*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, June 01, 2008

மற...கொஞ்சம்...சிரி

நண்பா...
மறத்தல் என்பது வேறு
நிறுத்தல் என்பது வேறு.
உன் நினைவுகளை
நிறுத்தித்தான் வைத்திருந்தேன் நான்.
மின்னல் அடித்த வேகத்தில்
நிலவைத் தொலைத்த
வானம் போல நீ.
மெளனமே உன் மெளனத்தைக்
கலைப்பதாகக் குற்றம் கூறுவாய்.

பூ ஒன்றால்...
புன்னகை இழந்திருக்கிறாய்.
எத்தனையோ முறை
பொறாமைப் பட்டிருகிறேன்
உன் புன்னகை பார்த்து நானே.

எதுவுமே எரிச்சல் தரக்கூடிய
பொழுதுகள் உனது.
நட்பின் விசாரிப்புக்கள் கூட
நரகமாய்.
மனதிற்குக் கொஞ்சம்
மெழுகு பூசு.
மூடிவிட்டு முயற்சி செய்
கொஞ்சம் சிரி.
வாழ்வு வசந்தமாய் வாசம் தரும்
மறத்தல் இயல்பாய் இருந்துவிட்டால்.

முரண்பாடுகளே
நிறைந்த பாதையில்
மறத்தல் மட்டும்
விதிவிலக்கா என்ன!!!

ஹேமா(சுவிஸ்)

4 comments:

Anonymous said...

//முரண்பாடுகளே
நிறைந்த பாதையில்
மறத்தல் மட்டும்
விதிவிலக்கா என்ன!!!//

வாவ் சூப்பர்....

ஹேமா said...

நீங்கள் சொன்ன பிறகுதான் நானும் ரசித்து வாசித்துப் பார்த்தேன்.நன்றி இனிக்கும் நண்பியே புனிதா.அடிக்கடி கருத்துக்கள் தேடுகிறேன்.

Anonymous said...

3 Jun 08, 12:03
Hi sutha,Your Kavithais are very nice, Especially"appavukaga"that is super...Keep it Up... TC..Bye..
Santhosh

விச்சு said...

முரண்பாடுகளே
நிறைந்த பாதையில்
மறத்தல் மட்டும்
விதிவிலக்கா என்ன!!!

Post a Comment