*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, July 15, 2008

இறந்த காதல்...

f love     m a,  Image Hosting
என் அழகானவனே
என்னோடு கை
கோர்த்துத் திரிந்த தெரு
அமைதியாய் தன் பாட்டில்.
கூடிக் கதைத்த கோடியில்
இப்போதும் தனிமையில் உனக்காக.

ம்ம்ம்...நீ பஞ்சு மெத்தையில்
எதிர்காலக் கனவுச் சிரிப்போடு
ஆழ்ந்த நித்திரையில்.
வாழ்வுக் கனவோடு
கனவுக் குழந்தையோடு
இறுகிய தரையோடு
கால்கள் புதைந்துவிட
விறைத்த மனதோடு
காத்திருக்கிறேன் வலியோடு.

பூத்துவிட்ட விழிகளை
மை தடவிக் குளிர்ச்சியாக்கி
தேடலின் நம்பிக்கையோடு
உள்ளத்துத் தீபத்தை
அணையாமல் பாதுகாத்தபடி.
இன்னுமே வரவில்லை.
வறுமைக் கல் எறிய
தூரச் சிதறிய என்னை
தேடிப் பொறுக்காதவனாய் நீ.

உனக்காகவே பாதுகாத்த
என் சிறகுகள்
முறிந்து சின்னாபின்னமாய்.
முன்னால் நிற்கிற
என்னைக் கண்டு கொள்ளாமலே
நீ முத்தமிடுகிறாய்
உன் புது மனைவிக்கு.

ஓ....நீ என்னைக்
கண்டு கொள்ள இயலாதோ!
மானுடக் கண்களின்
கருவிழிக்குள் சிக்காத
மாற்றுலகத்தின்
சிலந்தியோ நான்!
என் ஓலமோ அவலமோ
கேட்காத....கேட்க முடியாத
மனிதச் செவிடனோ நீ!
காற்றின் கனவளவுக்குள்
என் தேகம்.
புரிகிறதா...
போன வாரம்தான்
தூக்குப் போட்டுக்கொண்டு
இறந்துவிட்டேனாம் நான்!!!

ஹேமா(சுவிஸ்)

8 comments:

அப்புச்சி said...

கவிதை நன்றாக உள்ளது . முதல் கவிதையில் எழுத்துப்பிழை உள்ளது மாதிரி தெரிகிறது கவனம் எடுக்கவும். வழக்கமாக படித்தவுடன் உங்கள் கவிதை விளங்கிவிடும் ஆனால் இது கடினமாக இருக்கிறது.
மது
மணி 2.37
அதிகாலை

ஹேமா said...

வணக்கம் மது.ஏன் கவிதை விளங்கவில்லை.யாரோ ஒருவன் காதலித்திருக்கிறான்.வறுமை விரட்ட விட்டு விலகி வேறு திருமணமும் செய்துகொண்டான்.காதலி தற்கொலை செய்துகொண்டிருகிறாள்.அவள் இறந்தபிறகு கூட அவன் நினைவில்....

எழுத்துப் பிழையோ கருத்துப்பிழையோ தாராளமாகச் சொல்லுங்கள்.எனக்கும் திருந்த அது நல்வழி.எழுத்துப்பிழை எங்கே என்று சொல்லவில்லையே.என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

thamizhparavai said...

படித்ததில் பதிந்தது...
//பூத்துவிட்ட விழிகளை
மை தடவிக் குளிர்ச்சியாக்கி
தேடலின் நம்பிக்கையோடு
உள்ளத்துத் தீபத்தை
அணையாமல் பாதுகாத்தபடி.
இன்னுமே வரவில்லை.
வறுமைக் கல் எறிய
தூரச் சிதறிய என்னை
தேடிப் பொறுக்காதவனாய் நீ//


கீழ்க்கண்ட வரிகளில் வார்த்தைகளை இன்னும் வெறுமைப் படுத்தியிருக்கலாம் கவித்துவம் சேர்த்து...
//நீ என்னைக்
கண்டு கொள்ள இயலாதோ
போன வாரம்தான்
தூக்குப் போட்டுக்கொண்டு
நான் இறந்துவிட்டேனாம்!!! //

ஹேமா said...

வாங்க தமிழ்ப்பறவை அண்ணா.
உங்கள் கருத்துக்கள் போல் எதிர்பார்க்கிறேன்.நன்றி.
உற்சாகமாயிருக்கு.
வெறுமைப்படுத்த என்கிறீர்கள்.
புரியவில்லை.அந்தக் கடைசி வரிகளை அழகு படுத்த என்று சொல்கிறீர்களா?இப்போ... பாருங்கள்.சரியா?

thamizhparavai said...

அருமை.. கேட்டதற்காகச் சொல்லவில்லை..
ஒரு சாமானியனாய் எனக்கு முந்தைய வடிவம் கடைசி பத்திக்கு முன்பு வரை கவிதை போலவும்,கடைசி பத்தி உரைநடை போலவும் தோன்றியது..

இதுவரை சொன்னதை விட, கடைசி பத்தி முகத்திலறைவது போலிருக்க வேண்டுமென எதிர்பார்த்தேன்..
வெறுமைப் படுத்துவதென்பது என்னளவில் நமக்குள் ஓர் அதிர்வை,இல்லாமையை,(காதலியின் மரணத்தை) ஆணிஅடித்தது போல் காட்டவேண்டுமென நினைத்தேன்..
நான் நினைத்தது என்னளவில் மட்டுமே..சொல்லத்தெரிந்தது,சொல்லில் தெரியவில்லை..
இப்பொழுதைய வடிவம் எனக்கு திருப்தியாக உள்ளது..(என்னவென்றால் இதே போல் முதலிலேயே வெளி இட்டிருந்தால் அப்படிக் கூறி இருக்க மாட்டேன் என நினைக்கிறேன்..)
மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்டுக்கொள்ளுங்கள் சகோதரி..

ஹேமா said...

எனக்கும் திருப்தியாய் இருக்கு.நன்றி.இப்படி அடிக்கடி திருத்தி ஊக்கப் படுத்துங்கள்.இதில் குறை ஏதுமில்லை.உடன் பதில் தந்ததற்கு மீண்டும் நன்றி தமிழ்ப்பறவை அண்ணா.

Anonymous said...

15 Jul 08, 15:38
jaya:
15 Jul 08, 15:36

jaya: 15 Jul 08, 15:34
hema hello me jaya form muscat.the words which u have written touches bottom of my heart with feelings.
youngal karpani kavithai abaram youngal karpania threen valara valthukal naindri.marubadiyoum saindipoom vanakam. jaya.

ஹேமா said...

வணக்கம் ஜெயா.நன்றியும் கூட உங்கள் பாராட்டுக்கு.உங்கள் கருத்துக்கள் இன்னும் என்னை உற்சாகப்படுத்தும்.

Post a Comment