*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, May 03, 2008

என்னவன்...

love
சுமைகள் கனக்க
சோர்ந்தே போகிறேன்.
சுமைதாங்கியாய்
என் பாரத்தை
சிறிது தாங்கிக் கொள்கிறாய்.
கொஞ்சம் ஆறிக்கொள்கிறேன்.
இலேசாகிறது மனமும் உடலும்.
நான் தந்த சுமைகளை
திருப்பி நீ...
தருவதாகவே இல்லை.
பங்கு போட்டுக் கொள்கிறாய்.
நட்பென்ற உறவின் அன்போடு
என் சோகங்களைச்
சுமக்கத் துணிந்த
நீ...
வாழ்வையும் பங்கு
போட்டுக் கொண்டாயே!
இனிய காதலனாக...
பாரங்கள் இனி
பாரமே இல்லை எனக்கு.
பரிமாறிக்கொள்ள
அன்புக் கணவனாக
நீ என் அருகில்!!!

ஹேமா(சுவிஸ்)

4 comments:

Anonymous said...

சூப்பர்!சூப்பர்!! ஹேமா

எல்லாமே நல்ல கவிதைகளும், வானத்தில் மிதந்ததுபோல நல்ல ஜொளிப்பாகயிருக்கிறது.

வாழ்த்துக்கள் ஹேமா.

Anonymous said...

Hi,Hema romba naala ungaluku message tharailla.so..sorry.ethanai thadavaithan supper nu solla nu irunthidden.athan.ella unarvukalum kalantha unga "manathin valikal" pathidduthan irukken.innum ezhuthunga.thodarungal.vazhthukkal.
unga rasikan Ram.

தமிழன் said...

உங்கள் கவிதையுடன் நீங்கள் தேர்ந்து எடுக்கும் புகைப்படங்களும் மிக அருமை, உண்மையை சொல்லுங்கள் படத்தின் பாதிப்பால் கவிதை பிறந்ததா அல்லது கவிதையின் பாதிப்பால் படத்தை தேர்ந்து எடுத்திர்களா?

ஹேமா said...

திலீபன்...
இதுக்கெல்லாம் இப்படி உண்மை சொல்லச் சொல்லி வெருட்டினால் எப்படி????

மதி உங்களுக்கும் நன்றி.தொடர்ந்தும் அபிப்பிராயங்கள் தாருங்கள்.

Post a Comment