*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, December 06, 2009

நே[கா]ற்று முத்தம்...

என் கண்ணுக்குள் நீயாய்
நெஞ்சுக்குள் நிறைவாய்.

இன்னும் இன்னும்
கன்னம் இனிக்க
நீ...
காற்றலையில் தந்த
உன் முதல் முத்தத்தை
பெற்றவளாய் ரசித்தபடி.

இப்போ என்னை இறக்கச்சொல்
மாட்டேன் என்று மறுக்காமல்
உன் காலடியில்.

ஒரே ஒரு சிடுக்கு மட்டும்
மனசோடு
ஒதுங்கிய கிளிஞ்சல்களாய்
உன்னையும்
உன் நினைவுகளையும்
சேர்த்துச் சேர்த்து
நிறைத்து வைத்திருக்கிறேன்
மனக் கிடங்குகள் எங்கும்.

பக்குவமாய்
யாரிடம் கொடுத்துச் செல்ல
நான் !!!

முத்த மயக்கத்தோடு
ஹேமா(சுவிஸ்)

60 comments:

S.A. நவாஸுதீன் said...

//பக்குவமாய்
யாரிடம் கொடுத்துச் செல்ல
நான் !!//

காற்றோடு இருக்கட்டும் ஹேமா. கவிதை அருமை

அத்திரி said...

அருமை...............ஒரு வித கிறக்கத்தை உண்டு பண்ணுகிறது

வேந்தன் said...

ம்ம்...கவிதை அருமை..:)

பிரபாகர் said...

//இப்போ என்னை இறக்கச்சொல்
மாட்டேன் என்று மறுக்காமல்
உன் காலடியில்.//

அருமை சகோதரி! கிறக்கமாய் காதல் தோய்ந்து இருக்கிறது உங்களின் கவிதை...

பிரபாகர்.

ஜெகநாதன் said...

இந்த ப்ரபஞ்சமே காதலர்களுக்கு ஒரு பெரிய சிறைச்சாலை..
அப்படித்தானே ஹேமா(சுவிஸ்)?
இந்த அர்த்தமற்ற காற்றின் ஓலம், கடலின் சீற்றம், அலையின் வளைவுகள், ஜன்னலின் படபடப்பு என... இதே போன்ற ஒரு பெருமயக்கத்தின் சிறு துளியில் மயங்கி, துஞ்சிப் போகிற ஒரு மனம் எனக்கு இப்போது வாய்த்ததால் இக்கவிதை என்னைப் பெரிதும் கவர்கிறது.

தங்கம் ஒரு மின்கடத்தியா என்று இன்று காலை அண்ணன் (என்னவொரு சந்தேகம் பாருங்க தம்பிகிட்ட? - என்ன பண்ண அவரும் எலக்கியவாதி) என்னிடம் கேட்டான்... ஆமாம்.. என்பதாய் மழுப்பலாய் பதில் சொல்லிவிட்டு கூகிளில் தேடிப் பாரு என்று முடித்துக் கொண்டேன்.

இந்த கவிதை மூலம்தான் தெரிந்து கொண்டேன்.. காற்று ஒரு பயங்கர மின் கடத்தி என்று..!
சரிதானே?

பா.ராஜாராம் said...

அற்புதமாய் வந்திருக்குடா குட்டி!

கலக்கு!

கவிதை போட்டி கவிதை என்னாச்சு?..சீக்கிரம்...

நம்ம நவாஸ் கலக்கி இருக்கார்.போய் பாரு.

பிரியமுடன்...வசந்த் said...

காற்றில் முத்தம் கரையாமல் இருந்தால் சரி...

ரொம்ப காதல் வயப்பட்டுருக்கீங்கன்னு தெரியுது ஹேமா...

கவிதை கூட காதல் பேசுது..

ஆமா எங்க உரையாடல் போட்டிக்கானகவிதை...

பூங்குன்றன்.வே said...

//ஒரே ஒரு சிடுக்கு மட்டும்
மனசோடு.
ஒதுங்கிய கிளிஞ்சல்களாய்
உன்னையும்
உன் நினைவுகளையும்
சேர்த்துச் சேர்த்து
நிறைத்து வைத்திருக்கிறேன்
மனக் கிடங்குகள் எங்கும்.//

ரசித்த வரிகள் இவை.கலக்குங்க.. ஹ்ம்ம்..ஹ்ம்ம்..

D.R.Ashok said...

ஆங் ரைய்டு... நல்லாகிதுபா...

ஸ்ரீராம். said...

குளிர் ஆரம்பம் ஆகி விட்டது ஹேமா...நீங்க வேற... காற்றுன்னுல்லாம் சொல்லி...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல அருமையான காதல் ‍!

மனசுக்குள் ஒரு மத்தாப்பாய் ஒளி வீசட்டும்

தியாவின் பேனா said...

//இப்போ என்னை இறக்கச்சொல்
மாட்டேன் என்று மறுக்காமல்
உன் காலடியில்.
//

என்ன ஹேமா இப்பிடிஎல்லாமா எழுதுறது
அருமையாக இருக்குது.

கவிதை(கள்) said...

இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்

பாதி மயக்கத்தோடு முடிந்த மாதிரி உள்ளது

இப்ப என்ன முத்த வாரமா?

தேனு, நீங்க எல்லாம் வரிசையாக

குளிர் காற்றில் சிவக்கும் உதடுகள் போல
சூப்பரா இருக்கு

விஜய்

சத்ரியன் said...

ஹேமா,

நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. இந்த கூத்தெல்லாம் " நேற்றுதானா".

// காற்றலையில்
நீ...தந்த முதல் முத்தத்தை..பெற்றவளாய்//


நல்லாயிருக்கு.!

(ம்ம்ம்ம்ம்....! இந்த "காதல்" அனுபவம் உள்ளவங்களோட சேரவே கூடாது. பழசையெல்லாம் கெளப்பி விட்டுர்ர்றாங்க.)

Kala said...

ஹேமா
உங்கள் கவிதையால்....
காளைக{ளின்}ள் மனசு
கட்டுக்கு அடங்காமல்......
திமிறுகின்றன.....

ஆ.ஞானசேகரன் said...

//பக்குவமாய்
யாரிடம் கொடுத்துச் செல்ல
நான் !!!//


உங்களின் காதல் காற்றுகா?

நல்லாயிருக்கு ஹேமா,... ஒரு வித கிரக்கம் இருக்கதான் செய்கின்றது...

Kala said...

\\\என் கண்ணுக்குள் நீயாய்
நெஞ்சுக்குள் நிறைவாய்.\\\\

இவ்விரண்டு வரிகளும்.......

இதழ்{கள்}அந்த வண்ணத்துப் பூச்சி
சொல்லும் கவிவரிகளே!போதும்


அன்பின்,காதலின்,நெருக்கத்தின்,
ஏக்கத்தின் புனித வெளிப்பாட்டை
வெளிப்படுத்த!!
மற்றவரிகள் ஒரு ஜோடினைதான்
இருந்தாலும்......
கீழுள்ள வரிகள.....


\\\\பக்குவமாய்
யாரிடம் கொடுத்துச் செல்ல
நான் !!! \\\\\
காதல் {இதயத்தை}மாற்றிக் கொண்டால்....
என்றொரு பயமாகவும் இருக்கலாம்......


பெண் விட்டுக் கொடுத்துச்{சில காரணங்களுக்காய்}
செல்பவளாகவும் இருக்கலாம்.......

“என்னைப்போல்” உன்னை இதயத்தில் வைத்து
நேசிக்க....”.பக்குவம்” உள்ளவர் யார்????என்ற
குறிகளுடன் ....ஏக்கத்தின் வெளிப்பாடும்!!

அருமை! நன்றிஹேமா.

கோபிநாத் said...

ஹேமா, நல்ல எளிமையான கவிதை.

கமலேஷ் said...

//பக்குவமாய்
யாரிடம் கொடுத்துச் செல்ல
நான் !!//

நல்ல வரிகள்...

சந்தான சங்கர் said...

நேற்று இல்லாத
மாற்றம்
காற்று தந்த
பரிமாற்றம்
முத்தமாய்...


அருமை ஹேமா..

tamiluthayam said...

எப்படி தான் இப்படி வார்த்தைகளை கோர்கறிங்களோ... நானும் இப்படி எழுத முயற்சிக்கிறேன். முடியல.

க.பாலாசி said...

//ஒரே ஒரு சிடுக்கு மட்டும்
மனசோடு.
ஒதுங்கிய கிளிஞ்சல்களாய்
உன்னையும்
உன் நினைவுகளையும்
சேர்த்துச் சேர்த்து
நிறைத்து வைத்திருக்கிறேன்
மனக் கிடங்குகள் எங்கும்.//

அழகான வரிகள் மீண்டும் ரசிக்கவைக்கின்றன....(கணிணி வைரஸ் பிராப்ளம் அதான் கொஞ்சநாள் வரமுடியல)

நேசமித்ரன் said...

காதலால் உயிர்ப் பெறும் வாழ்வு
முத்தங்களால் முக்தி அடைகின்றன

இந்த கவிதை முக்தி அடைந்தவளின்
குரல்

கிறங்கி கிறங்க வைப்பது முத்தக் கவிதைகள்

ஹேமா said...

// S.A. நவாஸுதீன்
காற்றோடு இருக்கட்டும் ஹேமா. கவிதை அருமை.//

நவாஸ் எப்பிடி இப்பிடிச் சொன்னா.அப்போ எனக்குண்டான முத்தம் காத்துக்கா !

::::::::::::::::::::::::::::::::::

//அத்திரி ...
அருமை........ஒரு வித கிறக்கத்தை உண்டு பண்ணுகிறது//

அத்திரி பத்திரம்.

::::::::::::::::::::::::::::::::

வேந்தன் கனநாளைக்குப்பிறகு இந்தப்பக்கம்.முத்தச் சத்தம் கேட்டதோ !

:::::::::::::::::::::::::::::::

பிரபா அடிக்கடி வரலாம்தானே.காதல் கவிதைக்கு மட்டுமா பின்னூட்டம் தேவை !

ஹேமா said...

//ஜெகநாதன் ...
இந்த ப்ரபஞ்சமே காதலர்களுக்கு ஒரு பெரிய சிறைச்சாலை..
அப்படித்தானே ஹேமா(சுவிஸ்)?//

ஜெகா வாங்கோ.எனக்கு இன்னும் காதல் அனுபவம் தெரியவில்லை.
உங்களைப்போல அனுபவிச்சு இலக்கண இலக்கியத்தோட சொல்லத் தெரியல.

//இந்த கவிதை மூலம்தான் தெரிந்து கொண்டேன்.. காற்று ஒரு பயங்கர மின் கடத்தி என்று..!சரிதானே?//

அப்பிடித்தான் எனக்கும் விளங்குது.
எட்டாத் தூரத்துக்கு மனசையே கடத்திப்போகிறதே இந்தக் காற்று !

::::::::::::::::::::::::::::::::::

பா.ரா அண்ணா நன்றி.எல்லாரும் என்னமோ போட்டிக் கவிதை எழுதுறாங்கன்னு கவனிச்சேன்.ஆனா அது பற்றிய விளக்கம் தெரியவில்லை.இப்போதான் ஒரு இணைய நண்பர் தெரிவிச்சார்.தயாராகிறேன்.

::::::::::::::::::::::::::::::::

வசந்து....கிண்டல்தானே !ஏன் காதல் வயப்பட்டாத்தான் கவிதை வருமோ !

போட்டிக் கவிதை அடுத்த பதிவாய் வரும்.நன்றி.

ஹேமா said...

நன்றி குன்றன்.உங்கள் கவிதைகளையும் ரசிக்கிறேன்.

::::::::::::::::::::::::::::::

அஷோக்,ஆங் ரைய்டு... நல்லாகிதுபா....சரி சரி ரைட்டுங்கோ.

::::::::::::::::::::::::::::::::

//ஸ்ரீராம்...
குளிர் ஆரம்பம் ஆகி விட்டது ஹேமா...நீங்க வேற... காற்றுன்னுல்லாம் சொல்லி...//

என்ன ஸ்ரீராம்...குளிருக்கும் காத்துக்கும் முத்தத்துக்கும் என்ன சம்பந்தம் !

::::::::::::::::::::::::::::::::::

// ஸ்டார்ஜன் ...
நல்ல அருமையான காதல் ‍!

மனசுக்குள் ஒரு மத்தாப்பாய் ஒளி வீசட்டும்//

வாங்க ஸ்டார்ஜன்.முத்தச் சத்த மயக்கம் குழந்தைநிலாவுக்குள் கொண்டு வந்திருக்கோ !
முதல் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.அடிக்கடி வாங்கோ.

சில இணைய நண்பர்கள் நான் அவர்கள் பதிவுக்குப் போய் வாசித்துப் பின்னூட்டம் தந்து வந்தாலும், வேணுமென்றே என் பக்கம் வருவதில்லை.காரணம் தெரியவில்லை !

ஹேமா said...

தியா வாங்கோ.காதல் என்றாலே ஒரு கிறக்கம்தான்.அது இயல்புதானே !

:::::::::::::::::::::::::::::

விஜய் முத்தக் கவிதைன்னா நீட்டா வேணுமோ !பாதி மயக்கமும் இல்ல.முழுசும் இல்ல.இவ்ளோதான்.

::::::::::::::::::::::::::::::

இவர் அடுத்தவர்.பாருங்க.சத்ரியா சொல்லிட்டேன் நல்லாயில்ல.
நானாச்சும் மாறி மாறி எழுதறேன்.
காதல் கவிதையா கொட்டி எழுதிக்கிட்டு...!

:::::::::::::::::::::::::::::::::

கலா வாங்க.எங்கடா கலாய்க்கலாம்ன்னு பாத்திட்டு இருக்கீங்க.

உங்க விமர்சனமே என் கவிதையை இன்னொருதரம் பார்க்க வைக்கும்.
நன்றி கலா.உண்மைதான் எல்லாரும் அரைமயக்கத்திலயாக்கும்.

::::::::::::::::::::::::::::::::::

நன்றி ஞானம்.கலா சொன்னது சரியாத்தான் இருக்கு.

டம்பி மேவீ said...

வாவ் .... கடைசி வரிகள் செம கிளாஸ்.... இன்னும் பெரிய கவிதையாக எழுதிருக்கலாம்

அமுதா said...

/*பக்குவமாய்
யாரிடம் கொடுத்துச் செல்ல
நான் !!!
*/
அருமை

நசரேயன் said...

//என் கண்ணுக்குள் நீயாய்
நெஞ்சுக்குள் நிறைவாய்.//

என்னது காத்தா?

இன்னும் இன்னும்
கன்னம் இனிக்க
நீ...
காற்றலையில் தந்த
உன் முதல் முத்தத்தை
பெற்றவளாய் ரசித்தபடி.
//
கல்கண்டா?
//
இப்போ என்னை இறக்கச்சொல்
மாட்டேன் என்று மறுக்காமல்
உன் காலடியில்.
//
காலை பிடித்து தள்ளி விடவா ?
//
ஒரே ஒரு சிடுக்கு மட்டும்
மனசோடு.
ஒதுங்கிய கிளிஞ்சல்களாய்
உன்னையும்
உன் நினைவுகளையும்
சேர்த்துச் சேர்த்து
நிறைத்து வைத்திருக்கிறேன்
மனக் கிடங்குகள் எங்கும்.
//
ஏன் இன்னும் குப்பை வண்டி வரலையா ?

//

பக்குவமாய்
யாரிடம் கொடுத்துச் செல்ல
நான் !!!
//
சுவிஸ் பாங்க்ல கொடுங்க
//
//

kanagu said...

nalla irundhudu hema... aana vazhakkam pola sila pathigal puriyala :(

ஹேமா said...

வாங்க கோபி.கவிதை எழுதத் தொடங்கியாச்சா.எங்கே காணோமே !

:::::::::::::::::::::::::::::::

கமலேஸ் வாங்க.அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

::::::::::::::::::::::::::::::::

கவியோடு கருத்துச் சொல்லும் சங்கருக்கும் மிக்க நன்றி.

:::::::::::::::::::::::::::::::::

தமிழுதயம் நான் உங்களைப் பார்த்துப் பொறாமைப்பட நீங்கள் என்னைப்பார்த்தா !

:::::::::::::::::::::::::::::::::

பாலாஜி உங்களை எதிர்பார்த்திருந்தேன்.வந்தீர்கள்.
சந்தோஷம்.

சில இணைய நண்பர்கள் சரளமாக் எல்லா இடங்களுக்கும் போகிறார்கள்.ஏன் என் தளம் வர மறுக்கிறார்கள்.காரணம் என்ன பாலாஜி ?

::::::::::::::::::::::::::::::::::

நன்றி நன்றி நேசன்.உங்க கவிதைகள் போல உருண்டு புரள வைக்காமல் கிறங்கத்தானே வைக்கிறேன்.
பரவாயில்லைத்தானே !

ஹேமா said...

வாங்க வாங்க மேவீ,இன்னும் பெரிசா முத்த்க கவிதை கேக்குதோ உங்களுக்கு.இருங்க வாறேன்.உங்க வீட்டு போன் நம்பரை முதல்ல தாங்க.அப்புறமா எழுதறேன்.

::::::::::::::::::::::::::::::::

அமுதா நிறையக் காலத்துக்கு அப்புறமா இந்தப்பக்கம்.
சுகம்தானே தோழி!

:::::::::::::::::::::::::::::::

நசர்,அடிக்கடி சுவிஸ் பாங்கில கை வைக்கிறீங்க.பத்திரம்.

என்னதான் கலாய்ச்சாலும் கவிதை நல்லாருக்கான்னும் சொல்லிட்டுப் போகலாமில்ல.

:::::::::::::::::::::::::::::::

வாங்க கனகு.இந்தக் கவிதைல விளங்காமப்போக என்ன இருக்கு.
சும்மாதானே !

Muniappan Pakkangal said...

Unaiyum,un ninaivuhalaiyum-varihal nalla irukku Hema.

ஜெகநாதன் said...

//ஜெகா வாங்கோ.எனக்கு இன்னும் காதல் அனுபவம் தெரியவில்லை
உங்களைப்போல அனுபவிச்சு இலக்கண இலக்கியத்தோட சொல்லத் தெரியல.//
ஹேமா(சுவிஸ்)
இன்னும் கிடைக்காத அனுபவத்திற்காக எதைச் சாடுவது என்று தெரியவில்லை.
அனுபவிக்காமல் எழுதுவதும் கவிதைதானே? சாவைப் பற்றி நிறைய ​பேர் சாகமலேயே எழுதுவது போல நீங்களும் அனுபவங்கள் இல்லாமலேயே நிறைய கவிதைக்கலாம்.

கவிதை​போட்டி நடப்பதாக அறிகிறேன்.. அதில்​வெற்றி​பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!

அரங்கப்பெருமாள் said...

நல்ல கவிதைதான்...ஆனால் யாரிடமும் சொல்லாதீர்கள், நினைவுக்கு காரணமானவனிடம் தவிர...

அது சரி,
//கன்னம் இனிக்க//

என்பது “ கண்ணம் இனிக்க” என இருக்க வேண்டுமா?

கன்னம் - திருட்டு எனப் பொருள்.
காற்றலையில் தந்த முதல் முத்தம் எனவே அதை ‘கண்ணத்தில்’ பெறுதல் சுகம்.

" உழவன் " " Uzhavan " said...

எப்படித்தான் இப்படி உங்களுக்கு வார்த்தைகள் வந்து விழுகிதோ தெரியவில்லை. வாழ்த்துக்கள்

Kala said...

\\\என்பது “ கண்ணம் இனிக்க” என இருக்க வேண்டுமா?

கன்னம் - திருட்டு எனப் பொருள்.
காற்றலையில் தந்த முதல் முத்தம் எனவே அதை ‘கண்ணத்தில்’ பெறுதல் சுகம்.\\\\\


ஐயா! கன்னம் தான் சரியான சொல்.
கண்ணம்__ தவறு

{முகப் பக்கவாட்டில்}கண்,வாய்,காது
ஆகிய மூன்றுக்கும் நடுவில் உள்ள
சதைப்பற்று மிகுந்த பகுதிதான் கன்னம்.

சரி ஒருபாடல்.....என்றும் பதினாறு...
வயது பதினாறு........என்றபாடலில்....
“கன்னம் சிவந்தது எதனாலே கைகள்
கொடுத்த கெடையாலே.... என்று வரும்...


“கன்னத்தில் என்னடி காயம் இது
வண்ணக் கிளி செய்த மாயம்....
என்றும்...ஒரு பாடலில் வரும்!

கன்னம் __நீங்கள் சொன்னது போல்...
திருட்டு,களவு என்றும் பொருள்படும்


என் மனதைக் கன்னமிட்டான் ஒருவன்.....
என் வீட்டில் கன்னமிட்டான் திருடன்...

எனக்குத் தெரிந்தவை இதுதான்
{அதிம் தெரிந்தவரென்று தயவுசெய்து}
எண்ணவேண்டாம்.
ஹேமா மன்னிக்க வேண்டும்.{முந்திரி........}
நன்றி.
பாடலைச் சத்தமாய் பாடிப் பாருங்கள்
{மனைவிக்குத் தெரியாமல்..}
தெரியவந்தால் ....அம்போதான்!!

க.பாலாசி said...

//சில இணைய நண்பர்கள் சரளமாக் எல்லா இடங்களுக்கும் போகிறார்கள்.ஏன் என் தளம் வர மறுக்கிறார்கள்.காரணம் என்ன பாலாஜி ?//

பேக்ரவுண்ட்....லோட் ஆக லேட் ஆகிறது. உங்களது பக்கத்தினை ஓப்பன் செய்தவுடன் கணிணியின் அனைத்து செயல்பாடுகளும் கொஞ்சம் பொறுமையாக நடக்கிறது. காரணம் இதுவாகவும் இருக்கலாம். நன்றி...

ஜோதிஜி said...

இந்த முறை கவனமா உள்ளே நுழையும் போதே பெட்டிச்சத்தத்தையும் அணைத்து விட்டேன்.

கதறிய தொடர்புகளை மீறி உங்கள் வார்த்தைகள் என்னை சிந்திக்க வைத்ததை போலவே என் தேவியர்களுக்கு உங்கள் அலங்கார விசயங்கள் மிகவும் பிடித்துப் போயிற்று.

தோழி said...

romba nalla vanthirukku Hema :)

rajan RADHAMANALAN said...

ம்ம்ம் ..... என்னவோ போங்க !

Kala said...

அனைவரும் மன்னிக்க வேண்டும்
நான் தவறுதலாய் ....கெடையாலே
என்று போட்டிருக்கின்றேன்
கொடையாலே என்று வரும்.

சந்ரு said...

//ஒரே ஒரு சிடுக்கு மட்டும்
மனசோடு.
ஒதுங்கிய கிளிஞ்சல்களாய்
உன்னையும்
உன் நினைவுகளையும்
சேர்த்துச் சேர்த்து
நிறைத்து வைத்திருக்கிறேன்
மனக் கிடங்குகள் எங்கும்.//

நல்ல வரிகள் ரொம்ப பிடிசிருக்கு

தமிழ்ப்பறவை said...

பூங்குன்றனின் ரசனைதான் என்னதும்.
வாழ்த்துகள் ஹேமா...
கவிதைப் போட்டிக்கவிதை என்னாச்சு?

ஹேமா said...

வாங்க டாக்டர்.எங்க ரொம்ப நாளாக் காணோம் ?சுகம்தானே !

::::::::::::::::::::::::::::::::::

ஜெகா எல்லாமே அனுபவிச்ச அப்புறம்தான் கவிதை எழுதனும்ன்னா கஸ்டம்.அது காலம் கடந்து வரும் கவிதைகளா ஆயிடுமே !

கவிதைப் போட்டிக்கு நாள் இருக்குத்தானே.இப்போதுதான் செய்தி சரியாகக் கிடைத்திருக்கிறது.
போட்டிடலாம்.பெரியவங்களுக்குள்ள போட்டி போடணுமான்னும் இருக்கு.நேசன்,பா.ரா அண்ணா,
யாத்ரா,சென்ஷி,அஷோக்...இப்பிடி நிறைய பேர் இருக்காங்க.

:::::::::::::::::::::::::::::::::::

வாங்க பெருமாள்.அவருக்கு மட்டும்தான் தெரியும்.இந்தக் கவிதை தனக்கே உரியதுன்னு.நான் யாருக்கும் சொல்லவே மாட்டேனே !

உங்க கன்னம் வீங்காம அடிச்சு கலா சொல்லிட்டாங்க கன்னம்தான் சரின்னு.

:::::::::::::::::::::::::::::::::

கலா அருமையா பாட்டோட பதமா பதவுரை சொல்லிட்டிங்க.
சந்தோஷமயிருக்கப்பா.

ஹேமா said...

நன்றி உழவன்.உங்க கவிதைகளின் கற்பனைகளை விடவா !

:::::::::::::::::::::::::::::::::

வாங்க ஜோதிஜி.உங்க தேவியரையும் எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாமே !

:::::::::::::::::::::::::::::::::

வாங்க தோழி.முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.இனி அடிக்கடி சந்திப்போம்.

::::::::::::::::::::::::::::::::

ராதா ராதா நீ எங்கேன்னு தேடிப்பிடிக்க வேண்டியிருக்கு உங்களை.வந்தும் ம்ம்ம்...சலிச்சுக்கிட்டீங்க.ஏன் !

::::::::::::::::::::::::::::::::::

சந்ரு நன்றி.மறக்காமல் இந்தப்பக்கமும் எட்டிப்பார்த்துக்கொள்றீங்க.சந்தோஷம்.
வேலைப்பளுவா ?

ஹேமா said...

//க.பாலாசி ...
//சில இணைய நண்பர்கள் சரளமாக் எல்லா இடங்களுக்கும் போகிறார்கள்.ஏன் என் தளம் வர மறுக்கிறார்கள்.காரணம் என்ன பாலாஜி ?//

பேக்ரவுண்ட்....லோட் ஆக லேட் ஆகிறது. உங்களது பக்கத்தினை ஓப்பன் செய்தவுடன் கணிணியின் அனைத்து செயல்பாடுகளும் கொஞ்சம் பொறுமையாக நடக்கிறது. காரணம் இதுவாகவும் இருக்கலாம். நன்றி...//

நன்றி பாலாஜி.என்னவோ சிலசமயம் மனசுக்கு கஸ்டமாவும் இருக்கும்.ஏன் என்னை ஒதுக்குகிறார்களோன்னு.
காரணம் நீங்க சொன்னதாகவும் இருக்கலாம்.நிறையவே யோசிக்கிறேன்.என் தளத்தில் எதை அகற்றலாம்ன்னு.சிலபேர் வானொலி கேட்பதாகவும் சொல்கிறார்கள்.
மற்றையவற்றில் எதை அகற்றவென்று தெரியவில்லை.
அழகாயும் இருக்கே !

:::::::::::::::::::::::::::::::::

நன்றி தமிழ்ப்பறவை அண்ணா.
போட்டிக்கு ரெடியாகிட்டு இருக்கேன்.
கொஞ்சம் பிச்சுப்பிடுங்கல்.
என்னான்னு விளங்கிச்சா !

அரங்கப்பெருமாள் said...

ஆம்... கண்ணம் - அல்ல, கன்னம்- சரி.

நன்றி கலா.

//உங்க கன்னம் வீங்காம அடிச்சு//

வீங்கினாலும் என்ன? சரி எதுவெனப் புரிதல்தானே முக்கியம்.

புலவன் புலிகேசி said...

//இப்போ என்னை இறக்கச்சொல்
மாட்டேன் என்று மறுக்காமல்
உன் காலடியில்.
//

//பக்குவமாய்
யாரிடம் கொடுத்துச் செல்ல
நான் !!!
//

ஹேமா காதலில் விருப்பமில்லாத என்னைப் போன்றவர்களையும் காதலிக்கத் தூண்டும் வரிகள்....

thenammailakshmanan said...

//கிளிஞ்சல்களாய் நினைவுகள் //கலக்குறீங்க ஹேமா

அருமை உங்கள் //பறக்கும் முத்தம்// என்ற சொல்லும்

thenammailakshmanan said...

அண்ணன் குடும்பத்தார் நலமா ஹேமா

சத்ரியன் said...

ஹேமா,

மத்தவங்க வரலைன்னு மட்டும் சொல்லுங்க....!

நீங்க ஏன் அரங்கபெருமாள் பக்கம் போவல.? உங்களையும் , கலாவையும் எதோ உதவி வேணும்னு கூப்பிட்டிருக்கார். செத்த சீக்கிரமா போங்கோ......Gooooooooooooooo...!

நினைவுகளுடன் -நிகே- said...

நானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் வலைக் குழாமில் இணைத்துக் கொள்ளுங்கள்.

Chitra said...

//உன்னையும்
உன் நினைவுகளையும்
சேர்த்துச் சேர்த்து
நிறைத்து வைத்திருக்கிறேன்
மனக் கிடங்குகள் எங்கும்.//
...... முத்த மயக்கத்தில் மனதில் ஒரு எழுச்சி.

velkannan said...

நானும் ஆஜர் ஹேமா. நல்ல இருக்கு கவிதை

துபாய் ராஜா said...

முத்தம். முத்தம்.. முத்தமா...
மூன்றாம் உலக யுத்தமா...

ஆசைக் கதையின் உச்சமா...
ஆயிரம் பாம்பு கொத்துமா...

ஒற்றை முத்தத்தில்..
உன் ஒற்றை முத்தத்தில்...

கவிதை படித்ததும் '12பி' படப்பாடல் வரிகள் தான் மனதில் ஓடியது.

(அதுசரி ஹேமா.இப்போது ஏன் உங்கள் வலைப்பூவில் பாட்டு கேட்க முடியவில்லை. எங்களைப் போன்றோருக்காக ஏற்பாடு செய்யுங்கோ...)

நிலா முகிலன் said...

முத்தத்தின் ஈரம் காய்வதற்குள் (காற்றில்) முடித்த கவிதை போலவா இது? அருமை.

divyahari said...

என் கண்ணுக்குள் நீயாய்
நெஞ்சுக்குள் நிறைவாய்.

இன்னும் இன்னும்
கன்னம் இனிக்க
நீ...
காற்றலையில் தந்த
உன் முதல் முத்தத்தை
பெற்றவளாய் ரசித்தபடி.

இப்போ என்னை இறக்கச்சொல்
மாட்டேன் என்று மறுக்காமல்
உன் காலடியில்.

ஒரே ஒரு சிடுக்கு மட்டும்
மனசோடு
ஒதுங்கிய கிளிஞ்சல்களாய்
உன்னையும்
உன் நினைவுகளையும்
சேர்த்துச் சேர்த்து
நிறைத்து வைத்திருக்கிறேன்
மனக் கிடங்குகள் எங்கும்.

பக்குவமாய்
யாரிடம் கொடுத்துச் செல்ல
நான் !!!

முத்த மயக்கத்தோடு

செதுக்கி செய்த கவிதை வரிகளை பிரிக்க மனம் இன்றி.. சரியான கவிதை.. நான் புதிதாக வந்துள்ளேன்.. தங்களுடன் இணைத்து கொள்ளுங்கள்..

விச்சு said...

மனதுக்கு பிடித்தவர்களுக்காக இறக்கவும் இருக்கவும் செய்யலாம்...

Post a Comment