பேனாக்களை
வானரங்கள் உடைத்து
மையை உறிஞ்ச
மௌனித்த செய்திகள்.
யாருமில்லாப் பொழுதில்
அலைகள்
சப்பித் துப்பிய சிப்பிகள்
கீறிப்போயின
கவிதையின் தொங்கல்கள்.
மிஞ்சிய காகிதத்தில்
தொடக்கங்கள்
தொங்கல்களோடு இணைய
இனி ஒருக்காலும்
வரப்போவதில்லை
அந்தப் பேனாக்கள்
செய்திகளிலும்கூட!!!
யுத்தபூமியில் மரணித்த வீரர்களோடு ஆயுதம் ஏந்தாத அத்தனை உயிர்களுகளுக்குமான தினம்தான் இந்த மாவீரர்தினம்.ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கற்பனை ஒவ்வொரு ஆசை.ஆனால் ஈழத்தமிழருக்கோ ஒருமித்த ஒரே கற்பனை ஒரே ஆசை.உலகத் தமிழர்களுக்கும் விடுதலையை ஊட்டியவர்கள்.அதைத் தந்தவர்களும் இந்தத் தெய்வங்கள்தான்.அவர்களை வணங்கி அவர்வழி நடக்க அவர்களே எங்களுக்கு மன உறுதியையும் தர வேண்டிக்கொள்வோம்.
ஒரு நிகழ்வு சொல்ல ஆசை.
அச்சுவேலி நவக்கிரியைச் சேர்ந்த ஒரு மாணவன் புதிதாக இணைவதற்காக இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருடன் கதைத்து வந்துகொண்டிருந்தார்.இந்த மாணவனை உள்வாங்குவதற்கான ஆரம்ப கதைப்புகள் எல்லாம் முடிந்த ஒருநாள் தலைவர் தானே அந்த மாணவனை சந்திப்பதற்கு நேரம் குறித்து இடமும் ஏற்பாடு செய்யப்பட்டது.
குறித்தநாளில் அந்த மாணவனும் அவனை அமைப்பில் சேர்ப்பதற்காக கதைத்துக்கொண்டிருக்கும் இயக்க உறுப்பினரும் தலைவரை சந்திக்கிறார்கள்.கதைத்து கொண்டிருக்கும்போது தலைவர் அந்த புதிய மாணவனை பார்த்து கேட்டார்."எத்தனை வருடத்தில் தமிழீழம் கிடைக்கும் என்று இவர் சொல்லி உங்களை இயக்கத்தில் சேர்த்தார்" என்றார்.
அந்த மாணவனும் "4 வருடமும் ஆகலாம் 40 வருடமும் ஆகலாம் என்று சொன்னவர்” என்று சொன்னான்.உடனே தலைவர் "இல்லை...இவன் ஒரு வட்டத்தை விட்டுவிட்டான்.40 வருடமும் ஆகும்.400 வருடமும் ஆகலாம்.இப்ப நாளைக்கே விடுதலை கிடைக்கும் என்று நினைத்து வரவேண்டாம்.அடுத்த தலைமுறையிலும் அது முடியாமல் போகலாம்" என்றார்.
திரும்பவும் அந்த மாணவன் கேட்டான் "விடுதலை எப்போது கிடைக்கும் என்று உறுதியாக உங்களால் சொல்லமுடியாதா?"என்று அதற்கு தலைவர் சொன்னார்.
"விடுதலை என்பது தனித்து எங்களுடைய போராட்டமல்ல.விடுதலை இயக்கத்தின் வளர்ச்சி,எங்கள் மக்களின் எழுச்சி,சிங்கள தேசத்தின் வீழ்ச்சி,தமிழகத்தின் ஆதரவு,சர்வதேசத்தின் ஆதரவு இவை எல்லாம் சேர்ந்து வரும்போதுதான் விடுதலையும் வரும்" என்று சொன்னார்.
மறவாத தமிழின் வேட்கையோடு உங்கள் வழி தொடர்வோம் என உறுதி சொல்லி உங்கள் பாதம் விளக்கேற்றித் தொழுகின்றோம்.
"தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்"
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
30 comments:
இன்று இல்லாவிடிலும்.... நமது சந்ததியினரின் காலத்திலாவது கட்டாயம் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்...!
மாவீரர் தின வாழ்த்துக்கள்!
விதைக்கப்பட்ட விதைகளுக்கு எனது ராயல் சல்யூட்...!!
மாவீரர் தினநாள் வீர வணக்கம் ....
பேனாக்கள் உடைக்கப்பட்டாலும் மனம் உடையோம். கணினிகளில் ஏற்றுவோம் கவிதைப்பொறிகளை! நாளைய பொழுது நமக்காய் விடியும். நம்பிக்கை கொள்வோம் மாவீரர் தியாகத்தின்பால்!
அச்சுவேலி மாணவன் சம்பவம் நானும் ஏற்க்கனவே அறிந்துள்ளேன். பகிர்வுக்கு நன்றி...
பகிர்வுக்கு நன்றி..
2.5 லட்சம் தமிழ் மக்களை கொன்று இன்னமும் உங்கள் அரிப்பு அடங்கவில்லையா. தமிழ் ஈழம் பிரபாகரன் என்று சொல்லி மேலும் தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாம்
இப்படிக்கு
ஏமாந்த தமிழன்
அடங்ககிய எழுத்துக்கள்
அடங்காத உணர்வுகள்
முடங்கிய தில்லை
முடிந்ததும் இல்லை
தொடங்கினார் மாவீரர்
தொடர்கதை தொடருமே
நடந்திடும் ஒருநாள்
நம்மவர் திருநாள்
அருமையாம் கவிதை
ஆகுகினீர் நீரதை
பெருமையோ பெருமை!
பெற்றீராம் நன்றி!
இன்று நானும் மாவீரரை வாழ்த்தி
கவிதை ஓன்றுஎழுதியுள்ளேன்
புலவர் சா இராமாநுசம்
வியக்க வைக்கிறது தலைவரின் தொலைநோக்கு பார்வை...
//மிஞ்சிய காகிதத்தில்
தொடக்கங்கள்
தொங்கல்களோடு இணைய//
தொடக்கங்கள் இருந்தால் தொடரும்தான்...முடிவும் ஒரு நாள் வரும்.
//வீரர்களோடு ஆயுதம் ஏந்தாத அத்தனை உயிர்களுகளுக்குமான//
என்ன பாவம் செய்தார்கள் அப்பாவிப் பொதுமக்கள்...
பிரபாகரனின் தொலை நோக்கு முள்ளிவாய்காளில் கோடாறி அடி பட்ட போது உலகமே விய்ந்தது. அதுவும் சிங்களவன் காலில் விழுந்து சரணாகதி ஆகி கோடாறி அடி பட்ட போது அவரின் சிந்தனைகள் சிரித்தது. தொலை நோக்கு தகர்ந்தது.
சுவிஸில் சுகமாக இருந்து கதைத்து கொண்டு பிரபாகரன் வருவான் புலி அடிக்கும் என புலம்பும் லூசுகள் என்று தான் திருந்துமோ.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
மனசை கனக்க வைக்கும் பதிவிக்கா..... அந்த புனித உயிர்களுக்கு என் தலை சாய்ந்த அஞ்சலிகள்.
Anonymous said...
பிரபாகரனின் தொலை நோக்கு முள்ளிவாய்காளில் கோடாறி அடி பட்ட போது உலகமே விய்ந்தது. அதுவும் சிங்களவன் காலில் விழுந்து சரணாகதி ஆகி கோடாறி அடி பட்ட போது அவரின் சிந்தனைகள் சிரித்தது. தொலை நோக்கு தகர்ந்தது.<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
சொந்த பெயரில் கருத்து சொல்ல துப்பில்லாதா துணிவில்லாதா நீயெல்லாம் பிரபாகரனை விமர்சிக்கும் நிலை..!!!! பிரபாகரன் சரணடையும் போது நீ விளக்கு புடித்துக்கொண்டு நிறையா??? நேரில் பார்த்தவன் போல் சொல்கிறாய்...!!!!! முதலில் சொந்த பெயரில் கருத்தை சொல்லு........... இது அக்காவின் தளம் என்பதால் உனக்கு மரியாதையாய் கருத்து சொல்ல வேண்டிய இக்கட்டில் இருக்கிறேன்.... சீ தூ...................... உன் கருத்தை வேற்று மொழி எதிலாவது சொல்லு உன் தமிழால் அந்த மாவீரனை விமர்சிப்பதை பார்த்து தமிழே வெம்பி அழபோகுது... :(
என்றேனும் இலட்சியக்கனவு நிச்சயம் மெய்ப்படும் ஹேமா. பகிர்வுக்கு நன்றி.
Touching.
Sinthiya Raththa thuligalukku veera wanakkam.
TM 1.
//யாருமில்லாப் பொழுதில்
அலைகள்
சப்பித் துப்பிய சிப்பிகள்
கீறிப்போயின
கவிதையின் தொங்கல்கள்//
நெஞ்சை தொட்ட வரிகள் ...
மாவீரர் தினநாள் வீர வணக்கம் ....
தியாகச் சுடர்களை வாழ்த்தி வணங்குவோம்...
சரித்திரப் பக்கங்களில் நிகழ்வுகள் மறைக்கப்பட்டாலும்..
அதன் நிழல் நிச்சயம் அதன் சாயலை பதிவு செய்யும்...
தர்மம் வெல்லும்...
முதலில் தமிழீழ விடுதலைக்காக தமது உயிர்களை தியாகம் செய்த அத்தனை போராளிகள்(இயக்க வேறுபாடுகள் இல்லாமல்)பொது மக்கள் எல்லோருக்கும் எனது அஞ்சலிகள்.களத்தில் வீரகாவியமான அத்தனை போராளிகளுக்கும் எனது வீர வணக்கம்.
துஷ்யந்தனை தொடர்ந்து பெயர் குறிப்பிடாத அந்த நபருக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு குறித்து எனக்கும் முரண்பாடுகள் உண்டு ஆனால் அது தர்க்க ரீதியானது.அதே நேரம் ஒரு கட்டமைப்பை வழிநடத்துவது என்பதும் குறிப்பாக ஒரு இராணுவ அமைப்பை வழிநடத்துவது என்பதும் இலகுவான விடயம் அல்ல.புலிகள் மீது விமர்சனம் இருந்தால் அதனை அரசியல் ரீதியாக முன் வையுஙள் தொடர்ந்து உங்களுக்கு பதில் கூறலாம் மாறாக மஞ்சள் பத்திரிகை ரேஞ்சில் கருத்து சொல்லி போரளிகள் பொதுமக்களின் மரணத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்.
சுதன்
பிரித்தானியா
விடுதலைக்கு உயிர் ஈந்த அனைத்து மாவீரர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம்.
கவிதை, கட்டுரை இரண்டும் ஓக்கே,விதைக்கப்பட்ட விதைகளுக்கு விருட்சம் பதில் சொல்லட்டும் விரைவில்
அருமையான பதிவு!
நல்ல விதை விதைக்கப்பட்டுள்ளது. கட்டாயம் ஒருநாள் முளைக்கும். அதுவரை காலத்தோடு நாமும் காத்திருப்போம்.
கருத்துள்ள பதிவு சகோ
பகிர்வுக்கு மிக்க நன்றி
விடுதலைக்கு உயிர் தந்த அனைத்து மாவீரர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வீர வணக்கம் ...
தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்...இவ்வினத்தின் கவலைகள் அனைத்தும் தீரும்...
சொந்த பெயரில் கூட எழுத தெரியாத பேடிகளை உதறி தள்ளுங்கள் சகோதரி...
"அடங்ககிய எழுத்துக்கள்
அடங்காத உணர்வுகள்"
தியாகச் சுடர்களை வணங்குவோம்
வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். உங்களின் இரண்டு தளத்தை போலவே இதில் கவிதைகளும் அருமை. வாழ்த்துக்கள். நன்றி..!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"
வணக்கம் அக்கா, காலத்தின் பதிவாக ஓர் கவிதையினையும், கருத்தாளம் நிறைந்த வரலாற்றுக் கதையினைம் இந் நாளில் தந்திருக்கிறீங்க!
நாளை என்பது நாற்பது வருடங்களாவும் ஆகலாம்!
காத்திருப்பதனைத் தவிர, எம் கை வசம் ஏதும் இல்லையே!
அனானியாக கருத்திட்டவரின் அநாகரிகமான கருத்துக்களை நானும் வன்மையாக கண்டிக்கிறேன்.
Post a Comment