*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, June 29, 2008

நிலவு...

கொள்ளை நட்சத்திரங்கள்
தன்ணொளியோடு
வானில் இருந்தும்
இரவல் ஒளியில்
அழகு ராணியாய்
வலம் வரும் வானத்துப் பெண்.
காணாமல் போய்விடுகிறாள்
அடிக்கடி எங்குதான்?

மனம் சோர்வெடுக்க
ஓய்வெடுத்துக் கொள்கிறாளோ
பூமியின் அக்கிரமங்களைச்
சகிக்க முடியாமல்!

ஈழத்தின்
பட்டினிப் போராட்டம் பார்த்தே
பாதி தேய்ந்தே போகிறாளோ!

நாணித்தான்
முகிலுக்குள் ஒளிகிறாளோ
காதலின் புனிதம் இழந்து
காமத்தின் கோரத்துள்
காவடி ஆடும்
இளைஞரைக் கண்டு!

ஐயோ...
என்னதான் செய்வாள்
பாவம் அவள்
ஏதாவது சொல்லப் போக
அவளுக்கும் துளை போட்டு
ஓட்டையாக்கி விட்டால்!!!

ஹேமா(சுவிஸ்)

6 comments:

Unknown said...

அருமையான கவிதை..வாழ்த்துக்கள்..

Anonymous said...

30 Jun 08, 00:35
நிலாவை பாடாத எவரும் இல்லை,குழந்தைநிலா... ..நிலாவை பார்த்த விதம் புதுமையானது.நன்றாக உள்ளது.மனிதமும்,வாழ்வும்,முரண்பாடும்,எழுத்தும், இயல்பும் கவிதையாக பார்க்கிறேன்.நிலா பற்றி பல எழுத்துக்கள் படித்தாலும் நிலா பற்றிய கவிதை உங்கள் பார்வையில் அருமை. சுதன்.

ஹேமா said...

தமிழ்ப்பிரியன் உங்கள் வருகைக்கும் வாழ்துக்களுக்கும் நன்றி.

சுதன் உங்களுக்கும் கூட நன்றி.

இறக்குவானை நிர்ஷன் said...

//என்னதான் செய்வாள்
பாவம் அவள்
ஏதாவது சொல்லப் போக
அவளுக்கும் துளை போட்டு
ஓட்டையாக்கி விட்டால்!!!
//

சுவிஸில் இருந்தாலும். ஈழத்தின் நிகழ்காலத்தை புரிந்திருக்கிறீர்கள்.

மனதில் நிறையும் கவிதை.

ஹேமா said...

//சுவிஸில் இருந்தாலும். ஈழத்தின் நிகழ்காலத்தை புரிந்திருக்கிறீர்கள்.//

நிர்ஷன்,எங்கே இருந்தாலும் மனம் முழுக்க எங்கள் நாட்டிலேதானே!

விச்சு said...

ஈழத்தின்
பட்டினிப் போராட்டம் பார்த்தே
பாதி தேய்ந்தே போகிறாளோ!

Post a Comment