இருள் இருள் இருள்....
கருக்கு இருள்.
இந்த ஒரு
இரவு மட்டும்தானே,
இருக்கும்
கொஞ்ச இருள்
மட்டும் கழியட்டும்.
வரும் ஒரு
சுதந்திர விடியல்.
சூரியன்
வரத்தான் நாழியாகிறது.
பிரச்சனையில்லை
பிழைத்துக்கொள்வோம்.
சுகமான...
சுதந்திரக் காற்றுக் கொண்டு
சுந்தரச் சூரியன் வருவான்.
அச்சமற்று மூச்சு விடலாம்.
வரட்டும் ஒரு விடியல்.
இருள்தானே...
கறையானும்
காட்டு நரியும்
உணவு தேடிச்
சேமித்துக்கொள்ளட்டும்.
சுட்டெரிக்கச்
சூரியன் வந்துவிட்டால்.....
வரட்டும் ஒரு விடியல்.
இருட்டு அரங்கில்
குருட்டு மக்களோடு...
தமக்கென்ற
ஒரு கூட்டத்தோடு...
தொடரட்டும்
அரக்க நாடகம்.
பார்த்தும்...கேட்டும்
அசந்த நிலையில்
விடி வெள்ளி
ஓடுகின்ற வெளிச்சத்தில்
வெடித்துச் சிதறும்
நாடக அரங்கம்.
வரட்டும் ஒரு விடியல்.
இருளுக்குள் ஓர் உலகம்
நச்சு நாகம் நகர்ந்து வர,
வஞ்சகமும் சூதும்
சுற்றிப் படையெடுக்க,
தீப்பந்தம் ஒன்று
துரத்திக் கலைக்க,
அலறியபடி
சட்டென்று
கலைகின்ற கனவு.
இந்த இரவு
மட்டும்தானே...
ஓடிக் கழியட்டும்.
வரட்டும் ஒரு விடியல்.
மாறி மாறி
முடிவே இல்லாமல்...
எல்லையே தெரியாமல்...
ஏதோ ஒன்று
இருள் விலக்க
வருவதும்...
பின்பு மறைவதுமாய்...
மனதுக்குள் மட்டும்
சிறு துளி
நம்பிக்கை
வெளிச்சத்தோடு
மரணத்தின் வாசலில்...
இந்த ஒரு இரவு
மட்டும்தானே
கொடிய இரவு
கழியுமட்டும்
ஏக்கக் காத்திருப்பு...
வரட்டும் ஒரு விடியல்!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
5 comments:
18 May 08, 10:50
raji: hi hema nalama."vandum oru vidiyal" mekavum nanraka ullathu. anal appathan enkal naddukku. vidiyal varappothu.
raji.
தீலிபன் said...
எனக்கு புரியவில்லை உங்கள் கவிதை, ஆனால் நன்றாக உள்ளது. அர்த்தம் புரிந்தால் மிக நன்றாக இருக்கும்.விடியல் என்று நீங்கள் குறிப்பிடுவது ஈழ விடுதலை தானே. எதிரியின் காலை நக்கி பதவி பெறுவதை விட அமெரிக்காவிடம் நட்பு கொண்டு சுதந்திரம் பெறுவது மேல் தானே. விடியல்(ஈழவிடுதலை) ஒரு ராஜதத்திரத்தில் அடங்கி உள்ளது. வரும் ஆண்டு ஈழம் விடுதலை பெரும் என்று நம்புகிறேன்.
May 18, 2008 4:04 PM
என்ன திலீபன் அர்த்தம் புரியவில்லை என்கிறீர்கள்.ஏன்?தமிழரின் வாழ்வின் இருட்டைப் போக்க ஒரு சூரியன் வருவான்.கொஞ்சம் தாமதம்தான் ஆகிறது.காத்திருக்கிறோம்.வரும் ஆண்டு தமிழீழம் என்று சொன்ன உங்கள் வாய்வாக்குப் பலிக்கட்டும். நிச்சயம் உங்கள் வாயில் சர்க்கரை போட வேணும்.காத்திருங்கள்.
ஹேமா லங்காசிறி பக்கம் மூலம் உங்கள் பக்கத்துக்குள் இணைந்தேன் கவிதைகளை ரசித்தேன் வாழ்த்துக்கள்
அமுதன்
வணக்கம் அமுதன்.
உங்கள் வருகைக்கு.நன்றி.சுவிஸில் இருந்து கொண்டு இத்தனை நாள் தாமதமாக வருகிறிர்களே!!!
Post a Comment