*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, August 29, 2008

ஒரு முறை...ஒரே ஒரு முறை


நாட்கள் அலட்சியமாய்
அடுத்தவர்களைப் பற்றிச்
சிந்திக்காமலேயே நகர்ந்தபடி.
தவறவிட்ட
எத்தனையோ ஆசைகள்
தேவைகளைக் காவியபடி
கொஞ்சமாவது
மனச்சாட்சியே இல்லாததாய்.

மிகமிகத் தவறிய
உறவுகள் சொந்தங்கள்.
தவறினாலும்...
தேடிக்கொண்டேயிருக்கும்
உறவாய் பெற்றவர்கள்
அப்பா...அம்மா.

மாறாத ரணமாய்
புரையோடியபடி
அவர்களின் நினைவுகள்.
தேவையாயிருக்கிறது
அன்பும் ஆறுதலும் அரவணைப்பும்.

வானம் தாண்டிய அடுத்த எல்லையில்
நானும் நீங்களுமாய்.
நினைவு வரும்போதெல்லாம்
சுவரில் தொங்கும் நிழற்படத்தில்
கண் பதித்து நிலைகுத்தி
நிற்பது மாத்திரமே முடிகிறது.
வாழ்வின் அற்புதங்களாய்
மனதில் பரவிக் கிடக்கும்
வாடாத இரு மலர்களாய் நீங்கள்.

ஏங்கும் மனப்புகை கண்குழி பட்டு
ஆவியாகி கண்ணீராய்த் தெறிக்கும்.
கன்னம் நனைக்கும் கண்ணீர்
இரவை நனைக்கையில்
தலையணையையும் நனைத்தபடி.

சுற்றும் பூமியில் ஆயிரம் உறவுகள்.
இருந்தும்...
சுயநலமில்லா உறவு
உங்களுக்காய் காத்திருக்கிறேன்.
தளர்ந்துவிட்ட விரல்களின்
வருடலுக்காய்.
தலைகோதும் தழுவலுக்காய்.

அம்மா...அம்மா
ஆசையாய் இருக்கிறது
ஒரு முறை...
ஒரே ஒரு முறை
உருமாறிச் சிறிதாகும்
வரம் ஒன்று தா தாயே.
மீண்டும் கொஞ்சம் குடியிருக்க
உன் இருண்ட கருவறைக்குள்!!!

ஹேமா(சுவிஸ்)

14 comments:

Anonymous said...

/நினைவு வரும்போதெல்லாம்
சுவரில் தொங்கும் நிழற்படத்தில்
கண் பதித்து நிலைகுத்தி
நிற்பது மாத்திரமே முடிகிறது.
//

உணர்வுகளை அப்படியே வார்த்து எடுக்கிறீர்கள். அருமை.

மே. இசக்கிமுத்து said...

தாயின் கருவரையில் மீண்டும் குடியேற... உண்மையில் பெரிய ஆசை தான்!! கவலையின்றி தாயின் மடியில் படிக்கும் சுகம் இருக்கிறதே...அய்யோ சொல்ல முடியாதது..அம்மாவின் அன்பு ஆளமானது!!

ஹேமா said...

இந்த யார் தெரியுமா?எனக்கும் இவருக்கும் ஒரு பகையுமே இல்லை.http://kuranguu.blogspot.com/ "தமிழ்நாடு இந்தியாவுடன் இருக்கத்தான் வேண்டுமா?"பதிவில் சுரேஸ் ஜீவானந்தம் குறையாகச் சொல்லியிருந்தார்.நான் அதற்கு பின்னூட்டம் போட்டிருந்தேன்.

//குரங்கு அண்ணாச்சி,நீங்கள் நகைச்சுவையாக பதிவு போட்டீர்களோ என்னமோ.சுரேஷ் ஜீவானந்தம் அவர்களின் பதிவு வாசித்தேன்.மனம் வேதனையாய் இருக்கிறது.உங்களைப் போன்றவர்கள் நடுவில் இப்படியும் இருக்கிறார்கள் மனிதர்கள்.விளக்கம் வேண்டாம்.//

அதற்குத்தான் இப்படி!அந்தத் தளத்திலும் இதே போல பல பின்னூட்டங்கள் நிறையப் போட்டிருக்கிறார்.இவர் படித்த ஒரு நேர்மையான மனிதனாக இருந்தால் இப்படிச் செய்வாரா?இவரே ஒரு பெட்டை.ஒளிஞ்சிருந்து கல் எறிகிறார்.நாங்கள் அகதிகள்.கக்கூசு கழுவுகிறோம்.இவர் u.s க்கு ஏன் போயிருக்கிறார்.நாகரீகம் தெரியாதவர்களுக்கெல்லாம் வலைத்தளங்கள் வேறு.எத்தனையோ இந்திய நண்பர்களுக்கு நடுவில் இப்படியும் சிலர்!www.suresh--jeevanandam.blogspot.com/

ஹேமா said...

முடிந்தால் என் இந்தியத் தமிழ்நாட்டு நண்பர்கள் யாராவது இந்த ஒளிச்சிருந்து கல் எறியும் இந்த அசிங்கமான நண்பருக்கு பதில் சொல்லுங்கள் தயவு செய்து.

தமிழன் said...

மானம்கெட்ட நாயே எல்லோரும் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் அகதி தாண்ட கடைந்தெடுத்த பன்னாடையே.தப்பாக பிறந்தவனாக இருக்கவேண்டும் அதனால் தரம் தெரியாத வார்த்தைகளால் பின்னூட்டம் போட்டு இருக்கிறாய், பெண்ணிடம் பேச கூடாத வார்த்தைகளை பேசிய உன்னை பெற்றவள் உன்னத தாய் எங்கு இருந்தாலும் வாழ்த்துகள். ஹேமா கண்ட சொறி நாய்களின் இந்த தரம்கெட்ட வார்த்தைக்கு வருந்தாதீர். நீங்கள் சென்று உழைப்பது உயர்ந்த லட்சியத்துக்கு இந்த மாதிரி நாய்களுக்கு தெரியுமா லட்சியம் என்னவென்று?

தமிழன் said...

தோழி ஹேமா அவர்களுக்கு அந்த பின்னுடங்களை அழித்து விடுங்கள். மறப்போம் மன்னிப்போம் என்பது தமிழனின் உயர்ந்த பண்பாடு.

NILAMUKILAN said...

அம்மாவின் கருவறைக்குள் ஒரு இடம் வேண்டும். நல்ல யோசனை. இறந்து போன என் அம்மாவின் ஞாபகம் வந்துவிட்டது. அம்மாவின் மடி போல வேறு பாதுகாப்பான நிம்மதியான இடம் இவ்வுலகில் எங்குமே கிடையாது.

பெயரில்லாமல் தகாத வார்த்தையில் பின்னூட்டமிட்ட அந்த சகோதரர் மனம் திருந்தவேண்டும் மன்னிப்பு கேட்கவேண்டும். இது போன்றவர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் அதனை தங்கள் பதிவிலிருந்து அகற்றி விடுங்கள் ஹேமா.

ஹேமா said...

அப்பா அம்மாவைப் பிரிந்திக்கும் துன்பம் போல கொடுமை வேறு எதுவும் இல்லை.நன்றி அண்ணா.

ஹேமா said...

திரும்பவும் அம்மாவின் கருவறைக்குள் போவது என்பது பேராசைதான்.இசக்கி முத்து உங்களுக்குமா!நன்றி.

ஹேமா said...

மிக்க மிக்க நன்றி திலீபன்.
சீ...கேவலமான மனிதர்கள்.மறக்க முடியாமல் இருக்கிறது.தமிழன் எனபதை விட அவர் முதலில் நல்ல மனிதனாக இருக்கட்டும்.

ஹேமா said...

முகிலன் அம்மாவின் ஞாபகத்தைக் கொண்டு வந்து விட்டேனா!அதுவும் நல்லதுதானே.நன்றி முகிலன்.

என் வாழ்நாளிலேயே இனிமேல் இல்லை எனும் அளவிற்கு கேவலமான ஒரு மனிதனை இன்று நான் சந்தித்து இருக்கிறேன்.
என்றாவது உணர்ந்து கொள்வார்.

Anonymous said...

இந்த பின்னூட்டம் வாசிக்கும் சந்தர்ப்பம் மிகவும், தாமதமாகவே கிடைத்தது.ஒவ்வொரு மனிதனும் கருத்து சுதந்திரம் உடையவன்.ஆனால் கருத்தை எப்படி நாகரிகமாக முன் வைக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.கீழ்தரமாக எழுதிய நபரே முதலில் உமது நாட்டுக்கு என்ன செய்தீர்.அமெரிக்காவில் கக்கூஸ் கழுவும் ஒரு உழைப்பாளாரை விட குறைவாக நீர் சம்பளம் வாங்கினால் அதற்கு நாம் என்ன செய்ய.முதலில் நீர் ஒரு தமிழ் தாயின் வயிற்றில் பிறந்தீரா ?மனிதரை முதலில் மதிக்கப் பழகும்.எதற்கும் ஓர் எல்லை உண்டு.
வலைப்பூ வாசகர் வட்டம்.
ந்யூ ஜெர்சி.
அமெரிக்கா

thamizhparavai said...

//நினைவு வரும்போதெல்லாம்
சுவரில் தொங்கும் நிழற்படத்தில்
கண் பதித்து நிலைகுத்தி
நிற்பது மாத்திரமே முடிகிறது.
//
வரிகள் அருமை ஹேமா...ஏதோ பிரச்சினை நடந்துள்ளது போல் தெரிகிறது. பின்னூட்டங்கள் மூலம் அறிந்தேன்.
பின்னூட்டம் மட்டுறுத்தலைக் கைக்கொள்ளுங்கள்.

அம்பாளடியாள் said...

இந்த வரம் இன்னும் எத்தனை ஆயிரம் மக்கள்
நெஞ்சில் அலை கடல் என அலைகிறதோ என்
தோழி இன்றுவரை நானுமே கேட்டலையும்
வரமும் இதுவே :( மிக்க நன்றி பகிர்வுக்கு .

Post a Comment