*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, September 27, 2009

தூங்க விடு கொஞ்சம்...

அன்புச் சுனாமியில்
அரவணைப்புச் சுழிக்குள்
இடறி விழுந்து
நொறுங்கிப் போனது
என் பிடிவாதங்கள்.

ஆறுதல் வார்த்தைகளில்
அடிமையாய்ப் போனது
என் இதயம்.

எழுப்பி எழுப்பி
அலுத்துப்போனது
எனது ஆயுள்.

இன்பமும் துன்பமும்
சிறைப்பட்டுப் போனது
உன் நினைவுகளுக்குள்.

உன் நினைவால் நிறைந்து
மேகத்தை மூடும் முகிலாய்
மூடிக்கிடக்கிறது
என் அன்றாட அலுவல்கள்.

இதயத் துடிப்போடு
கூடியிருப்பதால்
மூட மறுக்கிறது விழிகள்.

உன் ஞாபகத் தூசுகளை
துடைத்துத் துடைத்தே
தேய்ந்து போனது
என் மூளைக் குவளை.

அன்பே காது கொடு
சொல்கிறேன் ஒன்று
கேட்பாயா கொஞ்சம்.
உன்னால் முடியுமா !

எனக்குள் உன் நினைவுகளை
நீயே முடக்கிப் போடு.
இன்றாவது உனை மறந்து நான்
நின்மதியாய்
கண் துயில !!!

ஹேமா(சுவிஸ்)

35 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

ada ஹேமா நீங்களும் ப்ரியாவும் ஒரே ஊர்ல இருந்து ஒரே டைம்ல போஸ்ட் ரிலீஸ் பண்ணியிருக்கீங்க...

ப்ரியமுடன் வசந்த் said...

நான் எப்போ வந்தாலும் சுகமான பாட்டு கேக்குது...சூப்பர்

ஆமா எத்தனை நாளைக்குத்தான் கவிதைய பாராட்டுறது?

Ashok D said...

நல்லாயிருக்கு ஹேமா..

ஹேமா said...

ஓ...ப்ரியாயும் சுவிஸ் லயா இருக்காங்க?

வசந்த் பாராட்டுக்கு வஞ்சகம் இல்லாமப் பாராட்டலாம்.அப்போதான் இன்னும் நிறைய எழுதணும்ன்னு உற்சாகம் வரும்.உங்களைப்போல.
ஜமாலுக்கு அடுத்தாப்போல உடனே ஓடி வந்து உற்சாகம் தாறீங்க.
நன்றி வசந்த்.பாட்டுக்குளேதான்
என் பொழுதுகள்.அதுதான் குழந்தைநிலாவிலும் பாட்டு.

ஹேமா said...

அஷோக் சண்டே ஸ்பெஷல் இல்லியா இண்ணைக்கு.(கவிதை)

யாழினி said...

//அன்புச் சுனாமியில்
அரவணைப்புச் சுழிக்குள்
இடறி விழுந்து
நொறுங்கிப் போனது
என் பிடிவாதங்கள்.//



அசத்தலான வரிகளுடன் ஆரம்பமாகுகிறது!

கவிதை நல்லாயிருக்கு ஹேமா! :)

ஹேமா said...

யாழினி,5 நாள் விடுப்பில் போகிறேன்.அதுதான் சண்டே ஸ்பெஷல் காதல் கவிதை.ஞாயிறு நாட்களிலாவது அரசியல்,
வாழ்வியல்ன்னு கவலையாப் போட்டு வசந்த் கிட்ட திட்டு வாங்காம இருக்கலாமேன்னு இனி இப்பிடித்தான்.

விஜய் said...

"உன் ஞாபகத் தூசுகளை
துடைத்துத் துடைத்தே
தேய்ந்து போனது
என் மூளைக் குவளை"

உங்களை பாராட்டியே தேயப்போகிறது என் கை முனை

S.A. நவாஸுதீன் said...

கவிதை அருமையா இருக்கு ஹேமா.

உன் ஞாபகத் தூசுகளை
துடைத்துத் துடைத்தே
தேய்ந்து போனது
என் மூளைக் குவளை.

சூப்பர்.

விஜய் said...

ஆத்திச்சூடி 2009 பார்த்தீர்களா ?

அன்புடன் மலிக்கா said...

ஹேமா ரொம்ப ரொம்ப சூப்பராக இருக்கிறது தாங்களின் கவிதை
பாரட்டுக்கள்

- இரவீ - said...

ஹேமா,
பசுமையான வரிகள் ...
அருமையான சொல்லாடல்,

தூங்கிட்டு வந்து பதிவு போடுங்க.

Thenammai Lakshmanan said...

ஹேமா அன்புச் சுனாமியில் என்னை அடிச்சுக் கிட்டுப் போயிடீங்க
நான் எங்கன்னு என்னைய உங்க அன்புவலையில தேடிட்டு இருக்கேன்

பாலா said...

அப்பாடி!!!!!!!!!!!
நான் போட்ட கமென்ட் வீண் போகல

பாலா said...

1.அன்புச் சுனாமியில்
அரவணைப்புச் சுழிக்குள்

2.என் மூளைக் குவளை.

இதெல்லாம் டாப் கிளாஸ்

சந்தான சங்கர் said...

//இதயத் துடிப்போடு
கூடியிருப்பதால்
மூட மறுக்கிறது விழிகள்.//

உறக்கத்தையும்
உறங்கசெய்யும்
நினைவுகளை
மறக்கசெய்ய
மறந்துவிட்டாயா?

கும்மாச்சி said...

எனக்குள் உன் நினைவுகளை
நீயே முடக்கிப் போடு.
இன்றாவது உனை மறந்து நான்
நின்மதியாய்
கண் துயில !!!

ஹேமா ஹூம்..........நடக்கட்டும்............

தமிழன்-கறுப்பி... said...

:)

அப்துல்மாலிக் said...

உலகிலேயே நிம்மதியானது தூக்கம், அதை கெடுக்கும் அளவிற்கு நினைவுகளா?

நல்லாயிருக்கு வரிகள்

கவிக்கிழவன் said...

நினைவுகளுக்குள் சிறைபட்ட சிந்தினைகள்
சிந்திக்கும் போது உங்கள் வாழ்கையை புரிந்துகொள்ள முடிகிறது

இராகவன் நைஜிரியா said...

எந்த வரியைப் பாராட்டவது, எந்த வரியை எடுத்துப் போட்டு இது நல்லா இருக்குன்னு சொல்வது. எல்லா வரிகளும் கலக்கல்.

தூங்கவிடு கொஞ்சம் என்றுச் சொல்லி, எங்களை தூங்கவிடாமல் அடிப்பதே உங்க வழக்கமா போயிடுச்சுங்க..

Admin said...

//அன்புச் சுனாமியில்
அரவணைப்புச் சுழிக்குள்
இடறி விழுந்து
நொறுங்கிப் போனது
என் பிடிவாதங்கள்.//



அருமையான வரிகள்.

எப்படி உங்களால் மட்டும் இப்படி எழுத முடியிது...

பா.ராஜாராம் said...

நல்லா இருக்குடா ஹேமா..பேசாமல் இப்படியே எழுதிக்கொண்டிருங்களேன்,ஒரு பத்து நூறு வருசங்களுக்கு.வந்துட்டு வலி இல்லாமலாவது போகலாம் இல்லையா?..

அரங்கப்பெருமாள் said...

கலக்கீட்டீங்க ஹேமா... எப்போதும் வலிகளைப் பற்றித்தான் மட்டுமல்ல.. இதுபோன்றும் படிப்பதால், மனச் சுமை குறைகிறது. அருமையானக் கவிதை.

Unknown said...

// இதயத் துடிப்போடு
கூடியிருப்பதால்
மூட மறுக்கிறது விழிகள். //


கலக்கல் வரிகள்...!!

பித்தனின் வாக்கு said...

// எனக்குள் உன் நினைவுகளை
நீயே முடக்கிப் போடு.
இன்றாவது உனை மறந்து நான்
நின்மதியாய்
கண் துயில //
நல்ல வரிகள். அழ்ந்த கருத்து, பிடித்திருக்கு.

Thenammai Lakshmanan said...

ஹேமா இதென்ன உங்கள் கையில் சூலம் மறைந்து கரும்புவில் தெரிகிறதே
என் கண்களே உண்மை கூறுங்கள்

Kala said...

ஹேமா நலமா?வந்துவிட்டேன்.
‘உன் நினைவால் நிறைந்து
மேகத்தை மூடும் முகிலாய்...
ஹேமா! மேகம்_முகில் இரண்டும் ஒரே சொல்லைத்தான்
குறிக்கும்.அதனால்...
‘உன் நினைவால் நிறைந்து
வானத்தை மூடும் முகிலாய்.... என வருமென்று
நான் நினைக்கின்றேன்.சரியா?தப்பா?

ஹேமா கவிதையில்......
காதலுடன் ஊடலும்...மறந்துவிடு என்று சொல்லி
அதிகமாய் நினைப்பதும்....ஏன் இந்த அவஸ்தை ஹேமா?
நீங்கள் படும் பாடு ‘’அவருக்கு’’ தெரியாதா??

காதல் பறவைகள் எனக்கு ரொம்ப,ரொம்ப பிடிக்கும்
ஹேமா.

நேசமித்ரன் said...

மிக மெல்ல நுழைந்து மிக நன்றாக அமர்ந்து கொண்டது கவிதை

நல்லாயிருக்கு ஹேமா..

நசரேயன் said...

சரி பாதி அண்ணாச்சி இப்படி சதி பண்ணுறீங்களே ஹேமா பாட்டியை

rvelkannan said...

//பேசாமல் இப்படியே எழுதிக்கொண்டிருங்களேன்,ஒரு பத்து நூறு வருசங்களுக்கு.வந்துட்டு வலி இல்லாமலாவது போகலாம் இல்லையா?..
//
பா. ரா வை வழிமொழிகிறேன் ஹேமா

புலவன் புலிகேசி said...

//உன் ஞாபகத் தூசுகளை
துடைத்துத் துடைத்தே
தேய்ந்து போனது
என் மூளைக் குவளை.//

நல்ல வரிகள்....

நையாண்டி நைனா said...

Really Very,Very, Very Nice One.

சத்ரியன் said...

//உன் ஞாபகத் தூசுகளை
துடைத்துத் துடைத்தே
தேய்ந்து போனது
என் மூளைக் குவளை.//

ஹேமா,

இதைத்தான் மண்டைக்குள்ள ஒன்னுமில்லைன்னு சொல்லுவாங்களோ? சரி,
இந்தக் கவிதையை எப்படி நான் புரிந்துக்கொள்ள? சோகமானதென்றா? சுகமானதென்றா? (தலைப்பு என்னைக் குழப்பி விட்டது)

ஆனால்,

ஹேமா மூளைக்குவளைக்குள் வெறும் கவிதைகளல்லவா ஒட்டிக்கொண்டிருக்கிறது. துடைத்தால் அல்ல; தொட்டாலே கொட்டும் கவிதைகள்!

thamizhparavai said...

//"உன் ஞாபகத் தூசுகளை
துடைத்துத் துடைத்தே
தேய்ந்து போனது
என் மூளைக் குவளை"//
ரசித்தேன்...

Post a Comment