உணர்வின் தேவைகளோ அற்ற
சூன்ய வெளியில்
என்னை முழுதாக்க
உடைந்து கிடக்கும் தன் துண்டங்களாலேயே
பொருத்தியபடி சூரியக் கைகள்.
சுவாசம் சிதறி ஒடுங்கிய குடுவைக்குள்
ஒத்துழைக்காத ஆன்மாவைத்
திணிக்க முயல்கையில்
இசைந்து தராத போராட்டம்
உடைந்த சூரியனுக்கும்
எனக்குமானதாய்.
துருவங்களின் இடைவெளியை
நிரப்ப முயல்கிறேன் நான்.
உணர்வாகிச் சூரியனும்
உடலாகி நானும்
ஒன்றைவிட்டு ஒன்று பிய்தல் குறித்து
சத்தம் போட்டு கதறுகிறேன்
சார்ந்திருத்தலைக் குறித்தே சொல்கிறேன்.
புரிதல் இல்லாததால்
உடல் வேறா உணர்வு வேறா
ஒன்றுக்குள் ஒன்றில்லையா
முதுகில் கொழுவிய கேள்விகள்.
உடல்,உணர்வு,உள்ளம்,உயிர்
அனைத்தின் தேவைகளையும்
வைத்துக்கொண்ட அது
நிகழ்கால உணர்வை
எதிர்கால உள்ளத்துக்குள் ஒளித்தபடி
அநித்தியமாய்
ஒரு துளி
ஞாபக ஒளியை மட்டும் பொசிந்துவிட்டு
வெறுமையாய் மௌனித்தபடி!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
60 comments:
அற்புதமா இருக்குடா ஹேமா!
தமிழ்மணம் இரண்டாவது சுற்று வெற்றிக்கு வாழ்த்துகள் ஹேமா!
ஃஃஃஃபுரிதல் இல்லாததால்
உடல் வேறா உணர்வு வேறாஃஃஃஃ
பளிச்சிடும் வரிகள்..
தமிழ்மண தெரிவிற்கு வாழ்த்துக்கள் அக்கா..
//புரிதல் இல்லாததால்
உடல் வேறா உணர்வு வேறா
ஒன்றுக்குள் ஒன்றில்லையா
முதுகில் கொழுவிய கேள்விகள்.//
nalla aakkam parattugal
தமிழ்மணம் இரண்டாவது சுற்று வெற்றிக்கு வாழ்த்துகள் ஹேமா!
தமிழ்மணம் இரண்டாவது சுற்று வெற்றிக்கு வாழ்த்துகள் ஹேமா!
நல்லாருக்குப்பா!
நல்ல கவிதை ஹேமா....புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களுக்கு ஒரு ஓட்டு என்னோடது.......
கவிதை நல்லாருக்கு தோழி புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழ் மனத்தில் மூன்றாம் சுற்றிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்
அற்புதமான கவிதை.
//புரிதல் இல்லாததால்
உடல் வேறா உணர்வு வேறா
ஒன்றுக்குள் ஒன்றில்லையா
முதுகில் கொழுவிய கேள்விகள்.//
ம்ம்ம்ம் ரொம்ப காலாமாய் எனக்குள் கேட்டுக் கொள்ளும் கேள்வியும் கூட..
அருமையான கவிதை தந்ததற்கு நன்றி.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
//உடல்,உணர்வு,உள்ளம்,உயிர்
அனைத்தின் தேவைகளையும்
வைத்துக்கொண்ட அது
நிகழ்கால உணர்வை
எதிர்கால உள்ளத்துக்குள் ஒளித்தபடி
அநித்தியமாய்
ஒரு துளி
ஞாபக ஒளியை மட்டும் பொசிந்துவிட்டு
வெறுமையாய் மௌனித்தபடி!!!//
ம்ம்ம் ஒன்னுமே சொல்லமுடியலை ஹேமா..மெளனம் மட்டுமே சுமக்க முடிந்தது..
சூழலியல் கவிதை ரசித்தேன். கடைசிப்பராவில் நின்றுவிட்டேன்.
அருமை.
தமிழ்மணம் இரண்டாவது சுற்று வெற்றிக்கு வாழ்த்துகள் ஹேமா!
அருமையான கவிதை.
வாக்களிக்க வேண்டிய அவஸ்மில்லாமல் நடுவர் குழுவுக்கு போய்விட்டதே? இன்னமும் தேவையா?
தமிழ்மணம் இரண்டாவது சுற்று வெற்றிக்கு வாழ்த்துகள் ஹேமா அக்கா...
தமிழ்மணம் இரண்டாவது சுற்று வெற்றிக்கு வாழ்த்துகள் ஹேமா
அருமையான கவிதை, தமிழ்மணம் போட்டியில் வெற்றி
பெற வாழ்த்துக்கள்.
மௌனத்தின் விழிப்பிலும் வழிகள் இருக்கு ஹேமா...
ம்ம்ம்
//புரிதல் இல்லாததால்
உடல் வேறா உணர்வு வேறா//
அற்புதமான வரிகள். இனிதே தொடருங்கள். எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.தமிழ்மணம் இரண்டாவது சுற்று வெற்றிக்கு வாழ்த்துகள் ஹேமா!!!
nalla iruuku ....
ஒரு ஓட்டு ஒரு பதிவுக்கு போட்டாச்ச
ஜானம் பிறந்ததால் வந்த வரிகள்
அழகுடன் கருத்தையும் சொல்லுகின்றன
அடுத்த சுற்றுக்கு தெரிவாக கடவுளை பிராதிக்கேறேன்
வாழ்த்துக்கள்
நல்லா இருக்கு ஹேமா! வாழ்த்துக்களும் :)
மிகவும் அருமை ஹேமா! மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது.
என் மர மண்டைக்கு இதை உருவகப்படுத்திப் பார்ப்பது கொஞ்சம் கடினமாகத்தானிருக்கிறது. ஆனாலும், ஏதோ வலி என்று மட்டும் புரிகிறது.
இனிய ஹேமா புத்தாண்டு வாழ்த்துகள்
உங்களின் இந்த கவிதை..... என்ன சொல்ல.... உங்களின் எழுத்துக்களின் மணிமகுடம் இந்த கவிதை. உங்களின் எல்லாக் கவிதையும் படித்திருக்கிறேன். இந்தக் கவிதைதான் நீங்கள் ஒரு கவிதாயினி என்பதை மிக ஆழமாய் சொல்கிறது. உண்மையாய் சொல்வதென்றால் பாராட்ட வார்த்தை இல்லை. எவ்வளவு ஆழம தொட்டிருக்கிறீர்கள். இதுதான் ஒரு எழுத்தாளரின் அடையாளம். பிரபஞ்சம் தொட்டு... பிண்டம் அளக்கும் ஆற்றல் வேண்டும். அது இந்தக் கவிதைகள் வெளிப்பட்டிருக்கு. உங்களின் அபூர்வ திறமை வெளிப்படும் சரியான சூழலில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நம் தமிழுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை இன்னும் நிறைய இருக்கிறது. இந்த பார்வையை மாற்றாமல் மேலும் இது போல பல சிறந்த படைப்புகளை தர வேண்டுகிறேன்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல உங்களின் விசாலமான அறிவுக்கும், கற்பனைக்கும் இந்த கவி சாட்சி. பாராட்டுகளுடன் நன்றிகள் நல்ல தமிழ் தந்தமைக்கு.
அன்புடன்.....
-தமிழ்க்காதலன்.
//புரிதல் இல்லாததால்
உடல் வேறா உணர்வு வேறா
ஒன்றுக்குள் ஒன்றில்லையா
முதுகில் கொழுவிய கேள்விகள்.//
அற்புதமான வரிகள்...
நல்லாயிருக்குங்க :)
//சுவாசம் சிதறி ஒடுங்கிய குடுவைக்குள்
ஒத்துழைக்காத ஆன்மாவைத்
திணிக்க முயல்கையில்
இசைந்து தராத போராட்டம்//
அருமை!
தமிழ்மண தெரிவிற்கு வாழ்த்துக்கள்!
நல்ல கவிதைங்க ஹேமா..
\\உடல்,உணர்வு,உள்ளம்,உயிர்
அனைத்தின் தேவைகளையும்
வைத்துக்கொண்ட அது
நிகழ்கால உணர்வை
எதிர்கால உள்ளத்துக்குள் ஒளித்தபடி
அநித்தியமாய்
ஒரு துளி
ஞாபக ஒளியை மட்டும் பொசிந்துவிட்டு
வெறுமையாய் மௌனித்தபடி!!!\\
Excellent..
ம்ம்ம்...சிந்திக்கணும் ..
காலங்களைத் தாண்டிய கவிதை. அருமை ஹேமா.
உடைந்த சூரியனும்
உடையாத நிலவா ?
வாழ்த்துக்கள் ஹேமா
விஜய்
ஹேமா நானும் இன்றுதான் உன்பக்கம் வந்தேன் .என்ன அருமையான கவிதைகள். ரொம்பவே நன்னா இருக்கும்மா. இனி அடிக்கடி வருவேன் . நீயும் வா. ஓ. கே வா?
உடலும் உள்ளமும்
கடலும் அலையுமாய்
கரை தொட்டும்
கரை சேரா துளிகளாய்.
அருமையாக இருக்கு தோழி.
//நிகழ்கால உணர்வை
எதிர்கால உள்ளத்துக்குள் ஒளித்தபடி
அநித்தியமாய்
ஒரு துளி
ஞாபக ஒளியை மட்டும் பொசிந்துவிட்டு
வெறுமையாய் மௌனித்தபடி!!!//
வணக்கம் ஹேமா,..
வரிகள் மிக அருமை வாழ்த்துகள்
கவிதை மிக வலி.... ஆனால் எல்லா வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
சொல்லாக்கம் நல்லாயிருக்குங்க ஹேமா.
அருமையான கவிதை தோழி.போட்டியில் வெல்ல எனது வாழ்த்துகள்!
மறதி கூட சில நேரம் வரமாகும்
சில வலிகளை மறக்க நேரிடும் என்பதால்.
\\\\துருவங்களின் இடைவெளியை
நிரப்ப முயல்கிறேன் நான்.////
அடேங்கப்பா..... பிரபஞ்சத்தையே இரு வரிகளில் அடக்கிவிட்டீர்கள். அருமையான கவிதை.
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html
மிக மிக இயல்பான பதிவு .... கொஞ்சம் வலிகளை சுமந்தும் உள்ளது ..
அருமை ஹேமா..நானும் பார்த்தேன் அடுத்த ரவுண்டு இல் இருக்கீங்க...நிச்சயம் வெற்றி பெருவிங்க ஹேமா..
//நிகழ்கால உணர்வை
எதிர்கால உள்ளத்துக்குள் ஒளித்தபடி
அநித்தியமாய்
ஒரு துளி
ஞாபக ஒளியை மட்டும் பொசிந்துவிட்டு
வெறுமையாய் மௌனித்தபடி!!!//
மீட்டும் கவிதை ஹேமா.
//நிகழ்கால உணர்வை
எதிர்கால உள்ளத்துக்குள் ஒளித்தபடி
அநித்தியமாய்
ஒரு துளி
ஞாபக ஒளியை மட்டும் பொசிந்துவிட்டு
வெறுமையாய் மௌனித்தபடி//
செம!!
"..ஒடுங்கிய குடுவைக்குள்
ஒத்துழைக்காத ஆன்மாவைத்
திணிக்க .."
அழகிய வரிகளைக் கொண்ட
அருமையான கவிதை.
'ஒடுங்கிய குடுவைக்குள் ஒத்துழைக்காத ஆன்மா' மிகவும் அருமையான வீச்சு.. இதைப் பயன்படுத்த அனுமதி தருவீர்களா?
கவிதை வழக்கம் போல்! (பாதி புலம்பல், பாதி கலக்கல் :)
மொளனமாக நானும் ரசித்தேன்
கவிதை அருமை.
மிக நன்றாக உள்ளது இக்கவிதை...சற்றே வித்தியாசமாகவும் உள்ளது....வாழ்த்துக்கள்...
என்னை வாழ்த்தியும் ஊக்கம் கொடுத்தும் என்னோடு இணைந்திருக்கும் அத்தனை என் சொந்தங்களுக்கும் என் நன்றி நன்றி.
//உடல்,உணர்வு,உள்ளம்,உயிர்
அனைத்தின் தேவைகளையும்
வைத்துக்கொண்ட அது
நிகழ்கால உணர்வை
எதிர்கால உள்ளத்துக்குள் ஒளித்தபடி
அநித்தியமாய்
ஒரு துளி
ஞாபக ஒளியை மட்டும் பொசிந்துவிட்டு
வெறுமையாய் மௌனித்தபடி!!!//
பல நேரங்களில்.. இந்த மாதிரி உணர்வு வந்து செல்வதுண்டு.. நல்ல புரிதலுடன் கவிதை.. :-)
//புரிதல் இல்லாததால்
உடல் வேறா உணர்வு வேறா
ஒன்றுக்குள் ஒன்றில்லையா
முதுகில் கொழுவிய கேள்விகள்//
எவ்வளவு யோசித்தாலும் பதில் கிடைக்க மாட்டேங்குதே ஹேமா..
அற்புதமான கவிதை
//ஞாபக ஒளியை மட்டும் பொசிந்துவிட்டு
வெறுமையாய் மௌனித்தபடி!!!//
அடடடா.....
உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள் ஹேமா.
//இல்லாதபோதும்
இருப்பதாய் நினைத்துக்கொண்டே
சிரிக்கத்தூண்டுகின்றன...
அருகில் இருக்கையில்
நீ செய்த அத்தனை
செல்ல குறும்புகளும்...//
nalla aakkam
கவிதை அருமைங்க
முதுகில் கொழுவிய கேள்விகள் ...
கிளப்புறீங்க ஹேமா!
நிலா குட்டியும் தாங்களும் நலம் தானே
Post a Comment