*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, May 05, 2008

திசையறியாப் புதுவாழ்வு...!

எமது என்ற...
வாழ்வைத் தொலைத்துவிட்டு
வேற்று நாடுகளில்
தலை எது... வால் எது
புரியாத நம் வாழ்வு.
பேசவும் தவழவும்
கத்துக்குட்டிக் குழந்தைகளாய்.

இருந்தும் ...
இங்கோ நடக்கின்ற சங்கதிகள்.
அதில் ஒன்று...
"எங்களுக்குப் புத்தகம் தந்திட்டான்கள்"
இப்போ நாங்கள் சிட்டிசன்காரர்.
சிறீலங்கன் இல்லை.
கலர் மட்டும்தான் கொஞ்சம் கறுப்பு...
ம்ம்ம்...பரவாயில்லை.

அகதி வாழ்வு....அழிந்து போய்
அந்த நாட்டு அந்தஸ்த்து வாழ்வாம்.
தாய் நாட்டை
விட்டதற்காய்...விற்றதற்காய்
கை குலுக்கலும் வாழ்த்துக்களும்.

அடுத்த நாடு செல்வதற்காய்
விசா கேட்டு
தூதரகம் அலைந்து திரியத் தேவையில்லை.
எந்த நேரமும் எங்கும் போகலாமே...
அப்பப்பா...
என்ன குதூகலிப்பு.
முருகன் பாதம் வைத்து
மரியாதப் பூஜை வேறு கடவுச்சீட்டுக்கு.
சில தினங்கள் தூக்கம் கூட பக்கம் இல்லையாம்.

அதிசயமாய் இருக்கு.
அந்நிய மண்ணில்
எம் எதிர்காலச் சந்ததி
தாய் மண் மறந்து...
தாய் மொழி மறந்து...
இரண்டும் கெட்டான் நிலையில்
தம் வழி எதுவென்று தெரியாமல்.

பாரம்பரியமும்...கலாச்சாரமும்...பண்பாடும்
ஒருபக்கம் இருந்தாலும்
நல் ஒழுக்கமாவது????
தாய் மொழி தெரியாத்
தன் குழந்தை தலை தடவி
"என் பிள்ளைக்குத் தமிழ் தெரியாது"
தாயவளுக்கு அத்தனை பூரிப்பு முகத்தில்!

தாத்தாவும் பாட்டியும்
எட்டாத்தூரத்தில்
பேரன் குரல் கேட்க ஆவலாய்.
பேரனோ!!!!
தாய் மொழியற்று
வலதில்லாதவனாய்.

அது ஒரு பக்கமிருக்க
"சிட்டிசன் தந்திட்டான்கள் எங்களுக்கு"
அப்பாவும் அம்மாவும்
சுவிஸ் சிட்டிசன் மட்டும்தான்.
பெயரும் பிள்ளைகளுக்கு
சுவிஸா... சுவிஸன்
மிச்சமெல்லாம்.....?

அகதிப் பதிவுதான் இருபதுவருடம்.
அந்த நாட்டு மொழி அச்சு பிச்சுதான்.
வேலையோ
கழுவலும்.... துடையலும்தான்.
இயல்புக் குணங்களாய்...
கொடுத்த கடன்
கேட்டால்தான் கிடைக்கும்.
சிலசமயம்... இல்லாமலே போகும்.
10 நிமிடம் பிந்தித்தான்
வேலைக்கோ, வைத்தியசாலைக்கோ,
அன்றாட அலுவல்களுக்கு.

கைத்தொலைபேசியுடன்
தெருவிலும் பேரூந்திலும் கத்திப் பேசியபடி.
குழந்தை குட்டிகளுடன்
தெருவோ,கடையோ,புகையிரதமோ
குப்பையும் போட்டு
குய்யோ முறையோ சத்தமும் போட்டபடி.
உணவோ...
எம் பாரம்பரிய
தட்டு நிறையச் சோறும் கறியும்தான்.
அணிகின்ற ஆடைகளே அதற்குச் சாட்சி.

அயல் நாட்டான் நற்செயல் எதுவும்
அணுவளவு கூட இல்லை.
"தந்திட்டான்கள் சிட்டிசன் எங்களுக்கு"
தலை முட்டி அழுதாலும்
தீராத வேதனை.

நம் மொழியும்...நாமும்
அழிந்து கொண்டிருக்கிறோம்
என்று அறியாமல்
நம்மவர் காட்டும் கூத்து.
இலக்கணத்தின் அர்த்தமே தெரியவில்லை
இதில் இலக்கியம் எப்படி...?

என்னதான் உயர உயரப் பறந்து பார்த்தாலும்
எப்போதும்
நாம்... நாம்தான்.
எத்தனை தலைமுறை தாண்டினாலும்
அகதித் தமிழன்...
என்ற பதிவையும்
தமிழன்...
என்ற அடையாளத்தையும்
யாரால் அழிக்க முடியும்!!!!

29.09.2007
ஹேமா(சுவிஸ்)

7 comments:

தமிழன் said...

உண்மையில் அதிரடியாக உள்ளது உங்கள் கவிதை, உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் மகிழ்ச்சி கொள்ள விடியட்டும் ஈழம் விரைவில் மலரட்டும் நம் தமிழ் சமுதாயம்.

Anonymous said...

hema arumsiyana pathivu/kavithai

thodarungal .samookathil neengal oruvaraium vidu vaikavillai.elloraium oru pidi pidikireerkal.inthe kavithi superb,ena pullam peyarnthu vaazhum namavar sillaruku pidikathu. ean enral unmai soli pottengal
anpudan

thenavan

ஹேமா said...

நன்றி திலீபன்.
தென்னவன்.
இது என் வலி அல்ல.
தமிழ் தாயின் வலி.

Anonymous said...

Hi Hema,ippidi kalakkuringale!!!"yarukku thoppi alavo poddukkunga"nu solra mathiri.ethukkum kavanama irungka.thamizhalaleye adikiringa.thrunthuvankala?thrunthanum.illadi thamizhane illa.
santhodathoda Ram

Anonymous said...

6 May 08, 14:46
sampavi: hema"thisaimariya vaalvu" kavithai super... namathu makkalin vaalkaiya patti neenka eluthiya yavumae unmai ..excellent job hema
sampavi

Anonymous said...

6 May 08, 15:15
raji: hi hema nalama.unkal kavithaikal anaiththum en manathai ilakkavaiththullathu.sun tv um mekavum nanraka ullathu. unkal kavithaikalil mekavum nanraka ullathu.
raji

ஹேமா said...

வணக்கம் Raji,நான் நல்ல சுகம். நீங்கள்தான் அடிக்கடி காணாமல் போய்விடுகிறீர்கள்.நன்றி உங்கள் கருத்துக்களுக்கு.என் வலிகளோடு சமூகத்தின் வலிகளும் சில சமயங்களில் சேர்ந்து கொள்கின்றன. அதற்காக வாழ்த்துக்களும்...சொல் அடிகளும் சிலநேரங்களில் கிடைகின்றன.இருந்தும் என் கருத்தைச் சொல்ல நினைக்கிறேன். நன்றி Raji.

Sampavi உங்களுக்கும் என் நன்றி.தொடர்ந்தும் என்னோடு இணை ந்திருங்கள்.

Post a Comment