*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, May 18, 2013

மே 18...


ஈச்சமுள்ளும்
ஈர அட்டைகளும்
கடித்தபோது இல்லாத வலி
மண்ணைவிட்டு
அகதியாய் அவதிப்படும்போது.

அடிபட்டுக் கோபித்து
பின் மெல்லமாய்
சிரித்துக் கைகோர்த்த
சந்தோஷங்களைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அவர்கள் புகைப்படங்களில்.

இன்னொருமுறை வாழ ஆசை......

இருக்கட்டும் இருக்கட்டும்
மூச்சோடு மட்டுமாவது.

அருவமாய்
முன்னால் நட தோழனே
உன் உருவோடு
பின் தொடர்ந்துகொண்டே
நாம்...!!!


எமக்காய் தம்முயிரைத் தியாகித்த அத்தனை உயிர்களுக்கும் என் வீர வணக்கம் !

ஹேமா(சுவிஸ்)

6 comments:

அப்பாதுரை said...

வருங்காலம் நனவுகளில் மலரட்டும்.

இராஜராஜேஸ்வரி said...

இன்னொருமுறை வாழ ஆசை......

இருக்கட்டும் இருக்கட்டும்
மூச்சோடு மட்டுமாவது.மலரட்டும்.

Unknown said...

``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

அம்பாளடியாள் said...

அருவமாய்
முன்னால் நட தோழனே
உன் உருவோடு
பின் தொடர்ந்துகொண்டே
நாம்...!!!

மிகவும் நன்று வாழ்த்துக்கள் தோழி !

நிலாமகள் said...

நடந்தேறிய அனைத்து துயரங்களும் மனசோரம் ஆறாமல் கிடக்க, தளரா நம்பிக்கையுடனான சில சொற்களேனும் கைவசம் ஊன்று கோலாக...

எத்தனை 'மே'க்கள் இருக்கிறதோ ரணம் தணிவிக்க...

மகேந்திரன் said...

ரணங்கள் ஆயிரம் கொண்ட
மனம் ஆறுதல் பெறட்டும்...
கணங்கள் அத்தனையும் கைகொண்டு
உறுதியுடன் நடைபோடுவோம்..

Post a Comment