*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, January 23, 2010

மௌன மொழி...

சொல்லடி என்றேன்
என்ன என்றாள்.
மௌனம் உடை என்றேன்
ம்....என்றாள்.
ஏனடி கொல்கிறாய் என்றேன்
அதற்கும் சிரித்தாள்.

நிலவு பிடிக்குமா
உன் மடி படுத்தால்
தலை கோதுவாயா என்றேன்.
அதற்கும் மௌனித்து
அழத்தொடங்கினாள்.

பிறகு பேச்சு வராமல்
கவிதை சொல்லவா என்றேன்.
இறுக்கிய கை தளர்த்தி
தலை நிமிர்த்தி கண் பார்த்தாள்.
மௌனம் கலைக்கவா என்றேன்
தலையசைத்தாள்.

ஏதாவது...தர...வா
வார்த்தை தொடங்கிய என்னை
மிச்சம்
பேசவே விடாமல்
இதழோடு இதழ் அழுத்தி
மீண்டும் மௌனித்தாள்.

மௌனமே வெட்கி
மௌனிக்க !!!

ஹேமா(சுவிஸ்)

43 comments:

sathishsangkavi.blogspot.com said...

//ஏதாவது ......
வார்த்தை தொடங்கிய என்னை
மிச்சம்
பேசவே விடாமல்
இதழோடு இதழ் அழுத்தி
போதுமா என்றாள்.

மௌனமே வெட்கி
மௌனிக்க !!!//

அழகான உணர்வுகள் வரிகளில்...

Paleo God said...

ஏதாவது பர்ஸ்னல் டைரி தொறந்துட்டனான்னு பயந்துட்டங்க..:)

Unknown said...

உண்மையான காதலில் மொழி மெளனம்
தான்

ப்ரியமுடன் வசந்த் said...

மௌனம் உடை என்றேன்
ம்....என்றாள்.
ஏனடி கொல்கிறாய் என்றேன்
அதற்கும் சிரித்தாள்.
//

ம்க்கும் இப்பிடி சிரிச்சு சிரிச்சே மனுசன குழப்பிவிடுறதுல பொண்ணுகளுக்கு நிகர் பொண்ணுகதானுங்க...!

ப்ரியமுடன் வசந்த் said...

ஏதாவது...தர...வா
வார்த்தை தொடங்கிய என்னை
மிச்சம்
பேசவே விடாமல்
இதழோடு இதழ் அழுத்தி
போதுமா என்றாள்.//

ஜூப்பரு ஹேம்ஸ்...

முத்தத்தைதவிர அந்த நொடிகளில் வேறென்னதந்தாலும் போதாது..

இன்னிக்கு கலா என்ன சொல்லபோறாங்களோ தெரில...!

meenakshi said...

கவிதை வரிகளில் வெளிப்படும் ஆத்மார்த்தமான காதல் உணர்வை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை ஹேமா!

மேவி... said...

yethir kavithai ithukku elutha poren.....

தமிழ் உதயம் said...

பேரை கேட்டேன். சிரிப்பை தந்தாய். காதல் கேட்டேன். மௌனம் தந்தாய். எல்லா மொழிகளுக்கும் பொது மொழி மௌனம் என்பதானாலா

நட்புடன் ஜமால் said...

முதலில் சொல்லி
மூன்றில் கலைத்து
அதுவும் மெளனமாய்

---------------

அழகு ஹேமா!

இது போன்று கவிதைகள் என்னும் வேண்டுமாம்(கேட்டவர் பெயர் சொல்லவா ...?)

Starjan (ஸ்டார்ஜன்) said...

உணர்வின் உணர்வுகள்
என்னைத் தாக்கியதே !!
உன்னில் பயணிக்கும் போது ...


அருமையான கவிதை ஹேமா ..
ரொம்ப அருமை சூப்பர் .

கலா said...

ஊவாவ்வ்வ..... காதலின் உச்சக் கட்டம்.
ஹேமா அப்படி{இதற்கு முதல் கவிதையை}
ஒரு பெண்ணைப் பழி சுமத்தி.....

இப்ப... ஒரு பெண்ணை இப்படி காதல்
இரசத்துடன் தளும்ப...தளர...
விட்டீருக்கிறீர்களே!!

ஒரு பொண்ணு நினைத்தால்......
எதுவும் செய்வாள் என்பதை
சொல்கிறது உங்கள் கவிதைகள்.

இப்படி ஒரு பொண்ணுதான்
வசந்து தேடுகிறார் போலும்....

அது சரி ஏன் சின்னப் பையன்,சின்னப்பையன்
என்று வெறுப்பேத்துறீகள்!
வசந்து இப்ப குருவியாக மாறிவிட்டார்..
வேட்டைக்காரனாக மாறி உங்களைச்
சுடும் முன் ..
இனிமேல் அப்படியெல்லாம் சொல்லமாட்டேனென
மன்னிப்புக் கேட்டுவிடுங்கள்.

கலா said...

அருமையான காதல் கவிதைக்கு
மிக்க நன்றியடி தோழி.

கவிதையிலே எனக்கு மிகவும்
பிடித்தது காதல் கவிதைதான்.

கவிதையின் முடிவில்...
புதுமைப் பெண்{இவள்} என{செய்கையால்}
சொல்லி இருக்கும் துணிச்சலுக்கு
ஒரு சபாஷ்.
ஹேமா புதுமையா?பழமையா??

Ashok D said...

காதல் ரசம் கடைசியில் பொங்க வைச்சிட்டீங்க ஹேமா, நல்லாயிருக்குங்க :)

Chitra said...

மௌனமே வெட்கி
மௌனிக்க !!!
.....அருமையான வரிகள்.

Ramesh said...

உ....ம்ம்ம்ம்ம்ம்்ம்ம்ம்ம்ம்ம்ம் ........மா...

என்ன அழகு எங்கயோ... இடிக்குதே..

Anonymous said...

கலக்கல்ஸ் ஹேமா..

சிநேகிதன் அக்பர் said...

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடின் மனிதரின் மொழிகள் தேவையில்லை.

S.A. நவாஸுதீன் said...

So Romantic Hema.

நேசமித்ரன் said...

காதலின் மௌனம் நரகம்
முத்தத்தால் அழகாக்கி இருக்கிறீர்கள்

காதல் வாழ்க!
ஆமாம் கவிதை எங்கே இங்கே ?

thendral said...

கேட்டுப் பெறவது காதலில் இனிமை

கேட்காமல் தருவது காதலி கடமை

அப்துல்மாலிக் said...

ஹேமா ரொம்ப நாள் கழிச்சி ஒரு ரொமா... வரிகள்

நல்லாயிருந்தது மவுனம் களைவதை சொல்லப்பட்ட விதம்

கலா said...

கவிவரிகள் காதலர்களுக்கு!
காதலை அணைக்கின்றது!!
கவி.

படம்... சின்னஞ் சிறுசிகள்....
அன்பால் அணைக்கின்றார்கள்
பாசம் இணைகிறது!!

ஏன் ஹேமா??

இரு காதலர்களின்{18வயதுக்குமேல்}படத்தைப்
போட்டிருந்தால் நன்றாய் இருந்திருக்குமே!!

இதைத்தான் __ கூச்சம்,வெட்கம்,பயம்,மற்றவர்களின்
பார்வை,அவர்களின் விமர்சனம், எல்லாவற்றுக்கும்
பயந்து நடுங்கும் பவ்விய பெண் ஹேமா என்பார்களோ!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

விஜய் said...

இதழ்களின் இடிபாடுகளில்
சிக்கிய இரு இதயங்கள்
பேசும் மொழி
மௌனமே

வாழ்த்துக்கள்

விஜய்

க.பாலாசி said...

//மீண்டும் மௌனித்தாள்.//

மிக..மிக..அழகான கவிதை...ரசித்தேன்.

Anonymous said...

Very well said.I really like the Kavithai.

கும்மாச்சி said...

அது சரி

மௌனமே வெட்கி
மௌனிக்க

அருமை ஹேமா...

கலா said...

ஹேமாவா?கொக்கா??
பேஷ்..பேஷ் செல்லம் இப்போதுதான்
கவிதை இன்னும் எடுப்பாக இருக்கிறது
நன்றிடா!வசந்த் நான் தடை எதுவும் சொல்ல மாட்டேன்
நன்றாக முத்தத்தை அனுபவித்து,ரசித்துப்
படியுங்கள் ஏன் என்றால் !! உயிர் உள்ள
ஒருவரிடமென்றால் அனுமதி கிடையாது,
இது வெறும் எழுத்துத்தானே! தடையில்லை
கண்ணா!!ம்ம்மம்ம..........சலிக்கும் வரை.....

ஜெயா said...

ஏதாவது... தர..வா..வார்த்தை தொடங்கிய என்னை, மிச்சம் பேசவே விடாமல் இதழோடு இதழ் அழுத்தி மீண்டும் மௌனித்தாள்..மௌனமே வெட்கி மௌனிக்க.
அழகான காதல் வரிகள். வீரியம் பேசும் வெறும் வெத்து வேட்டு இல்லை, பேசவே விடாமல் இதழ்களால் வாயடைத்து நிற்க்கும் இந்த அழகான ராட்சசி ஒரு புதுமைப்பெண்.கவிதைக்கு ஏற்ப படமும் அழகு ஹேமா, வாழ்த்துக்கள்****

M.S.R. கோபிநாத் said...

ஹேமா, இந்த கவிதை அருமை. தெளிவாக புரிந்தது. நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

//மௌனமே வெட்கி
மௌனிக்க !!!//
உணர்வுகளோடு அழகான வரிகள் ஹேமா... அசத்துங்கோ

திவ்யாஹரி said...

ரொம்ப நல்லா இருக்கு. நல்ல வரிகள்.. சொல்றதுக்கே வார்த்தை இல்ல..

Anonymous said...

ரொம்ப நல்லா இருக்கு

ஸ்ரீராம். said...

திடீர் என ஏன் அழ வேண்டும்?

ஊமையின் காதல் என்று சொல்லலாமோ?

- இரவீ - said...

மொழி படத்துல வர மாதிரி உங்க ஆலும் பேசமுடியாதவங்களா ஹேமா?

ரிஷபன் said...

காதலாகிக் கசிந்த நிமிடங்கள்..

மாதேவி said...

காதலின் "மெளன மொழி" சொல்ல வார்த்தைகள் இல்லை...

அப்பாதுரை said...

சொக்குகிறது

நசரேயன் said...

//சொல்லடி என்றேன்
என்ன என்றாள்.
மௌனம் உடை என்றேன்
ம்....என்றாள்.
ஏனடி கொல்கிறாய் என்றேன்
அதற்கும் சிரித்தாள்.//

ஏனடி கொல்கிறாய் என்றேன் உன் சமயலாலே?

//
நிலவு பிடிக்குமா
உன் மடி படுத்தால்
தலை கோதுவாயா என்றேன்.
//
ஏன் தலையிலே பேன் அதிகமா இருக்கோ ?

//
இறுக்கிய கை தளர்த்தி
தலை நிமிர்த்தி கண் பார்த்தாள்.
//
ஏன் எழுத்து ஓடவா ?

//
ஏதாவது...தர...வா
வார்த்தை தொடங்கிய என்னை
//
ரெண்டு இட்லி ஒரு வடை போதும்

Muniappan Pakkangal said...

Nice Hema,there is no equivalent to Silence.

சத்ரியன் said...

//மிச்சம்
பேசவே விடாமல்
இதழோடு இதழ் அழுத்தி
மீண்டும் மௌனித்தாள்.

மௌனமே வெட்கி
மௌனிக்க !!!//

ஹேமா,

வெட்கமாய் உள்ளது போங்கோ.

எனக்கு (கவிதை எழுதும்)வேலையில்லாம செஞ்சி்ட்டீங்கே நியாயமா?

Thenammai Lakshmanan said...

என்ன ஹேமா செம ரொமண்டிக்கா இருக்கு
டிசம்பர் குளிர் போயிருச்சே

விச்சு said...

மெளனமொழி பேச ஆரம்பித்தபின் வார்த்தை எதற்கு! அருமை ஹேமா...

Post a Comment