*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, May 30, 2013

காதல் துளிகள் (7)


உன்
கூண்டுக்குள்
பிடிபட்ட
கிளிதான் நான்.
நீ.....
கிள்ளியெறியும்
நான்கு
நெல்மணிக்காகவா
சீட்டுக்களை
இழுத்துப்
போட்டுக்கொண்டிருக்கிறேன்
புரியாதவனே !


சபிக்கப்பட்ட
நாளொன்றில்
கெடு வைக்கிறான்
கொல்லவா இல்லை
கொள்ளவா
கொசுவை விட
மோசமானவன் !


பாடிக்கொண்டேயிருக்கிறேன்
யாரும்
கேட்கமாட்டார்களெனத்
தெரிந்தும்
அநாதரவற்ற
குளக்கரையோரத்தில்.....
குயிலெனச் சொன்னவன்
இப்போதெல்லாம்
கோட்டான்
என்கிறான் !


காப்பி குடிக்கிறாயா
என்று கேட்டால்
பார்சலில் அனுப்படி
என்கிறான்
நகைச்சுவைதான்
இருந்தும்
அவன் பாஷை
புரியவில்லை இன்னும் !


கனவுகள்
பலித்துக்கொண்டிருப்பதாய்
பறக்கிறான்
கனவுகளுக்கு
கால் முளைக்க
வைத்துக்கொண்டிருக்கிறேன்
நான் என்பதை அறியாதவன் !


பனிபூத்த நாளொன்றில்
நடந்த தடங்கள்
தெளிவாக
அள்ளியெடுக்க
கைச்சூடு தாங்காமல்
உருகி வழிகிறான்
திருடன்.....
இன்னும் ஊடலில்தானோ !


ஒற்றை விநாடிக்குள்
கொள்ளை போக
முடிகிறது
அன்பின்
முடிச்சுகளுக்குள்
மட்டுமே
இங்கே ஒருவன்
கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறான்
நான் பார்த்துக்கொண்டிருக்க
என்னையே !


கொஞ்சம் கோபமா
இல்லை நானயறியாத
ஊடலா
பேச வரமறுக்கும்
என்...
மௌனங்களை மொழிபெயர்த்து
தன்...
கவிதைகளாக்கியிருப்பான்
இந்நேரம்
நாளை பிரசுரமாகுமது !

ஹேமா(சுவிஸ்)

9 comments:

Yaathoramani.blogspot.com said...


இங்கே ஒருவன்
கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறான்
நான் பார்த்துக்கொண்டிருக்க
என்னையே !//

மனம் கவர்ந்த அருமையான வரிகள்
காதலில் மட்டும்தானே இது சாத்தியம்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 1

தீபிகா(Theepika) said...

//இங்கே ஒருவன்
கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறான்
நான் பார்த்துக்கொண்டிருக்க
என்னையே !//
காதல் கிளிகளின் துளிகள் அழகு.

ஆத்மா said...

காப்பி குடிக்கிறாயா
என்று கேட்டால்
பார்சலில் அனுப்படி
என்கிறான் /////

சின்ன சின்ன துளிகள் பேச்சு வழக்குச் சொற்களையும் சேர்த்து....
அழகு

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

காதல வித்தியாசமான பாணியில் சொல்வது உங்களுக்கு கைவைந்த கலை. அத்தனை வரிகளும் கவர்ந்தன

இராஜராஜேஸ்வரி said...

பாடிக்கொண்டேயிருக்கிறேன்
யாரும்
கேட்கமாட்டார்களெனத்
தெரிந்தும்

சோக கீதமோ ..!!

Unknown said...

துண்டு துண்டு கவிதைகள்-காதல்
தூண்டில் ஆன கவிதைகள்
கொண்டு வந்த பதிவிது- இன்பம்
கொண்டு தந்த மதுவிது
கண்டு மகிழும் உள்ளமே - உணர்வு
கரை கடந்த வெள்ளமே
உண்டு களிக்க பலருமே-வலையில்
உலவ பொழுதும் புலருமே!

வெற்றிவேல் said...

காப்பி குடிக்கிறாயா
என்று கேட்டால்
பார்சலில் அனுப்படி
என்கிறான்
நகைச்சுவைதான்
இருந்தும்
அவன் பாஷை
புரியவில்லை இன்னும் !

காதல் என்றாலே புரியாத பாஷை தானே!!!

அனைத்தும் அழகா சொல்லியிருக்கீங்க ஹேமா...

thavabalan thavakkumar said...

atputhamaana varikal super. Akka.

Post a Comment