*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, January 11, 2010

நான் சுகம் நீயும்...

இறந்த உடலைக்கூட
புணர நினைக்கும் உலகில்
என் இருப்பை
என் நலத்தை
எப்படித் தீர்மானிக்க முடிகிறது
உன்னால்.

கை கோர்க்க நீயானானாலும்
பறித்திழுக்கும் சமூகத்தில்
எப்படி....
என் வாழ்வின் இருப்பை
நுகர்வாய் நீ.

வௌவாலாய் தொங்கும் உலகில்
எனக்கு உலகமும்
உலகத்துக்கு நானும்
தலைகீழாய்த்தான்.

உள்ளதை உள்ளபடி
ஏதாவது எழுதலாம் என்றால்
இருளுக்குள் கௌவும்
எத்தனை எத்தனை
அசிங்க உணர்வுகள்
ஆபாசமாய்.

பாம்புச் செட்டையாய்
பிறந்த இனம் குணம்
ஏன் மதத்தைக்கூட மாற்றும்
பச்சோந்திக் கூட்டத்துள்
சிதறிய பரவசங்களோடு.

என்னைப் புரியாத உறவு
மனதைப் புரியாத நட்பு
விலக நினைக்கும் ஆனந்தம்
தூரமாய் நிற்கும் காதல்.

எனக்கான
அழகான ஓர் உலகத்துள்
நான் மட்டுமே.

தவம் செய்கிறேன்
கண்களைக் கழற்றி
காற்றில் கொழுவி
பொய்யாய்த் தொங்காத
ஒரு மனிதனுக்காக.

அன்று விசாரித்துப் பார்
நலமாய் இருப்பேன்
நான் !!!

[உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை]

ஹேமா(சுவிஸ்)

77 comments:

ஈரோடு கதிர் said...

//தவம் செய்கிறேன்
கண்களைக் கழற்றி
காற்றில் கொழுவி
பொய்யாய்த் தொங்காத
ஒரு மனிதனுக்காக.//

ஆஹா...

sathishsangkavi.blogspot.com said...

//என்னைப் புரியாத உறவு
மனதைப் புரியாத நட்பு
விலக நினைக்கும் ஆனந்தம்
தூரமாய் நிற்கும் காதல்.//

அழகான வரிகள்....

S.A. நவாஸுதீன் said...

உஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்

படம் எங்கே எடுத்தீங்க ஹேமா. அதை மட்டும் பார்த்துகிட்டே இருக்கேன். இருங்க கவிதையையும் படிச்சிட்டு வரேன்.

பிரியமுடன்...வசந்த் said...

ஹேம்ஸ் உங்களுக்கு பின்னூட்டம் போடுறதுக்கே பயமா கெடக்கு...

பிரியமுடன்...வசந்த் said...

அந்த படம் செம்ம செலக்சன்...

rvelkannan said...

//தவம் செய்கிறேன்
கண்களைக் கழற்றி
காற்றில் கொழுவி
பொய்யாய்த் தொங்காத
ஒரு மனிதனுக்காக.
// தேடிக்கிட்டே இருக்க போறீங்க ஹேமா

என்னது உரையாடல் கவிதை போட்டிக்கா கண்டிப்பாக இருபதில் ஒன்று இந்த கவிதை

சத்ரியன் said...

//வௌவாலாய் தொங்கும் உலகில்
எனக்கு உலகமும்
உலகத்துக்கு நானும்
தலைகீழாய்த்தான்....//

ஹேமா,

புது மாதிரி.... நல்லாயிருக்கு.

போட்டியில் வெல்ல இந்த ’பச்சப்புள்ளையின்’ வாழ்த்துகள்.

S.A. நவாஸுதீன் said...

////என்னைப் புரியாத உறவு
மனதைப் புரியாத நட்பு
விலக நினைக்கும் ஆனந்தம்
தூரமாய் நிற்கும் காதல்.

எனக்கான
அழகான ஓர் உலகத்துள்
நான் மட்டுமே.////

நல்லா இருக்கு ஹேமா. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

S.A. நவாஸுதீன் said...

////வௌவாலாய் தொங்கும் உலகில்
எனக்கு உலகமும்
உலகத்துக்கு நானும்
தலைகீழாய்த்தான்.///

அருமை அருமை

ஆரூரன் விசுவநாதன் said...

//ஏன் மதத்தைக்கூட மாற்றும்
பச்சோந்திக் கூட்டத்துள்
சிதறிய பரவசங்களோடு.///

//அன்று விசாரித்துப் பார்
நலமாய் இருப்பேன்
நான் !!!//

மறக்கமுடியாத வரிகள்

Rajan said...

//கண்களைக் கழற்றி
காற்றில் கொழுவி
பொய்யாய்த் தொங்காத
ஒரு மனிதனுக்காக.//

கிரேட் !

பிரியமுடன்...வசந்த் said...

//இறந்த உடலைக்கூட
புணர நினைக்கும் உலகில்//

த்தூ......

படிக்கும்போதே குடலை புரட்டுது...

சே...என்ன உலகம்டா சாமீய்..

பிரியமுடன்...வசந்த் said...

கை கோர்க்க நீயானானாலும்
பறித்திழுக்கும் சமூகத்தில்
எப்படி....
என் வாழ்வின் இருப்பை
நுகர்வாய் நீ.
//

இந்த சமுதாயமிருக்கே அப்டித்தாங்க ஒருத்தன் அடுத்த சாதிக்கார புள்ளைய சைட்டடிக்கலாம் அதே அவன் சாதிக்கார புள்ளைய நாம சைட்டடிக்கணும்போது அருவாள தூக்கிட்டு வருவானுங்க..

எல்லா விஷயத்துக்கும் இந்த வரி பொருந்தும் அறிவுரையோ, இல்ல கேடுகெட்ட சமுதாய ரூல்ஸோ எதுவா இருந்தாலும் அது அடுத்தவங்களுக்கு மட்டும்தான் தனக்குன்னா அது தேவையில்லைன்னு நினைக்கிறவங்க...

உதாரணம் சொன்னா கல்லெடுத்து அடிப்பாங்க வேணாம்...

அண்ணாமலையான் said...

வெற்றிக்கு வாழ்த்துக்கள்...

பிரியமுடன்...வசந்த் said...

வௌவாலாய் தொங்கும் உலகில்
எனக்கு உலகமும்
உலகத்துக்கு நானும்
தலைகீழாய்த்தான்.//

இது சூப்பரு....

பிரியமுடன்...வசந்த் said...

உள்ளதை உள்ளபடி
ஏதாவது எழுதலாம் என்றால்
இருளுக்குள் கௌவும்
எத்தனை எத்தனை
அசிங்க உணர்வுகள்
ஆபாசமாய்.
//

அனானி ராஜ்யம்தானே இப்போ கொடிகட்டிப்பறக்குது கேக்க நாதியில்ல என்ன செய்ய அசிங்கமா பொறந்தவய்ங்க அப்பிடித்தான் அசிங்கமா பேசுவாய்ங்க.....

பிரியமுடன்...வசந்த் said...

பாம்புச் செட்டையாய்
பிறந்த இனம் குணம்
ஏன் மதத்தைக்கூட மாற்றும்
பச்சோந்திக் கூட்டத்துள்
சிதறிய பரவசங்களோடு.//

இப்பிடி நிறைய எழுதுங்க...

பிரியமுடன்...வசந்த் said...

தவம் செய்கிறேன்
கண்களைக் கழற்றி
காற்றில் கொழுவி
பொய்யாய்த் தொங்காத
ஒரு மனிதனுக்காக.//

கடைசி பால்ல சிக்சர் அடிச்சுட்டீங்க வாழ்த்துக்கள் ஹேமா....

க.பாலாசி said...

//பாம்புச் செட்டையாய்
பிறந்த இனம் குணம்
ஏன் மதத்தைக்கூட மாற்றும்
பச்சோந்திக் கூட்டத்துள்
சிதறிய பரவசங்களோடு.//

உண்மைதானுங்க... என்ன பண்றது...பழகிடுச்சு...

நல்ல கவிதை... எனது வாழ்த்துக்களும்.... (நான் போட்டிக்கு வரலைங்க...)

Ashok D said...

ஃப்ஸ்ட பேராவே சும்மா அதிருது.. ரொம்ப நல்லாயிருக்கு... மனம் நிறைந்த வாழ்த்துகள் ஹேமாஜி ;)

Anonymous said...

ஆழமான கவிதை சகோதிரி. உண்மையான மனிதர்களை தேட தான் வேண்டியிருக்கிறது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

ஸ்ரீராம். said...

வசந்த் நுணுக்கி நுணுக்கி ரசித்த பின் நான் வேற மறுபடி அத்தனை வரிகளையும் எடுத்துப் போட்டுப் பாராட்ட முடியுமா?

வௌவ்வால் உலகும்,பச்சோந்திக் கூட்ட உவமையும், விலக நினைக்கும் ஆனந்தம், தூரமாய் நிற்கும் காதல்...அருமை ஹேமா அருமை.

படம் பயமுறுத்துகிறது!

நிலாமதி said...

என்னைப் புரியாத உறவு
மனதைப் புரியாத நட்பு
விலக நினைக்கும் ஆனந்தம்
தூரமாய் நிற்கும் காதல்.....

..அழகான வரிகள்....

Thenammai Lakshmanan said...

//வௌவாலாய் தொங்கும் உலகில்
எனக்கு உலகமும்
உலகத்துக்கு நானும்
தலைகீழாய்த்தான்//


மிக அருமை ஹேமா நல்ல வித்யாசமா இருக்கு ஹேமா

ரொம்ப புதுமையா இருக்கு

வெற்றிபெற வாழ்த்துகிறேன்

க.பாலாசி said...

கவிதைக்கான படமும் அருமைங்க... (சொல்ல மறந்திட்டேன்)

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லாருக்கேன் ; நலம் நலமறிய ஆவல்

Starjan (ஸ்டார்ஜன்) said...

படம் சூப்பர்

M.S.R. கோபிநாத் said...

கவிதையும், படமும் அருமை ஹேமா. கவிதை எழுத வரல ஹேமா. அந்த என்னத்தை குழிதோண்டி புதைச்சுட்டேன். எனக்கு எது வருதோ அதை நன்றாக செய்யப் போகிறேன். உங்களைப் போல் கவிதை எழுதுபவர்களை மேலும் ஊக்கபடுத்தப் போகிறேன். நன்றி ஹேமா.

ஜெயா said...

வௌவாலாய்த் தொங்கும் உலகில் எனக்கு உலகமும் உலகத்துக்கு நானும் தலைகீழாய்த் தான்...எனக்கான உலகத்துள் நான் மட்டுமே தவம் செய்கிறேன்,,,அற்புதமான வரிகள் ஹேமா.சுகமே இருக்க வாழ்த்துக்கள்***

ராஜவம்சம் said...

அன்று விசாரித்துப் பார்
நலமாய் இருப்பேன்
நான் !!!

அந்த நாளை ஆவளுடன் எதிர்பார்க்கும் உங்கள் நண்பன்

Jerry Eshananda said...

ஹேமா உங்கள் கவிதை உன்னதமாய் இருக்கிறது,வாழ்த்துகிறேன், [பரிசுக்கு தேந்தேடுக்களைன்னா சும்மா சொல்லுங்க,மதுரையிலிருந்து ஆட்டோ அனுப்புறேன்.]

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அருமை! அருமை!! வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!!!!!

கவி அழகன் said...

சிறப்பாக அமையட்டும் தமிழ் தை பொங்கல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

அழகான வரிகள்,..

வேற ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை

ஜோதிஜி said...

படம் வெகுவாக ரசித்தேன். ஆனால் மொழி எளிமை இன்னும் வேண்டும். காரணம் அத்தனை பேர்களுக்கும் புரிய வேண்டும் என்பதால்.

என்னைக் கவர்ந்தது.

பிரபாகர் said...

சாட்டையடியாய் இருக்கிறது.

வெற்றிபெற வாழ்த்துக்கள் சகோதரி!

பிரபாகர்.

சந்தான சங்கர் said...

வௌவாலாய் தொங்கும் உலகில்
எனக்கு உலகமும்
உலகத்துக்கு நானும்
தலைகீழாய்த்தான்.//

மனிதன் தின்னும்
மனிதர்கள் இருக்க..
மனிதம் வளர்க்க
புனித பூமியெல்லாம்
புரையோடி உறையும்
குருதியும் அருதியிற்று
கூறிடுமோ!!?
அந்தி சாய்ந்தபின்
அன்பு விடியுமென்று...!!


உங்களில் கவிதை கண்டு
சிந்திய துளிகள் தோழி..

வெற்றி பெரும்...

ரிஷபன் said...

உண்மையான மனிதர்கள் இருக்கிறார்கள்..
நம் கண்ணிலும் தென்படுவார்கள்..படுகிறார்கள்.. அவர்களைக் கொண்டாடுவோம்..

விஜய் said...

போட்டிக்கு அனுப்பி எங்க பரிச காலி பண்ணிடீங்க

சந்தோஷமா

யதார்த்தமும் வலியும் கலந்து கொடுத்துள்ள அற்புத வரிகள்

எப்படி வாழ்த்துவது என்றே தெரியவில்லை சகோதரி

வெற்றிபெறும் கவிதையை தந்ததற்கு வாழ்த்துகிறேன்

விஜய்

தமிழ் உதயம் said...

ஒரு உண்மையான தோழமைக்கு எல்லோருமே ஏங்குகிறோம். நீங்கள் மட்டும் விதிவிலக்காகி விட முடியுமா

ஹேமா said...

நன்றி கதிர்.நிறைய நாளுக்குப் பிறகு வந்திருக்கீங்க.நீங்களெல்லாம் வாறதில்லன்னு எனக்கு மனசில ஒரு குறையிருக்கு.ஏன்னு தெரில.சிலபேர் என் பக்கம் வாறதில்ல.உங்கள் உற்சாகம் தரும் முதல் வாழ்த்துக்கும் நன்றி கதிர்.

::::::::::::::::::::::::

நன்றி சங்கவி கருத்துக்கு.
அடிக்கடி வாங்க.

:::::::::::::::::::::::::::::::

நன்றி நவாஸ்.படம் இணையம்தான் உதவி.

நவாஸ் உங்கள் ஆழ்ந்த அன்புக்கும் ஊக்கம் தரும் ஆழமான வார்த்தைகளுக்கும் எப்போதும் என் நன்றி.

எங்கே ஜமால்,துபாய் ராஜா,
செய்யது,அபு.ரொம்ப நாளாக் காணோம் இவங்களையெல்லாம்.

::::::::::::::::::::::::::::::::::

வசந்து.....இண்ணைக்கு வேலைக்கு லீவு குடுத்திட்டு என் கவிதை அலசல் நடக்குதா ?சரி சரி ஸ்ரீராம் பாவம்.போன கவிதைலயே உங்க அலசலைக் காணோம்ன்னு தேடிட்டு இருந்தார்.அவருக்கு உதவியா இருந்திருக்கும்.என் கவிதையை வச்சு யார் யாருக்கு என்னென்ன சொல்லணுமோ எல்லாம் சொல்லியாச்சாகும்....ம்க்கும்.

::::::::::::::::::::::::::::::::::

கண்ணன் தேடித் தேடிக் கிடைக்கிறதுதான் சந்தோஷமானதா இருக்கும்.உங்கள் வாழ்த்து எனக்கு இன்னும் சந்தோஷம்.நன்றி கண்ணன்.

விதி வலியது said...

கண்ணின் நினைவுக்குள் கைவிட்டு குதறிய வலி.

//என் நலத்தை
எப்படித் தீர்மானிக்க முடிகிறது
உன்னால்? = என் வாழ்வின் இருப்பை
நுகர்வாய் நீ.//

//விலக நினைக்கும் ஆனந்தம்//
கெஞ்சும் ஆனந்தம்.

போட்டியில் வெல்ல வாழ்த்துகள்.

ஹேமா said...

சத்ரியா...நினைப்புத்தான்.பச்சப்புள்ள ரொம்ப பாவம்....!வௌவால் மனுசரையெல்லாம் சந்திக்கிறோம்ல.அதான் கவிதைல சேர்த்துகிட்டேன்.
வாழ்த்துக்கு நன்றி தோழா.

:::::::::::::::::::::::::::::::::

ஆரூரன் ரொம்ப நன்றி.உங்க வருகைக்கும் வார்த்தை உற்சாகத்துக்கும்.

::::::::::::::::::::::::::::::::::

ராதா வாங்கோ வாங்கோ.புதுசா ஏதாச்சும் பதிவு போட்டீங்களா? சந்தோஷம்.வந்ததுக்கு.

::::::::::::::::::::::::::::::::::

நன்றி அண்ணாமலையாரே.உங்க வாழ்த்தும் சேர்ந்திருக்கு.ரொம்ப நன்றி.

::::::::::::::::::::::::::::::::

பாலாஜி,பாருங்க.நானும் இத்தனை நாள் யோசிச்சு யோசிச்சு ஒரு கவிதை எழுதலயா!அது மாதிரி எழுதிடுங்க.விளையாட்டில கலந்துக்கணும் தைரியமா.

:::::::::::::::::::::::::::::::::

அஷோக் கிண்டல் பண்றீங்களா இல்ல உண்மையவே வாழ்த்துறீங்களா !இப்பல்லாம் என்ன சொல்றீங்கன்னே புரில.சித்தப்ஸ்க் கிட்ட சொல்லி உங்களைக் கவனிக்கச் சொல்லணும்.

::::::::::::::::::::::::::::::::::

ஆனந்துக்கும் இந்தக் கவிதை ரொம்பப் பிடிச்சுப்போச்சு.அதுதான் நாலு வரி தாராளமா எழுதியிருக்கீங்க.
சந்தோஷம் ஆனந்த்.

ஹேமா said...

இருள்.விதி வலியது என்கிற பேர்ல கருத்துச் சொல்லும் தோழருக்கு நன்றி.ஆனால் உங்க பின்னூட்ட வரிகளும் வாழ்த்தும் நிறைவாய் இருந்தாலும் ஏதோ உங்கள் வருகையில் ஒரு சிக்கல்.உங்கள் பின்னூட்டத்தைக் கிளிக் செய்தால் என் பக்கதின் முகப்பில் போய் நிற்கிறது.இது என்ன விளையாட்டு.
நேற்றும் சண்டைக்காரி என்கிற பெயரில் இதே விளையாட்டு.சரியான பக்கதிலிலிருந்து பின்னூட்டம் பதிவிடுங்கள் அப்படியே கொடுக்கிறேன்.எனக்கும் உங்கள் வாழ்த்தும் ஊக்கம் தரும் வார்த்தையும் தேவைதானே !

(விதி வலியது)
கண்ணின் நினைவுக்குள் கைவிட்டு குதறிய வலி.

//என் நலத்தை
எப்படித் தீர்மானிக்க முடிகிறது
உன்னால்? = என் வாழ்வின் இருப்பை
நுகர்வாய் நீ.//

//விலக நினைக்கும் ஆனந்தம்//

கெஞ்சும் ஆனந்தம்.

போட்டியில் வெல்ல வாழ்த்துகள்.


(இருள்)
"நான் சுகம் நீயும்..." ஆனா கவிதை எல்லாத்தையும் விட நலம்.
மிக அருமயா இருக்கு.வலிகலும் வலுவிழக்கும் உமது கவிதையில்.

நசரேயன் said...

//கை கோர்க்க நீயானானாலும்
பறித்திழுக்கும் சமூகத்தில்
எப்படி....
என் வாழ்வின் இருப்பை
நுகர்வாய் நீ.//

மோப்ப சக்தி ரெம்ப அதிகம் போல

//
வௌவாலாய் தொங்கும் உலகில்
எனக்கு உலகமும்
உலகத்துக்கு நானும்
தலைகீழாய்த்தான்.
//
அப்ப கண்ணாடி பாருங்க

//
என்னைப் புரியாத உறவு
மனதைப் புரியாத நட்பு
விலக நினைக்கும் ஆனந்தம்
தூரமாய் நிற்கும் காதல்.
//
எம்புட்டு தூரமா?


//எனக்கான
அழகான ஓர் உலகத்துள்
நான் மட்டுமே.
//
சுவிஸ்ல யாருமே இல்லையா

//
தவம் செய்கிறேன்
கண்களைக் கழற்றி
காற்றில் கொழுவி
பொய்யாய்த் தொங்காத
ஒரு மனிதனுக்காக.
//
எப்படி அடுத்த கவிதை எழுதுவீங்க?

//அன்று விசாரித்துப் பார்
நலமாய் இருப்பேன்
நான் !!!//

நசரேயன் said...

போட்டியிலே வெற்றி பெற வாழ்த்துக்கள்

அரங்கப்பெருமாள் said...

//தவம் செய்கிறேன்/

கண்டிப்பா கிடைக்கும்.

போட்டியில் வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.

- இரவீ - said...

நல்லா இருக்கு ஹேமா,
இயல்பா வந்திருக்கு - வலி கொஞ்சும் கவிதை.

வெற்றி அடைந்தமைக்கு வாழ்த்துக்கள்.

ஹேமா said...

ஸ்ரீராம் என்ன பயம் ?கவிதைக்குப் படம் பொருத்தமா இருக்குத்தானே.
பாருங்க கலா வந்து என்ன சொல்லுவான்னு.வௌவால் உலகு ...நான் சொன்னது சரிதானே !

:::::::::::::::::::::::::::::::::

நிலா....வாங்கோ வாங்கோ சகோதரி.உங்களை அடிக்கடி பாக்கிறேன்.சந்தோஷம்.உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

::::::::::::::::::::::::::::::::::

தேனு...நன்றி தோழி உங்க வாழ்த்துக்கு.சரியான சந்தோஷமாயிருக்கு.

::::::::::::::::::::::::::::::::::

பாலாஜி படமும் கவிதையோடு ரசிக்கும்போது சந்தோஷம் இன்னும் கூட.நன்றி.ஏன்னா அவ்ளோ கஸ்டப்பட்டுத் தேடி எடுப்பேன் படங்கள்.

:::::::::::::::::::::::::::::::::::

ஸ்டார்ஜன் நன்றி உங்களுக்கும்.
நீங்களும் படம் நல்லாருக்கு சொல்லியிருக்கீங்க.

::::::::::::::::::::::::::::::::::

கோபி....என்ன பாத்தீங்களா என்னை ஏமாத்திட்டீங்க.நானும் பாத்திட்டு
இருக்கேன் கவிதை வரும்ன்னு !

:::::::::::::::::::::::::::::::::

ஜெயா கலக்கிட்டீங்க.சின்னதா தவம்ன்னு சேர்த்து இன்னும் அழகாக்கிட்டீங்கப்பா.

நான் சுகம்தான் ஜெயா நீங்களும்தானே !வாழ்த்துக்கு நன்றி.

ஹேமா said...

நன்றி ராஜவம்சம்.நான் எப்பவுமே நலமாயிருகணும்ன்னு நினைக்கிற உங்க மனசும் நீங்களும் சுகமா இருக்கணும்.

:::::::::::::::::::::::::::::::::

ஜெரி,என் சாட்டுல அவங்களை வெருட்டுறீங்களாக்கும்.ஆட்டோ எதுக்கு ?பரிசு வாங்கிட்டு வரவா !

நீங்களும் இண்ணிக்குதான் பதிவு பண்ணியிருந்தீங்க போட்டிக் கவிதை பாத்தேன்.
உங்களுக்கும் வாழ்த்துகள் ஜெரி.

:::::::::::::::::::::::::::::::::

சரவணகுமார்...வாங்க.இண்ணைக்கு நல்ல காத்து அடிச்சுத் தள்ளிட்டுது உங்களை.அட...அடிக்கடி வாங்களேன்.நன்றி வந்ததுக்கும் வாழ்த்துக்கும்.கவிதை பரிசுக்காக இல்லையே ஊக்கத்திற்குத்தானே !
நீங்க எழுதிட்டீங்களா ?

:::::::::::::::::::::::::::::::::::

வாங்க கிழவரே.யாதவன் நன்றி.உங்களுக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.ஊர்ப் பொங்கல் அனுப்பிவிடுங்க.

::::::::::::::::::::::::::::::::::

நன்றி ராதாகிருஷ்ணன்.உங்கள் வார்த்தைகளே போதும்.அதுவே சந்தோஷம்.

:::::::::::::::::::::::::::::::::

வாங்க ஜோதிஜி.தேவிகள் எல்லாரும் சுகம்தானே !உங்க பக்கம் வர இப்பல்லாம் பயம்.போட்டுப் புரட்டி எடுக்கிறீங்க இந்திய இலங்கை அரசியல்.அதான் படிக்கிறதோட மட்டும் போதும்ன்னு இருக்கேன்.சரியாத் தெரியாம ஒண்ணும் சொல்லவேணாம்ல்ல.

கவிதை இன்னும் எளிய சொற்கன்னா யோசிக்கிறேன்.கூடின வரைக்கும் அப்பிடிதான் எழுதுறேன்ன்னு நான் நினைச்சிட்டு இருக்கேன்.
கவனிக்கிறேன்.உங்க அவதானிப்புக்கும்
கருத்துக்கும் நன்றி ஜோதிஜி.

:::::::::::::::::::::::::::::::::

நன்றி பிரா.உங்களுக்கும் வாழ்த்துகள்.எழுத முயற்சித்தோம் எல்லோருமே.அதுவே வெற்றிதானே.

ஹேமா said...

சங்கர் உங்களைப்போல பின்னூட்டம்கூட கவிதைய எழுத முடிலன்னு கவலை எனக்கு.
அருமையா பின்னூட்டம் தாறீங்க.
சந்தோஷம் சங்கர்.உங்கள் வாழ்த்து நிச்சயம் எனக்குக் கிடைக்கும்.

:::::::::::::::::::::::::::::::

ரிஷபன்...உண்மையான மனிதர்கள் தெய்வங்களுக்கு அருகில் அல்லவா இருக்கிறார்கள்.நெருங்க முடியவில்லயே !

:::::::::::::::::::::::::::::::::::

விஜய் என்ன பயம் உங்களுக்கு ?உங்க கவிதையும் கலக்கலா அருமைதானே !இண்ணைக்கு ஒரு ரவுண்டு அடிசேனே எல்லார் கவிதைக்கும்.அப்புறம்தானே நான் போட்டேன்.அன்பான சகோதரனாய் உங்க வாழ்த்து எப்பவும் என் பக்கம் விஜய்.நிச்சயம் பலிக்கும் பாருங்களேன்.

::::::::::::::::::::::::::::::::

அன்பு தமிழ் ,தோழமை நிறையவே இருக்கு.புரிஞ்சுகொள்ளத்தான் பயமாயிருக்கு.வாழ்வின் அடிபட்ட அனுபவம் அப்படி !

::::::::::::::::::::::::::::::::

விதி வலியது....நீங்க சொன்னதுக்காக உங்க பின்னூட்டம் பதிவாகுது.இனிச் சேட்டை பண்ணாக்கூடாது.சரியா உங்க பேர்ல போடணும் நல்ல பிள்ளையா சரியா.
பாருங்க எத்தினை திட்டு விழப்போகுதுன்னு.நான் தானே வாங்கணும் எல்லாம்.

Nathanjagk said...

ஆழமான காயங்களுக்குத்தான் வடுக்கள் சாத்தியம். அப்படித்தான் இந்த கவிதையும் ஒரு வடுவாக பதிந்து விடுகிறது. இதன் ஒவ்வொரு வரிகளும் உங்கள் காயங்களை சொல்கிற ​போதும் வடுக்களை நான் சுமந்து ​கொள்கிறதாய் உணர்கிறேன்.
கவிதையை புகழ முடியாமல் அதில் புதைந்து கொள்கிறேன்.

thiyaa said...

அருமையான நிதர்சன கவிவரிகள்
ஹேமா உங்களின் படத்தேர்வு அருமை
வெற்றிக்கு வாழ்த்துகள்

Anonymous said...

உலகில் மனிதனின் செயல்பாட்டை அப்பட்டமாக பகிர்ந்திருக்கும் கவிதை....ம்ம்ம்ம் மனிதாய் பிறந்த பாவத்திற்கு இத்தனையும் சந்திக்க வேண்டியிருக்கு.....அற்புதமான படைப்பு ஹேமா..வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்....

அமுதா said...

படம் நல்ல தேர்வு... கவிதையின் வரிகளும் அருமை

நட்புடன் ஜமால் said...

ஏதாவது எழுதலாம் என்றால்
இருளுக்குள் கௌவும்
எத்தனை எத்தனை
அசிங்க உணர்வுகள்
ஆபாசமாய்.]]

ம்ம்ம் ...

படம் செம

வெற்றி பெற வாழ்த்துகள்.

meenakshi said...

//என்னை புரியாத உறவு
மனதை புரியாத நட்பு
விலக நினைக்கும் ஆனந்தம்
தூரமாய் நிற்கும் காதல்//
எவ்வளவு அழகா எழுதறீங்க ஹேமா! படம்தான் பார்க்க ரொம்ப, ரொம்ப பயமா இருக்கு. கொஞ்சம் அடுத்த படத்தை சீக்கிரம் போட்டுடுங்களேன்!

மனதில் இருப்பதை தெளிவான, அழகான வார்த்தைகளில் கொண்டு வருவது என்னை பொறுத்தவரை அவ்வளவு எளிதானது அல்ல. உங்களின் சில கவிதை வரிகள் என் மனதில் உள்ளதை கூட அப்படியே வெளிப்படுத்துவதாக உணர்கிறேன். அவைகளை படிக்கும்போது மனதிற்கு நிறைவாக இருக்கிறது. தொடர்ந்து படித்து வருகிறேன். எல்லாமே அருமைதான், இருந்தாலும் உங்கள் 'சேமித்த கணங்களில்' அருமையிலும் அருமை. என்னை மீண்டும், மீண்டும் படிக்கத் தூண்டுகிறது, படித்துக் கொண்டும் இருக்கிறேன். வாழ்த்துக்கள் ஹேமா!
உங்கள் 'கூட்டாஞ்சோறு உறவு' க்கு ஓட்டு போட்டாச்சு.

புலவன் புலிகேசி said...

வழமை போல் கவிதை நன்று. படத்தேர்வு மிக அருமை ஹேமா.

கிச்சான் said...

"என்னைப் புரியாத உறவு
மனதைப் புரியாத நட்பு
விலக நினைக்கும் ஆனந்தம்
தூரமாய் நிற்கும் காதல்."

மென்மையான உணர்வுகள்! ...இதையத்தை வருடுகின்ற வரிகள் !!

கலா said...

பின்னோட்டப் புயலைக் கூப்பிடலாமென
நினைக்க வந்து விட்டார் போலும்!!

ஒரு பின்னோட்டச் சூறாவளி {வசந்}
கிளபிட்டாரய்யா கவனம்!!

ஐயோ!! ஹேமா அந்தப் படத்தை
என் கண்ணால் பார்க்கவே முடியவில்லை
{உற்றுப் பார்த்தால்}
மூளையை என்னவோ செய்கிறது
அந்தப் படத்தை இனிமேல் பார்க்கவேமாட்டேன்.
எப்படி!!?? எல்லோரும் இரசிக்கிறார்கள்!!!????
மாற்றும் வரை{அடுத்தது} பார்கவேமாட்டேன்.

கலா said...

\\\\\என்னைப் புரியாத உறவு
மனதைப் புரியாத நட்பு
விலக நினைக்கும் ஆனந்தம்
தூரமாய் நிற்கும் காதல்.\\\\\\




உங்கள்தவம் முடிய.....நீங்கள்
தேடும் மனிதம்{மனிதர் }கிடைப்பார்
ஜெகன் கூறியது போல் அத்தனையும்
காயவடுக்கள்.
வெற்றிபெற வாழ்த்துகள் மகளே!!

பா.ராஜாராம் said...

இந்தா வந்துட்டேன் தாயாரு..

//வௌவாலாய் தொங்கும் உலகில்
எனக்கு உலகமும்
உலகத்துக்கு நானும்
தலைகீழாய்த்தான்.//

இதே போலான ஒரு கவிதை எழுதி பத்து நாளுக்கு முன்பாகவே ரமேஷ்,கண்ணனுக்கு அனுப்பிவிட்டேன்.இன்னும் அவர்கள் போஸ்ட் பண்ணவில்லை.இனி போஸ்ட் பண்ணும் போது "அண்ணன் என்னைய பார்த்து காப்பி அடிச்சிட்டான்னு" சொல்லுவியே நீ?

பரவால்லை விடு!அண்ணன்தானே. பொழைச்சு போகட்டும்.

ஆனால் எப்படிடா இப்படி ஒத்த சிந்தனை?

ரொம்ப பிடிச்சிருக்கு தாயாரு.வெற்றி பெற வாழ்த்துக்கள்!

நேசமித்ரன் said...

உணர்வுகளின் கோர்வை உப்பின் பிசு பிசுப்புடன்

ஜெகன் சொல்வது போல வடுக்களை வாசிக்கிறவன் சுமக்க வைத்து விடுகிறது

நல்லா இருக்கு ஹேமா. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ஆடுமாடு said...

நல்லாருக்கு. தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

ஹேமா said...

நசரேயா.....ரொம்ப நேரம் எடுத்து அழகா பொழிப்புரை எழுதியிருக்கீங்க.ஸ்ரீராம் க்குத்தான் தேவைப்படும்.புரிஞ்சுக்கிட்டிருப்பார்.

என்னமா கவிதையைக் கிளி கிழின்னு கிலிச்சிருக்கீங்க.சரி உங்க வாழ்த்தும் எனக்கு உதவியா இருக்கட்டும்.நீங்க எழுதலயா இன்னும் ?

:::::::::::::::::::::::::::::::::::

பெருமாள் வாழ்த்துக்கு நன்றி.நீங்க முயற்சி செய்யலயா ?இதெல்லாம் அதிஸ்டம்தானே .எதிர்பார்ப்பு வேணாம்.

:::::::::::::::::::::::::::::::::::

ரவி...யா...யா.வெற்றியா எதில...எங்க !

எங்க காணோம்னு பாத்திட்டு இருந்தேன் உங்களை.வலிகள் வந்தவைகள் இல்ல.தந்தவைகள்.

::::::::::::::::::::::::::::::::::

ஹாய்....ஜே என்னாச்சு.
காணோமே.புதுப் பதிவுகளையும் காணோம்.உங்கள் தொனியில் ஏதோ ஒரு ஸ்வரம் குறைவாய்த் தெரியுது.சுகம்தானே !

இல்ல ஜே...என் காயங்கள் எனக்கே சொந்தம்.வடுக்களைச் சுமப்பதிலும் சுகம்தான்.

::::::::::::::::::::::::::::::::::

தியா வாங்க.அடுத்தமுறை பொங்கல் கொண்டு வரணும்.சரியா !

:::::::::::::::::::::::::::::::::::

தமிழரசி....சந்தித்த வேதனைகளையோ சந்தோஷங்களையோ பட்டியல் போட்டால் முடியிற காரியமா !விழும் கண்ணீரின் ஒரு துளிதான் இங்கு எழுத்தாய் !
நன்றி தோழி வாழ்த்துக்கு.

::::::::::::::::::::::::::::::::::

வாங்க அமுதா.நீங்களும் உங்க குட்டீஸ்ம் சுகம்தானே.ஆளையே காண்றதுகுறைவாயிருக்கு.
என்றாலும் சந்தோஷம் தோழி.

ஹேமா said...

ஜமால் மாமாவை நிலா சுகம் கேக்க்கசொல்லியிருக்கா.சுகம்தானே ஜமால்.எங்கே ராகவன்(நைஜீரியா) ?காணோம்.

சிலநேரங்கள் எதையாவது எழுதப் பயந்தே எழுத்தில வராம போய்டும் ஜமால்.அதான் அப்பிடி சொல்லியிருக்கேன்.படம் என்னையே பயமுறுத்துது.பொங்கலுக்கு மாத்திடலாம்.வாழ்த்துக்கு நன்றி.நீங்க எழுதினீங்களா கவிதை?

::::::::::::::::::::::::::::::::::

வாங்கோ வாங்கோ மீனாட்சி.பார்த்து ரசிச்சு..ஆனா முதன்முதலா பின்னூட்டம் தாற என் அழகிய தோழியே வரணும் வரணும்.

சந்தோஷம்."சேமித்த கணங்கள்"
இன்னும் சேமிப்பில் இருக்கும் கணங்கள்.மறக்காத தருணங்கள்.
தமிழ்மண ஓட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

::::::::::::::::::::::::::::::::::

புலவரே நன்றி நன்றி நன்றி.

::::::::::::::::::::::::::::::::::

கிச்சான்....வாங்க.புதுவரவு...நல்
வரவும்கூட.அடிக்கடி வாங்க.

::::::::::::::::::::::::::::::::::

ஓ....கலா வசந்து....வாலுக்கு பட்டமா பின்னோட்டச் சூறாவளியா !அட ச்ச....!ஆனாலும் பொருத்தமாத்தான் இருக்கு.அவர் ஏத்துக்கிட்டாரா !

சரியாப் போச்சு.நான் உங்க மகளாயிட்டேனா !பா.ரா அண்ணா தாய்ன்னு சொல்லியிருக்கார்.எது எனக்குப் பொருத்தம்ன்னு
எனக்கே தெரில கலா.

சில வேதனைகளைப் பங்கு போடக்கூடாது.நினைவில மனசில வச்சுக்கொண்டே நித்திரை கொள்ளணும்.

படம் பொங்கலுக்கு மாத்திடுவேன்.அது சரி எப்போ பொங்கல் ?உங்கள் வாழ்த்துக்கு சரியான சந்தோஷம் தோழி.தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும்.
பொங்கல்தான் வேணும் கொஞ்சம் !

:::::::::::::::::::::::::::::::::::

அண்ணா உங்க கவிதைகளே அது வித்யாசமான தனித்தன்மை.கருவோ கருத்தோ ஒத்திருப்பது இயல்புதானே.
உங்கள் சாயலில் ஒரு கவிதை எழுதியிருக்கேன்.பதிவில் வரும்.

அண்ணா பட்ட படும் உணர்வுகளைச் சிந்திக்கத் தேவையில்லைத்தானே !வலிந்து இழுத்த சிந்தனைகள் இல்லை இந்த வரிகள்.

அண்ணா உங்க அன்புக்கு என்ன சொல்ல நான்.கடைசியில் தாய்ன்னே சொல்லிட்டீங்க.அஷோக் இன்னும் பாக்கலயாக்கும்.சண்டைக்கு வரப்போறார்.உங்கள் வாழ்த்து வல்லமை தரும் அண்ணா எனக்கு.

::::::::::::::::::::::::::::::::::

நன்றி நேசன்.உப்புக் கரைசலுக்குள் உப்பிய வாழ்வுதான் வார்த்தைகளாய்ச் சிதறிப் பூக்க வைக்கிறது.என்றாலும் வடுக்கள் தெரியாத உப்புப் பூக்கள் என்னைச் சுற்றி.
அன்பு வாழ்த்துக்கு நன்றி.

::::::::::::::::::::::::::::::::::

ஆடுமாடு உங்களைக் கண்டு எவ்ளோ காலம் சுகம்தானே.அதுவும் வாழ்த்தோடு....சந்தோஷமாயிருக்கு.உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

மேவி... said...

புதுசாய் சொல்ல எதுவுமில்லை .....எல்லாத்தையும் எனக்கு முன் பின்னோட்டம் போட்டவர்கள் சொல்லிட்டாங்க ...

அதனால் எல்லா CMD க்கும் ரீபிட் அடிக்குறேன்

மேவி... said...

வழக்கமாய் உங்க கவிதைகளிருந்து இந்த கவிதை கொஞ்சம் மாறு பட்டு இருக்கு ......

ஏதோ நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு யோசிச்சு எழுதின மாதிரி ........(எழுத்து பிழைகள் எதுவும் இல்லை ஹி ஹி ஹி ஹி ஹி )

மேவி... said...

[உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை]


அடடா இதை இப்ப தான் பார்க்கிறேன் .......

கவிதை எப்புடி உரையாடல் ஆகும் ???????

சரி ..... நானும் போட்டிக்கு கவிதை எழுதிருக்கேன் அதனால் வாழ்த்த மனசு வரல

மேவி... said...

ஒரு VOTE க்கு ஆயிரம் ரூபாய் தர வேண்டும் ....... இல்லாட்டி எதிர் கட்சிக்கு தான் VOTE போடுவேன்

"உழவன்" "Uzhavan" said...

நல்லாருக்குங்க.. வாழ்த்துக்கள்

அப்பாதுரை said...

நெருப்பென்றால் சுடும்
ஹேமாவின் வரியில்.

Sakthi said...

வெற்றி பெற வாழ்த்துகள்

Sakthi said...

வெற்றி பெற வாழ்த்துகள்

தமிழ்ப்பறவை said...

நன்றாக இருந்தது ஹேமா...குறிப்பாக வௌவால் பார்வை....
படம் நல்ல தேர்வு...
வெற்றி பெற வாழ்த்துக்கள்...
19இல் ஒன்று இக்கவிதை.. இன்னொண்ணா...? அது என் ப்ளாக்ல இருக்குது... :-)

பாத்திமா ஜொஹ்ரா said...

நல்ல கருத்து

S.சதீஷ்குமார் MCA Asst.Professor said...

ungaludaiya kavithai thoguppu nandraga irukirathu ungaluku en vazthukkal

Post a Comment