*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, May 12, 2008

தந்தையின் சிறைக்குள்...

கண்கள் கூசி...
இப்போ பிறந்த குழந்தை போல
இருளுக்குள் உலகம்.
ஏதோ மூன்று உருவங்கள் தவிர
இங்கு ஏதுமில்லை.
வேறு எதுவும் கண்டதுமில்லை.
உணவும் நீரும் கொண்டு வரும்
ஒரு நெடிந்த உருவம் எப்போதாவது.
வெளிச்ச மண்டலத்துள் புகுந்ததாலே
மனக் குழப்பம்.

அதிசயங்கள்...
அழகா...இது அசிங்கமா
உணர்வைப் புரிய முடியாமலாய்
இவ்வளவு காலமும்.
வேற்று உலகமோ...
இப்படியும் ஓர் உலகம்
இருந்ததா...இருக்கிறதா!
சின்னதாய்...பெரிதாய்
உயரமாய்...கறுப்பாய்...வெள்ளையாய்
விதவிதமாய் என்னைப் போலவே
ஊர்ந்தபடி பல உருவங்கள்.
வறண்ட தோலும்,பறட்டைத் தலையும்
மஞ்சள் பற்களுமாய்.
நாம் மட்டும் வித்தியாசமாய்.

மொழியோ இன்னும் குழப்பமாய்.
தேவைப்பட்டபோது
அம்மா சொல்லித் தந்த மொழி தவிர
புரிய வழி இல்லை.
ஓஓஓஓ...ஜடம்போல.
அன்னையவள் அழும் மொழி...
மற்றைய என்னைப் போன்ற
இரு உருவங்களின் குசுகுசு மொழி...
இங்கு புதிதாய் ஓலங்கள்
தென்றலாய்...சங்கீதங்களாய்
மனதையும் இலேசாக்கியபடி.
முன்னமே சில சத்தங்கள் அறிந்திருப்பாளோ அம்மா.
அரற்றுகிறாளே இங்கு யாரோடோ.

சிந்திக்க முடியாத சுவர்களுக்குள்
சுவர்க்கம் கண்டோமே.
இயற்கை அன்னை உள் வந்ததும் இல்லை.
என் அன்னை வெளி உலகம் போனதும் இல்லை.
பன்னிரண்டு ஆண்டுகள்
மின்சார விளக்கின் ஒளியோடே.
தண்ணீருக்குள்
மீன் காணும் இன்பம் கூட
இழந்திருக்கிறேனே.

தாயின் கருச் சிறை கூட பத்தே மாதம் தான்.
தந்தையின் சிறை அனுபவித்த கொடுமை!!
பலியானோம் நால்வரும்
இருபத்து நாலு வருடங்கள்.
சாகின்ற வயதினிலே
தூக்காம் தண்டணையாம்.
யாரினதோ இறப்பு தந்துவிடுமா
இழந்து விட்ட சந்தோஷங்களை?
பரமனும்...
பாவமும் புண்ணியமும்
புத்தகப் படிப்பில் மட்டும் தான்.
பட்டுவிட்ட வேதனைகளுக்கும்
கொடுமைகளுக்கும்
பதில்தான் என்ன ?!!!

ஹேமா(சுவிஸ்)

3 comments:

தமிழன் said...

செய்திகள் கவிதைகளாக மாறுகின்றன ஏன் என் தமிழன் பெற்ற வெற்றி கவிதைகள் ஆகாத? (கப்பல் தகர்ப்பு)

Anonymous said...

hi attai!!!your kavithai is suuuuuper!!!keep it up!love you

ஹேமா said...

Hi சூட்டியா,அபி சந்தோசமாயிருக்கு.இன்னும் எப்பவும் பார்த்து அபிப்பிராயம் சொல்ல வேணும்.உங்கள் ஊக்கங்கள் என்னை வளர்க்கும்.நன்றி.
அன்போடு அத்தை.

Post a Comment