*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, June 27, 2008

அநாதையில்லை யாரும்...


உயரப் பறக்க
சிறகுகள் அற்று
அழுது களைக்க
அடுத்த கிளையில்
அசந்தே போனேன்.

கொத்திக் கலைத்த
அதே காக்கா...
அழைத்துப் போனது
தின்ன உணவும் தந்து அன்பாய்
மன்னிப்பும் கேட்டது.

இன்னும் நிறைவாய்...
கட்டித் தருவேன்
கூடும் ஒன்று.

இல்லை...இல்லை
கூட்டிப்போவேன்
உன் இனம் வாழும்
பகுதிக்கு என்றது.

பாம்பும் ஒன்று மரத்தடியில்
புற்றுக்குள் காத்திருக்கு
இரையாக்க
என் குஞ்சுகளை.

பாம்பின் புற்றால்
புத்தியும் வந்தது.
தூரப்பறந்தே உணவும் தேட
மனமும் இன்றி
உதவியும் இன்றி
குஞ்சுகள் வாடிப் படுக்க
பசியின் அவதிக்குள் நான்.

அகதிகளுக்காய் வானில் இருந்து
வந்து விழுந்த
உணவுப் பொட்டலம்
விழுந்தது எனக்கும்.
வயிறாற உண்டபின்
வந்தாய் என் ஞாபகத்தில் நீ.
நான் அழ...
காக்கா அழ...குஞ்சுகள் அழ...

அன்பு காட்ட
அடுத்தவர் இருக்கும்வரை
அநாதையில்லை யாரும்.
அப்படிப் பார்த்தால்...
ஆதியில் பிறந்த மனிதனும்
ஆதாம் ஏவாளும் அநாதை.

அநாதரட்சகன் கூட...
அநாதைதானே!!!

ஹேமா(சுவிஸ்)

8 comments:

Athisha said...

கவிதையும் நடையும் அருமை




word verification ஐ நீக்கவும் , பின்னூட்டமிடுபவரை அது எரிச்சலூட்டும்

ஹேமா said...

உங்கள் வருகைக்கு நன்றி தோழி அதிஷா.நீங்கள் சொன்னதை இனிக் கவனத்தில் எடுக்கிறேன்.

தமிழ் said...

/அன்பு காட்ட
அடுத்தவர் இருக்கும்வரை
அநாதையில்லை யாரும்.
அப்படிப் பார்த்தால்...
ஆதியில் பிறந்த மனிதனும்
ஆதாம் ஏவாளும் அநாதை.
அநாதரட்சகன் கூட...
அநாதைதானே!!!/

அன்புக்கு
அருமையான விளக்கம்

அழகான கவிதை

Anonymous said...

28 Jun 08, 06:19
Hema thinamum orumurai ungal kavidai vachithdal oru murai sappitta thirupthi.enagku ungalai neril parga asai.சுட்டு விரலால் என் விரல் தொட்டு mugam katta marukgum kuyilin mugavari dedi manasu mathdukkul sikkiya thayira thathdaligkiradhu. somu

ஹேமா said...

வணக்கம் திகழ்.வாருங்கள்.உண்மை என்றும் அழகுதானே!

ஹேமா said...

வணக்கம் சோமு.மனங்களால் என்றும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்தானே!உங்களுக்கும் கவிதை வருகிறதே அழகாக.சோமு உங்கள் அத்தனை கருத்துக்களையும் அந்தந்தக் கவிதைகளின் கீழ் நானே கொடுத்துவிடுகிறேன்.

sukan said...

நன்கு ரசித்தேன். அழகான வெளிப்படுத்தல்.

விச்சு said...

அப்படிப் பார்த்தால்...
ஆதியில் பிறந்த மனிதனும்
ஆதாம் ஏவாளும் அநாதை.// உண்மைதான்.

Post a Comment