*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, September 30, 2013

கழிவறைச் சாட்சி...


மருந்துகள் பலனளிக்காது
அறிந்தபடியேதான்
தற்கொலைக்கு முயற்சித்தேன்.

அவசர அழைப்பில்
வைத்தியரும்
சம்பிரதாயம் சொல்கிறார்.

அப்போதும்
உதடுகள் குவிந்து
விரிகிறது சொல்ல.

விடிந்த பொழுதில்
வைத்தியருக்காகக்
காத்திருக்கமுடியவில்லை
காப்பாற்ற
வரவில்லை அவரும்.

கழிவறை மூலையில் சேமித்த
உண்மைகள்
வறண்டு ஆவியாகின்றன!!!

ஹேமா(சுவிஸ்)

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஐயோ... சாமீ...!!!

'பரிவை' சே.குமார் said...

கலக்கல்....

விச்சு said...

சமூகம் அப்படித்தானோ..!

வெற்றிவேல் said...

சமூகம் அப்படித்தான். வேண்டும் என்கிற போது வராது...
உங்கள் ப்ளாக் mobile viewஐ சரி செய்யவும்... வாசிக்க இயலவில்லை. மிகுந்த சிரமமாக உள்ளது..

Post a Comment