*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, April 13, 2008

வாழ்கிறோமா நாம்...


வேதனையின் விளிம்பில்
வெடிக்கிறது கவித் தீ ஒன்று.

வாழ்கிறோமா நாம்!!!

தாய் மண்ணை உதறி விட்டுப்
பாச பந்தங்களை பறக்கவிட்டு
பெற்றவர்களைப் புறக்கணித்துவிட்டு
சுக்காய்ச் சிதறிய உள்ளத்தைத்
தேடிப் பொறுக்கிச் சேர்த்துக்கொண்டு
வெளி நாடு என்று
வெளியேறி விட்டோமே

வாழ்கிறோமா நாம்!!!

ஓடி ஓடி உழைக்கிறோம்
கடிகாரத்தின் முட்களோடு
நாமும் சேர்ந்தோடி
முகவரி அற்ற அகதியென்ற
அழகான அடிமைப் பெயரோடு.
ஆடம்பரப் பெருவாழ்வு
அருவருப்பாயிருக்கிறது.
அவிந்த நிறத்தில்
வெளிறிய முகங்கள்.
முகமூடியற்ற
மூடி மறைத்த முகமூடி முகங்கள்.

வாழ்கிறோமா நாம்!!!

மின்சார மூழ்கடிப்பால்
சந்திரன் சிந்தும் சிரிப்புக் கூட
கண்களை விட்டுக் காணாத்தூரம்.
முற்றத்து மல்லிகையின்
சுகந்த வாசனையோடு
நிலவின் கொள்ளை அழகில்
அம்மா குழை சோறு குழைத்துத் தர
எனக்கு முந்தி...உனக்கு முந்தி என்று
தம்பியோடும் தங்கையோடும்
சண்டையிட்டுப் பகிர்ந்துண்ட நாட்கள்
அன்று...

இன்று...
நாலு கறிகள் சமைத்தும்
நாலு பேர் இல்லாமல்
மனம் முழுதும் விரக்தியோடு
வெறுமனே தின்று திணித்து
பெருமூச்சொடு பஞ்சுப் படுக்கையில் நாம்.

வாழ்கிறோமா நாம்!!!

காடு களஞ்சிகளை விற்று
நகை நட்டுக்களை விற்று
நின்மதியையும் சேர்த்தல்லவா
விற்றுவிட்டு வந்திருக்கிறோம்.
புயல் காற்றில் அல்லாடும்
இலவம் பஞ்சிற்குக் கூட
ஏதோ ஒரு நாள்...
என்றோ...எங்கோ
அமைதி கிடைக்கும்.
கேட்பதுவும் கிடைக்கப்படும்.
எமக்கு..???

வாழ்கிறோமா நாம்!!!!

வருடமும் பிறப்பும் என்றும்தான்.
ஈழத் தமிழனுக்கு எப்போ
புதிதாய் பிறப்பொன்று!!!

ஹேமா(சுவிஸ்)

9 comments:

Anonymous said...

14 Apr 08, 06:00
junaid: waalkiroma naam kavidayai kanda pin en unarwugalai epdi solwedenru teriya willa. nalami irungal. iraiwan ummudan

Anonymous said...

vanakkam.

thankal inaiyath thalam mikavum sirappaaga ullathu.
thankal ilakkiyap pani melum thodara vaalthukiren.
yazh sudhakar

Anonymous said...

Hi Hema ivvalavu vethanaiyoda vaazhkirikal.ungal vali ungal naaddai pattiya ella kavithaikalilum therikirthu.naanum oru india thamizhanthaan.aanalum silar ugal valiyai purinju kollamal veenaka ungal poraddathi kochai paduththuvathaiyum naan parkkiren.sornthupoka vendam.innum thairiyamaaka ezhuthungal. manamavathu amaithiyadayum.
Ram

Anonymous said...

இன்று...நாலு கறிகள் சமைத்தும் kavithaiku uyir thanthu ulleergal mika nanri.
14 Apr 08, 22:47
koventhan innuvil

Anonymous said...

14 Apr 08, 22:52
nallakavithaikal.thodarungal.enaathum enathu manaiviyathum vazhthukallum enrum irukum.kavithaiyin vali ungal thuyaram, ungal inathin anpu ellam therikirathu.niraya ezhuthungngal-kaneeroodu vazhthukirn.
prasana

Anonymous said...

14 Apr 08, 23:06
kavithaikal ellam nanraga ullana.silla kavithaikalil unarvu therikkirathu,thodarungal.manitham enroo oru naal kan thirakkum anru ungal kavithaikam anivakukkum.athuvarai eluthunghkalean enraal ungal ez
mabrook

Anonymous said...

14 Apr 08, 20:54
உங்கள் கவிதை சிறப்பாக உள்ளது.வாழவில்லை நாம்.நினைவு பகிர்வுக்கு நன்றி.
சிறீ

V.N.Thangamani said...

ஹேமா வாழவில்லை நாம், உணர்வுகளை இழையோட விட்டிருக்கிறீர்கள்.ஒரு தலைமுறை வாழவில்லை... பிழைதுக் கொண்டுதான் இருக்கிறது. உங்கள் வருங்கால சந்ததிகலேனும் வண்ணமாய் வாழும்படி என்ன அலைகளை எழுப்பிக்கொண்டே இருங்கள். இனியொரு விதிசெய்ய தமிழனால்தான் முடியும். (ஒரு குறிப்பு : உங்கள் தளத்தின் பின் வண்ணத்தை இல நிறத்தில் அமைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் )

விச்சு said...

ஈழம் எப்போதுதான் விடிவு.. வாழ்வைத்தொலைத்து எத்தனை தமிழர்கள். வேதனையானது.

Post a Comment