*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, May 30, 2008

பூக்களைப் பறிக்காதீர்...

குறுகுறுத்தபடி மனம்.
கையில் ஒரு மல்லிகை மாலை.
பார்க்கிறது பரிதாபமாய்...
பரிகாசமாய்...
ஞாபக முடிச்சுக்களில்
அவிழ்க்க முடியாத பூக்களாய் இவைகள்.

வண்டுகள் கும்மி கொட்டிச் சுற்றிப் பாட
குண்டு குண்டாய்...
நீ அழகா நான் அழகா போட்டியோடு
காலைப் பனியில் பூக்கும் புன்னகைக் குழந்தை.
பொழுதின் நகர்வே பூக்களோடு.
பேசாமல் போனதில்லை.
தலை தடவி நலம் கேட்காமல்
நகராது நாட்கள்.
முற்றம் நிறைத்திருக்கும்
மல்லிகை,முல்லை,நந்தியாவட்டை
செவ்வந்தியின் நறுமணம்.
தேவதைகளின் சிரிப்புதான் பூக்களாய் பூக்குமோ!

அந்தி சாய மல்லிகை மொட்டு இடுங்கி
மாலையாய் என் தலையில்.
படுக்கையிலும் கசங்காமல்
நீர் தெளித்துப் பத்திரமாய்
அடுத்த நாளுக்காய்.
ஆசையில் பறித்த மொட்டுக்களின்
சாபமாய் இன்று நான்.

கொடியில் இருக்கும்
இன்றைய மொட்டுக்களின்
முணுமுணுப்பு...
குறு குறுப்பு...
அர்த்தம் புரிகிறது இப்போ.
பழி வாங்கிய
ஞாபக மொட்டுக்கள் அவைகள்.

"பூக்களைப் பறிக்காதீர்"
பறித்தேன் மொட்டுக்களை.
இலைகளின் நடுவில் இயற்கையாய் விடாமல்.
தன்வினை தன்னைச் சுடும்.
ஈர்பத்து வயதிலேயே பிடுங்கிவிட்டான்
இறைவனும்...
என்னிடமிருந்து மலர்களை.
மலர் சூடும் பெரும் பேற்றையே.
பூக்களைப் பறிக்காதீர்!!!

ஹேமா(சுவிஸ்)

7 comments:

Anonymous said...

ஒவ்வொரு பூக்களும் பூமியின் தேவதைகள்தான்...
தேவதைகள் வாழ்த்துமே அன்றி சபிக்காது...
அழகான கவிதை ஹேமா...
வாழ்த்துகள்.
முழு பதிவையும் வாசித்துவிட்டு மீண்டும் சந்திக்கிறேன்.

(Plz remove ur word verification)

Anonymous said...

I love all flowers.Whenever I opened your blog I hear the wonderful song. What is the name of it? Keep posting.

Ramya

ஹேமா said...

வணக்கம் புனிதா.வருகைக்கு நன்றி. பூக்களுக்கு வலித்திருக்குமே.
திட்டித்தானே இருக்கும்.

ஹேமா said...

வணக்கம் ரம்யா.நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது ஆஹா 91.9 சென்னை.பெண்களின் முதல் தோழியே பூக்கள்தானே!

Anonymous said...

3 Jun 08, 21:33
NALLA PALA PADIPUKULAI THRUKIREERGAN AANALUM"POOKALAI PARIKATHEER"KAVITHAIYIL EEREDU VAVAYTHIL ENRU EZHUTHI ULLEEERGAL VENDAME ATHU... SUTHAN

விச்சு said...

ஈர்பத்து வயதிலேயே பிடுங்கிவிட்டான்
இறைவனும்...
என்னிடமிருந்து மலர்களை.
மலர் சூடும் பெரும் பேற்றையே.
பூக்களைப் பறிக்காதீர்!!//
யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

rajagopalan said...

பூக்களைப் பறித்தால் கணவனை இழப்பீர் என்ற கவிதையின் சாரம் சரியா?

Post a Comment