*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, May 17, 2013

முலையில்லா மனிதம்...


தொலைத்த ஒன்று
தொலையாமல்
யாருமற்ற
தெருவோரம்.

கொத்தும் காக்கைகள்
வண்டிச் சில்லுகள்
தப்பி
இரத்தம் உறைய
தூசுக்காற்றில்
துடிக்கும் குரல் கேட்டும்
துடிக்காத
இதயத்தோடு
பாதசாரிகளாய் பலர்.

அள்ளிச் செல்லும்
குப்பைகளோடு
கொட்டிச் சிதறிய
செல்வமொன்று
உடல் வெக்கை தணித்த
முகவரியில்லா
இருவர் சதை பொருத்திய
முகத்தோடு
பலமுறை சுழன்ற
பாதங்களுக்குள்
அகப்படாமல்
அழுதபடி.

கடி நாய்கள் கூடுமிடமிது
விநாடிக்குள் செத்துவிடும்
மனிதம்
யாராவது
அணைத்துக்கொளுங்களேன்.

இரங்காத முலை கொண்ட
காக்கை குருவிக்கும்
இரக்கமுண்டு
என் முலையிலும்
ஏதுமில்லை
ஆனாலும்...!!!

ஹேமா(சுவிஸ்)

3 comments:

”தளிர் சுரேஷ்” said...

அருமை! சிறப்பான படைப்பு! நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை....

வாழ்த்துக்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

கடி நாய்கள் கூடுமிடமிது
விநாடிக்குள் செத்துவிடும்
மனிதம்
யாராவது
அணைத்துக்கொளுங்களேன்.//

அனைத்து கொள்ள மிகுந்த ஆசைதான், இயலாமையை என்னவென்று சொல்வது, கண்ணீர் சிந்தியே பழகிவிட்டது...!

Post a Comment