*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, January 29, 2010

பிடிக்கேல்ல...

அ...னா
ஆ...வன்னா...படிக்கட்டாம்
தேவாரம் பாடமாக்கட்டாம்
வீட்டுப்பாடம் செய்யட்டாம்
பிடிக்கேல்ல எனக்கு.

ஐஸ்ல வழுக்கி விளையாட
சுவரில பென்சிலால கீற
ஐஸ்கிறீம் குடிக்க
விஜய் படம் பார்க்க
அவரின்ர பாட்டுக்கு டான்ஸ் ஆட

புதுச்சட்டை போட
பள்ளிக்கூடம் போக
அண்ணாவோட சண்டை போட
அக்கான்ர சாமான்கள் களவெடுக்க

அம்மா மடியில படுத்திருக்க
நித்திரை கொள்ள
ம்ம்ம்..பிறகு
ஹேமா வீட்டுக்குக் காரில போக
விரல்.....சூப்பவும்தான்

எல்லாம் பிடிக்குது
அது மட்டும் பிடிக்கேல்ல எனக்கு
ஏன் ? !!!

இவன் என் சிநேகிதியின் மகன்.
பெரி...ய விஜய் ரசிகன்.பெயரும் சச்சின்.

ஐ லவ் யூ டா செல்லம்.


ஹேமா(சுவிஸ்)

42 comments:

sathishsangkavi.blogspot.com said...

//இவன் என் சிநேகிதியின் மகன்.
பெரி...ய விஜய் ரசிகன்.பெயரும் சச்சின்.//

உங்கள் சிநேகிதியின் மகனுக்கு எனது வாழ்த்துக்கள்... அவனுக்காக நீங்கள் எழுதிய கவிதையும் கலக்கல்....
ஆனா......... இந்த ரசிகன் எல்லாம்................. சொல்லுங்க....

க.பாலாசி said...

//பெரி...ய விஜய் ரசிகன்.பெயரும் சச்சின்.
ஐ லவ் யூ டா செல்லம்.//

அது சரி...இந்த மாதிரி செல்லம்கொடுத்தா எந்தப்பையனும் ஆ...வன்னா....படிக்கட்டாம்...

ப்ரியமுடன் வசந்த் said...

இக் லீப திக் ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

கவிதை கலக்கல்....

நட்புடன் ஜமால் said...

நல்லாயிருக்கே!

ரொம்ப எளிமையா எழுதியிருக்கீங்க

ஹேமா!

Ashok D said...

எல்லார் வீட்டு பசங்களும் ஒரே மாதிரிதான் போல...

Radhakrishnan said...

கவிதை அருமை.

meenakshi said...

படிப்புன்னாலே வேப்பங்காய்தான்! படிப்பை யாருமா கண்டு பிடிச்சா? என் தோழியோட குழந்தை கேட்ட கேள்வி இது! என்ன பதில் சொல்றது!

ரிஷபன் said...

குழந்தைக் கவிஞர்.. பேஷ்!

நேசமித்ரன் said...

கவிதை நல்லா இருக்குங்க உங்க செல்லத்துக்கு உரிய சிநேகிதி மகனுக்கும் என் வாழ்த்துகள்

துபாய் ராஜா said...

வீ ட்ட்டூ லவ் ஹிம்.

M.S.R. கோபிநாத் said...

தெளிவான சுருக்கமான கவிதை ஹேமா.

கார்த்திகைப் பாண்டியன் said...

:-)))))))))

ஸ்ரீராம். said...

விஜய் ரசிகனா இருந்தா இதுதாங்க ப்ராப்ளம்...ஐ டூ லவ் தட் செல்லம்...

நசரேயன் said...

வாழ்த்துக்கள் உங்களுக்கு இல்லை பையனுக்கு

Jerry Eshananda said...

சச்சினுக்கு இழுத்து அணைச்சு ஒரு உம்மா தாரேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

சச்சின் பாவம். அவன் விரும்புவதைச் செய்ய விடுங்கள். அவன் செய்ய விரும்புவதை வயது போன பின்பு செய்ய முடியாது.

தமிழ் உதயம் said...

சின்னதம்பி படிக்க கஷ்டம். நமக்கு? வேலைக்கு போக.

ப்ரியமுடன் வசந்த் said...

சச்சின் அழகா இருக்கியேடா செல்லம்..

ஹேமாவோட லவ்வராமே நீ? வில்லன்டா நீ.....

கலா said...

ஹேமா சில பேர் மனசுல...
இருப்பவைகள் வெளிவருகின்றன
அதனால்....கவனம்!!
பையனை ஆள் வைத்துக் கடத்தினாலும்
கடத்துவார்கள்.

ராகவன் said...

அன்பு ஹேமா,

அருமையான கவிதை... கவிதையின் பாடுபொருளாய் போன குழந்தை பாக்கியவான்...

வாழ்த்துக்கள் விஜய் ரசிகனுக்கும்,

அன்புடன்
ராகவன்

Paleo God said...

"பிடிக்கேல்ல...
பிடிச்சிருக்கு...:))

மாதேவி said...

சச்சின் அழகாக இருக்கிறான்.

S.A. நவாஸுதீன் said...

சச்சினும், சச்சினுக்கான கவிதையும் அழகு.

தமிழ் அமுதன் said...

கவிதை அருமை...!

உங்க சிநேகிதி மகனுக்கு மட்டும்தான் கவிதை எழுதுவீங்களா ?
எங்க வீட்டு குழந்தைகளுக்கெல்லாம் கவிதை எழுத மாட்டீங்களா? ;;)

விஜய் said...

சேட்டை பண்ணாத குழந்தை குழந்தையே இல்லை

இக்குழந்தையின் சேட்டைகளை ரசித்தால் நேரம் போறது தெரியாது ஹேமாவுக்கு என்று நினைக்கிறேன்.

விஜய் ரசிகனின் ரசிகைக்கு வாழ்த்துக்கள்

விஜய்

ஜெயா said...

ஹேமா பாவம் உங்க சச்சின், விரல் சூப்புற குட்டிப்பையன். பேசாம அவனோட இஸ்டத்துக்கும் கொஞ்சம் விளையாட விட சொல்லுங்க.ஜெஸ்வந்தி சொன்னது போல இந்த வயசில தான் அது எல்லாம் செய்ய முடியும். உங்க சினேகிதி கிட்ட கொஞ்சம் எடுத்து சொல்லுங்க... விஜயோட குட்டி ரசிகன், அழகான குட்டி....... வாழ்த்துக்கள்.

hayyram said...

26 comments. and mine is 27.

அ.மு.செய்யது said...

எனக்கு இந்த பிடிக்கேல்ல ...இந்த வார்த்தை ரொம்ப பிடிச்சிருக்கு..!!!!

அப்துல்மாலிக் said...

சச்சின் அழகு கவிதையோடு சேர்த்து

ஆ.ஞானசேகரன் said...

//ஐ லவ் யூ டா செல்லம்.//


வாழ்த்துகள்

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

மேவி... said...

வரிகள் அப்படியே எங்க வீட்டு ரிதி குட்டிக்கும் பொருந்தி போகுது

கவிதையை விட ..சச்சின் அழகாய் இருக்காரு ...

ஹேமா said...

எல்லா அங்கிள் அண்ணா அக்கா ஆன்ரிக்கும் என் அன்பு முத்தங்கள்.நிறைய சந்தோஷமாயிருக்கு.

அம்மாக்கிட்ட சண்டை போட்டு கொம்பியூட்டர் பாத்திட்டே இருக்கேன்.
அண்ணா அடிக்கிறான்.அக்காதான் எனக்கு சொக்கிளா தாறாள்.பரவால்ல நான் அவங்களைச் சமாளிச்சுடுவேன்.
அப்பா எப்பவும் என் பக்கம்தானே !

சரி சரி..நான் கேட்ட கேள்விக்கு யாருமே பதில தரல.ஏன் எனக்குப் படிக்கப் பிடிக்கல ?

இப்படிக்கு அன்பு சச்சின்.

Anonymous said...

வணக்கம் நான் நவநீதன் தங்களுடையா அனைத்து கவிதைகளும் நன்றாக உள்ளது நீங்கள் ஒரு website தொடங்கி அதில் வெளியிடலமே


விருப்பம் இருத்தல் எனக்கு Mail பன்னுக my mail offical id mnksystam@gmail.com
என்னுடய Website www.mnksystems.com
பாருங்க விருப்பம் இருந்தல் mail பன்னுங்க
என் இனைய தலம் தவிரா வேரு ஒருவருக்கு
நான் முதல் முறையாக Create பன்ன விரும்புகீறன் என் முதல் முயற்சி நிறைவேற நீங்கள் உதவ வேன்டும் full website free domain registarction and 500 MB ftp space please help for one முன்னேர துடிக்கும் ஒரு தமிழன்

Thenammai Lakshmanan said...

ஹா ஹா கிளம்பிட்டாங்க ஹேமா சின்னப் பிள்ளங்களோடவீட்டுப் பாடத்தோட போராட..

ரொம்ப அருமை ஹேமா ..!!
மிக ரசித்தேன் பா!!

சத்ரியன் said...

//சத்ரியா...கலரை மாத்தி வச்சுக்கிட்டாவது ஒளிச்சிருங்கப்பா.
தேடிப்பிடிக்கவாவது வசதியா இருக்கும்ல.இனி லேட்டா வந்தா பெஞ்சில ஏறித்தான் நிக்கணும்.
ஓம்...சொல்லிப்போட்டன் மவனே ..//

ஹேமா,

நான் இன்னிக்கு ’பெஞ்ச்’சில ஏறித்தான் நிக்கனுமா..?


.... அதுக்கும் மேல உங்க விருப்பம்!

சத்ரியன் said...

//எல்லாம் பிடிக்குது
அது மட்டும் பிடிக்கேல்ல எனக்கு
ஏன் ? !!!//

ஹேமா,

ஏன் -ன்னு ஹேமாவைக் கேளு. பதில் கிடைக்கும்...!

Muniappan Pakkangal said...

Most of the childen are actor Vijay's fans Hema.Your frnd's son is cute.

thiyaa said...

கலக்கல்....

நிலாமதி said...

படிப்பை படிப்பாக் சொல்லிக்கொடாமல் ..விளையாட்டாக சொல்லிகொடுத்தால் நன்றாய் ஏறுமாம் என்று இந்த நிலா டீச்சர் சொன்ன என்று சச்சின் அம்மா கிட்ட சொல்லுங்க.

மே. இசக்கிமுத்து said...

ரொம்ப செல்லம் கொடுப்பீங்கன்னு நினைக்கிறேன்!

கவி அழகன் said...

நல்ல கவிதைநானும் இப்படிதான் என் வாழ்த்துகள்

Post a Comment