*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, March 11, 2012

காலமாற்றம்...

பனிமூட்ட மஞ்சள் தெருவில்
இன்னும்...
இறுகப்பிடித்திருக்கும்
இலைகளையும்
கைவிடும் நிலையில்
பனிக்கால மரங்கள்.

அள்ளிக்களைய
வாகனம் வருமுன்
சேமித்துக்கொண்டேன்
பச்சையமிழந்து
புற்களை முத்தமிடும்
கொஞ்சப் பழுத்தல்களை.

உதிர்வதும் தளைப்பதும்
மறுக்கமுடியாததென்றாலும்
சாத்தியமாயின
தஞ்சமாய்
சிலமஞ்சள் இலைகள்.

இனி...
மொட்டை மரங்களாய்
எட்ட நின்றாலும்
பழங்கதைபேசிக்கொள்ளும்
அழகுபடுத்திய
என் பல்கனி சருகுகளோடு!!!

ஹேமா(சுவிஸ்)

54 comments:

றமேஸ்-Ramesh said...

ரசனை. அழகு

Yoga.S.FR said...

வணக்கம் ஹேமா!கவிதை நன்றாயிருக்கிறது.பச்சையம் இழந்த இலை...........................என்னைத்தான் சொல்லுறாவோ??????

ஹேமா said...

இங்க பாருங்களேன் றமேஸ்..கனநாளைக்குப் பிறகு.சுகம்தானே றமேஸ் !

யோகா அப்பா...பச்சையமிழந்த இலை...உங்களுக்கோ சொன்னனான்.அடக்கடவுளே.இது கவிதை.தொப்பி அளவாயிருக்கோ ஒருவேளை !

கலா said...

மொட்டை மரங்களாய்
எட்ட நின்றாலும்
பழங்கதைபேசிக்கொள்ளும்
அழகுபடுத்திய
என் பல்கனி சருகுகளோடு!!!\\\\\\\\

ஏதேதோ...சொல்கிறது சருகாகிய இலை

தமிழ் உதயம் said...

உதிர்ந்த இலைகளில் - இவ்வளவு அற்புதமான கவிதையா? வியக்கிறேன். மஞ்சள் இலைகள் உங்களோடும் பேசி இருக்கக்கூடும்.

koodal bala said...

வாழ்க்கையையும்,உதிர்ந்த இலைகளையும் கோர்த்து அழகிய கவிதையை வடித்துள்ளீர்கள் சகோதரி!

அம்பலத்தார் said...

//பனிமூட்ட மஞ்சள் தெருவில்
இன்னும்...
இறுகப்பிடித்திருக்கும்
இலைகளையும்
கைவிடும் நிலையில்
பனிக்கால மரங்கள்.//
ஆகா புரிஞ்சிடிச்சு....
மரம்
செல்லம்மா
இலை
நான்

அம்பலத்தார் said...

யேம்மா ஹேமா
எப்படிம்மா எதைப் பார்த்தாலும்
இப்படி அழகா
கவிதை எழுதுறிங்க.

நாகு said...

கொஞ்சிப்பேசி நெஞ்சி நிறைந்த நினைவுகளோடு,
தரைசேர்ந்த தள்ளாடிய இலைகள்
உன்னைப் பார்த்து (மரஉச்சியைப் பார்த்து)மருகி உருகுகிறது
காய்ந்து சருகுகிறது
என்னை வஞ்சித்து சாய்த்தது
நியாயமா என்று

நாகு said...

ஹேமா உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

நாகு
www.nagaindian.blogspot.com

அம்பலத்தார் said...

வார்த்தைகளை வைத்து வித்தைகள் செய்வதில் இன்றுள்ள ஈழத்துக் கவிஞரில் உங்களுக்கே முதலிடம் வாழ்த்துக்கள் ஹேமா!

மகேந்திரன் said...

இலைகளை இழந்து நீ
மொட்டை கோபுரமானாலும்
உனதான பசுமை நினைவுகியா
என் நெஞ்சில் பச்சையம் இழக்காமல்
செய்துவிட்டாய்...

அழகிய கவிதை சகோதரி..

guna thamizh said...

கவிதை நன்றாகவுள்ளது.

மதுமதி said...

ரசித்தேன்..ரசித்தேன்..ரசித்தேன்..

கணேஷ் said...

அழகான படத்துக்கேற்ற அழகிய கவிதை... எப்படித்தான் வார்த்தைகள் வந்து விழுகுதோ உங்களுக்கு! மிக வியக்கிறேன் நான்! அருமை! அருமை!

சித்தாரா மகேஷ். said...

//உதிர்வதும் தளைப்பதும்
மறுக்கமுடியாததென்றாலும்
சாத்தியமாயின
தஞ்சமாய்
சிலமஞ்சள் இலைகள்//
அருமையான ரசனை அக்கா.வாழ்த்துக்கள்.

ஹேமா said...

கலா...உருகும் வாழ்வும் நிறம் மாறும் சருகும் ஒன்றையே சொல்லும்.உள்ளம் எதைச் சொல்லுமோ அதன்படி உற்று நோக்கினால் எங்கும் அதுதான் !

தமிழ்...நிச்சயமாய் குளிரானாலும் பல்கனியில் மஞ்சள் போர்வை போர்த்தியதுபோல உள்ள பூமியை ரசிப்பது அழகு.அப்போதுதான் இலைகளோடு கதைத்துக்கொண்டேன் .எழுத்திலும் பதித்துக்கொண்டேன் !

கூடல் பாலா...உண்மைதான் உறவுகளை விட்டிருக்கும் எனக்கு ஏனோ அந்த இலைகளின் உதிர்வில் வீடும்,அப்பா,அம்மாவும் நாங்களும் தெரிந்தோம் !

அம்பலம் ஐயா...அப்போ செல்லம்மா மாமி மரமெண்டால் உங்களை எப்ப தேம்ஸ்க்க தள்ளக் குடுத்துவிடலாம் எண்டு ஆள் தேடுறாவோ.அதிராவைத் தொடர்புகொள்ள வைக்கட்டோ.நன்றி நன்றி என் கவிதைக்கு உங்கட மரமளவு வாழ்த்தும் பாராட்டும்.நானே மர உச்சிக்குப் போய்ட்டேன்.உண்மையில் அனுபவசாலிகளின் பாரட்டுக்கள் மிகுந்த சந்தோஷம்.நன்றி !

நாகு...முதன் முதலாக என் பக்கம் வந்து வாழ்த்தியிருக்கிறீர்கள் மிக்க நன்றி.அதுவும் கவிதை வடிவில்....அழகு !

மகேந்திரன்...வாங்கோ.இலைகள் உதிர்ந்து மரங்கள் மொட்டையாய் நிற்கும்போது மிகுந்த கவலையாயிருக்கும்.வாழ்வோடு ஒட்டிப் பார்க்கும் மனம்.நன்றி !

குணா...வாங்கோ.அன்பான கருத்துக்கு நன்றி !

மதுமதி...அன்புக்கு நன்றி.எங்கே கனநாட்களாய் பதிவுகள் போட்டதாகத் தெரியவில்லையே.பார்க்கிறேன் !

கணேஸ்...ஃப்ரெண்ட் உங்கள் கருத்துக்கும் சந்தோஷம்.எத்தனையோ புத்தகங்களைப் படிப்பீர்கள்.கவி ரசனை நிச்சயம் தெரியும்.சரி பிழைகளும் புரியும்.05.03.2012 ல் உயிரோசையில் பதிவான கவிதை இது.படத் தெரிவுக்கு அவர்களுக்குத்தான் பாராட்டு !

சித்தாரா...வாங்கோ.எங்க ஆளையே காணேல்ல.சுகம்தானே சகோதரி.அன்புக்கும் ரசனைக்கும் நன்றி !

ஸ்ரீராம். said...

கைவிடும் நிலையில் பனிக்கால மரங்கள்.... இந்த வரி சில செய்திகள் சொல்கிறது.
பச்சையமிழந்து புற்களை முத்தமிடும் ...என்ன வர்ணனை... அருமை ஹேமா...

Seeni said...

ini uthirum ilaikal-
ungal kavithaiyai arimukam-
seyyum!

மோ.சி. பாலன் said...

கவிதை அருமை ஹேமா.
சருகுகள் பழங்கதைகள் பேசியாவது மீண்டும் மரம் துளிர்க்கட்டும்.

தனிமரம் said...

கவிதை சொல்லும் இலையின் வண்ணத்தின் ஊடே பயனாகிப் போகும் வாழ்வு முறையை. பனிக்காலமும் ரசிக்கலாம் உங்கள் கவிதையை பார்க்கும் போது.

தனிமரம் said...

இன்று யோகா ஐயா[அம்பலத்தார் எல்லாம் குசினிப்பக்கம் போகவில்லைப்போல என்னை விட முன்னுக்கு வந்திட்டணம். செல்லம்மாக்காவிடம் சொல்லனும் பல்க்கனியில் சருகு இருக்கும் பொறுக்கவிடச்சொல்லி

தனிமரம் said...

பசுமை நினைவுகள் ஏப்போதும் ரசனைமிக்க்துதான் அழ்கான் கவிதை அம்பலத்தார் சொல்லியதை நானும் வழிமொழிகிறேன் வார்த்தைகள் ஊங்களுக்கு வித்தைகள்தான்.

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

உதிர்வதும் தளைப்பதும்
மறுக்கமுடியாததென்றாலும்
சாத்தியமாயின
தஞ்சமாய்
சிலமஞ்சள் இலைகள்.///////

ம்.......! உண்மைதான்! மஞ்சள் இலைகளுக்காக வருந்துவோம்!

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

இனி...
மொட்டை மரங்களாய்
எட்ட நின்றாலும்
பழங்கதைபேசிக்கொள்ளும்
அழகுபடுத்திய
என் பல்கனி சருகுகளோடு!!!///////

மரங்களுக்கே அவ்வளவு தன்னம்பிக்கை இருக்கும் போது...... மனிதர்களாகிய எமக்கு?

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

அள்ளிக்களைய
வாகனம் வருமுன்
சேமித்துக்கொண்டேன்
பச்சையமிழந்து
புற்களை முத்தமிடும்
கொஞ்சப் பழுத்தல்களை ///////

ஹேமா உங்கள் கவிதைகளின் ஒவ்வொரு வரிகளுக்கும் பக்கம் பக்கமாய் விளக்கம் எழுதணும்! அவ்வளவு ஆழமான வரிகள்!

விச்சு said...

மனித வாழ்க்கையும் இலைகள் போலத்தான். பச்சையத்துடம் இளமையாகவும், பழுத்தலில் முதுமையாகவும். ஆனால் சருகுகள் நொருங்கத்தான் என்றாலும் அதிலுள்ள அனுபவம் வாழ்க்கைப்பாடம்தான்.நல்லாயிருக்கு ஹேமா. எனக்கு மார்ச்1 முதல் follower widget வேலை செய்யவில்லை.ஒரு கட்டம் மட்டும் தெரிகிறது. பதிவு போட்டதும் உங்கள் dashboardக்கு வருகிறதா?

தியாவின் பேனா said...

ஹாய் ஹேமா நல்ல கவிதை காலமாற்றத்துக்கு ஏற்றது இங்கும் உதே நிலைதான்

இராஜராஜேஸ்வரி said...

உதிர்வதும் தளைப்பதும்
மறுக்கமுடியாததென்றாலும்
சாத்தியமாயின
தஞ்சமாய்
சிலமஞ்சள் இலைகள்.

காலமாற்றம் தவிர்க்கமுடியாதே!

ராஜி said...

பச்சையம் இழந்த இலை..., நல்லா தான் யோசிக்குறீங்க. நீங்க பாட்டனி ஸ்டூடண்டா?

கே.ஆர்.பி.செந்தில் said...

உதிரும்
இலைகள் ஒவ்வொன்றிலும்
வளர்கிறது
ஒரு காடு
இந்தக்கவிதை வழியாகவும்...

ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதை ஹேமா.

/உதிர்வதும் தளைப்பதும்
மறுக்கமுடியாததென்றாலும்
சாத்தியமாயின
தஞ்சமாய்
சிலமஞ்சள் இலைகள்./

வாழ்வின் பழுத்த அனுபவ ரேகைகளுடனான இலைகள்.

சிவகுமாரன் said...

காய்ந்த சருகும் கவிதையானது தங்கள் கண்பட்டு
அருமை சகோதரி

Anonymous said...

Ready to welcome spring...

ஹேமா...பல காலங்கள் ஒரே ஆண்டில்...அனுபவிப்பது சிலர் தான்...அனுபவிப்பதில் கவிதை சில தான்...

நல்லாயிருந்தது...வாழ்த்துக்கள் சகோதரி...

தீபிகா(Theepika) said...

பச்சையமிழந்து
புற்களை முத்தமிடும்
கொஞ்சப் பழுத்தல்களை.

”பழுத்தல்”
நல்ல சொல்லாடல். வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

கவித, கவித அதென்னங்க பச்சையம் இழந்த இலை? நான் மேத்ஸ் ஸ்டூடண்ட் எனக்கு விளாக்கமா சொல்லுங்க ப்ளீஸ்

மாலதி said...

நல்ல உவமைகலத் தேடி இனிமையாக சொல்லியுலீர்கள் சுவை என்பது கவிதையின் கருவில் மட்டும் அல்ல சொல்லுகிற தன்மையிலும் அதை அழகாக நகர்த்துகிற தன்மையிலும் உயர்ந்து நிற்கிறது

Sekar said...

உதிர்வதும் தளைப்பதும்
மறுக்கமுடியாததென்றாலும்
சாத்தியமாயின
தஞ்சமாய்
சிலமஞ்சள் இலைகள்.

அருமை வார்த்தைகள் வாழ்த்துகள்.

விமலன் said...

நல்ல கவிதை ,வாழ்த்துக்கள்,
பச்சையமிழக்கிற,பச்சையமிழந்த நிலையில் உள்ள இலைகள் நிறைந்துள்ள சமூகத்தில் நாம் முடிந்தவரை அள்ளி பாதுகாத்துக்கொள்வதும்,பாதுகாப்பளிப்பதும் நல்லதும்,சுகமானதுமே/பழங்கதகள் பேசி பரிமாறிக்கொள்ள தோதாகவும்,
மணஆறுதலாகவும் இருக்கும்/நன்றி,வணக்கம்.

meenakshi said...

பிரமாதம்! மிகவும் ரசித்தேன்.

Kanchana Radhakrishnan said...

கவிதை அருமை ஹேமா..ரசித்தேன்.

நம்பிக்கைபாண்டியன் said...

\\\\\இன்னும்...
இறுகப்பிடித்திருக்கும்
இலைகளையும்
கைவிடும் நிலையில்
பனிக்கால மரங்கள்.////

ஆரம்பமே அழகு!

இலையுதிர்காலத்தை சிறந்த வார்த்தை பிரயோகங்களால் கவிதையாக்கியிருக்கிறீர்கள்!

athira said...

ஹேமா.. உங்களுக்கு இலைகள் வரத் தொடங்கிட்டுதோ? எங்களுக்கும் எல்லாம் அரும்புது.. ஆனால் இம்முறை உப்படிப் பனியில்லை:(.

அழகான கவிதை.

நானும் போனவருடம் எழுதினேன் “இளவேனிற்காலம்” சொந்தக் கவிதைதான்:) நேரம் கிடைப்பின் படியுங்கோ..

http://gokisha.blogspot.com/2011/04/blog-post_17.html

சசிகலா said...

அணு உலை கலாச்சாரத்தில் நாம் . கொஞ்ச காலத்தில் மரம் இதுவென்று நம் பிள்ளைகளுக்கு பொருட்காட்சி சாலையில் காட்டுகின்ற நிலை வரலாம் .

அருள் said...

ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!

http://arulgreen.blogspot.com/2012/03/blog-post_14.html

jayaram thinagarapandian said...

//பனிமூட்ட மஞ்சள் தெருவில்
இன்னும்...
இறுகப்பிடித்திருக்கும்
இலைகளையும்
கைவிடும் நிலையில்
பனிக்கால மரங்கள்.
//அருமை ..
என்றும் மாறாதது மாற்றம் ..

அரசன் சே said...

வணக்கம் அக்கா ..
பட்டென்று நெஞ்சுக்குள் பதிந்து கொள்ளும் கவிதையிது ,,
வாழ்த்துக்கள்

சத்ரியன் said...

//உதிர்வதும், தளைப்பதும்
மறுக்கமுடியாததே//

மர(தாவர) இலைகளும்.
மனதின் நினைவுகளும்,
காலமாற்றத்திற்கு முரண்படும் சாத்தியங்கள் மிகமிகக் குறைவே!

//தஞ்சமாய்
சிலமஞ்சள் இலைகள்//

உதிரவிருப்பதைத் தஞ்சமாக்கிக் கொண்ட கவிதையும், கவிதையை மெருகூட்டும் காட்சியும் மிகவும் கவர்ந்தது, ஹேமா.

கீதமஞ்சரி said...

தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_16.html

தவறு said...

ஹேமா...எப்படி இருக்கீங்க...
வரவர கவிதை கவிதையாகதான் இருக்கு...வாழ்த்துகள்.

அப்பாதுரை said...

மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் மரங்களிடையே மனிதம்?

ஹேமா said...

ஸ்ரீராம்...பனிக்கால மரங்கள் ஒரு பக்கம் அழகானாலும் கவலையையும் தரும்.அந்த நிசப்தம் ஒரு பெரும் சோகம் !

சீனி...நல்லது.உதிரும் மரங்களிலாவது என் ஞாபகத்தைப் பொத்திச் சேர்த்துக்கொள்ளுங்கள்.நன்றி !

மோ.சி.பாலன்...வணக்கம் வாங்கோ.உதிரும் ஒவ்வொரு சருகும் சேர்த்து வைத்திருக்கும் பழங்கதைகள்தான் எம்மை வழிநடத்தும் !

தனிமரம்...நேசன் பனிக்காலம்தானே குளிர்ந்தாலும் ரசனை மிக்கது.என்ன கொஞ்சம் கவனமாய் நடக்கவேணும்.வழுக்கி விழுந்தால் அவ்வளவுதான்.அதுவும் அந்த நோக்கள் மாறாமல் இருத்திவிடும்.பாவம் வயசு போன நேரத்தில யோகா அப்பாவையும்,அம்பலம் ஐயாவையும் குளிருக்க பழுத்தல் பொறுக்க ஆர் விட்டது.தேம்ஸ்க்க தள்ளுவமே !

மணி வாங்கோ...நினைக்கிறதைச் சொல்லவேணும்.அப்பத்தான் எழுத இன்னும் ஆசையும் அக்கறையும் வரும்.அதுவும் உங்களைப்போல ஆட்கள் கட்டாயம் சரி பிழை சொல்லவேணும்.என்னை இவ்வளவு எழுத வைத்தவர்கள் என் நண்பர்கள்தான் !

விச்சு...மனித வாழ்வையும் சருகையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்றாகியிருப்பது போலத்தானே.ஆனால் சருகுகளை அழகுபடுத்தப் பயன்படுத்துவார்கள்.ஆனால் எங்களை....!

தியா...வாங்கோ இருந்திட்டு ஒருதரம் வந்து “நானும் இருக்கிறேன்” எண்டு சொல்லிப் போறமாதிரி இருக்கு.சரி சுகமாய் இருந்தால் சந்தோஷம் !

இராஜராஜேஸ்வரி...வாழ்வின் மாற்றத்தை மாற்ற நாங்கள் யார்.அசைபோட்டு நினைவை மீட்டிப் பார்க்கலாம்.அவ்வளவுதான் !

ராஜி...பச்சை இல்லாம மஞ்சளாகப் போன இலைகள் பச்சையம் இழந்த இலைகள் என்று சொல்லப்படும்.சரியோ !

செந்தில்...நீங்கள் சொன்ன கவித்தத்துவம் அழகு.”உதிரும் இலைகள் ஒவ்வொன்றிலும் வளர்கிறது ஒரு காடு...”

ராமலஷ்மி...அக்கா இலைகளின் ரேகைகள் போல வயதானவர்கள் முகங்களிலும் ரேகை அனுபவ ரேகைதானே !

சிவகுமாரன்...உங்கள் அருமையான கவிதைகளை விடவா என் கவிதைகள்.கற்றுக்கொண்டிருக்கிறேன் உங்களிடம்கூட !

ரெவரி...அனுபவங்கள்தான் மனிதனை இன்னும் முன் தள்ளுகிறது.பேச எழுதவெல்லாம் தூண்டுவதும் இதே அனுபவம்தான் !

தீபிகா...”பழுத்தல்”எங்கள் ஊர்களில் யாழில் அடிக்கடி மாவிலை.பலாவிலை,வேலியோரச் சருகுகளுக்குப் பயன்படுத்துவோம்.ஞாபகம் வருகிறதா !

சிபி...நானும் ரொம்பப் படிக்காத ஒரு ஆள்தானுங்கோ.கொஞ்சம் தமிழ் அறிவு மட்டுதான் !

ஹேமா said...

மாலதி...உங்கள் பாராட்டுக்கு நன்றி.விளங்காத கவிதைகளுக்கு திட்டவும் செய்யும் தோழி நீங்கள்தானே !

சேகரன்...அன்புக்கு நன்றி தம்பி !

விமலன்...நீங்கள் உங்கள் அனுபவங்களைக் கதை கதையாகச் சொல்கிறீர்கள்.அவ்வளவு அனுபவங்கள் என்னிடம் இல்லை !

மீனும்மா...நன்றி நன்றி உங்கள் பிரமாதத்திற்கு !

காஞ்சனா அன்ரி...வீட்டு வேலைகளோடும் இடைநடுவில் என் பதிவையும் ரசிக்கிறீர்கள்.நன்றி !

நம்பிக்கைபாண்டியன்...சில விஷயங்களைப் பார்த்ததும் எழுதிவிடலாம்போல இருக்கும் !

அதிரா...எங்கட நாட்டில நல்ல பனி இந்த வருடத்தில்.மலைகளில் பனிச்சறுக்குபவர்கள் பனி கூடிவிட்டது என்று குறை சொல்கிறார்களாம்.இந்தக் கிழமை கொஞ்சம் சூரிய பகவான் வீட்டு வாசல்களை எட்டிப் பாக்கிறார்.அவருக்கும் குளிருதாம்.அதுதான் அவர் தன்ர வீட்டுக்குள்ளேயே பதுங்கிக்
கொள்றார் !

சசி...உண்மைதான் உங்கள் கவலை நியாயமானது.இங்கு காடாய்க் கிடந்த இடங்கள்கூட அப்பாட்மெண்டாய் உயர்ந்து நிற்கிறது !

அருள்...உங்கள் தமிழுணர்வுக்கு நன்றி.நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.உங்கள் பங்களிப்புக்கு வாழ்த்துகள் !

ஜெயராம்...மாற்றங்களாவது மாறாமல் இருக்கட்டுமே.அதுவே சந்தோஷமில்லையா !

அரசன்...ஒட்டிக்கொண்டதா குளிர்காலக் கவிதை.குளிராமல் போர்த்திக்கொள்ளுங்கள்.இதமான தேனீர் தருகிறேன் !

சத்ரியன்...ஒட்டிப் பிரிந்து விழும்போது அந்தப் பழுத்தல்களின் வலி...மரத்திற்கும்தான்.படம் உயிரோசை தந்தது !

கீதா...எனக்கும் பிடித்த கவிதையை ஆழத்தேடி அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோதரி.சந்தோஷமும் கூட !

தவறு...காணவில்லை என்று விளம்பரம் கொடுக்க நானும் ரதியும் யோசிச்சுக்கொண்டிருக்கிறோம்.வந்து தலை காட்டிவிட்டுப் போறீங்களா.சந்தோஷம்.குளிர் இந்தப் பக்கம் தள்ளிவிட்டிச்சோ !

அப்பாஜி...மனிதனால் ஏற்றுக்கொள்ள முடியாததை இந்த மரங்கள் ஏற்று நம்பிக்கையோடு மீண்டும் துளிர்கின்றன.மரமென்று இனி யாரையும் திட்டவேணாம் !

மாதேவி said...

பனிக்கால ரசனை, அழகிய மஞ்சள் தெரு அனைத்துமே அற்புதமாக மனத்தில் நிற்கின்றது.

Post a Comment