கொஞ்சம் பேசு
பத்துத் தலைமுறை தாண்டியாச்சு.
அடுப்படி தாண்டி படலை கடந்து
பறக்கும் தட்டில் நீ இப்போ.
அகராதியில் பேதை என்றதாலோ
பேச்சின் உரிமையை
உனக்குள்ளேயே புதைக்கிறாய் - ஏன் ?
பெட்டைபுலம்பல் என்றான் யாரோ.
மனம் சலித்தால்
உன்னையே சலித்து
ஒழித்துவிடும் உலகில் உன் யாத்திரை.
எண்ணங்களின் உணர்வுகளை
உன் உரிமைகளை
கொஞ்சம் பேசேன்.
அடி கோழையே...
உன்னைப் பேசா மடந்தை என்றவன் ஓர் ஆண்தானே.
உடன் கட்டை ஏறச்சொன்னவனும் அவனே.
பெண்ணைப் பாதி சுட்டு மீதி தின்றவனும் அவன்.
அவன் காலத்தில் சொன்னதை இன்னும் !
ஏன் இன்றும் ஏகாந்தத்துள் நீ !
பேசடி பேசு.
பெட்டைப் புலம்பலாய் இல்லாமல்
பேனா முனையால் பேசு.
பகிரண்டம் கேட்கப் பேசு.
உள்ளத்து உணர்வுகளைப் பேசு.
ஆக மிஞ்சி...
உன் கண்களையாவது பேசவிடு.
சிரிக்கும்போது ஆனந்தக்கண்ணீராய்
நீ துவழும்போது
விம்மி வெடிக்கும் வேதனையாய்
கோபத்தில் காளியின் கூரிய வாளோடு
கண்களாவது பேசட்டும் விடு.
கண்களில் கூட
உன் உணர்ச்சிகளைக் கொன்றுவிட்டால்
வாயிருந்தும் ஊமைதானே நீ !!!
(தயவு செய்து என் ஆண் நண்பர்கள் கோபிக்கவேண்டாம்)
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
43 comments:
//பெட்டைப் புலம்பலாய் இல்லாமல்
பேனா முனையால் பேசு.//
அழகான கவிதை ஹேமா. அதைத்தானே இப்போ நாமெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம்!
பெட்டை புலம்பல் என்றவனுக்கு சாட்டை அடி.
//நீ துவழும்போது
விம்மி வெடிக்கும் வேதனையாய்
கோபத்தில் காளியின் கூரிய வாளோடு
கண்களாவது பேசட்டும் விடு.//
பெண்களின் உணர்ச்சிகளை கிளர்தெழ செய்யும் வரிகள்...
கவிதையில் உங்களில் உள்ள குமுறல்கள் ஏதேனும் இருக்கிறதா?
//தயவு செய்து என் ஆண் நண்பர்கள் கோபிக்கவேண்டாம்//
இதில் ஆண்கள் கோபப்பட எதுவும் இல்லையே...
நன்றாயிருக்கிறது தோழியே....
கவிதை அருமை...............
My blog:
http://devadhaikadhalan.blogspot.com/
//உன் கண்களையாவது பேசவிடு//
இதை விட பயங்கர ஆயுதம் ஏதும் உண்டா உலகில் ???
////ஆக மிஞ்சி...
உன் கண்களையாவது பேசவிடு.
சிரிக்கும்போது ஆனந்தக்கண்ணீராய்
நீ துவழும்போது
விம்மி வெடிக்கும் வேதனையாய்
கோபத்தில் காளியின் கூரிய வாளோடு
கண்களாவது பேசட்டும் விடு.
கண்களில் கூட
உன் உணர்ச்சிகளைக் கொன்றுவிட்டால்
வாயிருந்தும் ஊமைதானே நீ !!!////
வாழ்த்துக்கள் தோழி….
உரிமைகளையும், உணர்வுகளையும் தொடர்ந்தும் அடக்கி சென்றால் அது ஒரு தருணத்தில் வரைமுறையற்ற ரீதியில் வெடித்துக் கிளம்பும். ஆதனை விட உணர்வுகளையும், உரிமைகளையும் வெகு இயல்பாகவே வெளிப்படுத்தி விடுங்கள். தங்கள் கவிதையின் இறுதிப்பகுதி மிகவும் பாரிய வீச்சைப் பெறுகிறது. வாழ்த்துக்கள்.
நல்ல கவிதை தோழி.. அதே சமயம் ஆண்கள் மட்டுமே ஒரு பெண்ணை கட்டுப்படுத்தும் சக்தியாய் இருப்பதில்லை என்பதையும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.. சில நேரங்களில் பெண்களே பெண்களுக்கு எதிரிகளாக இருக்கிறார்கள்.. :-((
நல்ல இருக்கு ஹேமா
இதில் கோபித்துக்கொள்வதில் என்ன இருக்கு ?
உங்களின் உணர்வுகள் அனைத்தையும்
உண்மையானது. ஆக வேண்டியதை செய்வோம்
//பேச்சின் உரிமையை
உனக்குள்ளேயே புதைக்கிறாய் - ஏன் ?//
புதைந்துபோனது உண்மைதான் ஹேமா.. நாம் சார்ந்த ஆண்களின் ரகசிய உணர்வுகளுக்கு அதுதான் சந்தோசம்..
//எண்ணங்களின் உணர்வுகளை
உன் உரிமைகளை
கொஞ்சம் பேசேன்.//
இப்பொழுது சிலர், வெகு சிலர் வந்துவிட்டனர் வெளியே ! அதற்கு பெண்களின் பயமில்லாத சுய அலசல் மட்டும் அல்ல க.பாலாஜி
//இதில் ஆண்கள் கோபப்பட எதுவும் இல்லையே...//
போன்ற ஆண்களின் நேர்மையான பார்வை மாற்றமும் சிறு காரணம் என்பது என் கருத்து. சந்தோசப்பட வேண்டிய விசயம்தான்.
//பேசடி பேசு.
பெட்டைப் புலம்பலாய் இல்லாமல்
பேனா முனையால் பேசு.
பகிரண்டம் கேட்கப் பேசு.
உள்ளத்து உணர்வுகளைப் பேசு//.
பேசா மடந்தையையும் பேச வைத்திடும் வார்த்தைகள்...
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்
ம் ... பேசு பெண்ணே பேசு
நீயாவது ஆணை உனக்கு சமமானவனாக பேசு
--------------
ஜெஸ்வந்தி சொன்னதையும் நான் சொல்லிக்கிறேன்.
pesunga thozhi innamum
niraiya
vazhthukkal
ondru sollikkolla virumpukiren
innamum vaarththaikalai surukki sethukklaam
muyarssi seiyungalen
vaazhthukkal again
ஹேமா.. அதெல்லாம் அந்தக்காலம்... உண்மையில் ஆண்களுக்குதான் பெண்களிடமிருந்து பாதுகாப்பு தேவையென்றே நினைக்கிறேன். சட்டம் பெண்னுக்கு தான் சாதகமாகயிருக்கிறது.
மற்றபடி நான் நினைத்தை க.பாலாஜி கூறிவிட்டார் :)
உன் கண்களையாவது பேசவிடு.
சிரிக்கும்போது ஆனந்தக்கண்ணீராய்
நீ துவழும்போது
விம்மி வெடிக்கும் வேதனையாய்
கோபத்தில் காளியின் கூரிய வாளோடு
கண்களாவது பேசட்டும் விடு//
நல்ல வரிகள் ஹேமா.... பெண்ணுரிமை பேசுகிறது கவிதை.
அப்படியே ஒரு படையணி அமைத்து வழிநடத்தலாம்தானே (உங்களைப் போன்ற பேனா பிடிப்பவர்கள்)
அடங்கொன்னியா...... அம்முனிங்கோவ் .... இதெல்லாம் நெம்ப டூ மச்...... !!
யார பாத்து பேச சொல்லுறீங்கோ....!! இப்புடி சொல்லி சொல்லித்தேன் ஆம்பளைங்கெல்லாம் துண்ட காணாம்... துணிய காணாமின்னு ஓடிகிட்டு இருக்குறோம்...!! நல்ல வேல யென்ர ஊட்டுகாரி இந்த பதிவ படிக்குல...!! படுச்சானா மூனுமணிநேரம் தம் கட்டி பேசுவா....!!
இப்படிக்கு ,
லவ்டேல் மேடி,
பாவப்பட்ட. ஆண்கள். சங்கம் (பா.ஆ.ச)
கிளை செயலாளர்.
ஈரோடு கிளை .
ஜெஸி என்னதான் பெண்களுக்கான விழிப்புணர்வு இருந்தபோதும் எங்களை நசுக்க என்று ஒரு கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
***********************************
//கவிதை(கள்)...
பெட்டை புலம்பல் என்றவனுக்கு சாட்டை அடி.//
விஜய் கவிதைபற்றின கருத்து ஒண்ணுமே சொல்லாம போய்ட்டீங்களே.அவ்ளோ சந்தோஷமா சாட்டை அடி குடுத்ததை நினைச்சு.
எழத்தில் கூர்மை கூடிக்கொண்டே இருக்குடா ஹேமா!கலக்குங்க.
// க.பாலாஜி ...
//நீ துவழும்போது
விம்மி வெடிக்கும் வேதனையாய்
கோபத்தில் காளியின் கூரிய வாளோடு
கண்களாவது பேசட்டும் விடு.//
பெண்களின் உணர்ச்சிகளை கிளர்தெழ செய்யும் வரிகள்...கவிதையில் உங்களில் உள்ள குமுறல்கள் ஏதேனும் இருக்கிறதா?
பாலாஜி "எரிக்கப்படவேண்டிய கோட்பாடுகள்"கவிதையில யாரோ ஒருவர் என்னைப் பெட்டைப்
புலம்பலாய் எழுதியிருக்கேன்னு எழுதியிருந்தார்.அவர் என் கவிதை தப்புன்னு சொலறதை நான் வரவேற்கிறேன்.தப்பு இருக்கலாம்.
நான் எழுதுறது எல்லாம் சரின்னு சொல்லி வாதாட மாட்டேன் நான்.
என்ன தப்புன்னு சொல்லி என்னைத் திருத்த முடியும்.ஆனால் வார்த்தைகளில் அழகு வேணும்.
அதுதான் கொஞ்சம் கோபம்.
//தயவு செய்து என் ஆண் நண்பர்கள் கோபிக்கவேண்டாம்//
இதில் ஆண்கள் கோபப்பட எதுவும் இல்லையே...நன்றாயிருக்கிறது தோழியே....//
நன்றி பாலாஜி.கொஞ்சம் பயமாயிருந்திச்சு.என்னை ஊக்குவிக்கும் உங்களைப்போல நிறைய ஆண் நண்பர்கள் தானே.
நன்றி தேவதைக் காதலன்.கருத்துக்கும் நன்றி.
********************************
//அ.மு.செய்யது ...
//உன் கண்களையாவது பேசவிடு//
வாங்க செய்யது.ரமழான் சந்தோஷமாகக் கொண்டாடினீங்களா?
//இதை விட பயங்கர ஆயுதம் ஏதும் உண்டா உலகில் ???//
இந்த ஆயுதத்தையே ஏமாத்திடுறாங்களே இந்த ஆண்கள் !
மருதமூரான்...
வாழ்த்துக்கள் தோழி….
உரிமைகளையும், உணர்வுகளையும் தொடர்ந்தும் அடக்கி சென்றால் அது ஒரு தருணத்தில் வரைமுறையற்ற ரீதியில் வெடித்துக் கிளம்பும். ஆதனை விட உணர்வுகளையும், உரிமைகளையும் வெகு இயல்பாகவே வெளிப்படுத்தி விடுங்கள். தங்கள் கவிதையின் இறுதிப்பகுதி மிகவும் பாரிய வீச்சைப் பெறுகிறது. வாழ்த்துக்கள்.
வணக்கம் மருதமூரான்.
யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருக்கிறீர்கள்.ஊரை நினைக்கவே ஆசையாயிருக்கு.சுகமாய் இருக்கிறீர்களா !
நன்றி உங்கள் கருத்துக்கு.பெண்களின் வளர்ச்சிக்கு இப்போதெல்லாம் ஆண்கள் எவ்வளவோ கை கொடுத்தாலும் மனதளவில்
"நீ ஒரு பெண்" என்கிற ஒரு அடக்குமுறை இருந்துகொண்டேதான் இருக்கிறது.ஏன் ?
சாரி ஹேமா, கோபத்தில் நானும் கவிதைகளை மறந்துவிட்டேன். தவறை சுட்டி கட்டுவதிலும் வார்த்தை பிரயோகம் ஒழுங்காக இருக்க வேண்டும். நான் எழுதுவதும் கவிதைதான் என்று எனை ஊக்கப்படுத்திய முதல் விமர்சகர் நீங்கள்தான். உங்களை காயப்படுத்தியதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
"பெண்ணைப் பாதி சுட்டு மீதி தின்றவனும் அவன்" மிக அழகான வரிகள்.
:(((
Pesa aarambicha, nippaata maataangale Hema.
//கோபத்தில் காளியின் கூரிய வாளோடு//
பெண்ணே பேசு...கொஞ்சம் என்ன நிறைய பேசு - இப்படி மட்டும் பயமுறுத்தாதே ...
அப்டீனு கமெண்ட் போட கூட பயமா இருக்கு ...
//கண்களில் கூட
உன் உணர்ச்சிகளைக் கொன்றுவிட்டால்
வாயிருந்தும் ஊமைதானே நீ !!!//
அருமை !
நல்லா இருக்கு ஹேமா.
பெட்டைபுலம்பல் என
பின்னோட்டமிட்டவனுக்கு
அங்கேயே பதிலம்பு விடுவதைவிட
முன்னோட்டமாய்
ஓர் பதிப்பில் சவுக்கடி கொடுத்து இருக்கின்றாய்.
பெண்மைக்கே உள்ள பொறுமை அது..
டம்பி மேவி அங்கேயே பதிலடி கொடுத்தார்.
பெண்ணை பதுமையாய் மட்டும் பார்ப்பவர்கள்
புதுமையை ஏற்பதில்லை.
வலிகளை சொன்னால் அதன்
வரிகளை அலசுகிறார்கள் வழகறிஞற்போல்..
(ஆண் நண்பர்கள் கோபிக்க வேண்டாம் )
என்ற சொல்லிலேயே உன் பொறுமையின் வெளிபாடு உள்ளது.
பெண்மை எனும் பூ
இன்றும் பூத்துகொண்டு இருப்பதால்தான்
உலகம் அன்பின் வாசத்தில்
வாழ்ந்து கொண்டு இருக்கின்றது.
நன்றி ஹேமா.
கோபிக்கலை ஹேமா...
பெட்டை புலம்பல் என்றவனுக்கு
அப்பிடி போடு அருவாள
இன்னைக்கு முதல் ஒட்டு
இந்த கவிதைக்கு
சில பெண்கள் பேச ஆரம்பித்தால் நிறுத்துவதே இல்லை... அவர்களை என்ன செய்வது தோழியே!!! நல்ல கவிதை தான் பாராட்டுக்கள்........
//கார்த்திகைப் பாண்டியன்...
நல்ல கவிதை தோழி.. அதே சமயம் ஆண்கள் மட்டுமே ஒரு பெண்ணை கட்டுப்படுத்தும் சக்தியாய் இருப்பதில்லை என்பதையும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்..சில நேரங்களில் பெண்களே பெண்களுக்கு எதிரிகளாக இருக்கிறார்கள்.//
கார்த்தி,மறுக்கமுடியாத உண்மை.ஒத்துக்கொள்கிறேன்.
***********************************
//வேல் கண்ணன்... நல்ல இருக்கு ஹேமா இதில் கோபித்துக்கொள்வதில் என்ன இருக்கு ?உங்களின் உணர்வுகள் அனைத்தையும் உண்மையானது. ஆக வேண்டியதை செய்வோம்//
நன்றி கண்ணன்.உணர்வுக்கு மதிப்பளித்தமைக்கு.நல்ல பயிர்களுக்குள் களை போலச் சிலர்.
*********************************
நன்றி தோழி லதா.வருகைக்கு முதல் சந்தோஷம்.உண்மை தோழி பெண்களைக் கொச்சைப்படுத்தாமல் ஆணகள் எவ்வளவோ கை கொடுத்து ஊக்கமும் தருகிறார்கள்.சிலசமயம் அவர்கள் தரும் தைரியத்தில்தான் சில வேலைகளையே செய்யக்கூடியதாக இருக்கிறது."முன்னைப்போல் இல்லை நம் ஆண்கள் இப்போ."
*********************************
//ஆரூரன் விசுவநாதன் ...
//பேசடி பேசு.
பெட்டைப் புலம்பலாய் இல்லாமல்
பேனா முனையால் பேசு.
பகிரண்டம் கேட்கப் பேசு.
உள்ளத்து உணர்வுகளைப் பேசு//.
பேசா மடந்தையையும் பேச வைத்திடும் வார்த்தைகள்...//
நன்றி ஆருரன்.நீங்க இப்பிடி உசுப்பேத்திவிடுங்க.நானும் பேசறேன்.அப்புறம் யாராச்சும் வந்து திட்டிட்டு போவாங்க.நன்றி நன்றி.
//நட்புடன் ஜமால் சைட்...
ம் ... பேசு பெண்ணே பேசு.நீயாவது ஆணை உனக்கு சமமானவனாக பேசு//
அச்சோ....என்ன இது !
ஜமால் சுகமா.எப்பிடி கொண்டாட்டமெல்லாம்.எங்கே புரியாணி?தருவீங்கன்னு பாத்திட்டு இருந்தேன்.பரவாயில்ல.அடுத்த வருஷம் கண்டிப்பா.சரியா !
**********************************
பாலா வணக்கமும் நன்றியும் கூட.நீங்கள் போன கவிதையிலும் சொன்னீர்கள்.கவிதையைச் சுருக்கி எழுதணும்ன்னு .முயற்சி பண்றேன்.ஆமாம்...உங்கள் கவிதைகள் பார்த்தேன்.அழகாயும் சுருக்கமாயும்தான் இருக்கு.
**********************************
//அஷோக்... ஹேமா.. அதெல்லாம் அந்தக்காலம்... உண்மையில் ஆண்களுக்குதான் பெண்களிடமிருந்து பாதுகாப்பு தேவையென்றே நினைக்கிறேன். சட்டம் பெண்னுக்கு தான் சாதகமாகயிருக்கிறது.//
அப்பிடி இல்ல அஷோக்.ஆண்கள் சட்டபடியும் மனச்சாட்சிப்படியும் நடந்துகொண்டால் உங்கள் பக்கம்தான் சட்டம் எப்போதுமே.
********************************
//சி.கருணாகரசு...அப்படியே ஒரு படையணி அமைத்து வழிநடத்தலாம்தானே (உங்களைப் போன்ற பேனா பிடிப்பவர்கள்)//
அதுசரி.இங்கேயுமொரு படையணியா !நாங்க பேசாம இருக்கோம்.உசுப்பேத்தாதீங்க.
//லவ்டேல் மேடி ...
அடங்கொன்னியா...... அம்முனிங்கோவ் .... இதெல்லாம் நெம்ப டூ மச்...... !!
யார பாத்து பேச சொல்லுறீங்கோ....!! இப்புடி சொல்லி சொல்லித்தேன் ஆம்பளைங்கெல்லாம் துண்ட காணாம்... துணிய காணாமின்னு ஓடிகிட்டு இருக்குறோம்...!! நல்ல வேல யென்ர ஊட்டுகாரி இந்த பதிவ படிக்குல...!! படுச்சானா மூனுமணிநேரம் தம் கட்டி பேசுவா....!!
இப்படிக்கு ,
லவ்டேல் மேடி,
பாவப்பட்ட. ஆண்கள். சங்கம் (பா.ஆ.ச)
கிளை செயலாளர்.
ஈரோடு கிளை .//
ரொம்ப பாவமா இருக்கு மேடி.நல்ல அம்மிணிக்கிட்ட மாட்டிக்கிட்டீங்க போல.அதான் இவ்ளோ !ஏன் உங்க வீட்ல நீங்கதான் சமையலோ! ஈரோட் ல எனக்கு ஒரு நண்பர் இருக்கார்.
அவரையும் சேர்த்துக்கோங்க.பாவம் அவரும்.
*********************************
//பா.ராஜாராம் ... எழத்தில் கூர்மை கூடிக்கொண்டே இருக்குடா ஹேமா!கலக்குங்க//
அண்ணா எங்க உங்களை அடிக்கடி காணமுடியல.சுகம்தானே !
**********************************
//
கவிதை(கள்) ... சாரி ஹேமா, கோபத்தில் நானும் கவிதைகளை மறந்துவிட்டேன். தவறை சுட்டி கட்டுவதிலும் வார்த்தை பிரயோகம் ஒழுங்காக இருக்க வேண்டும். நான் எழுதுவதும் கவிதைதான் என்று எனை ஊக்கப்படுத்திய முதல் விமர்சகர் நீங்கள்தான். உங்களை காயப்படுத்தியதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
"பெண்ணைப் பாதி சுட்டு மீதி தின்றவனும் அவன்" மிக அழகான வரிகள்.//
என்ன விஜய் மன்னிப்பெல்லாம்.இதுக்கெல்லாம் மனசு கஸ்டப்பட்டா எப்பிடி !விடுங்க.இவங்களெல்லாம் தங்களுக்குத் தாங்களே ஒரு விளம்பரம் செய்துகொள்ளும் பைத்தியங்கள்.
வசந்த்,என்ன ஒண்ணும் சொல்லாமப் போய்ட்டீங்க.சொல்லணும்.
*********************************
டாக்டர்,என்ன நீங்களும்...பேசாம இருந்தா நீங்க ஊசி போட்டுக்கிட்டே இருப்பீங்களே !
*********************************
//- இரவீ - ...
//கோபத்தில் காளியின் கூரிய வாளோடு//
பெண்ணே பேசு...கொஞ்சம் என்ன நிறைய பேசு - இப்படி மட்டும் பயமுறுத்தாதே ...
அப்டீனு கமெண்ட் போட கூட பயமா இருக்கு ...
இதைவிட நிறையப் பேச என்ன இருக்கு ?பயம் வேணாம் ரவி.நான் அவ்வளவு மோசமில்ல.
அதுசரி எங்க ஆளைக் காணோம்?"மலையடிவாரத்துத் தோழியே"பதிவில பாத்திட்டே இருந்தேன்.கும்மி குறையாதுன்னு.
தப்பிட்டேன்.
**********************************
//சந்தான சங்கர் ...
பெட்டைபுலம்பல் என
பின்னோட்டமிட்டவனுக்கு
அங்கேயே பதிலம்பு விடுவதைவிட
முன்னோட்டமாய் ஓர் பதிப்பில் சவுக்கடி கொடுத்து இருக்கின்றாய்.
பெண்மைக்கே உள்ள பொறுமை அது..டம்பி மேவி அங்கேயே பதிலடி கொடுத்தார்.பெண்ணை பதுமையாய் மட்டும் பார்ப்பவர்கள் புதுமையை ஏற்பதில்லை.வலிகளை சொன்னால் அதன் வரிகளை அலசுகிறார்கள் வழகறிஞற்போல்..
(ஆண் நண்பர்கள் கோபிக்க வேண்டாம் )
என்ற சொல்லிலேயே உன் பொறுமையின் வெளிபாடு உள்ளது.
பெண்மை எனும் பூ இன்றும் பூத்துகொண்டு இருப்பதால்தான்
உலகம் அன்பின் வாசத்தில்
வாழ்ந்து கொண்டு இருக்கின்றது.
நன்றி ஹேமா//
நன்றி சங்கர்.நிறைந்த ஆதரவுக்கும் ஆறுதலுக்கும்.அந்த மனிதர் தனக்குத் தானே விளம்பரம் தேடும் ஒரு புதிய வலைப்பதிவாளர்."பெட்டைப்புலம்பல்" என்று சொன்னவர் பதிவின் பக்கம் போனால் பாரதியாரைப் பற்றியே எழுதுகிறார் தொடராக.
எப்பிடியிருக்கு இது !
ஹேமா கவிதை வெகு அருமை.
தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்
/*கண்களாவது பேசட்டும் விடு.
கண்களில் கூட
உன் உணர்ச்சிகளைக் கொன்றுவிட்டால்
வாயிருந்தும் ஊமைதானே நீ !!!
*/
உண்மை. எத்தனையோ பேர் ஊமைகளாக பதுமைகளாகக் கண்ணீர் விட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். குரல் கொடுக்காத வரை சுமைகளை சுமந்து கொண்டுதான் இருப்பார்கள்.
அருமை... அருமை... அருமை...
/*(தயவு செய்து என் ஆண் நண்பர்கள் கோபிக்கவேண்டாம்)*/
அதனாலே உங்க தம்பி நான் கோவிச்சுக்கறேன்.
/*லவ்டேல் மேடி said...
அடங்கொன்னியா...... அம்முனிங்கோவ் .... இதெல்லாம் நெம்ப டூ மச்...... !!
யார பாத்து பேச சொல்லுறீங்கோ....!! இப்புடி சொல்லி சொல்லித்தேன் ஆம்பளைங்கெல்லாம் துண்ட காணாம்... துணிய காணாமின்னு ஓடிகிட்டு இருக்குறோம்...!! நல்ல வேல யென்ர ஊட்டுகாரி இந்த பதிவ படிக்குல...!! படுச்சானா மூனுமணிநேரம் தம் கட்டி பேசுவா....!!
இப்படிக்கு ,
லவ்டேல் மேடி,
பாவப்பட்ட. ஆண்கள். சங்கம் (பா.ஆ.ச)
கிளை செயலாளர்.
ஈரோடு கிளை .
*/
தலைவன் லவ்டேல் மேடி, வாழ்க...
வாழ்க...
(இங்கே என்னாலே சங்கம்லாம் வச்சி சேர முடியாது...
ஏன்னு வேற நான் வெளக்கமா சொல்ல வேண்டியதில்லைன்னு நெனைக்குறேன்... புரிஞ்சுகோங்க புண்ணியவாலனுங்களா...)
இந்த கவிதை என்ன ஹேமா, ஒரு தேவதை காளியாய் மாறிய கதையா?
நல்லா இருக்கு, ஆனா ஆணில் சரிபாதியும் அவள்தான், அவனுக்கு அன்னையும் அவள்தாங்கிறத எல்லாரும் மறந்ததுடறாங்க.
நல்ல கவிதை வரிகள் இதில்
ஆண்கள் கோபிக்கஎதுவும்
இல்லையே.
ஹேமா மிக அருமையான கவிதை...
காளியின் உக்கிரத்துடன் இருக்கிறது...
நாமும் நம்முடைய உரிமைகளுடன் தானே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் !
இதை மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்...
சுட்டெரிக்கும் பார்வை கொண்ட கண்ணை இந்தக் கவிதைக்குப் போட்டிருக்கலாம்.
பெண்கள் இன்னும் முழுமையான சுதந்திரத்தை அடைந்துவிடவில்லை. அழகான கவிதை ஹேமா.
naan onnum solla matten
சுவிஸ்ல இன்னும் அப்படியா இருக்கு நம்ப முடியவில்லையே !!!!!!!!!!!!!!!!
இன்னுமா பெண்கள் அடிமைகளாகப் பார்க்கிறார்கள். இல்ல ஹேமா, அவர்கள் இப்பொழுது போகப் பொருள்களாகிப் போகிறார்கள். விளம்பரம்,திரைப்படம்,ஓவியம் என அனைத்து ஊடகத்தில் வந்தாலும் இன்னும் வேறுவகையில் காட்டப்பட்டு வருவதை எதிர்த்து எழுத வேண்டும் என எதிர்ப்பார்க்கிறேன்.
Post a Comment