*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, May 19, 2013

பெருவிழாக் குறிப்பொன்று...


அன்பின் பற்றாக்குறையென
அதிர்ந்து அழுகிறது
வீணையொன்றின்
சிறுதுண்டொன்று
மீட்டிய விரல்களைத்
தேடியபடி.

பிரபஞ்சச் சுழியீர்ப்பின்
எல்லையில்
இருப்பற்ற ஒரு சாலையில்
ஆழப் புதைந்த நிகழ்வை
எவரும் சொல்ல
இல்லையில்லை....
எவருமே இல்லா நிலையில்
அந்தந்த இடங்களில்
மானிடம் வாழ்ந்து
வீழ்ந்ததை
சாட்சி சொல்ல வாழும்
கருக்குப்படலையின்
மூச்சிளைக்கும்
கூப்பிடு ஓசை.

என் பெயரை
அவர்கள் பெயரை
உச்சரிக்கும்
தெருப்படலை
பதறி
மௌனித்து
பின் அலறுகிறது
ஆழப்புதைந்த
அத்தனை பெயர்களையும்
அந்த
அன்பு வீணை மீட்டியின்
பெயரையும் கூட!!!

ஹேமா(சுவிஸ்)



 

நேற்றோடு
முடிந்துவிட்டதென்று
திரை மூடி
அணைத்திருக்கிறார்கள்
தொடரும்.....
போட்டதைக் கவனிக்காதவர்கள் !

7 comments:

பால கணேஷ் said...

தெருப்படலை பதறி மெளனித்து பின் அலறுகிறது! மனதில் தைத்த வரிகள்! வீணைமீட்டி என்ற சொற்றொடர் அழகு!

திண்டுக்கல் தனபாலன் said...

/// அன்பு வீணை மீட்டியின்
பெயரையும் கூட!!! ////

அருமை... தொடர வாழ்த்துக்கள்...

மகேந்திரன் said...

நேற்றிட்ட விதை..
இன்று தளிர்த்திருக்கிறது..
இதுவும் முடிவல்ல...
விருட்சமாகும் வரை..
==
உங்கள் தூரிகை சமைத்த சொற்கள்...
நெஞ்சில் புதையுண்டுகொண்டன...

கவியாழி said...

அன்பின் பற்றாக்குறையென
அதிர்ந்து அழுகிறது// உண்மைதான்

Unknown said...

தங்கள் கவிதையைப் படித்தபின், மனதில் ஏதோ இனம் தெரியாத சலனம் தோன்றுகிறது

அம்பாளடியாள் said...


இருவகைத் துன்பம் இழையோடியுள்ளது இக் கவிதையில் ஒன்று எமது தேசம் இன்னொன்று என் தோழியின் வலைத் தளமா !!புதைந்து கிடக்கும் அன்பும் புறப்பட்டு வரும் காலம் விரைந்து வரும்
எனக் காத்திருப்போம் கவலை வேண்டாம் தோழி :(

வெற்றிவேல் said...

படித்த பின் தோன்றும் சலனம்....

தொடருங்கள்...

Post a Comment