*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, May 21, 2008

ஏக்கம்...


அடுக்களையும் பிள்ளையுமாக
அல்லல் படுபவளை
களைப்பாயிருக்கிறதா
என்ற ஓர் அனுசரனைப் பார்வை...

தொட்டோ தடவியோ
தைலம் போடாவிட்டாலும்
தாயன்போடு சின்னப் பார்வை...

வீட்டுக்குள் அடைந்தே கிடப்பவளிடம்
விடுமுறை நாட்களிலாவது
அருகமர்ந்து உணவருந்தி
"நீயும் சாப்பிட்டாயா"
அன்போடு ஒரு விசாரிப்பு...

வெளியே போகும்போது
கை கோர்க்காவிட்டாலும்
தூர நடக்காமல் மிக அருகோடு...

உணவும்,உடுப்பும்,பணமும்
பகட்டும்...பெரிதல்ல.
பாசமும்,பரிவும் மட்டுமே
தேடும்
பெண் மனம்
கணவனிடம்!!!

ஹேமா(சுவிஸ்)

4 comments:

ILA (a) இளா said...

நிதர்சனம்!

Anonymous said...

I agree with you very much. Excellent poem.

Ravi

Anonymous said...

Hi Hema,உங்கள் கவிதைகள் அனைத்தும் என் மனதைக் கவர்ந்து இருக்கிறது."ஏக்கம்" என்கிற கவிதைமிகவும் நன்றாக உள்ளது.இப்போ பாசம் வைக்கிற ஆண்கள் எங்கே?சரியான குறைவு.அந்தப் பாசம் எப்போ கிடைக்குமோ!!!
ராஜி

sukan said...

எழிமையாக இந்த கவிதை வெளிப்படுத்தும் உணர்வுகள் எத்தனையோ மனைவிகளின் ஏக்கத்தை இலகுவாக சுமந்து நிற்கின்றது.

Post a Comment