்கலாம்.நான் சொல்ல வந்தது பெண் அழகானவள்தான்.அடக்கம் தென்றல் மலர் எல்லாமே அவள்தான்.
அவளுக்குள்ளும் எத்தனை குணங்கள்.மாறுபட்ட முரண்பாடாய் இருப்பாள் சிலநேரம்.
பொய்யானவளும் கூடத்தானே உடலாலும் மனதாலும்.
:::::::::::::::::::::::::::::::::::
தமிழ்ப்பறவை அண்ணா அப்போ 50 புள்ளிதானா ?ஏன் மிச்சமெல்லாம் உண்மையில்லையா ?பொய்யா சொல்லிட்டேன் ?
:::::::::::::::::::::::::::::::::::
ஜெயா உங்கவீட்ல உங்களுக்கு என்ன பட்டப்பெயர் வச்சிருங்காங்க.சொல்லுங்க !
:::::::::::::::::::::::::::::::::
வாங்க வாங்க கார்த்தி.உங்கமேலதான் கோவம்.எங்க ரொம்ப நாளாய்க் காணோம்.விருது பதிவில வரவு போட்டீங்களா ?
:::::::::::::::::::::::::::::::::::
டாக்டர் ...நான் எதை எழுதினாலும் நல்லாருக்கு ஹேமான்னு சொல்லிட்டுப் போயிடுவார்.என்கூட சண்டை போடாத ஒரு நல்லவர்னா என் அன்பான டாக்டர்தான்.
::::::::::::::::::::::::::::::::::
சதீஸ் முதன்முதலா வந்ததே வந்தீங்க.மனசில யாரைத் திட்டணும்ன்னு நினைச்சீங்களோ.
திட்டித் தீர்த்திருக்கலாமே !அடிக்கடி வாங்க இனி.
:::::::::::::::::::::::::::::::::
விஜய் வீட்ல பாப்பாங்களோன்னு புகழ்ந்தே சொல்லிட்டீங்க.நானும் இல்லண்ணு சொல்லலியே.
இருந்தாலும்...!
வாங்க.முதன் முதலா வந்திருக்கீங்க.அன்போட வரவேத்துக்கிறேன்.அடிக்கடி சந்திக்கலாம் இனி.
:::::::::::::::::::::::::::::::::::
வாங்க குமார்.உங்களுக்கு என் அன்பான வரவேற்பு.
::::::::::::::::::::::::::::::::::
மீனாட்சிக்கா வாங்க.நான் உங்க ரசிகை.நீங்க என் ரசிகை.
சந்தோஷமாயிருக்கு.
நான் சொன்னதெல்லாம் சரிதானே?நீங்க மட்டும்தான் என்னைபோல ஒத்துக்கிட்டீங்க.
:::::::::::::::::::::::::::::::::::
வசந்து....உங்களுக்கு அனுபவம் போதாது.இதெல்லாம் சின்னப் பசங்கல்லாம் பேசப்படாது.காலம் போகட்டும்.இந்தக் கவிதையைத் தேடிப் படிச்சுப் பாப்பீங்க.அப்போ கேட்டுக்கிறேன் !
::::::::::::::::::::::::::::::::::
புலவரே யார் சொன்னா பெண் அழகில்லன்னு.நானும் சொல்லலப்பா !
::::::::::::::::::::::::::::::::::
வாங்க கண்ணகி.உங்கள் பதிவையும் மிகவும் ரசித்தேன்.புதிதாய் கைகோர்த்திருக்கிறீர்கள்.நன்றி.
:::::::::::::::::::::::::::::::::::
கமலேஸ் பாராட்டா...சரி சரி.
:::::::::::::::::::::::::::::::::::
கோபி திரும்பவும் வந்ததுக்கு நன்றி.அந்தப் பதிவுக்குள் என் இனிய உறவுகளின் வாழ்த்துக்களைச் சேகரிக்கிறேன் சந்தோஷமாய்.
அதுதான்.நன்றி கோபி.
::::::::::::::::::::::::::::::::::
வாங்க வாங்க ராஜன்.என்னை ஆயிரத்தில் ஒருத்தி சொல்லி கண்கலங்க வச்சிட்டீங்க.அடிக்கடி வாங்க.இப்பிடி ஏதாச்சும் கிறுக்கிட்டே இருப்பேன்.
:::::::::::::::::::::::::::::::::::
நசர்....2010 ல இருந்து இனிக் கும்மி இல்லண்ணு சொன்னமாதிரி இருக்கு !அப்போ இருக்கா !
நல்லா வந்திருக்கு ஹேமா..
ஆஹா ஆஹா ... உண்மை எல்லாம் வெளியில வந்துகிட்டு இருக்கு,
//thenammailakshmanan said...
//கனல் கக்கி
பாசாங்காய் நடிக்கும்
நெருப்பின் சாயல்.
வீரியம் பேசும்
வெத்து வேட்டு.//
ஹேமா நம்மளப் பத்தி நாமளே இப்படி புட்டு புட்டு வைக்கப்படாதுப்பா ஹிஹிஹி//
ஒருத்தருக்கு - ரெண்டு பேர் ஒத்துகிட்டத நினைச்சு பெருமையா இருக்கு. வாழ்த்துக்கள்.
பாவம் வசந்!!
“அந்த” வயசப் போட்டாலும் போட்டார்
இந்தப் பாடு படுகிறார். ஏனப்பு ஒரு76,86
என்று போட்டிருந்தாலும் நானாவது
பார்த்து ஒன்று,இரண்டு காதல் கடிதமாவது
போட்டிருப்பேன்!{அனுப்பிருப்பேன்}
சின்னப் பையன்,சின்னப்பையன் என்று
எல்லோரும் தள்ளி வைக்கிறார்கள்
ஹேமாவுங்கூட...
ஹேமா வசந்துக்கு கோபம் வராது....
வந்தா....அப்புறம் பெரிய பையனாட்டம்
{உங்களை விட..}கவிதை எழுதிப் போடுவான்
என் பேராண்டி கவனம்.
//வார்த்தைகள் போலவே
பொய்யான பேய் !!!//
:-))
கவிதை நல்ல இருக்கு ....
நான் சின்ன பையனுங்க ....... அதனால் பெரிய விஷயத்திற்கு எல்லாம் கருத்து சொல்ல மாட்டேன்
"Comment moderation has been enabled. All comments must be approved by the blog author."
enna kodumai sir ithu
present madam
(late cmd kku sorry)
அழகான வார்த்தை விளையாட்டு
ஹேமா எங்கவீட்டில எனக்கு பட்டப்பெயர் எல்லாம் யாரும் வைக்கவில்லை.நான் ரொம்பவே நல்ல பொண்ணூ.என்னை நானே ஒரு பட்டப்பெயர் வச்சு கூப்பிடுவன்,அது --- அது தான் நீங்க ஒரு கிளிக்கதையில சொன்ன ´´ வெங்காயம்’’ வெளியே சொல்லி விடாதிங்க. அது சரி எதுக்கு திடீர் என்றூ பட்டப்பெயர கேட்டிங்க? ஏதாவது கைவசம் இருக்கா? இந்த வயசுக்கு மேல பட்டப்பெயர் எல்லாம் வச்சா சிரிப்பாங்க வேணாம் விடுங்க. அன்புக்கு நன்றி ஹேமா**** அண்ணியிடம் சுகம் கேட்டதாக சொல்லவும்...
வசந்து....உங்களுக்கு அனுபவம் போதாது.இதெல்லாம் சின்னப் பசங்கல்லாம் பேசப்படாது.காலம் போகட்டும்.இந்தக் கவிதையைத் தேடிப் படிச்சுப் பாப்பீங்க.அப்போ கேட்டுக்கிறேன் !//
என்ன ஹேமா எப்போதுமே சின்னப்பையன் சின்னப்பையன்னு சொல்லியே மட்டம் தட்டுறீங்க நேரா ஒரு நாள் பார்க்கத்தான் போறீங்க அப்போ தெரியும்...
மனசால சின்னபையன்தான் இன்னும் நான்..
//அழகையே மயக்கும்
அழகான இராட்சசி.
வார்த்தைகள் போலவே
பொய்யான பேய் !!!//
எப்படிங்க இவ்வளவு நல்லா யோசித்து எழுதுறீங்க...... அருமை.
நன்றி ஞானம்.என்னமோ மழுப்பலா நல்லாருக்கு கவிதைன்னு சொன்னமாதிரி எனக்குக் கேக்குது !
::::::::::::::::::::::::::::::::::
வாங்கோ வாங்கோ ரவியா யா யா.சரி ...நாங்க சொன்னது சரி.கை தட்டி ரசிச்சீங்க.எங்க தைரியம் இருந்தா ...பயமில்லாம உங்களைப் பத்திச் சொல்லுங்க பாக்கலாம் !
:::::::::::::::::::::::::::::::::::
கலாம்மா...இதானே சரில்ல.எனக்குப் போட்டியா நீங்க.நான் நினைச்சிட்டு இருக்கேன் காதலர் தினத்துக்கு சிவப்பு றோஸ் குடுக்க !பாவம்...வசந்து.... சின்னப் பொடியன்.
::::::::::::::::::::::::::::::::::
நன்றி..உழவன்.நீங்க சொல்லியிருக்கிற அந்தக் குறியீடு என்னன்னு தெரில.அதிசயமா அதிர்ச்சியா ?
:::::::::::::::::::::::::::::::::::
அட...தம்பி மேவீ...கொடுமை எனக்குத்தான் தாங்கமுடில உங்க கொடுமை.அதான் பின்னூட்டம் என கையில.இருங்க இருங்க.சாட்டிங்ல பண்ற கொடுமை போதாதா எனக்கு !
::::::::::::::::::::::::::::::::::
நன்றி அண்ணாமலை.எப்பிடி...
இப்பிடி..ஒண்ணும் சொல்லாம !
:::::::::::::::::::::::::::::::::::
ஜெயாக்குட்டி...அண்ணி அதே பயம் பக்குவத்தோட நல்ல சுகம்.
சொல்றேன் இல்லாட்டி பாப்பாங்க உங்க பின்னூட்டம்.
அட...சரியாத்தான் வெங்காயம்ன்னு பெயர் வச்சிருக்கேனோ ! இதைவிட வேற என்ன பட்டம் வேணும்டா.
:::::::::::::::::::::::::::::::::
குட்டிப்பையா....வசந்து....பாக்கலாம் பாக்கலாம் நேரில.பாத்தாச் சந்தோஷம்தான் தூரத்து உறவுகளை.
::::::::::::::::::::::::::::::::::
சித்ரா...உங்களைக் காணோமேன்னு தேடினேன்.எங்கப்பா போனீங்க?
"பெண்"ன்னு தலைப்புக் குடுத்து வாங்கிக் கட்றேன்.கைக்கு உதவியா இருக்கவேணாமா !
எங்க மல்லிக்கா,பாஃயிசா ,மாதேவி எல்லாரும் !
மீனாட்சிக்கா மட்டும்தான் நான் சொன்னதிலயும் உண்மை இருக்குன்னு சொல்லியிருக்காங்க.
உண்மை சில சமயங்களில் சுடும் என்ன ஹேமா சரிதானே.
வரிகள் சூப்பர்
வலிமையான கவிதை..
Post a Comment