*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, May 08, 2008

நம்பிக்கைகள்...

மனைவியில் நம்பிக்கை...
அவள் சமையலைச் சாப்பிடும் கணவன்.
கணவனின் அன்பில் நம்பிக்கை..
பழைய காதலை மறைக்காமல் சொல்லும் மனைவி.
அண்ணாவில் நம்பிக்கை...
தள்ளு வண்டிலில் தைரியமாய் தங்கையின் சவாரி.
காதலன் காதலில் நம்பிக்கை...
தன்னையே கொடுக்கும் காதலி.
வானத்தில் நம்பிக்கை...
பயிரிடும் விவசாயி.
அம்மாவில் நம்பிக்கை...
குழந்தை கருவில்.
நட்பில் நம்பிக்கை...
வீட்டில் தங்க வைக்கும் நண்பன்.
இறைவனில் நம்பிக்கை...
பக்தியோடு வைக்கும் நேர்த்தி.
மகனில் நம்பிக்கை...
கடன் வாங்கி வெளி நாடு அனுப்பும் அப்பா.
மகளில் நம்பிக்கை...
படிக்க என்று விடுதியில் தங்க அனுமதி தரும் அம்மா.
மின்சார இயந்திரங்களில் நம்பிக்கை...
தொழிற்சாலைகளின் இயக்கம்.
மக்களில் நம்பிக்கை...
கடன் கொடுக்கும் வங்கிகள்.
விதியில் நம்பிக்கை...
நாளைய எதிர்காலத் திட்டங்கள்.
தொழிலாளியில் நம்பிக்கை...
அலுவலக சாவி அவன் கையில்.
ஓட்டுனரில் நம்பிக்கை...
தொலை தூரப் பயணங்கள்.
எவரது நம்பிக்கை...
எவர் கையில் !!!

ஹேமா(சுவிஸ்)

3 comments:

ஹேமா said...

8 May 08, 09:14
junaid: hai "nambikkai" kavidai arumai

7 May 08, 23:20
SUTHARSHANAN: HI.HEMA THANKAL KAVITHAIKAL ARUMAIYAGA ULLANA

7 May 08, 21:04
sekar: hema unkal kavithaikal rompa suppar. puthu kavithai nalla irikki. nijaththai kavithai akkirirkal.

ஹேமா said...

8 May 08, 10:49
raji: hi hema nalama. unkal kavithaikal anaiththum anathu manathai kavarnthathu.kavithaikalil onran , nampikkaikal,athu ennai poruththavaraikkum.ulakaththil mukkiyamanathu onru.

8 May 08, 11:02
ஹேமா: Hi Raji,நான் நல்ல சுகம் நீங்களும் தானே.. நான் சில நடிப்பான நம்பிக்கைகளை நம்பி நம்பிக்கை இழந்து நிற்கிறேன்.அதன் பாதிப்புத்தான்"நம்பிக்கைகள்"

தமிழன் said...

எனது நம்பிக்கை ஈழம் மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதே, ஈழ தமிழர் விருப்பம் தெரியவில்லை ஆனால் என் நம்பிக்கை அது ஒன்றுதான்.

Post a Comment