இந்த இடத்தில் பொருந்தும்.அதோடு சில பாடல்கள்
பதிவில் தேவைப்படுக்கிறது ஆவணங்களாக !
உணர்வுகளும் கனவுகளும்
நிறைந்திருந்த தேசம் அது.
செருப்பிட்ட கால்களோடுகூட
நுழையாமல் பத்திரப்படுத்தப்பட்ட
தூங்கும் தெய்வங்களின் தாழ்வாரம் அது.
உறவுகளுக்காய் காத்திருக்கும்
ஆன்மாக்களின்
நினைவுச் சந்நிதி அது.
குவிக்கப்பட்ட
கனவுத் தடாகம் அது.
வணக்கத்துக்குரிய
மாவீரர்களின் கோவில் அது.
செம்மல்களின்
மூச்சுக்காற்று அது.
பசிகொண்ட வேங்கைகள்
படுத்துறங்கும்
அமைதிச் சோலை அது.
தமக்கான வாழ்வை
தாய்க்காய்த் தியாகித்த வள்ளல்கள்
ஓய்வெடுக்கும் பிருந்தாவனம் அது.
பிள்ளைபிடிகாரராய்
இரவோடு இரவாக நுழைந்த பிசாசுகள்
இன்று அதிகாரத்தோடு
தூங்கும் எங்கள் மன்னர்களை
பகலிலேயே எழுப்பிக் கலைத்துவிட்டது.
கனவுகளைத்
தூபிகளுக்குள் வைத்திருந்தோம்.
கனவுகளைச் சிதைப்பதென்பது
அவர்களுக்கு புதிதல்ல.
கருவில்...தெருவில்
குழந்தைகள் நசிக்கும்
ராட்சதப் பிசாசுகள் அவர்கள்.
தொடர்ந்தும் கல்லெறியப்படுகிறோம்
சிதம்பிய இருதயங்களுக்குள்
கல்லறைப் புழுதியும் படிய
தமிழையே மூச்சாய் வாழும்
ஒற்றைத் தமிழன்
திருப்பி எறியாமல் இருக்கமாட்டான்
சேமிக்கும் கற்களில் ஒன்றையாவது!!!
"காலத்தையே வெல்வோம்.காத்திருப்போம் ஆணடுகள் கடந்தாலும்.
இழப்புகளின் ஈடுகளைச் சமப்படுத்துவோம்.நம்புவோம்.
தமிழரின் தாயகம் .... தமிழீழத் தாயகம் !
தாயகக் கனவுடன்...
கல்லறை மேனிகள்...
மண்ணில் விளைந்த...
விழி மடல் மூடி...
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
45 comments:
நம்பிக்கை வைப்போம்.
இடிக்கப்பட்டவைகளை எல்லாம், எப்படி இருந்ததோ- அப்படியோ கட்டி வைப்போம் என்று-
எத்தனை நூற்றாண்டானாலும்.
"காலத்தையே வெல்வோம்.காத்திருப்போம் ஆணடுகள் கடந்தாலும்.இழப்புகளின் ஈடுகளைச் சமப்படுத்துவோம்.நம்புவோம்.
......நிச்சயம்.
தவறாக நினைக்காவிட்டால் கேட்கிறேன்: வேறு எவராவது தலைமை வகித்திருந்தால் தமிழீழம் பெற வாய்ப்பு கூடியிருக்குமா?
அப்பாஜி...இதைவிட எந்தத் தலைமையும் இந்தளவிற்கு எங்களைத் தாய்போலக் காத்திருக்காது.இனிக் காக்கவும் வராது.ஆனால் கொஞ்சம் விட்டுக்கொடுத்து ஆலோசனைகளைக் கேட்டும் போயிருக்கலாமோ !
தமிழன் வீழ்ந்தான் என்று நம்புவது .....வரலாற்றில் எப்போதும் நிகழும் ஒரு இடைக்கால நிகழ்வு...அவன் வீறு கொண்டு எழுவதும்...எதிர்களை ஓட ஓட விரட்டப்போவதும்... நிகழப் போகும் ஒன்று....!
சத்தியம் வெல்லும் ஹேமா. சர்வ நிச்சயமாய்!
அப்பாஜி...@ இவ்வளவு கட்டுக் கோப்பாய் ஒரு இராணுவம் உண்டாக்கி..நேர்த்தியான திட்டங்களையும் செய்து வழி நடத்திய தலைவன் பிரபாகரன். நிகழ்தகவில் கிடைக்க்ப்போகும் விடைகள் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்ற அனுமானத்தின் பிம்பங்களே....
பிரபாகரன்...சரித்திரம்...!
பறிக்கப் பட்ட பூக்களின் காம்புகள் சிந்தும் செந்நீர்...., மீண்டும் தழைத்து பூக்க உரமாகட்டும். நமது மடியில் படுத்துறங்கும் ஒட்டகம் விரட்டப் படும் காலம் மிக அருகில். சிதறிய தமிழினம் சிந்தனை செய்து சேர வேண்டிய தருணம் இது. விதி மாற்றும் வலிமை இருந்தும் "காட்டிக் கொடுக்கும்" புத்தியால் தமிழன் தன்மானம் இழந்து நிற்கிறான். இது என்று நிறுத்தப் படுகிறதோ.... அன்றே தமிழினம் வெல்லும்.தமிழினத்தை தத்தளிக்க விட்ட கள்நெஞ்ச "கர்ணா" வுக்கும்..., இன்னும் இருக்கும் கர்ணாக்களுக்கும் இது புரியட்டும். ஒரு இனமே தலைகுனிய காரணமான "இலங்கையின் விபீஷண" புத்தியின் விளைவுகள் புரியட்டும். தமிழனின் தாழ்வுக்கு ஒரு தமிழனே காரணம்.
சமீபத்தில் (காசி ஆனந்தன் என்று நினைக்கின்றேன்) எழுதிய வரிகள்
அர்த்தம்........
முறையற்ற வழியில் சிங்களனின் கருவைச் சுமக்கும் தமிழச்சியின் வழித்தோன்றல் வெளியே வரட்டும். கோரத்தை அழித்தவனுக்கு கொடுக்கும் கொடுக்கும் பரிசை இந்த சிங்கள இனம் பார்க்கத்தான் போகின்றது.
வரிகளில் வாசித்த போது இரண்டு நாட்கள் ரீங்காரிமீட்டுக் கொண்டேயிருந்தது.
பொறுத்திறு சகோதரி
வெற்றி நிச்சயம் நமதே
உங்களுக்கு ஒரு விருதுக் கொடுத்துள்ளேன்
http://lksthoughts.blogspot.com/2010/11/blog-post_3321.html
தமிழில் விளையாடுகிறீர்கள். அப்பாதுரைக்கு உங்கள் பதில்...யோசிக்க வேண்டியது.
கவிதை சூப்பர் ஹேமா...
இலங்கைத்தமிழனுக்கு ஒரு இலட்சியக்கவிதை
மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்..
'மாவீரர் நினைவு நாள்' என்ற இறுக்கத்தில் இன்னும் தமிழீழ இலக்கை மறக்காமலிருக்கும் மனங்களைப் பாராட்டுகிறேன்.
அதே நேரம், அடுத்த தலைமை முந்தைய தலைமையின் குறை/நிறைகளிலிருந்து பாடம் கற்கட்டும் என்றும் விரும்புகிறேன்.
தனியாக வந்தால் தான் தமிழீழமா?
அருமையான கவிதை ஹேமா.
பின்னூட்டங்கள் வலு சேர்க்கின்றன.
///...இதைவிட எந்தத் தலைமையும் இந்தளவிற்கு எங்களைத் தாய்போலக் காத்திருக்காது. ///
Unmai
நிச்சயம் ஒரு நாள் மலரும்....
தமிழீழம் நிச்சயம் உருவாகும்.
நன்மையே நடக்கும் ஹேமா.......நம்புவோம்.
என்ன சொல்வதென்று தெரியாத நிலையை உணர்கிறேன்...
புதைந்திருக்கும் வலியை நினைத்து அழுவா? இல்லை
விளைந்திருக்கும் வீரத்தை நினைத்து சிலிர்க்கவா?? அல்லது
உதிர்ந்திருக்கும் உயிர்களை நினைத்துத் துதிக்கவா??
கவிதை வரிகளும் பின்னூட்டங்களிலும் தெறிப்பது உண்மையான உணர்வுகள்...
வாழ்க....
காலங்கள் கழிந்தாலும் கனவுகளை அடைகாப்போம்! உணர்வுச்சூட்டில் சிங்கள ஓடு உடைத்துப் பிறந்தே தீரும் தமிழீழம்!
நிச்சயம் நிறைவேறும்.
"காலத்தையே வெல்வோம்.காத்திருப்போம் ஆண்டுகள் கடந்தாலும்.இழப்புகளின் ஈடுகளைச் சமப்படுத்துவோம்.நம்புவோம்.
நிச்சயம் விடிவு கிடைக்கும்....
மாவீரர் நாள் அன்று போடப்படும் பாடல் (தாயகக் கனவுடன் சாவினை தழுவிய சந்தன போழைகளே....) பதிவிட்டிருக்காலாமே அக்கா....
நிச்சயம் மலரும் ஒருநாள்.
மேலும் தேவா அண்ணனின் பின்னூட்டத்தை வழி மொழிகிறேன்..
நல்ல கவிதை ஹேமா. நம்பிக்கைதான் வாழ்க்கை. காலம் நிச்சயம் கனியும்.
காலம் நிச்சயம் மாற்றும்
தமிழன் வெல்வான்..நிச்சயம் தமிழீழம் வெல்லும்!
"காலத்தையே வெல்வோம்.காத்திருப்போம்''
அருமையான கவிதை ஹேமா.
ஒற்றைத் தமிழன்
திருப்பி எறியாமல் இருக்கமாட்டான்
சேமிக்கும் கற்களில் ஒன்றையாவது!!!
......நிச்சயம்!
இழந்தவை என்றென்றும் இழந்தவையல்ல.
வென்றவை என்றென்றும் வெற்றியல்ல.
அணுகுமுறையின் மாற்றம் இலக்கை அடைய உதவட்டும்.தமிழீழமோ சிங்களமோ ஒருநாள் தீர்வாகலாம். வன்முறை ஒருநாளும் தீர்வாகாது.
///"காலத்தையே வெல்வோம்.காத்திருப்போம் ஆணடுகள் கடந்தாலும்.
இழப்புகளின் ஈடுகளைச் சமப்படுத்துவோம்.நம்புவோம்.
தமிழரின் தாயகம் .... தமிழீழத் தாயகம் !///
காத்திருப்போம்...! அடுத்த தலைமுறையையும் இதே தாகத்துடன் வளர்ப்போம்...!
விழி மடல் மூடி...
தாராபுரத்தான்.
பகிர்வுக்கு நன்றிங்க
கண்ணீரை துடைத்தெறி
காலம் பிறக்கும்
கனவுகள் மலரும்
ஆட்டுக் கிடைக்குள்ளும்
அவதரிக்காதோ ஓர்நாள்
புலிக்குட்டி.
உண்மை தான் இழந்த பிறகுதான் ரொம்ப வலிக்குது ....
ஆனால் இப்படியான சில உரையாடல் நம்பிக்கை கொண்டு வருகிறது ....
பார்ப்போம் ...
ஒன்றுபடுவோம்...ஈழம் மலரும்..ஒரு நாள்.
ஒரு சிறு இடைவெளிக்கு பின் குழந்தை நிலாவை வானத்தில் தேடிவந்தவனுக்கு வலியை சுமந்துவந்த வார்த்தைக் கவிதை..... நமது காலத்துக்கு போராடினோம் அடுத்த தலைமுறை தயாராக பொறுத்து பார்ப்போம்....
நிச்சயம் ஒரு நாள் மலரும்....
kandippa...
சுதந்திரம் வேண்டி முன்னெடுத்த போராட்டங்கள் , காலம் தாழ்த்தியாவது
வென்றே தீரும். இது தான் இத்தனை நூற்றாண்டுக்கால வரலாறு.
ஒன்று, இரண்டல்ல... பத்தொன்பது கால (தொடர் முயற்சி)போராட்டம்தான் யூதர்களுக்கு “இஸ்ரேல்” என்னும் தேசத்தைப் பெற்றுத் தந்தது.
அதுவரை, எத்தனையோ தலைமையின் வழி நடத்தலும், எத்தனையோ தோல்விகளையும் சந்தித்தவர்கள் அவர்கள்.
ஆனாலும், தனக்கென ஒரு தனி தாய் தேசம் என்பதில் தலைமுறை தலைமுறையாக ஒரே சிந்தனையில் இருந்ததினால் தான் அதை அவர்களால் அடைய முடிந்தது.
நமக்கும் அந்த தொடர் போராட்ட குணம் வேண்டும். போராட்டமுறையை மாற்ற வேண்டும்.
அது மட்டும் இல்லாமல், பொருளாதாரத்தையும்,கல்விச் செல்வத்தையும் நமது பிள்ளைச் செல்வங்களுக்கு வழங்க வேண்டும். அதோடு சேர்த்து தாயகத் தாகத்தையும் ஊட்ட வேண்டும்.
தமிழீழம்... தமிழினம் அடைந்தே தீரும்!
02 December, 2010 11:36
முப்பதாண்டு கால முயற்சி முடக்கப் பட்டிருக்கிறதேயொழிய.... அழிக்கப்பட்டுவிடவில்லை.
இந்த “முடக்கம்” தண்ணீருக்குள் மூழ்க வைத்திருக்கும் காற்று நிரம்பிய பந்து. மூழ்கடிக்கப்பட்ட வேகத்தை விடவும், கூடுதலான வேகத்துடன் வெளிவரும்.
ஹேமா.
சொற்களை மீறி தெறிக்கும் வலி! அதனோடு எழுச்சியும்.
அதை என் போன்று அனுபவிக்காதவர் எவ்வளவு தூரம் புரிந்து கொள்ளமுடியும் :( :( :( :( சில சதவிகிதமே!
உன் கவிதையின் பரிதவிப்பும் உத்வேகமும் என் கண்களைக் குளமாக்குகின்றன ஹேமா . விடியும்! கண்டிப்பாய் விடியும்!!
என்னோடு மாவீரர்களுக்கும் தியாகித்த அத்தனை உயிர்களுக்கும் வீர அஞ்சலி செலுத்திய என் அத்தனை சகோதர சகோதரிகளுக்கும் கண்ணீரோடு
என் மனம் நிறைந்த நன்றி.
"உயிர்த்தெழுவான் கரிகாலன்"...
கேட்பவர்களுக்கு எரிச்சல் தரும் வார்த்தைதான்.உண்மை என்று மூளை சொன்னாலும் மனம் ஏற்றுக்கொள்ள அவகாசம் தேவை எங்களுக்கு.உண்ர்வுகள் உடைக்கப்பட்டு அடிபட்டு,துரத்தப்பட்ட அகதிகள் நாங்கள் நம்பிக்கை வைத்திருந்த கையைக் காணவில்லை.குழம்பி நிற்கிறோம்.
அதைவிட ஈழத்தில் மக்களின் சத்தமில்லா இன்றைய அவலம் யாரை நினைத்து அழத்தோன்றுகிறது !
தலைமுறைகள் மாறினாலும் இலட்சியங்களை நோக்கி நடக்க சில நம்பிக்கை தரும் வார்த்தைகளும், எண்ணங்களும் தேவைப்படுகிறது எங்களுக்கு.அதிலொன்றுதான்
"தம்பி" என்கிற வார்த்தையும்.என் எண்ணத்தை மட்டுமே சொன்னேன்.
தவறானால் சொல்லுங்கள் புரிந்துகொள்ள !
யூத இனத்தவர்களைப் பற்றி யோசித்தோமேயானால் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பல நாடுகளில் தஞ்சம் புகுந்து,தம் தொழில் திறனால் நற்பெயர் பெற்றிருந்தாலும்,
தாய்மொழியும் தாய்நாடும் இழந்த அவமானம் யூதர்களின் மனத்தில் என்றுமே இருந்தது.இரண்டாம் உலகப் போருக்குப் பின் இங்கிலாந்து அரசின் உதவியால் இஸ்ரேல் தனிநாடு ஆக்கப்பட்டது.
அதுவே போதும் என யூதர்கள் நினைக்கவில்லை.பேச மறந்துவிட்ட யூத மொழிக்குப் புத்துயிர் ஊட்டினார்.இலக்கியத்தில் நோபல் பரிசு பெறும் அளவுக்கு அதனை வளர்த்து விட்டனர். உலகமொழி அரங்கில் யூதர் மொழியான எபிரேய மொழிக்கு ஏற்றம் தந்தனர்.எபிரேய மொழி யூதர்களை ஒற்றுமை வாய்ந்த இனமாக மாற்றிவிட்டது.
இவர்களின் வரலாற்றிலிருந்து நாமும் நிறையக் கற்றுக்கொள்ளலாம்.
விஞ்ஞான நாகரீக வளர்ச்சி குறைந்த காலகட்டங்களிலேயே அவர்கள் இத்தனை தீவிரத்தோடு போராடியிருந்தால்,இன்றைய காலத்தில் நாம் எவ்வளவோ முயற்சிகளைச் செய்யலாம்.
தாய்மொழியைக் காப்பாற்றினால் தாய்மொழி தங்களைக் காப்பாற்றும் என்பதற்கு யூத இனத்தவர்கள் ஒரு தக்க எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றனர்.சாதி,மத,கட்சி வேறுபாடுகளால் சிதறிக் காணப்படும் தமிழர்களை ஒரே கட்டுக் கோப்பான ஒற்றுமை உள்ள இனமாக மாற்றும் ஆற்றல் தமிழுக்கு உண்டு.
அதுவே என் மூன்று பதிவுகளுக்கும் என்னோடு கை கோர்த்த உறவுகள்.
தமிழால் தான் தமிழரை முன்னேற்ற முடியும்.உலக அரங்கில் அனைத்து அறிவியல் தொழில் நுட்பப் புலங்களிலும் தமிழை முன்னிறுத்த முயற்சி பெருக வேண்டும். தமிழைக் காப்பாற்றினால் தமிழே தமிழர்களைக் காப்பாற்றும்.
இது வெறும் புகழ்ச்சி வார்த்தையல்ல தோழர்களே...உண்மை...நம்பிக்கை !
"தாய்மொழியைக் காப்பாற்றினால் தாய்மொழி தங்களைக் காப்பாற்றும்"
"தமிழால் தான் தமிழரை முன்னேற்ற முடியும்"
உண்மை. அந்த நம்பிக்கையில் தான் இன்னும் எழுதி கொண்டிருக்கிறோம். கையாலாகாத நிலையிலும் எதுவும் கைகூடாத நிலையிலும்.
Post a Comment