*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, September 18, 2009

எரிக்கப்படவேண்டிய கோட்பாடுகள்...

என்றோ கலைந்த
கனவுகள் மீண்டுமாய்
இன்றைய கனவின் தொடராக.
பழைய காயங்கள்
சிறிதுதான் ஆறியபடி.
ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !

வாழ்க்கையில் படித்த பாடங்கள்
ஞாபகமாய்
எதையோ எடுத்துச் சொல்கிறது.
கேட்டுத்தான் ஆகவேண்டும்.
காற்றைப் பிடிக்கவும்
விற்கவும் நான் யார் ?
ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !

நசிக்கப்படுகிறது என் குரல்வளை.
சில கனவுகள் இரண்டு முறைகள்
ஆனால் ஒற்றைக் கோபுரத்தோடு.
நோன்பிருப்பவன் முன்னால்
தண்ணீர் விற்பவளாய்.
ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !

அறிவு கெட்டவளே...
ஏன் திரும்பவும் திரும்பவும்
வாலாட்டிக்கொண்டு.
நாயிலும் கேவலமாய்
துரத்தப்படுகிறாய்.
கவனம்
உன சுயமரியாதை கவனம்.
கோட்பாடுகள் அத்தனையும் ஒருநாள்
தீயில் எரிக்கப்படும்.

இதயம் தேய்த்து வெளிப்படும்
இன்னொரு
பூதமொன்று இனியும் வேண்டாம்.
காணாமல் போனவர் பட்டியலிலோ
இல்லை ...
இறந்தவர் பட்டியலிலோ
சேர்த்துவிடு.

இதென்ன
ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !!!

ஹேமா(சுவிஸ்)

43 comments:

ஆயில்யன் said...

//இதயம் தேய்த்து வெளிப்படும்
இன்னொரு
அலாவுதீன் விளக்கொன்று வேண்டாம்.
காணாமல் போனவர் பட்டியலிலோ
இல்லை ...
இறந்தவர் பட்டியலிலோ
சேர்த்துவிடு.
//

:((

Jerry Eshananda said...

ஆனாலும் மதிக்கப்பட வேண்டிய கோட்பாடுகள்.

நையாண்டி நைனா said...

சொல்வதற்கு ஒன்று இல்லை!

சிறு குறிப்பு:
"நசிக்க" என்றா வரும்...
"நசுக்க" தானே சரி..

ஹேமா said...

ஆயில்யன் என்ன ?புரியலையா ?

ஹேமா said...

//ஜெரி ஈசானந்தா...
ஆனாலும் மதிக்கப்பட வேண்டிய கோட்பாடுகள்.//

ஜெரி யார் மதிக்கிறார்கள் என்பதே கேள்வி.மதிக்கப்பட்டிருந்தால் இந்த வரியே வந்திருக்காது.

ஹேமா said...

//நையாண்டி நைன...
சொல்வதற்கு ஒன்று இல்லை!

சிறு குறிப்பு:
"நசிக்க" என்றா வரும்...
"நசுக்க" தானே சரி..//

நைனா இரண்டுமே சரிதான்.
நசி - அழி
நசுக்கு - கீழ்ப்படுத்து,இல்லாமல் செய்

க.பாலாசி said...

//நசிக்கப்படுகிறது என் குரல்வளை.
சில கனவுகள் இரண்டு முறைகள்
ஆனால் ஒற்றைக் கோபுரத்தோடு.
நோன்பிருப்பவன் முன்னால்
தண்ணீர் விற்பவளாய்.//

நல்ல ஆழமான வரிகள்...

//இதயம் தேய்த்து வெளிப்படும்
இன்னொரு
அலாவுதீன் விளக்கொன்று வேண்டாம்.
காணாமல் போனவர் பட்டியலிலோ
இல்லை ...
இறந்தவர் பட்டியலிலோ
சேர்த்துவிடு.//

ஏன் இந்த தாகம்...

வலிகள் உணர்த்தும் வரிகள் கவிதையில்...

ப்ரியமுடன் வசந்த் said...

//நசிக்கப்படுகிறது என் குரல்வளை.
சில கனவுகள் இரண்டு முறைகள்
ஆனால் ஒற்றைக் கோபுரத்தோடு.//

அது எப்படி? இப்படியெல்லாம் உருவகம் குடுக்குறீங்க......

ப்ரியமுடன் வசந்த் said...

//காணாமல் போனவர் பட்டியலிலோ
இல்லை ...
இறந்தவர் பட்டியலிலோ
சேர்த்துவிடு.//

ப்ச் வலிகளோடு உணர்த்தியிருக்கிறீர்கள் ஹேமா....

Admin said...

//நசிக்கப்படுகிறது என் குரல்வளை.
சில கனவுகள் இரண்டு முறைகள்
ஆனால் ஒற்றைக் கோபுரத்தோடு.
நோன்பிருப்பவன் முன்னால்
தண்ணீர் விற்பவளாய்.
ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !//


யதார்த்தமான வரிகள்...

ஹேமா said...

பாலாஜி...

வசந்த்...

சந்ரு...

நன்றி.இன்றைய வலியை இப்படி எழுதி மருந்து போட்டுக்கொண்டேன்.
அவ்வளவுதான்.

கவிக்கிழவன் said...

நன்றாக உளது

கார்த்திகைப் பாண்டியன் said...

வலிகள் உணர்த்தும் வரிகள்..:-(((((

ஆரூரன் விசுவநாதன் said...

//ஒற்றைக் கோபுரத்தோடு.
நோன்பிருப்பவன் முன்னால்
தண்ணீர் விற்பவளாய்.
ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !////உன சுயமரியாதை கவனம்.
கோட்பாடுகள் அத்தனையும் ஒருநாள்
தீயில் எரிக்கப்படும்.//


வலியின் தண்மை, மாறுதல் அல்லது பெயர்தல்.....

பெயர்ந்த பின்னும் வலியெனில்... இது வலியல்லவோ....?

ஆரூரன் விசுவநாதன் said...

இதற்கொரு நல்ல பெயர் வையேன் தோழி.....

கவிதாசிவகுமார் said...

உங்கள் கவிதைகளில் கோபமும் சோகமும் இளையோடிக்கொண்டே இருக்கிறது. உங்கள் ரணத்திற்கு மருந்திட இவ்வுலகில் பல மாற்றங்கள் வரவேண்டும் தோழி.

Anonymous said...

அன்பு சகோதிரி. கவிதையில் சோகம் அதிகமாகவே இருக்கிறது. சுயமரியாதை போகும் என்றhல் அந்த அந்த நட்பு எதற்கு... உதறி விடுங்கள்... அப்படிப்பட்டவர்களை தள்ளியே வையுயங்கள். அது தான் நல்லது.

கும்மாச்சி said...

வாழ்க்கையில் படித்த பாடங்கள்
ஞாபகமாய்
எதையோ எடுத்துச் சொல்கிறது.
கேட்டுத்தான் ஆகவேண்டும்.

Muniappan Pakkangal said...

Enna ivalvu kobam Hema ?

விஜய் said...

மெருகு கூடி கொண்டே போகிறது ஹேமா . நாங்கள் எல்லாம் கவிதை எழுதுவதா ? வேண்டாமா ?

வேல் கண்ணன் said...

தொடர்ந்தார் போல் வலிகள் நிறைந்த கவிதைகள்
அது சரி..... வரிகளுக்குள் வலியை சொல்லிவிட
முடியுமா....

சந்தான சங்கர் said...

மனிதன் உறங்கும்போது
கனவுகளில் விழித்திருக்கின்றான்,
விழித்திருக்கும்போது
நினைவுகளில் உறங்குகின்றான்.

அம்புகள் இலக்கு நோக்கி
பாயும்போது முதலில்
காற்றை கிளித்துவிட்டுதான்
செல்லும்.

எரிக்கப்பட வேண்டிய
கோட்பாடுகளுக்கு முன்
எறியபட வேண்டிய களைகள் ஆயிரம்.

நாட்களை தேய்க்கும்
நிமிடங்கள் முன்
நானும் தேய்ந்து
மாய்வேனோ!
என்ற ஏக்கம்..

thamizhparavai said...

கொஞ்சம் புரியலை ஹேமா...
அல்லது பிறிதொரு முறை படித்துப் பார்க்கிறேன்...

நசரேயன் said...

இவ்வளவு கவுஜைகள் எங்கே இருந்து வருது!!!.

நட்புடன் ஜமால் said...

ஏன் இப்போ மீண்டும் புதிதாய் ...

passerby said...

//உன சுயமரியாதை கவனம்.
கோட்பாடுகள் அத்தனையும் ஒருநாள்
தீயில் எரிக்கப்படும்.

இதயம் தேய்த்து வெளிப்படும்
இன்னொரு
அலாவுதீன் விளக்கொன்று வேண்டாம்.
காணாமல் போனவர் பட்டியலிலோ
இல்லை ...
இறந்தவர் பட்டியலிலோ
சேர்த்துவிடு.//

பெட்டைப்புலம்பல் இது.

சுய்மரியாதை கவன்ம். அதை அழிக்கத்துடிக்கும் கோட்பாடுகளை தீயில் பொசுக்கிவிடு என்று வீரமாக எழுதிவிட்டு,

என்னை இற்ந்தவர் பட்டியலில் சேர்த்துவிடு.

சேர்த்தாச்சு. செத்துப்போயிட்டீங்க.

அந்தகோடபாடுகள் வரைந்து மாற்றாரை நசுக்குவோர் நக்க்லாக நகைப்பர். ‘எம்மை எவர் எதிர்க்கமுடியும்’ என எக்காள்மிடுவர்.

எனவே,

இக்கவிதையொரு பெட்டைப்புலம்பல்.

S.A. நவாஸுதீன் said...

வலிகள்தான் நிச்சம்

அ.மு.செய்யது said...

வலிகளால் நிறைக்கப்பட்டிருக்கிறது கவிதை....அருமை ஹேமா !!!! வார்த்தைகள் முகத்தில் அறைகின்றன.

Ashok D said...

நல்லாயிருக்குங்க...
எதேச்சையா கண்டடைந்தேன் உங்கள் பிளாக்கை. நன்று.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//காணாமல் போனவர் பட்டியலிலோ
இல்லை ...
இறந்தவர் பட்டியலிலோ
சேர்த்துவிடு.//
உயிரின் மதிப்பு இப்படித் துச்சமாகி விட்டதை அழகாகக் காட்டியிருக்கிறீர்கள்.

வேல் கண்ணன் said...

உங்களின் தொடர் பதிவர்
அழைப்பிற்கு... நன்றி நிறைவேற்றி விட்டேன்

Anonymous said...

hi.. just dropping by here... have a nice day! http://kantahanan.blogspot.com/

மேவி... said...

"என்றோ கலைந்த
கனவுகள் மீண்டுமாய்
இன்றைய கனவின் தொடராக.
பழைய காயங்கள்
சிறிதுதான் ஆறியபடி.
ஏன் இப்போ மீண்டும் புதிதாய்"


ஹேமா உங்கள் வார்த்தைகளிலே பதில் இருக்கிறது ... கனவு கலைந்ததே தவிர அதன் சுவடுகள் மறையவில்லை

மேவி... said...

"வாழ்க்கையில் படித்த பாடங்கள்
ஞாபகமாய்
எதையோ எடுத்துச் சொல்கிறது.
கேட்டுத்தான் ஆகவேண்டும்.
காற்றைப் பிடிக்கவும்
விற்கவும் நான் யார் ?
ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !"

வாழ்க்கையில் நாம் படித்த பாடங்கள் அந்த தருணத்தின் மகிழ்ச்சியை எடுத்து செல்கிறது. அந்த பாடத்தினால் பின் நாம் சந்திக்க போகும் சில நிகழ்வுகள் மாற்ற படுகிறது.........

காற்றின் அடிமைகள் தான் நாம் எல்லாம்... அது இல்லாவிட்டால் நமக்கு எது வாழ்வு

மேவி... said...

"நசிக்கப்படுகிறது என் குரல்வளை.
சில கனவுகள் இரண்டு முறைகள்
ஆனால் ஒற்றைக் கோபுரத்தோடு.
நோன்பிருப்பவன் முன்னால்
தண்ணீர் விற்பவளாய்.
ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !"


பல அர்த்தங்கள் தருகிறது ஹேமா ..... பல தருணங்களில் நிஜம் இப்படி தான் இருக்கும் ......

மேவி... said...

"அறிவு கெட்டவளே...
ஏன் திரும்பவும் திரும்பவும்
வாலாட்டிக்கொண்டு.
நாயிலும் கேவலமாய்
துரத்தப்படுகிறாய்.
கவனம்
உன சுயமரியாதை கவனம்.
கோட்பாடுகள் அத்தனையும் ஒருநாள்
தீயில் எரிக்கப்படும்."


என்றோ தீயில் எரிய போகும் கோட்பாடுகள் ... இன்று எரிந்தால் என்ன ..... விளைவுகள் ஓன்று தானே .....

மேவி... said...

"இதயம் தேய்த்து வெளிப்படும்
இன்னொரு
பூதமொன்று இனியும் வேண்டாம்.
காணாமல் போனவர் பட்டியலிலோ
இல்லை ...
இறந்தவர் பட்டியலிலோ
சேர்த்துவிடு."


ந்மது மனது விடாது

மேவி... said...

"இதென்ன
ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !!!"


காரணங்கள் தேவை இல்லை ஹேமா .... விளையாட்டின் கைபவைகள் தான் நாம் எல்லோரும்

மேவி... said...

எரிக்க படும்

உணர்வுகள் ....எரியுட்ட பட

புதிதாய் பிறப்புகள்

நிகழ்கின்றன

எதிர்காலத்தில் எரிக்க

மேவி... said...

போன கவிதை தொகுப்பை படித்தேன் நல்ல இருக்கு

மேவி... said...

sari

pona poguthu

me the 41st

செம்மொழி said...

சற்றே அல்ல ஹேமா ..மிகவும் தாமதமாய் வந்து விட்டேன் .. அலுவலக வேலைப்பளு சற்றே அதிகம் ...

"நோன்பிருப்பவன் முன்னால்
தண்ணீர் விற்பவளாய்...."

என்சொல்வேன் தோழி.. வாழ்க ..தொடர்க ..

மேவி... said...

"சிந்திக்க விரும்பும் சிலருக்காக...! said...
//உன சுயமரியாதை கவனம்.
கோட்பாடுகள் அத்தனையும் ஒருநாள்
தீயில் எரிக்கப்படும்.

இதயம் தேய்த்து வெளிப்படும்
இன்னொரு
அலாவுதீன் விளக்கொன்று வேண்டாம்.
காணாமல் போனவர் பட்டியலிலோ
இல்லை ...
இறந்தவர் பட்டியலிலோ
சேர்த்துவிடு.//

பெட்டைப்புலம்பல் இது.

சுய்மரியாதை கவன்ம். அதை அழிக்கத்துடிக்கும் கோட்பாடுகளை தீயில் பொசுக்கிவிடு என்று வீரமாக எழுதிவிட்டு,

என்னை இற்ந்தவர் பட்டியலில் சேர்த்துவிடு.

சேர்த்தாச்சு. செத்துப்போயிட்டீங்க.

அந்தகோடபாடுகள் வரைந்து மாற்றாரை நசுக்குவோர் நக்க்லாக நகைப்பர். ‘எம்மை எவர் எதிர்க்கமுடியும்’ என எக்காள்மிடுவர்.

எனவே,

இக்கவிதையொரு பெட்டைப்புலம்பல்."


சார் இந்த மாதிரி யாரும் சிந்திக்க மாட்டாங்க....... நீங்க பாரதியை பற்றி எல்லாம் எழுதி இருக்கீங்க ....... பாரதியை படித்த பிறகு உங்களுக்கு எப்படி இப்படி எல்லாம் பின்னோட்டம் போட மனசு வருது .....

உங்களின் பின்னோட்டம் ஒரு முட்டாளின் புலம்பலே .....

வலிமையான, நல்ல முறையில் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த பழகி கொள்ளுங்கள்......

Post a Comment