*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, January 04, 2009

தெளிவு...

நட்சத்திர ஒளி விரட்டும்
மின்கம்பத்துக் குமிழ்விளக்கு.
சந்தோஷ மழை முறிக்கும்
சடுதி மின்னல்.
மனமுடைத்து
முட்டி வரும் எண்ணங்களை,
பூச்சிகளின் வீரியங்களை
நசுக்கும் விரல்களாய்
சம்பவங்கள் சில.

தகிப்புக்களின் வெக்கைகளை
அடக்கும் வெட்டவெளி இசை.
சொல் உடைத்து
மூலை பார்த்துக் குந்தியிருந்து
அழும் குழந்தை.
ஓடு உடைத்து
உலகம் பார்த்து வியக்கும் ஓர் உயிர்.
காரணம் மறந்து
எழுந்து உலவும் சமாதானம்.

முறித்தலின்...உடைத்தலின்
வலியை உணர்ந்தபடியே
உணர்வுகளின் கனத்தோடு
இரையின் பொருள் நெருங்கி
என்றாலும்...
வெறுப்புக் கிளையில் காத்திருந்து
பசிவிரட்டி
கணங்கள் ஒவ்வொன்றும்
சிறகு விரித்துப் பறந்து
பசிக்கும்
உணர்வைத் தவிர்த்து,

தன் எண்ணங்களை
நொடிக்குள் உடைத்த
மின்னல் முன் முணுமுணுத்தபடி
மீண்டும்...
படபடக்கும் சிறகுக்குள்
எண்ணங்களை எழுதியபடி
தன் திசை துரத்தித் தொலைகிறது
முகிலுக்குள் முகம் புதைக்கும்
ஓர் பறவை
பசி மறந்ததாய் !!!

ஹேமா(சுவிஸ்)

20 comments:

நட்புடன் ஜமால் said...

\\"தெளிவு..."\\

இதுதான் எல்லாக்காலங்களிலும் தேவை

நட்புடன் ஜமால் said...

\\பூச்சிகளின் வீரியங்களை
நசுக்கும் விரல்களாய்
சம்பவங்கள் சில.\\

வீரியமான துவக்கம் ...

- இரவீ - said...

தானாக வருவதல்ல மின்னல்,
காரணத்துக்கு ஆயிரம் ஆயிரம் மேகங்கள் ...
மின்னல் நீடித்ததோ நிலைத்ததோ கிடையாது,
நிலையில்லா மின்னல் கண்டு நிலைகுலைய தேவையில்லை,

நிலவை காட்டி சோறூட்டிய நாங்கள் நிலவுக்கு சோறூட்ட வக்கற்று.

Unknown said...

ம்... மின்னலை வைத்து பின்னப்பட்ட கவிதை கருத்தை உணர்த்த தவறினாலும் கவிதை போல்ல் உள்ளதுது.

நட்புடன் ஜமால் said...

\\ஓடு உடைத்து
உலகம் பார்த்து வியக்கும் ஓர் உயிர்.\\

அழகாயிருக்கு ...

நட்புடன் ஜமால் said...

\\தன் எண்ணங்களை
நொடிக்குள் உடைத்த
மின்னல் முன் முணுமுணுத்தபடி
மீண்டும்...
படபடக்கும் சிறகுக்குள்
எண்ணங்களை எழுதியபடி
தன் திசை துரத்தித் தொலைகிறது
முகிலுக்குள் முகம் புதைக்கும்
ஓர் பறவை
பசி மறந்ததாய் !!!\\

அருமையான வரிகள்

புதியவன் said...

கவிதை வரிகள் வெகு அழகு...
படித்து முடித்ததும் மனதிற்குள்
ஒரு மின்னல் மின்னியது
போலத்தான் இருந்தது...

ஹேமா said...

நன்றி ஜமால்.சிலசமயம் இந்தக் கவிதை விளங்கவில்லையோ என்று நினைத்தேன்.

ஹேமா said...

//நிலவை காட்டி சோறூட்டிய
நாங்கள் நிலவுக்கு சோறூட்ட வக்கற்று.//

இரவீ,கவிதை கொஞ்சம் குழப்பம்
தான்.எனக்கு மட்டுமே புரிகிறது.நான் என்ன நினைக்கிறேன் என்று.

எங்கே நிலவை விட்டு வைக்கிறார்கள்.அங்கும் தேடல்கள்.சோறு கிடைக்கிமா என்றல்லவா தேடுகிறார்கள்.

ஹேமா said...

ஈழவன் குழப்பத்தோடு கவிதைக்குள் தேடிப் பார்த்திருக்கிறீர்கள்.நன்றி.

இதற்கு முந்தைய பதிவில்(பட்டாம்பூச்சி) ஒருவரால் அடிக்கப்பட்ட வலியில் வந்த வார்த்தைகள்தான் இவைகள்.
ஒருவேளை நான் நினைத்ததைச் சரியாகச் சொல்லவில்லையோ என்னவோ!

ஹேமா said...

இரவீ,ஜமால்,நான் ஈழவனின் பின்னூட்டத்தில் விளக்கம் தந்திருக்கிறேன்.இப்போது மீண்டும் வாசித்து சொல்லுங்கள் பார்க்கலாம்.கடையம் ஆனந்த் வந்தால் இன்னும் சந்தோஷமாயிருக்கும்.புரியும் அவருக்குக் கூடுதலாக.

ஹேமா said...

புதியவன்,இனிய புத்தாண்டு மின்னல் வாழ்த்துக்களோடு வாருங்கள்.
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

Anonymous said...

இரவீ ...

நிலையில்லா மின்னல் கண்டு நிலைகுலைய தேவையில்லை,
//
ரவீ, சரியாக சொல்லியிருக்கிறhர். இது எல்லா நிகழ்வுகளுக்கும் பொருந்தும்.
பிடிக்காத எதையுமே இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விட வேண்டியது தான்.

Anonymous said...

\\தன் எண்ணங்களை
நொடிக்குள் உடைத்த
மின்னல் முன் முணுமுணுத்தபடி
மீண்டும்...
\\
\\தெளிவுதான்...

Anonymous said...

அன்பு ஹேமா .... உங்களுக்கு "பட்டாம்பூச்சி விருது" கிடைத்ததற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்....என்றும் நீங்கள் இதேபோல் மென்மேலும் பற்பல விருதுகள் வாங்க இறைவனை வேண்டுகிறேன்...உங்கள் ஆக்கங்களை கண்டு பலர் வியக்கலாம்... பாராட்டலாம்..பொறாமை கூட படலாம்...நீங்கள் அன்னபறவையாய் மாறி தூய பால் போன்ற நல்ல கருத்துக்களை உள்வாங்கி கேடர் வார்த்தைகளை புறந்தள்ளி வெற்றி பெற வாழ்த்துகிறேன் என் அன்பான சகோதரியே!!!

- இரவீ - said...

ஹேமா, நானும் அந்த தேவாத(தேவையில்லாத) விவாதத்தை கடந்து பின்னூட்டமிட்டு வந்தேன்... அதற்க்கா சாப்பிடவில்லையா? போங்க போய் சாப்டுங்க...

ஹேமா said...

ஆனந்த்,சிலவிஷயங்கள் சிலர் ஏதாவது சொல்வதால் நின்றுவிடப் போவதில்லை.என்றாலும் ஏன் தான் இப்படியான மனிதர்கள் என்று அந்த நிமிடத்தில் சோர்ந்து போகிறது.நன்றி உடன் வந்ததற்கு.

ஹேமா said...

கவின் மனம் தெளிவடையாமல் இருந்துவிட்டால் இன்னும் இன்னும் பெலவீனப்பட்டுவிடுவோம்.

கவின் உங்களுக்குப் பின்னூட்டம் போடவே முடியவில்லை.இதே பின்னூட்ட முறை பலபேர் வைத்திருக்கிறார்கள்.என்னால் முடியாமைக்குக் கவலையாயிருக்கு.

ஹேமா said...

மது வாங்கோ.உங்கள் ஊக்கமான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.
சிலவார்த்தைகள் மனதைப் புண் படுத்திய பின்புதானே சமாதானமாகிக் கொள்கிறது.

ஹேமா said...

இரவீ,உண்மையில் அந்த நிமிடத்துப் பசி பறந்தே போய்விட்டது.சிலர் தங்களை அறியாமலே தங்களது சுயவடிவங்களைக் காட்டும்போது அசிங்கம்தான்.சரி..சாப்பிடுவோம்.
இதற்காகச் சாகமுடியுமோ!

Post a Comment