*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, February 23, 2009

சிவராத்திரி

படைத்தவனிடமே தொடக்கம்
நீயா... நானா?
இல்லையில்லை
நானேதான்
இறுமாப்பின் எதிரொலி.
ஆளுமை...
உரிமை மறுப்பு...
தனியாட்சி...
ஆட்சி மோதல்...
பொய்ப்பிரச்சாரம்...
போர்....
இன்னும் இன்னும்...

படைத்தல் கடவுளாம் பிரமனுக்கும்
காத்தல் கடவுளாம் விஷ்ணுவுக்கும்
நீயா...நானா வாக்குவாதம்.
சர்ச்சை தீர்க்க வந்த
ஈசனோ....
தான்தான் ஆள்பவன்.
தன்னை விட்டால்
யாருமே உயர்ந்தவர் உலகில்
இல்லையென்று தீர்ப்பு.

தன்னைக் காத்துக்கொண்டு,
அவர்களே அடிபட
ஆயுதமும்... யுக்தியும்
அருள்கிறாராம்.
"தேடிப்பிடியுங்கள்
என்...
அடியையும் முடியையும்
முடிந்தால்".
எத்தனை அகம்பாவம்
இறைவனுக்கே.

இவர் கூட்டணியில்
அவர்கள் மட்டும்
குறைந்தவர்களா என்ன?
பிரம்மன் அன்னப்பறவையில்
ஈசனின் முடி தேட
விஷ்ணு பன்றியில்
அடி தேடி ஓட,
இங்கே ஆரம்பம்
அரசியல் ஊழல் பொய்.

தாழம்பூவைச் சாட்சியாய் வைத்து
"ஈசன் முடி கண்டேன்.
சூடியிருந்த பூவும் பார்"பிரமன் கூற,
தாழம் பூவும்
ஆட்டியதாம் தலையை.
தீர்ப்பின் முடிவில்
ஆதிமூல நாயகனே
முதலானவன்.

பிரமனுக்குத்
தனிக் கோவிலில்லை.
தாழம்பூவோ
ஒவ்வாது பூஜைக்கு.

கல்கி யுகத்தில்
தர்மத்துக்கு மூன்றே காலம்
வெற்றிக்கு வேகம் குறைவாம்.
ஒரு கால் கொஞ்சம் நீட்டி
மூன்று கால் மடித்திருக்கும்
நந்தி சொல்லும்
கதையும் இதுவாம்!!!!

ஹேமா(சுவிஸ்)

42 comments:

Anonymous said...

சிவரத்திரி விரதமா?? நடு சாமத்தில் பதிவுபோடுறீங்க

Anonymous said...

சிவரத்திரி கவிதையிலா.. படிச்சிட்டு வாரன்

Anonymous said...

இவர் கூட்டணியில்
அவர்கள் மட்டும்
குறைந்தவர்களா என்ன?
//
ஹாஹாஹா
கவிதை நல்லா இருக்கு

thevanmayam said...

படைத்தவனிடமே தொடக்கம்
நீயா... நானா?
இல்லையில்லை
நானேதான்
இறுமாப்பின் எதிரொலி.
ஆளுமை...
உரிமை மறுப்பு...
தனியாட்சி...
ஆட்சி மோதல்...
பொய்ப்பிரச்சாரம்...
போர்....///

ஆஹா! சிவராத்திரிக்கு நல்ல கவிதை

thevanmayam said...

எல்லா இடத்திலும் போட்டி பொறாமைதான்!!!

thevanmayam said...

இவர் கூட்டணியில்
அவர்கள் மட்டும்
குறைந்தவர்களா என்ன?
பிரம்மன் அன்னப்பறவையில்
ஈசனின் முடி தேட
விஷ்ணு பன்றியில்
அடி தேடி ஓட,
இங்கே ஆரம்பம்
அரசியல் ஊழல் பொய்.
///
புராணத்தையும் கலந்து அடிக்கிரீங்களே!

புதியவன் said...

கதாகாலட்சேபம் கேட்ட மாதிரி இருக்கு...
ஒரு புராணக்கதைய கவிதை வடிவில் கொடுத்திருப்பது அருமை...

புதியவன் said...

//படைத்தல் கடவுளாம் பிரமனுக்கும்
அழித்தல் கடவுளாம் விஷ்ணுவுக்கும்//

இது சரிதானா...?...புராணத்தில் நான் வேறு மாதிரி படித்ததாய் ஞாபகம்...

நசரேயன் said...

பதிவை எழுதிட்டு தூங்கிடிங்களா?

கமல் said...

இவர் கூட்டணியில்
அவர்கள் மட்டும்
குறைந்தவர்களா என்ன?
பிரம்மன் அன்னப்பறவையில்
ஈசனின் முடி தேட
விஷ்ணு பன்றியில்
அடி தேடி ஓட,
இங்கே ஆரம்பம்
அரசியல் ஊழல் பொய்.//

என்ன தத்துவம்?? அருமை.....

கமல் said...

படைத்தவனிடமே தொடக்கம்
நீயா... நானா?
இல்லையில்லை
நானேதான்
இறுமாப்பின் எதிரொலி.
ஆளுமை...
உரிமை மறுப்பு...
தனியாட்சி...
ஆட்சி மோதல்...
பொய்ப்பிரச்சாரம்...
போர்....
இன்னும் இன்னும்...//

கடவுள் சொன்னாரா? எப்ப ஆணவத்தை அழிப்பதென்று??

நட்புடன் ஜமால் said...

ஆளுமை...
உரிமை மறுப்பு...
தனியாட்சி...
ஆட்சி மோதல்...
பொய்ப்பிரச்சாரம்...
போர்....
இன்னும் இன்னும்...\\

பூவுலகில் நடப்பவை

ஆனால்

பேரோ பூ- உலகு.

MayVee said...

என்னக்கு கடவுளின் மேல் நம்பிக்கை இல்லை....
கடவுள் என்று ஒருவன் இருந்தால் இலங்கையில் இந்த மாதிரி நடக்குமா......
ஆனாலும்
கவிதை நல்ல இருக்கு

MayVee said...

"புதியவன் said...
//படைத்தல் கடவுளாம் பிரமனுக்கும்
அழித்தல் கடவுளாம் விஷ்ணுவுக்கும்//

இது சரிதானா...?...புராணத்தில் நான் வேறு மாதிரி படித்ததாய் ஞாபகம்..."


நரசிம்ம அவதாரம் அழிக்க தானே வந்தாரு.....
நானும் படித்து இருக்கிறேன்

MayVee said...

வல்மிக்கி ராமயணத்தில .......
ராமர் வானரகளிடம் சொல்லுகிற மாதிரி ஒரு வரி வரும்
"தென் திசையில் ஒரு சபிக்கப்பட்ட தீவு இருக்கிறது ; அங்கு சீதையை தேட வேண்டாம்"
அது தான் இலங்கையோ

i dont know wy...
am reminded of political situations in india and in srilanka
after reading th padivu

அபுஅஃப்ஸர் said...

ஹேமா இது என்னா
வானுலகத்து அரட்டை அரங்கமா? இல்லே நீயா? நானா? வா

கலக்கல்

நல்லயிருக்கு

அபுஅஃப்ஸர் said...

//கவின் said...
சிவரத்திரி விரதமா?? நடு சாமத்தில் பதிவுபோடுறீங்க
/

நீங்களும் சிவராத்திரி விரதமா
நடு சாமத்துலெ பின்னூட்டம்

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான கவிதை.. வாழ்த்துக்கள்..

MayVee said...

nalla kavithai ....
erndaam murai paditha pin telling

ஹேமா said...

கவின்,12 மணி வரைக்கும் முழிச்சு இருந்தா சாமி தாறதில பாதி தருவார் எண்டு என் அம்மா சொல்லுறவா.
அம்மா சொல்லை நான் எப்பவும் கேப்பேன்.(விரதமோ!மத்தியானம் கணவாய்க் கறியும் ...)

ஹேமா said...

தேவா,நம்மட சாமிகள் வழி நடத்தினதைத்தான் இப்போ நம்ம ஆசாமிகள் வழி மொழிகிறார்கள்.தப்பு இல்லையே!

ஹேமா said...

//புதியவன் said...
//படைத்தல் கடவுளாம் பிரமனுக்கும்
அழித்தல் கடவுளாம் விஷ்ணுவுக்கும்//

இது சரிதானா...?...புராணத்தில் நான் வேறு மாதிரி படித்ததாய் ஞாபகம்...//

புதியவன் தப்பா?முடிஞ்சா சரியானதைச் சொல்லுங்க.நானும் தெரிஞ்சுக்கணும்.

ஹேமா said...

வாங்க நசர்.அம்மா சொல்லிட்டாங்க 12 மணி வரக்கும் முழிச்சு அதுக்கு சாமி வரம் தந்தா போதும்ன்னு.
அதான் தூங்கிட்டேன்.

இங்க வேலைக்கு சாமியா வந்து போகப்போகுது.

thevanmayam said...

தொடர் பதிவுக்கு வரவும்

ஹேமா said...

கமல்,எப்பிடி அரசியலும் ஆன்மீகமும் கலந்து ஒரு அடி!சாமி உண்மையாவே இருந்தா எங்கட சனங்களுக்கு ஏன் இப்படி ஒரு கதி?

//கடவுள் சொன்னாரா? எப்ப ஆணவத்தை அழிப்பதென்று??//

யாருக்கு ஆணவம் எண்டு சொல்றீங்கள்.சிங்களவனை நாங்கள் ஆணவம் எண்டு சொல்லுவம்.
அவங்கள் எங்களுக்கு ஆணவம் எண்டு சொல்லுவாங்கள்.அழியிறது பாவப்பட்ட உயிர்களெல்லோ!

ஹேமா said...

ஜமால் சொல்லுங்க,நான் சொன்னது சரியா-தப்பா?சாமி செய்து காட்டினதைத்தானே மனுஷன் செய்யிறான்.

thevanmayam said...

/வெஞ்சனம்- தொட்டுக்கொள்ளும் கூட்டு,பொறியல் //

இந்த ஒரு சொல் வழக்கு மட்டும் இன்னும் எங்க வீட்டில இருக்குங்க...///

தொடர் பதிவுக்கு வரவும்

ஹேமா said...

//MayVee said...
"புதியவன் said...
//படைத்தல் கடவுளாம் பிரமனுக்கும்
அழித்தல் கடவுளாம் விஷ்ணுவுக்கும்//

இது சரிதானா...?...புராணத்தில் நான் வேறு மாதிரி படித்ததாய் ஞாபகம்..."//

மேவி,சிவராத்திரி கதையில் அடி முடி தேடிப்போனவர்கள் யார்?அதை மனதில் வைத்துத்தான் எழுதினேன்.முடிந்தால் திருத்தம் சொல்லுங்க.

ஹேமா said...

//MayVee said...
வல்மிக்கி ராமயணத்தில .......
ராமர் வானரகளிடம் சொல்லுகிற மாதிரி ஒரு வரி வரும்
"தென் திசையில் ஒரு சபிக்கப்பட்ட தீவு இருக்கிறது ; அங்கு சீதையை தேட வேண்டாம்"
அது தான் இலங்கையோ//

அன்றே சொல்லியிருக்கிறார்கள்.
அதன்படியே சபிக்கப்பட்ட இனமாய் தமிழ் மட்டும்தானே!

ஹேமா said...

//அபுஅஃப்ஸர் said...
ஹேமா இது என்னா
வானுலகத்து அரட்டை அரங்கமா? இல்லே நீயா? நானா? வா?//

நீங்க எப்பிடி எடுத்துக்கிட்டாலும் சரி.எதையொ சொல்ல நினச்சு,சாமியைத் திட்டணும்ன்னு நிறையா நாள் ஆசை.அதான்.

விரதாமா?நேத்து ராத்திரிதான் திடீர்ன்னு ரேடியோ கேட்டப்போ காதில விழுந்திச்சு "சிவராத்திரி"ன்னு!

ஹேமா said...

வாங்க கார்த்திகைப் பாண்டியன்.சிவராத்திரியும் அதுவுமா நம்ம பக்கம் வந்திருக்கீங்க.
நன்றி.நீங்க விரதமா?ஏன் தூக்கம் வரலியா?என்றாலும் சந்தோஷம்.இனி அடிக்கடி சந்திக்கலாம்.

புதியவன் said...

//ஹேமா said...
//புதியவன் said...
//படைத்தல் கடவுளாம் பிரமனுக்கும்
அழித்தல் கடவுளாம் விஷ்ணுவுக்கும்//

இது சரிதானா...?...புராணத்தில் நான் வேறு மாதிரி படித்ததாய் ஞாபகம்...//

புதியவன் தப்பா?முடிஞ்சா சரியானதைச் சொல்லுங்க.நானும் தெரிஞ்சுக்கணும்.//

படைத்தல் - பிரம்மா
காத்தல் - விஷ்ணு
அழித்தல் - சிவன்

இப்படித் தான் நான் புராணத்தில் படித்ததாய் ஞாபகம்...

ஹேமா said...

புதியவன்,அப்போ விஷ்ணு காத்தல்ன்னு எழுதணுமா?சரி.

RAD MADHAV said...

//புதியவன் said...
படைத்தல் - பிரம்மா
காத்தல் - விஷ்ணு
அழித்தல் - சிவன்

இப்படித் தான் நான் புராணத்தில் படித்ததாய் ஞாபகம்...//

இது சரியே.

ஹேமா, சிவராத்ரியில் உங்கள் பதிவை படிக்கும்போதும், படங்களை காணும் போதும், சிவ தாண்டவம் நினைவில் வருகின்றது.

//இவர் கூட்டணியில்
அவர்கள் மட்டும்
குறைந்தவர்களா என்ன?
பிரம்மன் அன்னப்பறவையில்
ஈசனின் முடி தேட
விஷ்ணு பன்றியில்
அடி தேடி ஓட,
இங்கே ஆரம்பம்
அரசியல் ஊழல் பொய்.//

ஊழல் அதற்கு முன்பே ஆரம்பித்து விட்டது. இன்று கட்டுக்கடங்காத பேயாக தலை விரித்து ஆடுகின்றது.

// புதியவன் said...

கதாகாலட்சேபம் கேட்ட மாதிரி இருக்கு...//
உண்மைதான்.
மொத்தத்தில் குளிரும் சிவ ராத்திரியில் ஒரு நெருப்புக் கவிதை

ஹேமா said...

மாதவ்,நன்றி....நன்றி.சந்தோஷமாயிருக்கு.என் வளர்ச்சியில் உங்களைப் போன்றவர்களுக்கும் பங்கு இருக்கு.

மாதவ்,நீங்க தந்த
"நித்திரை மேகங்கள்"
ஞாபகம் இருக்கு.அடுத்த பதிவாக...!

ஆதவா said...

கவிதையில் உள்ளார்ந்து ஆன்மீகம் கலந்திருந்தாலும் மறைந்து நின்று சொல்வது தங்களின் ஆதங்கம்..

சிவ, விஷ்ணு வரலாறுகள் பலவுண்டு. ஆனால் யாரும் யாரையும் அடித்துக் கொள்ளவில்லை. பின்வந்தவர்கள்தான் தம் கடவுள் பெரியது என்று குடுமிப் பிடி சண்டைக்குள் இறங்கிக் கொண்டார்கள்.

அரியும் சிவனும் ஒன்றெனவே, இராமேச்சுவரம் தோன்றியது. பொன்னியில் செல்வனில் ஆழ்வார்கடியான் கூட, இராமேச்சுவரத்தில் சண்டையிட்டு கொண்டிருப்பார். அது கல்கி நமக்கு மறைமுகமாக மதவெறியைக் காண்பிப்பதாக அர்த்தம்.

புராணங்கள் எல்லாம் எப்படி? சிறுவர் கதை போன்றது.. கேட்க இனிமை... தெய்வீக விளையாட்டுக்கள் இருப்பதால் குளுமை. சில கிளுகிளூப்பு காட்சிகளும் புராணத்தில் உண்டு, அது தம்பதிகளுக்கு உகந்தது.

சிவன், விஷ்ணு, பிரம்மா, விநாயகர், முருகர் என்று எவரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் கதாபாத்திரங்களே அன்றி வேறொன்றுமில்லை.

உண்மையில் கடவுள் என்பது எது?

இயற்கை!

இயற்கை ஒரு குழந்தை போன்றது!! அதற்கு எப்பொழுது அழ வேண்டும், எப்பொழுது சிரிக்கவேண்டும் என்ற வரைமுறற கிடையாது. அதனால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்றென்போம்.

///படைத்தவனிடமே தொடக்கம்
நீயா... நானா?///

போட்டிகள்தானே உலகை முன்னுக்கு கொண்டு செல்கிறது!!! கடவுள்கள் போட்டிகளின் முன்னுதாரணம்..

///விஷ்ணு பன்றியில்
அடி தேடி ஓட,////

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி.... எனும் திருப்பாவையில் விஷ்ணு உலகையே அளந்தவராக புகழ்கிறாள்... ஆண்டாள் இதை புராணத்திலிருந்துதான் தழுவுகிறாள். அப்படியென்றால், சிவன், விஷ்ணு!! இவர்கள் இருவரில் யார் உயரம் அதிகம்???

இருவரும் முழு உலகை அளப்பதாக இருந்தால், எங்கே கால் வைப்பார்கள்?

///பிரமனுக்குத்
தனிக் கோவிலில்லை.////

பிரம்மனுக்குக் கோவிலுண்டு... ஆனால் மிக மிக குறைந்த அளவில்... எங்கோ ஒன்றிரண்டுமாய்!!

நல்ல கவிதை சகோதரி... சிவராத்திரிக்குத் தயாராகிவிட்டீர்களா??? பலே!!! (ஓவரா கண்ணு முழிச்சு சோடா புட்டி ஆயிடாதீங்க!! )

ஆதவா!

ஹேமா said...

//ஆதவா said...இருவரும் முழு உலகை அளப்பதாக இருந்தால், எங்கே கால் வைப்பார்கள்?//

ஆதவா,தெரியவில்லையா.அளந்து கால் வைத்திருப்பார்களோ இலங்கையில்/ஈழத்தில்.

//பலே!!! (ஓவரா கண்ணு முழிச்சு சோடா புட்டி ஆயிடாதீங்க!! )//

யார் கண்ணு முழிச்சா! மேலே பின்னூட்டங்கள் சரியா பாத்திருந்தா இப்பிடிக் கேக்க மாட்டீங்க.நீங்க விரதமா?எனக்கும் சேர்த்து வேண்டிக்கோங்க.
பாவம் கவின்தான் விரதமாம்.

ஹேமா said...

ஆதவா,சமயங்களையும் சாமிகளையும் கரைச்சுக் குடிச்சிருக்கீங்க போல.

ஆதவா said...

/////ஆதவா,சமயங்களையும் சாமிகளையும் கரைச்சுக் குடிச்சிருக்கீங்க போல.///////


இல்லை சகோதரி. எல்லாம் கேள்வி ஞானம்...

ஆண்டாளைக் கொஞ்ச நாட்கள் மனதில் இருத்தியதால் வந்த வியாக்கியானம்.

என் நண்பர்..... தாமரை செல்வன்..... எல்லா புராணங்களையும் கரைத்துக் குடித்தவர்.... அவரிடம் கற்றுக் கொண்டது பல.... அவர் ஒரு மினி என்சைக்ளோபீடியா.... இல்லை சகோதரி. எல்லாம் கேள்வி ஞானம்...

ஆண்டாளைக் கொஞ்ச நாட்கள் மனதில் இருத்தியதால் வந்த வியாக்கியானம்.

என் நண்பர்..... தாமரை செல்வன்..... எல்லா புராணங்களையும் கரைத்துக் குடித்தவர்.... அவரிடம் கற்றுக் கொண்டது பல.... அவர் ஒரு மினி என்சைக்ளோபீடியா....

Nilavum Ammavum said...

சிவனை பத்தி படிக்குரதுன்னாலே எனக்கு இஷ்டம். கவிதை நடையில வேற சொல்லிருக்கீங்க...ரொம்ப நல்லா இருக்கு

ஹேமா said...

நிலாவும் அம்மாவும்.அழகான பெயர்.முதல் வருகையோடு கை கோர்த்து வரவேற்கிறேன் குழந்தைநிலாவுக்குள்.

stselvan said...

கலியுகத்தில் தர்மத்திற்கு ஒற்றைக் கால்தானாம்..

அப்படி அல்ல சகோதரி...

யுகந்தோறும் ஆண்டுகளின் எண்ணிக்கை குறுகிக் கொண்டே வரும்.

கிருதயுகம் - 17,28,000 ஆண்டுகள் (4 x கலியுகம்)
திரேதாயுகம் - 12,96,000 ஆண்டுகள் (3 x கலியுகம்)
துவாபர யுகம் - 8,64,000 ஆண்டுகள் (2xகலியுகம்)
கலியுகம் - 432000 ஆண்டுகள்

ஆக ஒரு கால் என்பது இத்தனை ஆண்டுகளைக் குறிப்பதாகும்.

இது எதைக் குறிக்கிறது?

காலங்கள் போகப் போக வேகம் அதிகமாகும் என்பதை..

இன்று அதை யாரோ ஒருவர் முர் -இன் விதி என்று மின்னணுவியலில் சொல்கிறோம்..

Transistors per integrated circuit. The most popular formulation is of the doubling of the number of transistors on integrated circuits every two years. At the end of the 1970s, Moore's law became known as the limit for the number of transistors on the most complex chips. Recent trends show that this rate has been maintained into 2007.[17]

காலம் யுகந்தோறும் குறைகிறது. வேகம் யுகந்தோறும் அதிகரிக்கிறது..

ஆக்குபவனுக்கு அகந்தையும், காப்பவனுக்கு பணிவும் இயற்கை..அழிவை அளக்கும் முயற்சியில் யாரும் வெற்றி பெறவில்லை, அகந்தை கொண்டவன் பொய் சொல்கிறான்.. பணிவு கொண்டவனிடம் அழிவு தலைகுனிகிறது..

இதுதான் அடிமுடி அளத்தலின் தத்துவம். உயிரை விட்டு உடலை நோக்குதலாய் கதைகளை விரித்தால் மெய் போல பொய்தான் தெரியும்.


ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் முன் அதை வளர்க்க, பாதுகாக்க ஆலோசனை செய்யணும். காத்தல் கடவுள் முன்பிறந்து ஆக்கல் கடவுள் பின் பிறந்தது

Post a Comment