*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, April 12, 2008

மாற்றம்...

முரண்பட்டுக் கொண்டேயிருந்த
நான்...
முதன் முறையாக
உன் முன் மண்டியிடுகிறேன்.
மொட்டவிழ்ந்து கொண்டிருக்கும்
மலராக...
வெளி உலகின்
அவலங்கள் புரியாமல்,
தாயின் கருப்பையை விட்டு
அவசர அவசரமாக
புது மண்
மணக்க மணக்க
கண் கூடத்
திறக்காமல் தெரியாமல்,
தடுமாறும் பச்சைச் சிசுவாக
களங்கங்கள் எதுவுமின்றி
நானும் புதியவனாக
மீண்டும்...
பிறந்தவனாகிறேன்.
எல்லாம் தெரிந்திருந்தும்
அறிந்திருந்தும்
ஏதுமறியாச்
சிறு குழந்தையாய்
முரண்பாடுகளுக்கு
ஒரு முற்றுப்புள்ளி வைத்து
புது மனிதனாய்...
அன்புக் காதலனாய்...
மாறிக் கொண்டிருக்கிறேன்
உன் இனிய வரவால் !!!

ஹேமா(சுவிஸ்)

1 comment:

விச்சு said...

மாற்றம் எப்போதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். மாற்றம் என்ற வார்த்தை ஒன்றே மாறாதது.

Post a Comment