*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, December 24, 2010

தீர்க்கப்படாத தீர்மானங்கள்...

கடந்துவிட்ட பேச்சு வார்த்தைகள்
பிச்சை போட்ட கோரிக்கைகள்
ஏற்றுக்கொள்ளாததால்
இல்லையென மறுக்கப்பட்டதாம் ஈழம்
சொல்கிறது
இலங்கை அரசாங்கம்.

தனித்தும் இல்லாமல்
சேர்த்தும் கொள்ளாமல்
தவிப்போடு தொடர்கிறது வாழ்க்கை.

இணைவதும்...ஏற்பதுமான
இயல் வாழ்வு இனி எப்போ ?

இல்லை என்று சொல்லாவிட்டாலும்
யார் நீ.....
என்பதான தள்ளி வைப்பு.

பேசித் தீர்க்காத வார்தைகளாலேயே
இடைநிறுத்தப்பட்டதாய் உணர்கிறேன்.
எனக்கான தீர்மானங்கள்
அந்த வார்தைகளுக்குள்ளும்
அடங்கியிருக்கலாம்.

நீ....
மௌனித்திருந்தாலும்
நாடு கடந்த
போராட்டம்போலத் தொடரும்
என்....
பேசித் தீர்க்காத வார்த்தைகள்!!!

ஹேமா(சுவிஸ்)

36 comments:

கலாநேசன் said...

//இல்லை என்று சொல்லாவிட்டாலும்
யார் நீ.....//

மனதுக்கு நெருக்கமான உண்மை வரிகள்.

சத்ரியன் said...

//நீ....
மௌனித்திருந்தாலும்
நாடு கடந்த
போராட்டம்போலத் தொடரும்
என்....
பேசித் தீர்க்காத வார்த்தைகள்!!!//

ஹேமா,

உயிர்ப்புடன் இருத்தலே அவசியம்... திர்த்துக்கொள்ள முடியும்!

ஸ்ரீராம். said...

இணைவதும் ஏற்பதுமான இயல் வாழ்வு இனி எப்போ...

பெரிய கேள்வி. என்று தீருமோ இந்த வேதனை.. தனித்தும் இல்லாமல் சேர்த்தும் கொள்ளாமல் தவிப்போடு தொடரும் வாழ்க்கை. உணர்வுகள் வரிகளில் வெளிப் படுகின்றன.

நல்ல கவிதை ஹேமா.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

சி.பி.செந்தில்குமார் said...

குட்,ஓட்டு போட்டுடறோம்

சி. கருணாகரசு said...

கற்பனையில்லாத கல்வெட்டு.

அம்பிகா said...

\\இணைவதும் ஏற்பதுமான இயல் வாழ்வு இனி எப்போ\\
கேள்விகள் கேள்விகளாக நிற்கின்றன, பதிலின்றி...

வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஹேமா.

ராமலக்ஷ்மி said...

//பேசித் தீர்க்காத வார்தைகளாலேயே
இடைநிறுத்தப்பட்டதாய் உணர்கிறேன்.
எனக்கான தீர்மானங்கள்
அந்த வார்தைகளுக்குள்ளும்
அடங்கியிருக்கலாம்.//

உண்மைதான் ஹேமா. உணர்வுப்பூர்வமான கவிதை.

தமிழ்மண விருது கிடைக்க என் வாழ்த்துக்கள்.

Rathi said...

இருபொருள் கூறும் கவிதையா இது!!!!

தமிழ் உதயம் said...

எல்லாவற்றுக்கும் எதிர்காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

கே.ஆர்.பி.செந்தில் said...

ஈழம் கண்டிப்பாக மலரும் ...

அமைதிச்சாரல் said...

உணர்வுக்கலவை ஹேமா...

பிரஷா said...

உண்மை வரிகள்.
தமிழ்மணத்தில் வெற்றிபெற வாழத்துக்கள்..

மோனிஷா said...

வலி(மை)யான வரிகள் வாழ்த்துக்கள்.

ராஜவம்சம் said...

நமது கணவும் நினைவாகும் சூழல் தற்சமயம் இருப்பது போல் தோண்றவில்லை

இருந்தும் கடலில் தத்தலிப்பவன் ஈக்குச்சியில் தொத்துவதுபோல் மணம் எதாவது ஒரு சிறு ஒளி தெரிகிறதா என்றே தேடுகிறது கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.

sakthi said...

தனித்தும் இல்லாமல்
சேர்த்தும் கொள்ளாமல்
தவிப்போடு தொடர்கிறது வாழ்க்கை

தவிப்பு தீரும் நாள் தான் என்றோ????

logu.. said...

manathuku nerukamai.. ungal varigal...

வினோ said...

கனவுகள் மெய்ப்படும் நாள் வரும் ஹேமா...

வெற்றி பெற வாழ்த்துக்கள்...

ரிஷபன் said...

இணைவதும்...ஏற்பதுமான
இயல் வாழ்வு இனி எப்போ?

இந்தக் குமுறல்தான் எல்லோர் மனசிலும்.

சிவகுமாரன் said...

////நீ....
மௌனித்திருந்தாலும்
நாடு கடந்த
போராட்டம்போலத் தொடரும்
என்....
பேசித் தீர்க்காத வார்த்தைகள்!!!///

....உண்மையான வரிகள். இழப்புகளுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் ஏது?

ஜெகநாதன் said...

விளிம்பு தழும்பும் வார்த்தைகள்..
*
அலை மேலெறிந்த இலை
அல்லது
இலை மேல் விழுந்த எறும்பு
எறும்பு தவறிய சக்கரைச் சிகரம்
சக்கரை கடந்து வந்த கரும்புத் தோட்டம்
நிலமூன்றி நீர்தேடிய வேர்கள்
வேர்களைந்து வெப்பமேறிய மண்துகள்கள்
துகளறிந்து துகள் அறிந்து துகள் தெறித்து
கை நீளும் தாதுக்கள்...........
என
நலமாய் இருக்கிறது இக்கவிதை!

*
நீங்களும் நலமே என..

yarl said...

// தனித்தும் இல்லாமல்
சேர்த்தும் கொள்ளாமல்
தவிப்போடு தொடர்கிறது வாழ்க்கை// ஹேமா தங்களது இக்கவிதை எமது இனப்பிரச்சனையை மாத்திரம் குறிப்பிடுவது போல் எனக்கு தெரியவில்லை. எதுவாகினும் விரைவில் காலம் பதில் சொல்லும். எல்லாவற்றிக்கும் எப்போதும் ஒரு முடிவு உண்டல்லாவா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல கவிதை ஹேமா.

ஆனந்தி.. said...

ம்ம்..:(

ஜோதிஜி said...

இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்.

சே.குமார் said...

மனதுக்கு நெருக்கமான உண்மை வரிகள்.

எம் அப்துல் காதர் said...

உங்களுக்கு விருது கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

சௌந்தர் said...

வாழ்க்கையின் வலி தெரிகிறது....நிச்சயம் மலரும் ஈழம்

இளம் தூயவன் said...

கவிதையில் வலி தெருகின்கிறது

ஆதவா said...

நன்றாக இருக்கிறது கவிதை!
ஈழம், இலங்கை அரசாங்கம் போன்ற வார்த்தைகளைத் தவிர்த்து ஒரு நல்ல காதல் கவிதை தெரிகிறது.
தமிழும் சிங்களமும் பேசிக்கொள்ளும் கவிதை!
வாழ்த்துக்கள் சகோதரி!

puthuvayal said...

மெளனமாய் நாங்கள் இருக்கிறோம்... சாட்டையாய் சுழல்கிறது கவிதை, ஊமையாய் அழவோம்.

அன்புடன் அருணா said...

புரிகிறது ஹேமா.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

இதற்கெல்லாம் முடிவு எப்போது ஹேமா..

பிரஷா said...

தங்களுக்கு எனது புது வருட வாழ்த்துக்கள் அக்கா...

தமிழ்த்தோட்டம் said...

நிச்சயம் நம் ஈழம் வெல்லும்

jayakumar said...

pls come to my blog also kmr-wellwishers.blogspot.com and send me your mail id to kmrjayakumar@gmail.com....i am in india thank you

Post a Comment