*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, October 15, 2013

லவண்டர் முத்து...


நீ...
உறிஞ்சியதுபோக
மீந்து சிதறிக்கிடக்கிறது
இரவுப்படுக்கையில்
சில மின்மினி முத்தங்கள்.

தலையணையில்
ஒட்டிய முத்தம்
வெட்கிச் சிரிக்க...

மொக்குடைக்கும்
லவண்டர் பூவொன்று
செடியிலும்
உன் மடியிலுமென
கண்ணடித்து
தொட்டு தடவ
அடிவயிற்றில்
அதீத அலையொன்று
சேமிக்கிறது
சிறு முத்தொன்றை!!!

ஹேமா(சுவிஸ்)

7 comments:

Seeni said...

லயித்தேன்....!!

நன்றி சகோ..!

Anonymous said...

வணக்கம்

தலையணையில்
ஒட்டிய முத்தம்
வெட்கிச் சிரிக்க...

கவியை ரசித்தேன் வரிகள் நன்று வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! ரசித்தேன்...

வாழ்த்துக்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அருமை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

லவண்டர் பூ....

இந்தப் பெயரை தற்போதுதான் கேள்விப்படுகிறேன்...

'பரிவை' சே.குமார் said...

ரசித்தேன்... அருமை.

அப்பாதுரை said...

சொக்கிப் போனேன்.

Post a Comment