*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, August 08, 2008

தோழிக்காக...

"கேளுங்கள் தரப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்"
தர்மத்தின் தாரக மந்திரமிது.
தோழியே...
அங்கத்தில்தான் பங்கம்
தங்கமடி உன் இதயம்.

மழைக்கு ஏங்கும் பூமியாய்
நிலவுக்கு ஏங்கும் அல்லியாய்
கதிரவனுக்கு ஏங்கும் பனித்துளியாய்
துவள்கிறாய் தோழியே ஏன்?
துயரத்தைக் கொஞ்சம்
பங்கிட்டுச் சிந்திவிடு.
இலேசாகும் உன் இதயம்.

சில சமயங்களில்
இறைவனிடம் கூட
எரிச்சலாய் வரும்
உன்னை நினைத்தால் எனக்கு.
உடம்பில் சிறு குறை என்றால்
அன்பும் அற்றுவிடுமா
ஆசையும் ஆகாதா.

தோழியே தளராதே
தளராத காரியம் சிதறாது.
நம்பிக்கையோடு நகர்ந்துகொள்.
மனதை ஒளிக்காதே.
அன்போடு அணுகிக்கொள்.

நண்பியே...
வாழ்வின் விளிம்பில் எதிபார்ப்பு.
முடியாமல் வெடிக்கின்ற
வேதனையே ஏமாற்றம்.
கோழையாகி விடாதே.
கருமுகில் விலகி ஓடும்.

ஆண்டவனை வேண்டிக்கொள்.
காத்திரு...
தனிமை விட்டகல
காலப்போக்கில் உன்னை...
உன் மனதை உணர்ந்திட்ட
வாழ்வொன்று
வசந்தமாய் வரவேற்கும்
காதலொடு!!!

ஹேமா(சுவிஸ்)

8 comments:

தமிழ் said...

/மழைக்கு ஏங்கும் பூமியாய்
நிலவுக்கு ஏங்கும் அல்லியாய்
கதிரவனுக்கு ஏங்கும் பனித்துளியாய்
துவள்கிறாய் தோழியே ஏன்?
துயரத்தைக் கொஞ்சம்
பங்கிட்டுச் சிந்திவிடு.
இலேசாகும் உன் இதயம்./

சரியாக சொன்னீர்கள்


இலேசாகுவது
இதயம் மட்டுமல்ல
இன்னல் கூட
இடம் தெரியாமல் சென்றுவிடும்


தாங்கள் நலம் தானே

வேலை நிமித்தம் காரணமாக
அடிக்கடி வர முடியவில்லை
வலைப்பக்கம்

NILAMUKILAN said...

உங்கள் தோழிக்கான கவிதையை நானும் படித்து ரசித்தேன்.. வலியுடன் இருக்கும் அவருக்கு மயில் சிறகு வருடல் இந்த கவிதை.. வாழ்த்துக்கள்..

கோவை விஜய் said...

ஹேமா said...
வணக்கம் கோவை வியஜ்.
நிச்சயம் உலகத்திற்கு
சமூகத்திற்குத் தேவையான அவசியமான ஒரு பதிவும் கூட.உலகம் போய்க்கொண்டிருக்கும் வேகத்தில் இவற்றை யோசிப்பார் யாருமேயில்லை.உங்கள் விழிப்புணர்வுக்கு நன்றி.அருமையான பதிவு.படிக்கின்ற சிலபேராவது அடுத்தவர்க்கும் சொல்லி அதன்வழியைக் கொஞ்சம் கடைப்பிடித்தாலே நல்லது நடக்கும்.
புகைப்படங்கள் அருமை.

நிச்சயம் கடைப்பிடிப்பார்கள்...
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

ஹேமா said...

வணக்கம் வாங்க திகழ்.

வாங்க வணக்கம் முகிலன்.
என் தோழியின் வேதனையில் எழுந்த வரிகள் மந்தின் வலியாக.நன்றி.

ஹேமா said...

வணக்கம் வாங்க கோவை விஜய்.உங்கள் சமூகத்தின் நலன் கொண்ட மனதிற்கு வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
நன்றியும் கூட.

Anonymous said...

10 Aug 08, 19:13
Hema..nalama? Ungal "Thozhikaga " miga arumai... Ungal kavidhaigalai vaasikum podhu ungalin menmaiyana manadhai unaruhiren..U r really superb... Madhu

ஹேமா said...

வாங்க மது.நான் நல்ல சுகமே.நீங்களும்தானே.நன்றி மது.நீங்க சொன்ன மென்மையான மனநிலை நன்மையாக இருந்தாலும் சில சமயங்களில் பாதிப்பையும் தருகிறது.அதுதான் கவலை.
என்னதான் செய்யலாம்!!!

இறக்குவானை நிர்ஷன் said...

//துயரத்தைக் கொஞ்சம்
பங்கிட்டுச் சிந்திவிடு.
இலேசாகும் உன் இதயம்//

ஆழமானதை அர்த்தவரிகளில் சொல்லியிருக்கிறீர்கள் ஹேமா.

இயலாமையை அகற்றும் நல்லதொரு கவிதை.

Post a Comment