அரை வயிறுதான்
உறவுகள் வீடு நிரம்பலாய்.
இன்று...
உணவு நிரம்பலாய்
உறவுகள் தூரமாய்.
இன்றும்...இப்போதும்
நான் பசியோடுதான்.
ஆண்ட தமிழனாம்
இன்று
அம்மணமாய்
அடிமையாய்
அகதியாய்
அநாதையாய்!
கொழுத்த சிங்களம் அறிந்ததோ
முற்றுப் பெறாத இனம் தமிழனாய்.
அதுதான்
பொட்டே வைக்காமல்
முற்றுப்பெறாத சொல்லாய்
"தெமிழ"என்கிறதோ?
முட்கம்பி தாண்டி
கண்களில் நீர் ஏந்தியபடி
தூர நின்று அம்மா என்கிறேன்.
சேலை காய்கிறது கம்பி வேலியில்.
ம்ம்ம்...
அப்போ அம்மா எங்கே?
கம்பிகளோடு கம்பியாய்
ஒரு கை அசைகிறது.
மகளே...
சுருதிப் பெட்டியோடு
இணந்த குரல்
ஈனஸ்வரத்தில்.
அது அம்மா.
இன்னும்
கொஞ்ச நாட்கள்தான்
கம்பியே தேவையில்லை.
தமிழனின் எலும்புகளே போதும்
தமிழனையே
அடைத்து வைக்க !!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
28 comments:
அன்று
அரை வயிறுதான்
உறவுகள் வீடு நிரம்பலாய்.
இன்று
உணவு நிரம்பலாய்
உறவுகள் தூரமாய்.
இன்றும்...இப்போதும்
நான் பசியோடுதான்.]]
நிதர்சணம் சொல்லும் வரிகள்
அருமை ஹேமா!
இன்னும்
கொஞ்ச நாட்கள்தான்
கம்பியே தேவையில்லை.
தமிழனின் எலும்புகளே போதும்
தமிழனையே
அடைத்து வைக்க !!!]]
மிகவும் வேதனையாய்.
சேலை காய்கிறது கம்பி வேலியில்.
ம்ம்ம்...
அப்போ அம்மா எங்கே?]]
ரணமாய் ...
உணவு நிரம்பலாய்
உறவுகள் தூரமாய்.
இன்றும்...இப்போதும்
நான் பசியோடுதான்.
வலி உணரமுடிகிறது.
முட்கம்பி தாண்டி
கண்களில் நீர் ஏந்தியபடி
தூர நின்று அம்மா என்கிறேன்.
சேலை காய்கிறது கம்பி வேலியில்.
ம்ம்ம்...
அப்போ அம்மா எங்கே?
கலங்கடித்த வரிகள்
இன்னும்
கொஞ்ச நாட்கள்தான்
கம்பியே தேவையில்லை.
தமிழனின் எலும்புகளே போதும்
தமிழனையே
அடைத்து வைக்க !!!
விரக்தியின் உச்சகட்டம்
//இன்னும்
கொஞ்ச நாட்கள்தான்
கம்பியே தேவையில்லை.
தமிழனின் எலும்புகளே போதும்
தமிழனையே
அடைத்து வைக்க !!!//
ஹேமா,
அப்படியொன்று நிகழ்ந்திடும் முன்னே தடுத்திடவாவது தமிழர்கள் ஒன்றினைய வேண்டும். தறிக்கெட்டு ஆடித திரியும் நாய்களுக்கு இது புரியுமோ?
//கொழுத்த சிங்களம் அறிந்ததோ
முற்றுப் பெறாத இனம் தமிழனாய்.
அதுதான்
பொட்டே வைக்காமல்
முற்றுப்பெறாத சொல்லாய்
"தெமிழ"என்கிறதோ?//
என்ன அருமையான வார்த்தைகள் ஹேமா! இதில் உள்ள அர்த்தம் ஆழமாகத் தெரிகிறது. கவிதை முழுக்க கலங்க வைக்கிறது.
ஹேமா
//"தெமிழ"என்கிறதோ//
கவிதை நன்றாக இருக்கிறது என்று சொல்வது நீங்கள் நன்றாக அழுகிறீர்கள் என்று சொல்வச்து போலத் தோன்றுகிறது எனக்கே
வலி எப்படி அழகாக இருக்க முடியும் ?
ஆண்ட தமிழனாம்
இன்று
அம்மணமாய்
அடிமையாய்
அகதியாய்
அநாதையாய்!
இது போன்ற பதிவுகளைத் தொடருங்கள்
வேதனையை சொல்லுது கவிதை...
அங்கே அழுதுக்கொண்டுதான் இருக்கிறது தமிழ் சொந்தம்,
உககத்திற்குத்தான் காது மந்தம்!.... என்னத்தசெய்ய?
கண்ணீர் உடன் வழிமொழிகிறேன்
//இன்னும்
கொஞ்ச நாட்கள்தான்
கம்பியே தேவையில்லை.
தமிழனின் எலும்புகளே போதும்
தமிழனையே
அடைத்து வைக்க !!!//
:-((
//தூர நின்று அம்மா என்கிறேன்.
சேலை காய்கிறது கம்பி வேலியில்//
//கொஞ்ச நாட்கள்தான்
கம்பியே தேவையில்லை.
தமிழனின் எலும்புகளே போதும்//
வலியே வரிகளாய் ...
வழியும் காதலையும்,கம்பி வலை இடையே நீளும் நம் சொந்தங்களின் உன் காருண்யமும் மிக பிரமிப்புடா ஹேமா எனக்கு.ரெண்டையும் அதனதன் தீவிரத்தில் உணர்த்துவதுதான் உன் சிறப்பு.பேனா ஒரு பெரிய ஆயுதம்தான்.நீ உணர்ந்தே இருக்கிறாய்.நம் மக்களுக்கு எதுனா ஒரு நல்லது நடந்தால்,"எரும்பூரிய தடம்"என வரலாறு உன்னையும் நினைவு கூறும்.கூறனும்.
//முட்கம்பி தாண்டி
கண்களில் நீர் ஏந்தியபடி
தூர நின்று அம்மா என்கிறேன்.
சேலை காய்கிறது கம்பி வேலியில்.
ம்ம்ம்...
அப்போ அம்மா எங்கே?
கம்பிகளோடு கம்பியாய்
ஒரு கை அசைகிறது.
மகளே...
சுருதிப் பெட்டியோடு
இணந்த குரல்
ஈனஸ்வரத்தில்.
அது அம்மா.//
மிக மிக நல்ல வரிகள்.
உலகமே தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை அறியாததுபோல் இருப்பதுதான் கொடுமை.
//இன்னும்
கொஞ்ச நாட்கள்தான்
கம்பியே தேவையில்லை.
தமிழனின் எலும்புகளே போதும்
தமிழனையே
அடைத்து வைக்க !!!//
என்ன சொல்ல போகின்றோம் என்பது புரியவில்லை ஹேமா...
//ஆண்ட தமிழனாம்
இன்று
அம்மணமாய்
அடிமையாய்
அகதியாய்
அநாதையாய்!//
மீண்டு வரும் காலம் காத்திருப்போம்...
/* இன்று
உணவு நிரம்பலாய்
உறவுகள் தூரமாய்.
இன்றும்...இப்போதும்
நான் பசியோடுதான். */
சொந்தங்கள் இல்லா வாழ்கை.. சுடும் காடு ஆனது வாழ்கை..
உணவு நிரம்பலாய்
உறவுகள் தூரமாய்...
பொட்டே வைக்காமல்
முற்றுப்பெறாத சொல்லாய்
நல்ல சொல்லாடல்.
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்
Mul verlikkul 3 latcham per,yaarukkum ethuvum seiya mudiyavillayyaa?
//இன்னும்
கொஞ்ச நாட்கள்தான்
கம்பியே தேவையில்லை.
தமிழனின் எலும்புகளே போதும்
தமிழனையே
அடைத்து வைக்க !!!/
நிலைமையின் கோரத்தை உணர்த்துகிறது இவ்வலி நிறைந்த வரிகள்....
//முட்கம்பி தாண்டி
கண்களில் நீர் ஏந்தியபடி
தூர நின்று அம்மா என்கிறேன்.
சேலை காய்கிறது கம்பி வேலியில்.
ம்ம்ம்...//
ரொம்ப வேதனையா இருக்கு ஹேமா..
//அன்று
அரை வயிறுதான்
உறவுகள் வீடு நிரம்பலாய்.
இன்று
உணவு நிரம்பலாய்
உறவுகள் தூரமாய்.
இன்றும்...இப்போதும்
நான் பசியோடுதான்//
உண்மை....
//இன்னும்
கொஞ்ச நாட்கள்தான்
கம்பியே தேவையில்லை.
தமிழனின் எலும்புகளே போதும்
தமிழனையே
அடைத்து வைக்க..//
கண்ணீர் மட்டும்....
எத்தனை கூக்குரல்..வயதான நடுங்கும் குரல் முதல் மழலை வரை. யாருக்கும் கேட்கவில்லையே. பல சமயம் கோபம் வருகிறது,சில சமயம் அழுகை... ஆனால் எதற்கும் உதவவில்லை இவை இரண்டும். கவலப் படுவதா? கேவலப்படுவதா? தவிக்கிறேன்..மிகச் சோகம் சகோதரி..
தமிழின் உணர்வோடு என்னோடு கை கோர்த்துக்கொண்ட....
ஜமால்
நவாஸ்
சத்ரியன்
ஜெஸ்வந்தி
நேசமித்ரன்
கவிக்கிழவன்
கருணாகரசு
வேல்கண்ணன்
தமிழ்ப்பறவை
இரவீ
ராஜாராம்
சந்ரு
ஜானசேகரன்
கார்த்திக்
ஆரூரன் விசுவநாதன்
முனியப்பன்
நிலா முகிலன்
வசந்த்
அரங்கப் பெருமாள்
என் அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.
arumai
Post a Comment