*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, August 22, 2008

சந்தோஷம்...

நிறை நாட்களின் பின்
மனம் முழுதும்
வீட்டுக்குள்ளும் வெளியிலும்
பூக்களின் வாசனை
நிறைந்து வடிவதாய்...

முகப் புன்னகை இதழ்களில்
முட்கள் முறித்து
சிரிப்பின் பாதைகள்
செப்பனிடப்பட்டதாய்...

வார்த்தை வரம்புகளில்
களைகள் பிடுங்கப்பட்டு
போதுமான் நீர் பாய்ச்சி
வறண்ட சொற்களில்
குளிர்ச்சி நிரம்பியதாய்...

எண்ண வனாந்தரத்தில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
பசுமைப் புரட்சி செய்து
ஓரளவு இயல் வாழ்வில்
பச்சையம் காண்பதாய்...

இரத்தக் குழாயில்
கவலைப் புண்கள்
மெல்ல ஆறி
செயல்களின் சாமர்த்தியத்தில்
மனம் மருந்தோடு மயிலிறகாய்...

ஏமாற்றத் தீ
தெய்வம் புகுந்ததாலோ என்னவோ
தென்றலின் சோலைப்
பூக்களாய் மாறி
திகைக்க வைப்பதாய்...

காத்திருப்பின் கைகளில்
புன்னகைப் பூக்கள்
திணறத் திணறத்
திணிப்பதாய் இன்று!!!

ஹேமா(சுவிஸ்)

17 comments:

மே. இசக்கிமுத்து said...

//
வார்த்தை வரம்புகளில்
களைகள் பிடுங்கப்பட்டு
போதுமான் நீர் பாய்ச்சி
வறண்ட சொற்களில்
குளிர்ச்சி நிரம்பியதாய்...
//

கவித்துவம் கலந்த சொற்கள்.. கவிதை அருமை...

Unknown said...

அப்புறமென்ன
அகன்றதே
கவலைகள் !

அருமை அருமை.

NILAMUKILAN said...

தெள்ளு தமிழ் துள்ளி விளையாடுகிறது இக்கவிதையில். அருமையான சொல்லாடல். உங்கள் இணையத்தின் இணைப்பை எனது இணையத்தில் அளிதுத்ள்ளேன். உங்கள் கவிதைகள் பால் உள்ள ஈர்ப்பால்... நன்றி.

ஹேமா said...

என்ன விக்கி ஒண்ணுமே சொல்லாம போய்டீங்களே!மௌன விரதமோ!

ஹேமா said...

இசக்கிமுத்து,கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

ஹேமா said...

வாங்க களத்துமேடு.என்னவோ கன நாளைக்குப் பிறகு எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு சந்தோஷம்.அதான்..

ஹேமா said...

நிறையச் சந்தோஷமாயிருக்கு முகிலன்.நன்றி உங்கள் தளத்தோடு இணத்துகொண்டமைக்கு.மனசில ஒரு ஆர்வமும் பயமும்கூட...

Anonymous said...

கவிதை அருமை...

ஹேமா said...

நன்றி கடையம் ஆனந்த்.
வணக்கம்.முதன் முதலா வந்திருக்கிங்க.உங்கள் தளமும் உலா வந்தேன்.நிறைய சங்கதிகள் வச்சிருக்கிங்க.இன்னும் வருவேன்.
கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

23 Aug 08, 20:23
Hao Hema..nalama? Ungal kavidhaigalai vaasika iyalaamal varuthamaaga irunthathu..Ipo happy... Hema epdi ivlo azhaga kavidhai ezhuthareenga?? Neenga ninaipathu kooda Kavidhai
nadaiyil dhana! Madhu.

ஹேமா said...

மது சுகமா?நன்றியும் சந்தோஷமும்.
மனதின் வலிகளும் சந்தோஷமும் கலந்தே ஹேமா...நான்.

Anonymous said...

ரெம்ப அழகா வர்த்தைகளை உபயோகித்திருக்கின்றீர்கள்.
அழகான கவிதை.
ஆமா சந்தோஷத்திற்கான கரணத்தை சொல்லவேயில்ல.

Anonymous said...

வாவ்.... வரிகளில் வியந்து போனேன் சகோதரி... அசத்தல் கவிதை

ஹேமா said...

வாங்க குந்தவி.முதலில் உங்கள் பெயருக்கு ஒரு வணக்கம்.அழகான தமிழ்ப்பெயர்.அது...வெளியில் சொல்லக்கூடாத சந்தோஷம்.அதான் சொல்லல.நன்றி வந்து கருத்து சொன்னதுக்கு.

ஹேமா said...

வாங்க சேவியர் அண்ணா.நீங்க கவிதை பாத்து வியந்தீங்க.நான் உங்களைப் பாத்து வியந்தே...போனேனே.

நன்றி அண்ணா கருத்துக்கு.உங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகள் எப்போதும் எனக்குத் தேவை.

thamizhparavai said...

//
ஏமாற்றத் தீ
தெய்வம் புகுந்ததாலோ என்னவோ
தென்றலின் சோலைப்
பூக்களாய் மாறி
திகைக்க வைப்பதாய்...


காத்திருப்பின் கைகளில்
புன்னகைப் பூக்கள்
திணறத் திணறத்
திணிப்பதாய் இன்று!!!//

அழகிய கவிபொங்கும் வரிகள்...சொல்லிப்பார்த்துப் பார்த்து மகிழச்செய்தன...சந்தோஷம் நீடிக்க வாழ்த்துக்கள்...
இப்பொதான் சேவியர் அண்ணன் சொன்னதைப்பார்த்தேன்... அவரே அசத்தல்ன்னு சொனதுக்கப்புறம் நான் என்ன சொல்லணும்...

ஹேமா said...

வாங்க தமிழ்ப்பறவை அண்ணா,வந்தாச்சா...சுகம்தானே...ஊரும்... நாடும்...வீடும் எல்லோரும் சுகம்தானே?நன்றி பின்னூட்டத்திற்கு.இன்னும் நிறைய உங்கள் பின்னூட்டம் பாக்கி இருக்கு. பாத்திட்டு இருக்கேன்.

Post a Comment