*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, September 20, 2013

பச்சோந்தியானவன்...


வார்த்தைகளில்...
மஞ்சள் பொடி தடவியிருந்தான்
அவன் செல்லம் கொஞ்சி
எச்சில் பறக்கையில்
கண்களில் பட்டுத் தெறிக்க
மஞ்சளானேன் நானும்.

இடையில்...
எங்கோ சிவப்பு வார்த்தைகள்
அவனோடு ஒட்டிக்கொள்ள
பிடித்துப்போனது பச்சை.

மஞ்சள்நோய் பிடித்தவளாய்
நான் இப்போ!!!

ஹேமா(சுவிஸ்)

11 comments:

இராஜராஜேஸ்வரி said...

நிறம் மாறும் பச்சோந்தியானவன்..!

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்...!

Yaathoramani.blogspot.com said...

நிறம் மாறும் பூக்கள்
மாற்றிச் செல்லும் சூழல்
சொல்லிச் சென்றவிதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

Unknown said...

இன்றைய உலகில் பச்சோந்தியானவன்தான் வாழத் தக்கவனாகி விட்டானே! நலமா மகளே!

logu.. said...

ம்ம்..

”தளிர் சுரேஷ்” said...

நிறம் மாறி நிறம் மாற வைத்துவிட்டான் போல! அருமையான கவிதை! நன்றி!

தனிமரம் said...

நிறம் மாறத்தெரிந்தவன் புத்திசாலி நிகழ்கால வாழ்வில்! நல்ல கவிதை!

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...

விச்சு said...

ஒருநிலையில் இருக்கமாட்டானோ..!

manichudar blogspot.com said...

வர்ணங்களின் தெறிப்பு கவிதையின் ஜொலிப்பாய் .....

Post a Comment