*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, September 12, 2009

வேணும் பத்து வரங்கள்...வரமென்று கேட்டதில்லை.
வந்ததும் நிலைப்பதில்லை.
வேணுமென்று கேட்டதில்லை.
வேண்டுமென்று எதுவுமில்லை.

பிரியமுடன் வசந்த்
பிரியமாய்க் கேட்கிறார்.
பத்து வரங்கள்...
கேட்கணுமாம்
ஏஞ்சல் தேவதை வாசல் வந்தால்.


ம்ம்ம்....
என் மனதில் முன்னுக்கு
முளைப்பதெல்லாம்
என் வீட்டு முற்றம்தானே !

ரத்தமில்லா - யுத்தமில்லா என் பூமி.
பாரபட்சம் இல்லா அரசியல்.

சுத்தமான காற்று.
சுதந்திர தேசம்.

கனவுகள் வற்றிய கல்லறைகள்.
கனவால் நிரம்பா வீடுகள்.

கடவுள் இல்லா உலகம்.
மதங்கள் இல்லா இறைவன்.

சாதியில்லா மனிதன்.
பசியில்லாப் பிஞ்சுகள்.
nice

பேதம் காட்டாப் பெற்றோர்.
பெருத்த கனவோடு வளரும் தலைமுறை.

சரிநிகராய் நாங்கள்.[பெண்கள்]
அன்பாய் ஆணகள் குறை சொல்லாமல்.

கரம் தவறாத மக்கள்.
கல்வியோடு மனிதம்.

எனக்கென்றும் ஒரு வாழ்வு.
இறப்பிலாவது என் மண்.

நோயில்லா மெய்.
நட்பு தரும் ஒரு பூ.

எல்லோரிடமும் அன்பு வேண்டும்.
எல்லாமே கேட்க வேண்டும் !!!


இன்னும் அனுப்புகிறேன் ஏஞ்சலை

ஜெஸ்வந்தி -
மௌனராகங்கள்

கீழை ராஸா - சாருகேசி

சத்ரியன் - மனவிழி

பாலாஜி - சி @ பாலாசி

கும்மாச்சி - கும்மாச்சி

ஹேமா(சுவிஸ்)

42 comments:

Jerry Eshananda said...

இறப்பிலாவது என் மண்.
இந்த வரியில் கண்கலங்குகிறது ஹேமா.

S.A. நவாஸுதீன் said...

கவிதையாய் 10 வரங்கள் அருமை ஹேமா.

எனக்கென்றும் ஒரு வாழ்வு.
இறப்பிலாவது என் மண். - சிலிர்க்க வைத்தது

விஜய் said...

"மதங்கள் இல்லாக் இறைவன்"

புதிய சிந்தனை
வாழ்த்துக்கள் ஹேமா

விஜய்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

இறைவனிடம் வரம் கேட்பார்கள்.........நீங்கள் வரமாக (மதங்கள் இல்லா) இறைவனையே கேட்கிரிர்கள்.............

அருமயான கவிதை

( நடுவில் பறக்கும் கு(சு)ட்டி தேவதை கலக்கல் )

இராகவன் நைஜிரியா said...

பிரமாதம். வரம் கேட்பதை கவிதையில் கேட்ட அழகு பிரமாதம்.

வேல் கண்ணன் said...

பெரிய தேவதைக்கும்
இடையே குட்டி தேவதையும் அருமை.
தனிப்பட்டரீதியாக உங்களுக்கு என்று ஒன்றுமே கேட்ட மாதிரி தெரியவில்லையே ஹேமா
அந்த நல்மனதுக்கு
எல்லா வரமும் கிடைக்க பெற வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

மண் மறக்காத தமிழச்சியே!! வணக்குகிறேன்!!

கீழை ராஸா said...

சமுதாய அக்கரை கொண்ட வரங்கள்...பாராட்டுக்கள்...

வரம் கேட்பதற்கு முதலில் வரம் பெற வேண்டும் அந்த வரம் தந்தமைக்கு முதல் நன்றி....

பி.கு

ஹேமா அக்கா, நீங்களே எல்லா வரங்களையும், கேட்டுப்புட்டா நாங்க எதைக் கேட்பது...:-)

துபாய் ராஜா said...

வரம் ஆயிரம் கிடைக்க வாழ்த்துக்கள் ஹேமா...

மேவி... said...

"வரமென்று கேட்டதில்லை.
வந்ததும் நிலைப்பதில்லை.
வேணுமென்று கேட்டதில்லை.
வேண்டுமென்று எதுவுமில்லை."

ஏன் ஹேமா ???????

நிலைப்பதை எல்லாம் நீங்க வேண்டியவை இல்லையா ????

மேவி... said...

"பிரியமுடன் வசந்த் பிரியமாய்க் கேட்கிறார்.
பத்து வரங்கள்...
கேட்கணுமாம்
ஏஞ்சல் தேவதை வாசல் வந்தால்."


வந்தால் எனக்கும் சேர்த்து கேள்ளுங்க

மேவி... said...

"ம்ம்ம்....
என் மனதில் முன்னுக்கு
முளைப்பதெல்லாம்
என் வீட்டு முற்றம்தானே !"

கடவுளின் வரம் கூட வேண்டாம்............................. கடைசி வரைக்கும் திருச்சியில் வாழ்ந்தால் போதும்

மேவி... said...

"ரத்தமில்லா - யுத்தமில்லா என் பூமி.
பாரபட்சம் இல்லா அரசியல்.

சுத்தமான காற்று.
சுதந்திர தேசம்.

கனவுகள் வற்றிய கல்லறைகள்.
கனவால் நிரம்பா வீடுகள்.

கடவுள் இல்லா உலகம்.
மதங்கள் இல்லா இறைவன்.

சாதியில்லா மனிதன்.
பசியில்லாப் பிஞ்சுகள்.

பேதம் காட்டாப் பெற்றோர்.
பெருத்த கனவோடு வளரும் தலைமுறை.

சரிநிகராய் நாங்கள்.[பெண்கள்]
அன்பாய் ஆணகள் குறை சொல்லாமல்.

கரம் தவறாத மக்கள்.
கல்வியோடு மனிதம்.

எனக்கென்றும் ஒரு வாழ்வு.
இறப்பிலாவது என் மண்.

நோயில்லா மெய்.
நட்பு தரும் ஒரு பூ.

எல்லோரிடமும் அன்பு வேண்டும்.
எல்லாமே கேட்க வேண்டும் !!!"


எல்லா வரங்களும் கிடைக்க என் வாழ்த்துக்கள்

மேவி... said...

ஏஞ்சலை எனக்கும் அனுப்பி இருந்தால் ...... நானும் வரம் கேட்டு இருப்பேனே ....

மேவி... said...

மனிதன் மனிதனாய் வாழ வரம் கேட்கிறேன்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அன்புத் தோழி ஹேமா! வரம் கேட்டு அந்தத் தேவதையை உலுக்கி விட்டிருக்கிறீர்கள்.
என்னிடம் அனுப்பியதற்கு மனமார்ந்த நன்றி.

ஸ்ரீராம். said...

வேண்டுமென்று எதுவும் இல்லாத போது கேட்கவும் எதுவும் வேண்டுவதில்லை.
எனக்குக் கவிதை வருவதில்லை...பாராட்டுவதில் தயக்கமில்லை...வலை முழுதும் கவிதைகள்.... இனிமை..அருமை...

நேசமித்ரன் said...

அன்பின் ஹேமா
மிக நெகிழ வைத்த வரங்கள். கேட்க்கும் தேவதை மனது வைக்கட்டும்

ஆரூரன் விசுவநாதன் said...

ஹேமா,

"வரமாட்டாள் தேவதை
வந்தாலும் தரமாட்டாள் தேவையை"


வரமாட்டாள் என்பதற்காக இவ்வளவா-கேட்பது?,
ஓடிவிடபோகிறாள்.....உலகைவிட்டு.


பிற பதிவர்கள் வேறு காத்திருக்கிறார்கள் கேட்பதற்கு....

அருமை
அன்புடன்
ஆரூரன்

Anonymous said...

வரங்கள் அருமை

நட்புடன் ஜமால் said...

வேணுமென்று கேட்டதில்லை.
வேண்டுமென்று எதுவுமில்லை.]]

அழகு.

அன்புடன் நான் said...

எனக்கென்றும் ஒரு வாழ்வு.
இறப்பிலாவது என் மண்//

உங்களுக்கென்று ஒரு வாழ்வு அது அமைவது உங்களின் கைகளில்தான்.
அடுத்தவரி தான் மனதை பிழைகிறது ஹேமா.

கவிக்கிழவன் said...

ஹேமா

எல்லா வரமும் கிடைக்க பெற வாழ்த்துக்கள்

கண்மணி/kanmani said...

வரங்கள் கிடைக்கட்டும்

சினேகிதி said...

ஏஞ்சலுக்கு உங்கள் குரல் கேட்கட்டும்.

ப்ரியமுடன் வசந்த் said...

ஆஹா...

பிரமாதம் ஹேமா

வரங்களையும் கவிதையா வடிச்சுட்டீங்க

அத்துனையும் கிடைக்கப்பெறுவதாக...

கவிதாசிவகுமார் said...

மிகச் சிறந்த கவிதை இது. மனிதநேயத்துடன் வரங்களை கேட்டுருக்கீர்கள். கடவுள் இந்த பறக்கும் தேவதையுடன் பறந்து வந்து வரங்களை அருளட்டும்.

கும்மாச்சி said...

ஹேமா என்னுடைய வரங்கள் விரைவில் வரும்.

thamizhparavai said...

வரங்கள் வந்துவிழ வாழ்த்துகிறேன்...

பா.ராஜாராம் said...

//எனக்கென்று ஒரு வாழ்வு
இறப்பிலாவது என் மண்//
கண்கள் கலங்கியதுடா ஹேமா.

சத்ரியன் said...

//நோயில்லா மெய்.
நட்பு தரும் ஒரு பூ.///

ஹேமா,

காதலும் நோய் என்பதை உணர்வீர்களா? அதில்லாமல்,வெற்று மெய் எதற்கு?

நீங்கள் கேட்டிருக்கும் "பூ" உங்களுக்கு மட்டுமா? எனக்கும் சேர்த்து கேட்டிருக்கீங்களா? எனக்கும் வேண்டும்.(உங்களுக்கு மட்டும் கேட்டிருந்தால் பங்கிட்டுக் கொள்ளலாம்!)

சந்தான சங்கர் said...

கடவுள் இல்லா உலகம்.
மதங்கள் இல்லா இறைவன்.

மழை பொழிகிறது
மாசுகளின் சாயம் நீக்கிட
மதம் பொழிகிறது
மனிதர்களுக்கு சாயம் பூசிட.

எனும் வரிகளை நினைவுபடுத்துகிறது

வரம் பெற வாழ்த்துக்கள்..

விஜய் said...

எனது மற்ற கவிதைகளையும் பாருங்கள் ஹேமா

நன்றி

விஜய்

மாதேவி said...

கவிதையில் வரங்கள் அழகு.

தமிழன்-கறுப்பி... said...

.......

அப்புச்சி said...

கடவுள் இல்லா உலகம்.
மதங்கள் இல்லா இறைவன்.
ஆயிரம் கேள்விகளை உருவாக்கும் வரம் தான் கேட்கிறியள்.
இறைவன் இல்லா மதத்தை டேட்பது நல்லது போல தெரிகிறது
கடவுள் இல்லா உலகத்துக்கு பதிலாக
உலகம் இல்லா கடவுளை கேட்காமல் விட்டது மகிழ்ச்சியே,
ஏனென்றால் அதை சொல்லி சொல்லி தானே பேய்க்காட்டுறாங்கள்

சாதியில்லா மனிதன்.
பசியில்லாப் பிஞ்சுகள்.

மதம் அழிக்கப்பட்டால் சாதி அழிக்கப்படும்.
பசியில்லா பிஞ்சுகள்.
கண்டிப்பாக கிடைக்க வேண்டிய வரம்.

எல்லாம் சரி இந்த தேவதையள் என்கிறவை கடவுளிண்டை ஆக்கள் என்று தானே சொல்லப்படுகுது.

அவையளிட்டை இப்பிடி வரங்களிணை கேட்டால்???

நசரேயன் said...

கிடச்சா சொல்லி அனுப்புங்க

Admin said...

நல்ல வரங்கள்....

தேவதைக்கு கவிதை ரொம்ப பிடிக்குமாம். அதனால வரங்களும் கிடைக்கும்.....

க.பாலாசி said...

மிக நெகிழ வைத்த வரங்கள். கேட்க்கும் தேவதை மனது வைக்கட்டும் தோழியே...

இந்த வரிசையில் நானும் எனது வரங்களை கேட்கிறேன்...கிடைக்குமா என்று பார்ப்போம்....

(உங்களது அழைப்பினை இன்றுதான் (14.09.09)பார்த்தேன்...ஏனெனில் நான் மூன்று நாட்கள் விடுமுறையில் இருந்தேன். மிக்க நன்றி தோழியே...)

மே. இசக்கிமுத்து said...

என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வடிந்ததை படித்து முடித்த பிறகு தான் தெரிந்தது எனக்கு!!

அரங்கப்பெருமாள் said...

யுத்தம் இல்லா பூமி,பசி இல்லாத பிஞ்சுகள்.. நிச்சயம் அமையும்.
வரம் தேவதை கூடவே வைத்துக் கொண்டால்.... இன்னும் அருமையாக இருக்கும்

NILAMUKILAN said...

தினமும் உங்கள் கவிதை வேண்டும்...

Post a Comment