சிறந்த குறிப்புக்களோடுதான்
இசைத்துக்கொண்டிருந்தேன்
என் கனவுகளுக்கு
மெட்டுப் போட்டுத் தருவதாய்
அடம்பிடித்து
வாசித்தும் காட்டினாய்.
இதே ’வைகாசி’ மாசத்து
ஒரு நீண்ட இரவில்தான்
’சங்கீதத் தோழி’யென்றும்
செல்லப் பெயரிட்டாய்
’நினைவு’ வலிக்க.
காதல் போல ஏதோ ஒன்றை
உன்னிடத்திலும்
என்னிடத்திலும்
’கண்டுகொண்டேன்.’
சங்கீதத் தோழி
நான் பாடத்தொடங்க
நீயோ...
மௌனித்துக்கொண்டாய்.
ஒவ்வொரு இரவிலும்
உரக்க இசைக்கிறேன்
மௌனத்தை உடைக்க
உடைகிறது காதலும்
கனவின் மெட்டுக்களும்.
உன்னால்
உரத்துச் சொல்லப்பட்ட
மூன்று வரிகள் இவை
’ஊரெல்லாம் உறக்கத்தில்
உறங்காமல் நான்
உறங்கவிடாமல்
உன் நினைவுகள்’.
மெட்டுப்போட வரமாட்டாயெனத்
தெரிந்தும் காத்திருக்கிறேன்
நம்பிக்கையோடு.....
இப்படிக்கு அன்போடு........
இசைத்துக்கொண்டிருந்தேன்
என் கனவுகளுக்கு
மெட்டுப் போட்டுத் தருவதாய்
அடம்பிடித்து
வாசித்தும் காட்டினாய்.
இதே ’வைகாசி’ மாசத்து
ஒரு நீண்ட இரவில்தான்
’சங்கீதத் தோழி’யென்றும்
செல்லப் பெயரிட்டாய்
’நினைவு’ வலிக்க.
காதல் போல ஏதோ ஒன்றை
உன்னிடத்திலும்
என்னிடத்திலும்
’கண்டுகொண்டேன்.’
சங்கீதத் தோழி
நான் பாடத்தொடங்க
நீயோ...
மௌனித்துக்கொண்டாய்.
ஒவ்வொரு இரவிலும்
உரக்க இசைக்கிறேன்
மௌனத்தை உடைக்க
உடைகிறது காதலும்
கனவின் மெட்டுக்களும்.
உன்னால்
உரத்துச் சொல்லப்பட்ட
மூன்று வரிகள் இவை
’ஊரெல்லாம் உறக்கத்தில்
உறங்காமல் நான்
உறங்கவிடாமல்
உன் நினைவுகள்’.
மெட்டுப்போட வரமாட்டாயெனத்
தெரிந்தும் காத்திருக்கிறேன்
நம்பிக்கையோடு.....
இப்படிக்கு அன்போடு........
உன் சங்கீதத் தோழி!!!
ஹேமா(சுவிஸ்)
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
64 comments:
ஆஆஆஆஆஆஅ
கவிதை ரொம்ப சுப்பரா இருக்குங்க அக்கா !!
நல்லா புரியுது எனக்கு
அன்புள்ள .......க்கு ,
...கு வா ???
இருங்க உங்கட செல்ல அப்பா வந்து பார்ப்பாங்க ...அப்புறம் இருக்கு கச்சேரி
கலையம்மா...என்ர காக்காச் செல்லம் கனக்கக் கும்மியடிக்கக்கூடாது.கீறிட்ட இடத்தைப் பெரியவங்க நிரப்பிக்கொள்ளுவாங்க.ஓடிப்போய் ஏதாவது கார்ட்டூன் பாருங்கோ !
சங்கீதத் தோழியே..மெட்டுப் போட வைத்தது போங்கள்..
காலங்கள் போனாலும் கனவுகள் கை கூடும் நாள் வரும். அதுவரை காத்திருத்தலும் சுகம்தான்.
காலம் வரும்வரை காத்திருக்கவேண்டும்.நினைவுகள் எப்போதும் யாரையும் உறங்க விடுவதில்லை.புலம்பல்களும் நினைவுகளும்தான் மிச்சம்.
உறங்காமல் நான், உறங்கவிடாமல்
உன் நினைவுகள் !!!!!!!!.......
நல்லாத்தான் இருக்கு..
நினைவுகள் என்றும் வரம்தான். காத்திருத்தலும் சுகம்தான். சங்கீதத் தோழியை ரொம்பவே ரசித்தேன். அருமை.
//ஒவ்வொரு இரவிலும்
உரக்க இசைக்கிறேன்
மௌனத்தை உடைக்க
உடைகிறது காதலும்
கனவின் மெட்டுக்களும்.//
காதல் எவ்வளவு அழகான கவிதைகளைத் தருகிறது!
மெட்டுப்போட வரமாட்டாயெனத்
தெரிந்தும் காத்திருக்கிறேன்
நம்பிக்கையோடு.....////
உங்களுக்கு ஸ்ர்ப்ரைஸாக வந்தேவிடுவார் பார்த்துக்கொண்டேயிருங்கள் ஹேமா..:-))
அருமையான காதல் கவிதை!
சங்கீதத் தோழியின் நம்பிக்கை வெல்லட்டும்.
அழகான மெட்டு.
அன்புள்ள ....க்கு \\\\\\
ஹேமா, உன் புளளிக்கு நான் கோலம்
"போட்டுக்" காட்டட்டுமா?
சங்கீதத் தோழி
நான் பாடத்தொடங்க
நீயோ...
மௌனித்துக்கொண்டாய்\\\\\
ம்ம்ம்ம...காதல் வந்தால் கானம்கூட...வருமா?
அந்த அளவு பாடகியா நீங்கள?
ம்ம்ம்ம...இந்த நிலாப்பாட்டை அந்த
ஞாயிறு சொல்லவே இல்லையே!
சங்கீதத் தோழி
நான் பாடத்தொடங்க
நீயோ...
மௌனித்துக்கொண்டாய்\\\\\//ம்ம் வலிகள் பல கவிதைகள் தரும் ஆனால் காத்திருப்பு ம்ம்ம் வெறுப்பு என்னும் பல இந்தக்கவிதைக்கு நாளை கருத்துக்களுடன் வாரேன்!
காதல் போல ஏதோ ஒன்றை
உன்னிடத்திலும்
என்னிடத்திலும்
’கண்டுகொண்டேன்.’//ம்ம்ம் கண்டுகொண்டதன் வலிகள் மட்டும் கானாமல் போனவன்/வள் புரிந்தால் கோலங்கள் பாடங்கள் சங்கீதம்கள் எல்லாம் ஏன் தானோ மனம் ஏதோ சொல்லுகின்றது! ம்ம் போல ஒன்று செய்யும் மயக்கம் தான் எத்தனை வலிகள் ரசித்த வரி ஹேமா .பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை! ம்ம்ம் மனம் வருகுது இல்லை போக ஆனால் கடமை!
நம்பிக்கைதானே வாழ்க்கை.மெட்டிசைக்க வருவார்கள்.இப்படியான மோன நினைவுகளை சுமந்து திரிவதும் ஒரு சுகமே/நல்ல் கவிதை,வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு இரவிலும்
உரக்க இசைக்கிறேன்
மௌனத்தை உடைக்க
உடைகிறது காதலும்
கனவின் மெட்டுக்களும்\\\\
இவ்வரிகளின்..
ஆழத்தில்...
ஆழ்ந்துபோனேன்
அழுகிறது...
"ஆள"{ழ}ப் பதிந்த
அழகு சிமிழ்.
ஏக்கம்!
ஆதங்கம்!
மௌனம்!
சலனம்!
கலைவை-
உங்கள் கவிதை!
அருமை!
கம்பி அறுந்தால்! நாதம் வருமா?
அதுபோல் அறுந்த காதலில்...
பிறந்த கவி,
ம்ம்ம...அருமை
சங்கீதத்தோழி
என்ற வாய்க்கு நீங்கள் தையல் மிஷினை வைத்து தைத்து விட்டீர்களா? அதான் அடக்கி வாசிக்க வேண்டியிருக்கு. அப்புறம்...
//சந்தர்ப்பங்கள்...
~~~~~~~~~~~~~~~~
வரிசையில் நிற்கும்போதே
முடிந்துவிடும் பிடித்த சாப்பாடு.
சற்று வெளியே சென்றபோது
அப்போதுதான் வந்துவிட்டுப்போன
கடன்காரன்.
அந்தமுகம்தானா என்று
நினைவூட்டிக் கொள்வதற்குள்
’இஞ்சாரப்பா’
என்று கூப்பிடும் கணவன்.
படம் பார்த்துவிட்டு
வந்து சேர்வதற்குள்
வீடு வந்து சேரும்
பக்கத்துவீட்டுக்காரரின்
காட்டிக்கொடுப்பு
பிரம்போடு அப்பா....
எப்போதும்
ஒருகணம்தான் தாமதமாகிறது...!//
இப்படியும் கூட நக்கலா கவிதை எழுதுவீர்களா!! ஒரு கவிதையாவது காதலனை அல்லது கணவனை கிண்டல் பண்ணி எழுதுங்கோ... ப்ளீஸ்.
பால்கோவா என் வலைப்பூவில் வந்து எடுத்துக்கோங்க. உங்களுக்கு அது பத்தாது...பெரிய பார்சலை அனுப்பி வைக்கிறேன்.
//காதல் போல ஏதோ ஒன்றை
உன்னிடத்திலும்
என்னிடத்திலும்
’கண்டுகொண்டேன்.’//
அதீத அன்பாகயிருக்குமோ... அதுதானே காதல். அழகான வரிகள் ஹேமா.
ஒவ்வொரு இரவிலும்
உரக்க இசைக்கிறேன்
மௌனத்தை உடைக்க
உடைகிறது காதலும்
கனவின் மெட்டுக்களும்.
அருமையான வரிகளின் சங்கீதம் ஒலிக்கிறது..
சொட்டுகிறது, காதல் ரசம் ..!
அக்காச்சி..... வலிக்க வலிக்க ரசனை கொட்டி ஒரு கவிதை.....
அதுவும் திகட்டாத காதல் பற்றி.....
எழுதியது என் ஹேமா அக்காச்சி.......
சொல்லவா வேணும்...... மறுபடியும் மறுபடியும் படித்தேன்......... படித்துக்கொண்டு இருக்கேன்.....
இன்னும் திகட்ட வில்லை
இரவு வணக்கம் மகளே!என்னத்தைச் சொல்ல,பெருமூச்சு விடுவதைத் தவிர?அப்பாவுக்கும் புரியட்டுமே என்று.................................!சரி,சரி!அப்பாவாக இருக்க முயற்சி செய்கிறேன்!
மாமா உங்கட செல்ல மகள் கவிதை போட்டு இருக்காங்கள்! அப்புடியே கருக்கு மட்டை எடுத்துட்டுப் போங்கள்!///அதெப்புடிம்மா?அப்பா(மாமா)தான் தப்புப் பண்ணுறாப்புல இருக்கே?
துஷ்யந்தன் said...
அக்காச்சி..... வலிக்க வலிக்க ரசனை கொட்டி ஒரு கவிதை.....
அதுவும் திகட்டாத காதல் பற்றி.....
எழுதியது என் ஹேமா அக்காச்சி.......
சொல்லவா வேணும்...... மறுபடியும் மறுபடியும் படித்தேன்......... படித்துக்கொண்டு இருக்கேன்.....
இன்னும் திகட்ட வில்லை!///ஓம் தம்பி,உங்களுக்குத் திகட்டாது தான்!!!கொஞ்ச நாள் போகட்டும்,ஹ!ஹ!ஹா!!!!!!
கலை!!!அண்ணா,அக்கா கவிதைக்குப் போட்டியாக கவிதை போட்டிருக்கிறார்,ஓடி வாங்கோ!!!!!கலைஐஐஐஐஐஐ!!!!!!!
Yoga.S.FR said...
துஷ்யந்தன் said...
அக்காச்சி..... வலிக்க வலிக்க ரசனை கொட்டி ஒரு கவிதை.....அதுவும் திகட்டாத காதல் பற்றி.....எழுதியது என் ஹேமா அக்காச்சி..... சொல்லவா வேணும்...... மறுபடியும் மறுபடியும் படித்தேன்......... படித்துக்கொண்டு இருக்கேன்....இன்னும் திகட்ட வில்லை!///ஓம் தம்பி,உங்களுக்குத் திகட்டாது தான்!!!கொஞ்ச நாள் போகட்டும்,ஹ!ஹ!ஹா!!!!!!<<<<<<
அக்காச்சி...... பாருங்கோ..... அப்பா என்னை வாருறார் :(((
கலையின் பின்னூட்டங்களுக்காக இன்னொரு முறை படிக்க வருவேன்.
ஹேமா,
அழகு!
//காதல் போல ஏதோவொன்றை
உன்னிடத்திலும்
என்னிடத்திலும்
’கண்டுகொண்டேன்.’//
கூடுதல் அழகு!
ஒவ்வொரு இரவிலும்
உரக்க இசைக்கிறேன்
மௌனத்தை உடைக்க
உடைகிறது காதலும்
கனவின் மெட்டுக்களும்
இவை என்னை தொட்ட வரிகள் அக்கா. இசையை தோழியாக உவவித்தல் காளமேகருக்கே சவால் விடுவது போல் தெரிகிறதே அக்கா. கவிதாயினியின் கவிகள் தொடரட்டும்.
கண்ணுக்கு மையழகு.....
கவிதைக்கு பொய் அழகு....
ஹேமாவுக்கு....???அருமையான கவிதைகளைத் தருவது அழகு...:)
காலை வணக்கம்,மகளே!!
அன்புள்ள ....க்கு !
இசைத்
தோழியின்
....... விம்மல்
ம்ம்ம்....(:
நானும் காதலிக்கிறேன்....
ஆனால்...
எனக்கு இப்படியெல்லாம் பாடல் வரமாட்டேங்குதே ஷேமா...
இன்னும் அனுபவம் போதலையோ...!!!
நிரப்பிக்கொள்ளுவாங்க.ஓடிப்போய் ஏதாவது கார்ட்டூன் பாருங்கோ.////
நீங்களும் வாங்கோ அக்கா ...சேர்ந்தே பார்ப்பம் ...
ஹேமா said...
அப்பா ஏதும் சுகமில்லையோ.ஏன் நேரத்துக்கே படுக்கப்போறீங்கள் ?///அதெல்லாம் ஒன்றுமில்லை!பழைய கறி,புதிய நூடில்ஸ்.............அது தான் கொஞ்சம் வலித்தது.சாப்பாடு கொட்டுவது எனக்கும் பிடிக்காது தான்,துணை என்று ஒன்று இருந்தால் நன்றாயிருக்குமே என்று..........................!/////நல்ல பிள்ளைதானே நான்?அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை!
மாமா உங்கட செல்ல மகள் கவிதை போட்டு இருக்காங்கள்! அப்புடியே கருக்கு மட்டை எடுத்துட்டுப் போங்கள்!///அதெப்புடிம்மா?அப்பா(மாமா)தான் தப்புப் பண்ணுறாப்புல இருக்கே?///
பிள்ளைகள் செய்யும் தவறுக்கு பெற்றோர்கள் எப்புடி பொறுப்பாகும் ...
அந்த புள்ளையை கருக்கு மட்டையால் கண்டியுங்க மாமா ...அது தான் நீங்க செய்ய வேண்டிய கடமை
அப்பாதுரை said...
கலையின் பின்னூட்டங்களுக்காக இன்னொரு முறை படிக்க வருவேன்///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ...என்னக் கொடுமை இது ....
அக்கா வின்ற கவிதை படிக்க திரும்படி வரணும் ...அதுக்கு என்ர மேலவா ...
மாமா இப்போ தான் கவனிக்கிறேன் ..இஞ்ச தான் நிக்குரின்களா
சுகமா?
கவிதயின் சுரம் இனிமை.
உன்னால்
உரத்துச் சொல்லப்பட்ட
மூன்று வரிகள் இவை
’ஊரெல்லாம் உறக்கத்தில்
உறங்காமல் நான்
உறங்கவிடாமல்
உன் நினைவுகள்’.//ம்ம்ம் இந்த நினைவுகள் மட்டும் மறக்கும் வலிகள் மருந்து தந்தாள் எத்தனை சந்தோஸம்!
மெட்டுப்போட வரமாட்டாயெனத்
தெரிந்தும் காத்திருக்கிறேன்
நம்பிக்கையோடு.....///ம்ம் காத்திருந்த வலி ஆண்டுகள் ஐந்து ஆனால் இன்னும் வலி ம்ம்ம்ம்ம்
இப்படிக்கு அன்போடு........
உன் சங்கீதத் தோழி!!!//ம்ம்ம் அன்புத்தோழன் என காத்திருந்த காலம் எல்லாம் தெரியாமல் போன அன்பு !ம்ம்ம் எல்லாம் நன்மைக்குத்தான்!
இப்படி ஒரு கவிதை இனியும் வேண்டாம் ஹேமா !நான் வலையுலகில் இருக்க மாட்டேன் பிறகு எதிர் பதிவு எப்படிப் போடுவது!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அழகிய படைப்பு அக்கா ..
ஹேமா அக்கா செல்லமே நீங்கள் எப்ப அம்மு குட்டியே வருவீன்கள் ..அன்னான் பால்க் காப்பி போட்டு வைத்து இருக்காண்க ...சிக்கிரம் வாங்க ...
உங்கட செல்ல அப்பாவைக் காணும் ...ரொம்ப நேரம் ஆச்சி அக்கா இன்னும் மாமா வரல ...........
காதல் காதல் காதல்
காதல் போயின் சாதல்
அல்லது
கவிதை என்றும் ஓதல்
அருமை!
புலவர் சா இராமாநுசம்
ஹேமா....
இப்படிக்கு அன்போடு
உன் கவிதை தோழி...அப்படீன்னு சொல்லிபுடலாமா...
எப்படி இருக்கீங்க...
காலை வணக்கம் மகளே!எதையும் பொதுவில் பகிர வேண்டாம்.காலம் வரும்போது தெரிந்து கொள்கிறேன்!
உயிரில் கலந்த உறவு
உனைத் தேடிவரும்
உறங்காமல்
விழித்திரு மகளே
உத்தரவாதம் நான்
ம்... காதல்... காதல்.. காதல்..
இந்த ஒற்றை வார்த்தைதான் எத்தனை ஜீவன்களுக்கு உயிர்வாழ ஆக்ஸிஜனாய் இருக்கிறது... நல்லா வந்திருக்குங்க நினைவுகள்.. ஹேமா.. :)
கவிதாயினி அக்காவே உங்களுக்கு போட்டிக் கவிதை எழுதிப் போட்டு இருக்கேன் ...
கவிதை தலைப்பு ...
அன்புள்ள ....க்கு எப்புடீஈஈஈஈஈஈ
கலை said...
கவிதாயினி அக்காவே உங்களுக்கு போட்டிக் கவிதை எழுதிப் போட்டு இருக்கேன் ...
கவிதை தலைப்பு ...
அன்புள்ள ....க்கு எப்புடீஈஈஈஈஈஈ...........////:இரவு வணக்கம்,மகளே!!!கலை said...
கவிதாயினி அக்காவே உங்களுக்கு போட்டிக் கவிதை எழுதிப் போட்டு இருக்கேன் ...
கவிதை தலைப்பு ...
அன்புள்ள ....க்கு எப்புடீஈஈஈஈஈஈ...........////:இரவு வணக்கம்,மகளே!!! மருமகளே, அது போட்டிக் கவிதையே அல்ல,பாசக்கவிதை!!!
காலை வணக்கம்,மகளே!!!வலி புரிகிறது.தோல்வி என்று ஒன்று இல்லவே இல்லை,அது எவ்வகையிலும்!அதுவே வெற்றியின் முதற்படி என்று கூடச் சொல்கிறார்கள்.ஒவ்வொருவருக்கும் தோல்விகள் உண்டு தான்.திங்கள் அன்று ஒரு சம்பவம்:அன்று நிறைவேறவில்லை,ஆனால் அதுவே இன்று இன்னும் சுலபமாக நிறைவேறப் போகிறது.அன்றைய தோல்வி அதீத இலாபம் தரப் போகிறது இன்று!அப்படியானால்,ஆண்டவன் எழுதியது என்ன?புரியும் என நினைக்கிறேன்.அது என்னவோ,முற்பிறப்பு என்று ஒன்று உண்டென்று இப்போது நம்ப முடிகிறது.எல்லாம் நல்லதே நடக்கும்.
மெட்டுப் போட வருவார்... நம்பியிருங்கள்..மெட்டியும் போட?
இது தனியான காதல் வேட்கை சிலருக்கு இந்த கனவுலகம் உணவு சிலருக்கு உருகாய் சிலருக்கு பாராட்டுகள்
உணர்வுகள் நிரம்பிய அழகிய காதல் கவிதை!
கவிதையைப் படிக்கையில் ஒன்று புரிகிறது, ஹேமாவுக்கு நன்கு பாட வரும் என்று! இனிமேல் நாங்களும் அழைக்கலாம் - சங்கீத தோழி என்று!
அன்புள்ள ....க்கு !
கீறிட்ட இடம் நிரப்பின எல்லாருக்கும் என் மனம் நிறைந்த மகிழ்ச்சியை என் அன்பின் சார்பிலும் சொல்லி வைக்கிறேன் !
வலிகளைக் குறைக்க எழுதும்போதும் சந்தோஷமும் கிடைக்கிறது.ஒற்றைக் கண்ணுக்குள் என்னை நிறைத்திருக்கும் அத்தச் சூரியனை மறப்பது கஸ்டம்.மறக்கும் நாள் என் இறப்பின் நாள் !
Post a Comment