நாட்டு நடப்பாலே
நாகரீகம் நலிஞ்சு போச்சு.
வெளிநாட்டு மாப்பிள்ளை
வேறு கேள்வி ஏதுமில்லை.
நல்லவனா கெட்டவனா தெரியாது.
படிப்பென்ன தெரியாது.
வேலையென்ன தெரியாது.
வயதென்ன போகட்டும் விடு.
குட்டையா நெட்டையா தெரியாது.
முடி கொட்டி தலை மொட்டையா
அதுவும் தெரியாது.
அதைப்போல பெண்ணும்
படிப்பென்ன கேள்வி இல்லை.
சமைப்பாளா கேள்வி இல்லை.(சமாளிக்கலாம்)
சின்னக் குழந்தை அவள்
இனிப்பைக் காட்டி
விருப்பம் கேட்கும் குழந்தை போல
கனடா என்றால்
கன்னியவள் மாட்டேன் என்றா
மறுத்திடுவாள்.
வாழ்க்கையென்ற வருங்காலம்
குடும்பம் என்ற கூட்டல் கழித்தல்
உணரமுடியாப் பருவம் அது.
தொட்டதெற்கெல்லாம்
நொட்டை சொல்லும் தாத்தா
பாட்டியிடமிருந்து விடுதலை.
அதைப் பாடமாக்கு இதைப் பாடமாக்கு
என்கிற பாடப் புத்தகத்திடமிருந்து விடுதலை.
ஆகா எத்தனை சுதந்திரம்.
தூக்கம் தேடும் வரை
தொல்லையில்லாத்
தொலைக்காட்சியும் தொலைபேசியுமாய்.
ஈரெட்டு வயதினிலே
தலை ஆட்டி நிற்பாள்
தஞ்சாவூர் பொம்மை போல.
பெண்ணைவிட மாப்பிள்ளைக்குப்
பத்தில் இருந்து பதினைந்து
வயதேதான் கூடவாம்
அதுவும் பரவாயில்லையாம்.
பச்சைக்குழந்தைக்கு
பாலைப் பருவத்தில்
பகட்டாகத் திருமணமும்
டொரண்டோவில்.
வருடம் ஒன்றிற்குள்
குழந்தைக்கும் ஓர் குழந்தை.
பராமரிக்கத் தெரியாமல்
பரிதவிப்பாள் பாவை அவள்
பாவம் பரிதாபம்.
நம் நாட்டின் கேட்டாலே
மலிஞ்சு போச்சு
முன்னைக் காலம் போல
சின்னப் பிள்ளைக்
கல்யாணம்!!!
ஹேமா(சுவிஸ்)
நாகரீகம் நலிஞ்சு போச்சு.
வெளிநாட்டு மாப்பிள்ளை
வேறு கேள்வி ஏதுமில்லை.
நல்லவனா கெட்டவனா தெரியாது.
படிப்பென்ன தெரியாது.
வேலையென்ன தெரியாது.
வயதென்ன போகட்டும் விடு.
குட்டையா நெட்டையா தெரியாது.
முடி கொட்டி தலை மொட்டையா
அதுவும் தெரியாது.
அதைப்போல பெண்ணும்
படிப்பென்ன கேள்வி இல்லை.
சமைப்பாளா கேள்வி இல்லை.(சமாளிக்கலாம்)
சின்னக் குழந்தை அவள்
இனிப்பைக் காட்டி
விருப்பம் கேட்கும் குழந்தை போல
கனடா என்றால்
கன்னியவள் மாட்டேன் என்றா
மறுத்திடுவாள்.
வாழ்க்கையென்ற வருங்காலம்
குடும்பம் என்ற கூட்டல் கழித்தல்
உணரமுடியாப் பருவம் அது.
தொட்டதெற்கெல்லாம்
நொட்டை சொல்லும் தாத்தா
பாட்டியிடமிருந்து விடுதலை.
அதைப் பாடமாக்கு இதைப் பாடமாக்கு
என்கிற பாடப் புத்தகத்திடமிருந்து விடுதலை.
ஆகா எத்தனை சுதந்திரம்.
தூக்கம் தேடும் வரை
தொல்லையில்லாத்
தொலைக்காட்சியும் தொலைபேசியுமாய்.
ஈரெட்டு வயதினிலே
தலை ஆட்டி நிற்பாள்
தஞ்சாவூர் பொம்மை போல.
பெண்ணைவிட மாப்பிள்ளைக்குப்
பத்தில் இருந்து பதினைந்து
வயதேதான் கூடவாம்
அதுவும் பரவாயில்லையாம்.
பச்சைக்குழந்தைக்கு
பாலைப் பருவத்தில்
பகட்டாகத் திருமணமும்
டொரண்டோவில்.
வருடம் ஒன்றிற்குள்
குழந்தைக்கும் ஓர் குழந்தை.
பராமரிக்கத் தெரியாமல்
பரிதவிப்பாள் பாவை அவள்
பாவம் பரிதாபம்.
நம் நாட்டின் கேட்டாலே
மலிஞ்சு போச்சு
முன்னைக் காலம் போல
சின்னப் பிள்ளைக்
கல்யாணம்!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
9 comments:
தங்களின் இந்தக் கவிதை தொடர்பாக விரிவான விமர்சனம் எழுத விரும்புகிறேன். கண்டிப்பாக நாளை எழுதுவேன்.இன்று நேரம் போதவில்லை.
வருடம் ஒன்றிற்குள்
குழந்தைக்கும் ஓர் குழந்தை
நம் நாட்டின் கேட்டாலே
மலிஞ்சு போச்சு
முன்னைக் காலம் போல
சின்னப் பிள்ளைக்
கல்யாணம்!!!
பச்சைக்குழந்தைக்கு
பாலைப் பருவத்தில்
பகட்டாகத் திருமணமும்
டொரண்டோவில்
முடி கொட்டி தலை மொட்டையா
அதுவும் தெரியாது.
நாட்டு நடப்பாலே
நாகரீகம் நலிஞ்சு போச்சு
கனடா என்றால்
கன்னியவள் மாட்டேன் என்றா
மறுத்திடுவாள்
இந்த வரிகள் தொடர்பான விமர்சனம் நாளை எழுதுகிறேன்.
நல்ல பல சமூக கவிதைகளை தந்துள்ளீர்கள், சமூகம் சார்ந்த இன்னொரு கவிதையை தர வேண்டும் என்ற தேவையில் இந்த கவிதையை எழுதியுள்ளீர்கள் போல் உள்ளது.இப்பொழுது ஆண்டு 2008.இந்தக் கவிதைக்கு ஒரு பதில் கவிதையை உங்கள்
கவி இரகசிகர்கள் எழுதினாலும் வலைப்பூ களை கட்டும்.பதில் கவிதை வருகிறதோ இல்லையோ நாளை விமர்சனம் உண்டு.
சுதன்
மணி அதிகாலை 2.00
அருமையான கவிதை
சுதன் இது என் அனுபவப்பட்ட 2000 ஆண்டு நிகழ்வு.சென்ற கவிதைக்கும் இந்தக கவிதைக்கும் குறை ஏதோ சொல்றீங்க.நிறைவாகக் கதைக்க வேணும் உங்களோட.நன்றி.
நன்றி திகழ்.கொஞ்சம் விரிவான கருத்துத் தரக்கூடாதா!!!சுதனுக்குக் கொஞ்சம் சொல்லியிருக்கலாமே.நன்றி
எனக்கு இப்போ திடீரென்று ஒரு பெரிய கவலையாப் போச்சு.
என்னெண்டா...என்"ஒரு கிராமத்துக் காலை+மாலை"க்கு யாருமே கருத்துத் தரேல்ல.ம்ம்ம்... சரில்லையோ ஒருவேளை!!!
/நன்றி திகழ்.கொஞ்சம் விரிவான கருத்துத் தரக்கூடாதா!!!/
நான் சொல்ல வந்ததை எல்லாம்
சுதன் அவர்கள் கூறிய பிறகு
நான் என்னவென்று உரைப்பது
/சுதனுக்குக் கொஞ்சம் சொல்லியிருக்கலாமே.நன்றி/
விரிவாக சொல்லுவதே
வெகு சிலரே
அவர்களையும்
சுருங்க சொல்லுவதற்கு
நான் தான் வகையாய்
மட்டிக்கொண்டேன்
;)))))))))))))))))
திகழ் மீண்டும் கருத்துக்கு நன்றி.அதுசரி,நீங்கள் யார் பக்கம்?சுதனுக்காகவா எனக்காகவா?புரியவில்லை.கவிதையின் கருத்து நீங்களும் பிழை என்கிறீர்களா?
//பச்சைக்குழந்தைக்கு
பாலைப் பருவத்தில்
பகட்டாகத் திருமணமும்
டொரண்டோவில்//
இது டொரண்டாவில் மட்டுமில்ல, இங்கும் அந்தக் கதை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பத்தாங்கிளாஸ் முடிக்கிறாங்களோ இல்லையோ கல்யாணம் நடந்திரும். எங்க ஊர்ப்பக்கம் 9th or 8th முடிச்சவுடன் நிறுத்திருவாங்க.. பின்ன அவங்க அண்ணன் சட்டையைப் போட்டுக்கிட்டு வீட்டு வேலை,குழாய்த்தண்ணி,பிஸ்கட் கம்பெனி வேலை,கவரிங் கடை,உறவினர் விழாக்களுக்கு இரவல் சங்கிலி,டிவி சீரியல்,தெருவோர இளசுகளுக்கு கள்ளப்பார்வை இது மட்டுமே அவங்க உலகமாயிடும்..
அப்புறம் 18 வயசுக்குள்ளேயே மாமன் பையனோட கல்யாணம்,ஆடி,தீபாவளி,கோயில் திருவிழா,பிரசவம்ன்னு வாடி வதங்கிருவாங்க. முப்பது வயசுக்குள்ள அவங்க வாழ்க்கையே முக்காவாசி முடிஞ்சிடும்.
வெளிநாட்டு மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிறவங்களாவது கொஞ்சம் உலக அறிவோட இருப்பாங்க...இவங்க்ளுக்கு அதுவும் கிடையாது.
இது உங்க கவிதைக்கு தொடர்போ இல்லியோ தெரியாது..ஆனா கவிதையைப் படிச்சவுடன் தோணுச்சு.. கொட்டிட்டேன்.
சுதன் ஏதோ நாளைக்கு பெருசா கிளப்புவாருன்னு எதிர்பார்க்கலாம்..
//எனக்கு இப்போ திடீரென்று ஒரு பெரிய கவலையாப் போச்சு.
என்னெண்டா...என்"ஒரு கிராமத்துக் காலை+மாலை"க்கு யாருமே கருத்துத் தரேல்ல.ம்ம்ம்... சரில்லையோ ஒருவேளை!!!//
சரியில்லைன்னெல்லாம் இல்லை.. ஒரு விமர்சனம் எழுதணும்னா ஏதாச்சும் ஒண்ணு அந்தக் கவிதையில நம்மோட நெருங்கி இருக்கணும்.. இல்ல நம்ம பார்த்தாச்சும் இருக்கணும்..
எனக்கு கவிதை அவ்வளவாப் பாதிக்கலை.அதான் விமர்சிக்கலை. எனக்கு படங்கள் மட்டும் பிடிச்சிருந்தது. எனக்கு கவிதை சாதாரணமாத்தான் தெரிஞ்சது. வார்த்தைகளும் ரிப்பீட் ஆன மாதிரி தெரிஞ்சது. சும்மா பின்னூட்டம் போடணும்கிறதுக்காக பொய்யா விமர்சிக்கிறதுல உடன்பாடு கிடையாது எனக்கு.இப்போ கேட்டதால சொன்னேன்.
நிறையவே நன்றி தமிழ்ப்பறவை அண்ணா.பெரிய கருத்துத் தந்திருக்கிங்க.எவ்வளவோ உலகம் முன்னேறியும் இன்னும் சில இடங்களில் பல வித காரணங்கள் சொல்லிக் குழந்தைக் கல்யாணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
கிராமத்துக் கவிதைக்கும் கருத்து தந்திருக்கிறிங்க.ஏனோ இன்று மனசில் பட்டது ஏன் என்று.எனக்கு ஆசையாய் இருக்கும் அந்தக் காலைப் பொழுதை இப்போ நினைத்தாலும்.நான் நினைக்கவில்லை அப்படி ஒரு வாழ்வு இனி கைக்குக் கிட்டுமென்று.அங்கு சூழ்நிலைகளும் இப்போ மாறிவிட்டன.
சுதனை விடுங்கள்.எப்போதும் ஏதாவது சொல்கிறார்.சரி என்னைச் சரியாக்கிக் கொள்ளலாமே என்று பார்த்தால்....அதோடு சரி அவர்.
எப்போதான் பெருசா கிளப்புவார்னு பாக்கலாம்.
இன்னும் ஆஹா FM கேக்குறிங்களா?
கறுப்பு ஆடி பற்றி கானா.பிரபா நல்ல விளக்கமான ஆக்கம் போட்டிருக்கிறார்.
பாருங்க.
//கறுப்பு ஆடி பற்றி கானா.பிரபா நல்ல விளக்கமான ஆக்கம் போட்டிருக்கிறார்.
பாருங்க.
//
தற்போதுதான் படித்து வந்தேன்.. நான் அறிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. இப்போதுதான் உணர்கிறேன். அரசியல் வாதிகள் எங்குமே ஒரே ஜாதிதான்.. என்னால் வேறெதுவும் சொல்ல இயலவில்லை இப்போது..
வடிவம் பெறாத வார்த்தைகளில் என் வேதனை..
Post a Comment